வணக்கம்ணே ! ஏற்கெனவே வலையுலகத்துல சில சனம் பைல்ஸ் பேஷண்டுக மாதிரி ஆசனத்துல கடுப்பாகி நம்மை கிழி கிழினு கிழிச்சிக்கிட்டிருக்கிற சமயம் பார்த்து ஒபாமா,சோனியா, மன்மோகன், சிதம்பரம், எல்லாம் வந்து ஐடியா கேட்கிற மாதிரி இந்த பதிவை போடறேன். வெறுமனே தனி மனிதர்களோட பிரச்சினைகளுக்கு ஐடியா கொடுத்து கொடுத்து போரடிச்சுருச்சு.
நம்ம ஐடியா ஒபாமா,சோனியா,மன்மோகன், சிதம்பரம் காதுக்கு போகுதோ இல்லையோ பிரச்சினைகளுக்கு இப்படி ஒரு சொல்யூஷன் இருக்குன்னாவது சாமானிய சனத்துக்காவது தெரியட்டுமேனு தான் இந்த பதிவு.
ஒபாமா: வணக்கம் மிஸ்டர் முருகேசன்! ஒரு காலத்துல..எப்படியோ இருந்த நாங்க இன்னைக்கு எப்படியோ ஆயிட்டம்.
முருகேசன்: மொதல்ல இந்த ஹிப்பாக்ரசிலருந்து வெளிய வாங்கசார். என்னைக்குமே நீங்க புலியில்லை. சொம்மா புலி தலைய மூஞ்சிக்கு வச்சி பூச்சி காட்டிக்கிட்டிருந்திங்க. ஒசாமா அதை தட்டிவிட்டுட்டாரு..
லேட்டஸ்ட்ல இருந்து பார்ப்போம். பொருளாதாரம்னா.. அரசாங்கத்துலருந்து , குடிமக்கள் வரை ஆட்டை தூக்கி மாட்ல போட்டு ,மாட்டை தூக்கி ஆட்ல போட்டு எல்லாமே கடன்ல ஓடிக்கிட்டிருந்தது. முதல்ல் வீட்டுக்கு ஒரு கார்னிங்க, அப்புறம் அவுட்டிங் போக ஒரு கார், ஆஃபீஸ் போக ஒரு கார்னிங்க. அப்புறம் ஆத்துக்காரிக்கு ஒரு காரு, ஆத்துக்காரருக்கு ஒரு காருன்னிங்க. உங்க பெட் ரோல் உற்பத்தின்னு பார்த்தா காலணா கூட கிடையாது. கன்சம்ப்ஷன்ல மட்டும் ஒன்னே முக்காலணா..
ஒபாமா: என்னப்பா நீ .. நான் ஏதோ பிரச்சினைய சொல்லி ஐடியா கேட்கலாம்னு வந்தா குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறே..
முருகேசன்: ஒபாமா சார் ! ஒரு பொம்பள வந்து கரும்பு தோட்டத்துல பலானவன், கத்திரித்தோட்டத்துல பலானவன்னு , பலாந்து பலாந்து நடந்ததுனு சொல்லி சொல்யூஷன் கேட்டால் சொல்லலாம். நீங்க ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி வயிறு மட்டும் வீங்கியிருக்குன்னு பேசினா என்ன பண்றது அதான் கேஸ் ஹிஸ்டரிய எடுத்து விட்டேன்
ஒபாமா:இங்கே கேமரா கீமரா இல்லேல்லியா?
முருகேசன்: நான் ஹோமோ கிடையாது. உங்களை பத்தியும் அப்படி இப்படி கேள்வி பட்டதில்லை. திடீர்னு ஏன் கேமராவ பத்தி கேட்கிறிங்க.
ஒபாமா:(மனதுக்குள்) என்னடா இது ..........காட்டி புண்ணாக்கிக்கிட்ட கதையா ஆயிருச்சு (வெளியே) சரிப்பா மேட்டருக்கு வாப்பா. சுண்டைக்கா நாடுகளான ஈரான், இலங்கை,பாக்கிஸ்தான் கூட சொல் பேச்சு கேட்க மாட்டேங்கிறான். பொருளாதாரமா டப்பா டான்ஸ் ஆடிக்கிட்டிருக்கு.
