நம்ம தொடருக்கு (பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி) பொருத்தமா இருந்ததால தான் நேத்து மதக்கலவரம்@60 லட்சம் பதிவை ஹைலைட் பண்ணேன். என்னை பொருத்தவரை மனிதம் மிளிரும் மதம்தான் உண்மையான மதம். மத்ததெல்லாம் ஆனைக்கு பிடிக்கிற மதம்.
பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி என்ற தொடர்பதிவை படித்துவரும் ந(அ)ண்பர்களுக்கு என்னடா முருகேசன் கீதையை ஓவரா கிழிக்கிறாருனு கூட தோணியிருக்கும். ஒரு நண்பர் "கடந்து போனதை எழுதி என்ன லாபம்" னு கமெண்ட் போட்டிருந்தார். மேற்படி கலவர காண்ட் ராக்ட் விவகாரத்தை பாருங்க.
ஸ்ரீராம்சேனா தோற்றத்துக்கும், வளர்ச்சிக்கும், அடிப்படை மதம். மதம்னா அதுல மனிதம் மிளிரணும். மத்த மதங்களை பத்தி பேசறதுக்கு முந்தி என் மதத்தை பத்தி நான் பேசியாகனும். ஸ்ரீராம் சேனா விவகாரத்தையே எடுத்துக்கோங்க.இவிக என்னவோ இந்து மதத்துக்கு பேட்டன்ட் ரைட் வாங்கிட்டாப்லயும், இந்துவா பிறந்த ஒரே காரணத்துக்காக இவிக போடற ஆணைகளை எல்லா ஆண்,பெண்களும் பின்பற்றனும்னும் ஓவர் ஆக்சன் பண்ணாய்ங்க. பப்புக்குள்ள நுழைஞ்சு அராஜகம் பண்ணாய்ங்க.
அதுக்கு எவ்ளோ ரேட் பேசினாங்கனு தெரியாது. அந்த அராஜகத்துல ரேட் விவகாரம் தெரியாத ஜஸ்ட் மிஸ் கைடட் பீப்புள் கூட இருந்திருப்பான். அப்படிப்பட்டவுங்களை தட்டி எழுப்பறதுதான் இந்த தொடர் பதிவோட நோக்கம்.
மதம், பூஜை,புனஸ்காரம்லாம் காலைக்கடன் கழிக்கிற மாதிரி கதவை சாத்திக்கிட்டு செய். சமூகத்துக்குள்ள வரச்ச இந்தியனா வா. தமிழனா வான்னு தான் நான் சொல்றேன்.
பாபர் மசூதி இடிப்பையே எடுத்துக்கங்களேன் அந்த ப்ராஜக்டுக்கு எவ்ள சார்ஜ் பண்ணாங்கனு தெரியலை. அல்லது எவ்வளவு செலவழிச்சாய்ங்கனு தெரியலை எதை எதிர்பார்த்து செலவழிச்சாய்ங்க ? அவிகளுக்கு என்ன லாபம்? னும் தெரியலை ஆனால் அதுல பார்ட்டிசிப்பேட் பண்ண ஒவ்வொரு இந்துவும் காசு வாங்கிக்கிட்டு தான் போனான்னு நான் சொல்லலை. தே ஆர் மிஸ் கைடட். தட்ஸால்.
அவிகளுக்கு தங்கள் மதத்தோட அடி நாதம் புரியலை.ஆணி வேர் புரியலை. அதனால்தான் போனாய்ங்க.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதால என்னென்ன பின் விளைவுகள் ஏற்பட்டது. எத்தனை ஆயிரம் உயிர் காத்துல பறந்தது. இன்னைக்கும் டிசம்பர் 6 ன்னா ஒரு டர் , ஒரு டெர்ரர் இருந்துக்கிட்டே இருக்கு.
எரியறத பிடுங்கினா கொதிக்கிறது அடங்கும். இந்து மத சாரம்னு கீதைய சொல்றாய்ங்க. அந்த சாரத்துலயே எத்தனை டன் திப்பி இருக்குன்னு காட்டிட்டா இன்னொரு மசூதி இடிப்பு நடக்காது.
யூத்தை கூவி கூப்டு ப்ரெய்ன் வாஷ் பண்ணி கருவிகளா உபயோகிக்க முடியாது. அப்படி கூப்டாலும் யூத்து "போடாங்கொய்யால .. முருகேசன் எல்லாத்தயும் உடைச்சு போட்டுட்டாருல்ல" என்று கழண்டுகொள்ளும்.
இன்னைக்கு நாட்ல எந்த பொம்பளையும் முழு பெண்ணா இல்லே
எந்த ஆணும் முழு ஆணா இல்லேங்கறத போல
நாட்ல இருக்கிற மதவாதிகளும் பெரிய டுபாகூருங்களா கீறானுங்கோ
செக்குலர்னு சொல்லிக்கிற மதசார்பற்ற வாதிங்களும் டுபாகூராவே கீறானுங்கோ.
சனத்துக்கு நாத்திகத்தோட ஆரம்ப புள்ளியும் தெரியலை (மனிதம்)
மதத்தோட மைய புள்ளியும் தெரியலை (மனிதம்)
மதவாதிகளுக்கு மட்டுமில்லே மதசார்பற்ற சக்திகளுக்கும் ஒரு ஹிடன் அஜெண்டா இருக்கு.
எந்த கொள்ளி நல்ல கொள்ளினு தலைய பிச்சிக்க வேண்டியதா இருக்கு. இந்த இந்து அடிப்படை வாதிகளுக்கு அடிப்படை இந்துமதம். இந்துமதத்துக்கு அடிப்படை இந்து வேதங்கள்,உபனிஷதங்கள், 18 புராணங்கள், இதுகளோட பிரமாணம், சாரம் பகவத்கீதை. பகவத் கீதையே உட்டாலக்கடிங்கற விஷயத்தை போட்டு உடைச்சுட்டா அடிப்படை வாதம் பக்கவாதம் வந்து ஒரு பக்கமா விழுந்து கிடக்கும். இப்படி ஒரு சூப்பர் டூப்பர் வியூகத்தோடத்தான் பகவத்கீதை ஒரு உட்டாலக்கடிங்கற இந்த தொடர்பதிவையே ஆரம்பிச்சேன்