முருகேசன்: நீங்க பேசறத பார்த்தா என்னமோ ஒருகாலத்துல பிக் ஃபைவே உங்க பாக்கெட்லருந்த மாதிரி அர்த்தம் வருது
( பிக் 5 ன்னா அஞ்சு பெரிய நாடுங்கண்ணா. அமெரிக்கா,பிரிட்டன்,ஃப்ரான்ஸு,சீனா, ரஷ்யா .இவிகளுக்கு ஐ நா சபையோட பாதுகாப்பு சபைல நிரந்தர மெம்பர்ஷிப் உண்டு. வீட்டோ பவர் உண்டு. அதாவது ஐ. நா சபை எந்த தீர்மானம் கொண்டு வந்தாலும் போடாங்கோத்தான்னிரலாம். தீர்மானம் ஃபணாலாயிரும். என்னதான் ரஷ்யா துண்டு துண்டா போயிட்டாலும் இன்னைக்கும் இந்த ஹோதாவ கொடுத்துதான் வச்சிருக்காய்ங்க)
ஒபாமா: நொந்து வந்தவனை இப்ப.......டி நோகடிக்கிறியேப்பா..
முருகேசன்:சரி சரி.. இப்போ முதல் கோணை முத்தும் கோணைன்னுவாங்களே அப்படி முதல் கோணைலருந்து திருத்தம் சொல்ல நான் தயார் . திருத்திக்க நீங்க தயாரா..?
ஒபாமா:சொல்லுப்பா ஏதோ ஒன்னு செய்யனும். எங்க ஊரு பேங்க் காரனெல்லாம் மானாவாரியா ஹவுசிங் லோனை கொடுத்துட்டு லோன் திரும்பாம , வீடுகளை ஜப்தி பண்ணி அதை ஏலம் விட்டா மார்க்கெட்ல அதை வாங்க நாதியில்லாம அவனவன் கார்லயே வாழ்ந்துக்கிட்டிருக்காம்பா..
முருகேசன்: நாம யார்கிட்டே டீல் பண்றமோ அவிக கேரக்டரை புரிஞ்சி கிட்டு டீல் பண்ணனும். உங்காளுங்களை நரிக்குறவங்க கணக்கா தயார் பண்ணது நீங்க. யூஸ் அண்ட் த்ரோ. கல்சரை கொண்டு வந்தது நீங்க. இந்த கல்ச்சர்ல வளர்ந்தவன் சொந்த வீடு கட்ட நினைப்பானா? இல்லே நீங்க தான் புது புது விளம்பர யுக்திகளை வச்சு பெருமாளையே லட்டு வாங்க வைக்கிறவக ஆச்சே. எங்காளுங்க அங்கே மானாவரியா வந்து சேர்ந்ததால அவிகள பார்த்து, உங்க விளம்பரங்களை பார்த்து வாங்கி தொலைச்சிருப்பாய்ங்க. திருப்பி கட்டற காலம் வந்தப்ப கீதை ஞா வந்திருக்கும். தத் இதென்னடா பரதர்மத்துல மாட்டிக்கிட்டோம் ஆயிரம் தான் இருந்தாலும் சுதர்மம் தான் பெட்டர்னு கை தூக்கிட்டிருப்பாய்ங்க.
ஒபாமா: யப்பா படம் வரைஞ்சு பாகம் குறிக்கிறியேப்பா.
முருகேசன்:இதுமட்டுமில்லிங்கண்ணா. தனியார் மயம், தனியார் மயம்னு கண்டதையும் தனியார் மயமாக்கினிங்க.கார் விற்பனைய கூட்ட பப்ளிக் ட்ரான்ஸ் போர்ட்டை வீக் பண்ணமாதிரி , மருத்துவம்,குடி நீர் சப்ளை ,சுத்தம்,சுகாதாரம், இன்ஷ்யூரன்ஸுன்னு சகலத்தையும் தனியார் மயமாக்கினிங்க.மக்களோட காஸ்ட் ஆஃப் லிவிங் ஏறிக்கிட்டே போச்சு.
மக்களோட தேவை கூடிக்கிட்டே போச்சு. அந்த தேவையோட நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆனைப்பசிக்கு சோளப்பொறி கணக்காயிருச்சு. உங்க சனங்க சைக்காலஜியே மாறிப்போச்சு. நீ என்னவேணா பண்ணிக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4 ஆவது கார் வந்தே ஆகனும்னு ஃபிக்ஸ் ஆயிட்டாய்ங்க.
தனியார் மயம் தனியார் மயம்னு யுத்த தளவாட உற்பத்தியை கூட தனியார் மயமாக்கிட்டிங்க. வியாபாரிக்கு எப்பவு தன் உற்பத்தி ,தன் லாபம்தான் முக்கியம். பிள்ளை செத்தாலும் பரவால்லை மருமகள் தாலியறுக்கனும்ங்கற நேச்சர் தான் அவிகளுக்குண்டு. இங்கே டெலிகாம் கம்பெனிங்க எப்படி யாரு மந்திரியா இருக்கனும்னு கமாண்ட் பண்ற ரேஞ்சுக்கு வந்துட்டாய்ங்களோ அப்படியே அமெரிக்கா எந்த யுத்தத்தை ஆரம்பிக்கனும்னு அவிக டிசைட் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்க
ஒபாமா: கரெக்டு தான் கரெக்டுதான்
முருகேசன்:அது மட்டுமில்லிங்கண்ணா யுத்ததளவாட உற்பத்தி நிறுவனங்கள் யுத்தத்துக்காக தார் குச்சி போட கன்ஸ் ட்ரக்சன் கம்பெனிங்க யுத்தத்தால எரிஞ்ச நாடுகள்ள புனர் நிர்மாண காண்ட்ராக்டு கிடைக்கும்னு இருந்தாய்ங்க.
ஒபாமா: நேர்ல பார்த்த மாதிரி சொல்றியேப்பா
முருகேசன்:அந்த அளவுக்கு உலகமெல்லாம் நாறிப்போச்சுங்கண்ணா உங்க கதை
ஒபாமா:ஆமா ஏதோ முத கோணை முற்றும் கோணைனு ஆரம்பிச்சே..
முருகேசன்:ஆங் மண்ணின் மைந்தர்களான ரெட் இண்டியன்ஸை மொக்கை பண்ணி தானே நீங்க அரியணை ஏறினிங்க. அந்த பாவம் சொம்மா விடுமா? இன்னைக்கு ஸ்ரீ லங்கால ராஜ பக்சே பவிசா ஆண்டுரலாம்னு அத்தினி லட்சம் மக்களை கொன்னு குவிச்சாரு. ஆணடுருவாருங்கறிங்க. இல்லை. இல்லிங்கண்ணா முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும். எளியவனை வலியவனடிச்சா வலையவனை தெய்வம் அடிக்கும்
ஒபாமா: இப்ப என்ன அமெரிக்காவை ரெட் இண்டியன்ஸுக்கு ஒப்படைச்சுட்டு எங்களை ஓடிப்போக சொல்றியா?
முருகேசன்:ஒபாமாண்ணே, சனத்துக்கு இன்னிக்கு நேத்தா ஐடியா தரேன். தாளி கடப்பாறைய முழுங்கினவனுக்கு சுக்கு கசாயத்தை ரெக்கமண்ட் பண்ணாத்தான் மறுபடி வரான் . நான் என்ன செய்யட்டும். ஓஞ்சு போவட்டும். அவிகளையும் உங்காளுங்களுக்கு சமமா நடத்துமய்யா.
ஒபாமா: ஓகே நெக்ஸ்ட்?
முருகேசன்: இந்த இஸ்ரேல் கதைய எடுத்துக்க. காட்டுத்தீக்கு நடுவுல கட்டி கற்பூரம் மாதிரி இந்த விச பரீட்சை தேவையானு ஒரு செகண்ட் ரோசிச்சிருந்தா.. முஸ்லீம் நாடுகளோட விரோதம் வந்திருக்குமா?
ஒபாமா:இப்ப என்னத்தான் சொல்றேப்பா இஸ்ரேலை மாத்திர சொல்றியா?
முருகேசன்:இல்லிங்கண்ணா அவிகளுக்கு கட் அண்ட் ரைட்டா சொல்லிரு. தபாருப்பா நாங்களே கெட்டு நொந்து கிடக்கோம். ஒரு காலத்துல ஏதோ அகங்காரத்துல பண்ண வேலை இது. நீங்க அக்கம் பக்கம் அனுசரிச்சிக்கிட்டு போங்கனு சொல்லிருங்க. இதை பத்தி எவ்ளோ செலவாச்சு, எத்தனை நாடு விரோதமாச்சு, எத்தனை யுத்தம் நடந்துச்சு செப்டம்பர் 11 சம்பவத்துக்கு இஸ்ரேல் சமாசாரம் எந்த அளவுக்கு காரணம்னு ஒரு வெள்ளை அறிக்கை கூட விடுங்க தப்பில்லே.
ஒபாமா: ரொம்ப கவுரதை குறைச்சலா இருக்குமேப்பா.
முருகேசன்: இதானே வேணாங்கறது. கவுரதை பார்த்திருந்தா சுடுகாட்ல இருக்கிற வெட்டியான் கணக்கா போர் கருவிகள் விக்கனும் யுத்தம் நடக்கனும் சனம் சாகனும் ரீ கன்ஸ்ட் ரக்சன் காண்ட் ராக்ட் வரனும்னு ஸ்கெச் போட்டு நரி மாதிரி வாழ்ந்ததை விட கவுரதை குறைச்சலா இது? இத்தனை நாள் நீங்க விடாத உலக அமைதி கோசமா? என்ன அப்போ அதுல உண்மையில்லை. இப்போ நவ துவாரத்துலயும் காத்து போயி வந்துக்கிட்டிருக்கிறதால தலைக்கு ஏறியிருந்த அகங்காரம் இறங்கி வந்திருக்கிறதால அதுல உணர்ச்சியும் இருக்கும், உண்மையும் இருக்கும் அதை தொடர்ந்து ஆக்சனும் இருக்கும்.
ஒபாமா:சரிப்பா அடுத்ததா என்ன நடவடிக்கை எடுக்கனும்?
முருகேசன்: அணு ஆயுத ஒழிப்புன்னு ஒரு கோசம் உங்க கொடவுன்ல இருக்கில்லை. அதையும் தூசு தட்டி எடுத்து ஃபா லோ பண்ணுங்க. அணுமின்சாரம் தயாரிக்கிறதே தற்கொலை பண்ணிக்கிற மாதிரி.இதுல அணு ஆயுதம்லாம் கொலைகாரனுவ பண்ற வேலை அண்ணாத்தை
ஒபாமா: நெக்ஸ்ட்?
முருகேசன்: ஈராக்ல அத்தினி ஆயிரம் அணு ஆயுதம் இருக்கு இத்தினி ஆயிரம் கிருமி ஆயுதமிருக்குனு பூந்து அடி அடினு அடிச்சிங்க. என்னத்த பிடிச்சிங்க? ஒரு ம...ருமில்லை. எங்காளுங்க சென்ட் ரல் ஹோம் டிப்பார்ட்மெண்ட்ல அய்யர் பசங்க பேச்சை கேட்டுக்கிட்டு தமிழ் ஈழத்துல வரதராஜனுக்கு முடி சூட்னாப்பல இல்லாம ஈராக்ல இருக்கிறதுலயே ஜூரி எவனோ அவனை ச்சூ காட்டிட்டு ராணுவத்தை வாபஸ் வாங்கிரு ராசா? ஈரானுக்கு டகுலு விடறதுக்கு மிந்தி தபாரு எங்க கிட்டே இத்தனை அணு ஆயுதம் இருக்கு. இதுல இத்தினி ஆயுதத்தை அழிச்சுர்ரம்னு ஆரம்பி. இப்போ ஐ . நா வை வெத்து மிரட்டல் மிரட்டறாப்ல இல்லாம தர்மமா நடந்துக்கிட்டு உன் பின்னாடி தர்மத்தை வச்சி ஐ.நா வுக்கு அழுத்தம் கொடு. எல்லாபயலும் வழிக்கு வரான்.
ஒபாமா:இந்த ஒசாமா?
முருகேசன்: அந்த பார்ட்டிய ஊட்டி ஊட்டி வளர்த்து ரஷ்யா காரன் மேல விட்டதே நீங்க தானே பார்ட்டி.வளர்த்த கடா முட்ட வந்தாப்ல முட்டவர்ரான்.
ஒபாமா: தீர்வை சொல்லுப்பா..ரொம்பவே நொந்து போயிருக்கம்.
முருகேசன்:ஒசாமாவோட இத்தனை நடவடிக்கைக்கும் பேஸ் என்ன அவிக மதம் அழிஞ்சுருமோ, அவிக கலாசாரம் காலாவதியாயிருமோனு நீங்க க்ரியேட் பண்ண டெர்ரர்தான். இஸ்லாம்ல எத்தனையோ நல்ல அம்சங்கள் இருக்கு. அதையெல்லாம் போற்றி பாடுங்க. முடிஞ்சதை அமல் படுத்துங்க. பெட் ரோல் தாகத்தால இஸ்லாம் நாடுகளோட ரத்தம் குடிக்கிற குடிகேடித்தனத்துக்கு குட்பை சொல்லுங்க. ஆல்ட்டர்னேட்டிவ் பவர், ஃப்யூயலுக்கு ஆராய்ச்சியை முடுக்கி விடுங்க . எங்க ராமர் பிள்ளை டகுல் வேலையையெல்லாம் விட்டுட்டு பாவம் நிஜமாவே ஏதோ வச்சிருக்கிற மாதிரி இருக்கு. அதை ட்ரை பண்ணி பாருங்க.
ஒபாமா:சரிப்பா எங்க சனம் வளர்ச்சி வளர்ச்சிங்கறாய்ங்களே..
முருகேசன்:எங்க நாட்ல நித்யானந்தா, கல்கி மட்டுமில்லே இன்னைக்கும் உண்மையான சாமியாருங்க இருக்காய்ங்க. அவிக கைல கால்ல விழுந்து உங்க நாட்டுக்கு கூட்டிப்போய் ஆன்மீகத்தை போதிக்க சொல்லுங்க. போதுமென்ற மனமே பொன்செய் மருந்து.
ஒபாமா:சரிப்பா ஆயுத வியாபாரம் கூடாதுன்னிட்ட. வேற ஏதாவது ப்ராஜக்ட்ல பணத்தை போட்டாத்தானே
முருகேசன்:ஏன் எங்க நாட்டு நதிகளோட இணைப்பு மேல இன்வெஸ்ட் பண்ணுங்க. அதுக்கு முன்னாடி பாக்கிஸ்தானுக்கு ஸ்ட் ரிக்ட் வார்னிங்க் கொடுங்க.. பொழப்பை பார்க்க சொல்லி. விட்டா அவிக நாட்லயும் இந்த நதி இணைப்பு வேலை ஏதாச்சும் இருந்தா இன்வெஸ்ட் பண்ணுங்க..
ஒபாமா: தேங்க்யூப்பா.. இன்னைக்கே இந்த நிமிசமே வேலைய ஆரம்பிச்சுர்ரன்
முருகேசன்:அடிச்சு தூள் கிளப்புங்க. கார்ப்பசேவ் மாதிரி படக்குனு புலி மேலருந்து இறங்கிராதிங்க.. புலி மேல சவாரி பண்ணிக்கிட்டே ஏதாச்சும் வாகா கிளை கிடைச்சா படக்குனு பிடிச்சிக்கிட்டு காலை தூக்கி மேல போட்டுக்கிட்டு புலியை உஸ்கோ உஸ்கோன்னிருங்க
ஒபாமா: சூப்பர்மா.. ஊருக்கு போய் செக் அனுப்பி வைக்கிறேன்.
முருகேசன்:அதெல்லாம் எதுக்கு தலை .. நான் சொன்னதை எல்லாம் அப்ளை பண்ணு உலகமே உருப்படும். அதுக்கு மிஞ்சின புண்ணியம் என்ன இருக்கு..
ஒபாமா:வித்யாசமான ஆளுப்பா..
முருகேசன்:அதனால தான் வித்யாசமா யோசிச்சு வித்யாசமான ஐடியா எல்லாம் கொடுத்திருக்கன்.