Tuesday, May 11, 2010

பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி:2

அண்ணே வணக்கம்ணே,
பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி பதிவின் இரண்டாம் பகுதியோட "தேதி குழப்பங்கள்" "கண்ணா நீ ஜெயிச்சுட்டே" ஆகிய இரண்டு தனிப்பதிவுகளும் போட்டிருக்கேன். அந்தந்த தலைப்பு மேல க்ளிக்கி படிச்சுருங்கண்ணா.

உங்கள்ள ஆரும் மறு மொழி போடறதில்லைன்னு ஆளில்லாத இடத்துல டீ போடற பார்ட்டியா வர்ணிச்சு ஒரு கமெண்ட் வந்திருக்கு. டீ சாப்டவங்க பேசாம போனா என்ன அர்த்தம் ? டீ சுமாரா இருந்ததுன்னுதானே அர்த்தம் நல்லால்லேன்னா துப்பிட்டு போவாங்க இல்ல.

மவுனம் சம்ம்மதத்துக்கு அறிகுறின்னு மேற்படி பார்ட்டிங்களுக்கு உங்க சார்பா சொல்றேன் .. தப்புன்னா சப்புனு ஒரு கமெண்ட் அடிங்க‌

சரி .. தொடர் பதிவுக்கு போயிரலாமா?

கீதைக்கு ஆரம்ப புள்ளி அர்ச்சுனனின் குழப்பம் .

எல்லாரும் சொந்தகாரவுக ஆச்சே அவிகளை எப்படி கொல்லுவேன். இவிக எல்லாம் செத்து தொலைஞ்ச பிறகு  நான் வாழ்ந்தென்ன? ( பந்தா காட்ட முடியாதில்லே) - இப்படியெல்லாம் அர்ச்சுனன் சொல்லிட்டு வரான் இதுல நமக்கு நோ அப்ஜெக்சன்.  அடுத்து ஒரு காரணத்தை சொல்றான் பாருங்க:

யுத்தத்தால

//குலம் அழிந்தால் நிலையான குல தர்மங்கள் அழிகின்றன// 

யுத்தத்தால குலம் எப்படி அழியும்னா..வார்ல மஸ்தா பேரு டிக்கெட் வாங்கிருவானுங்கோ. அப்போ அவிக பெண்டாட்டி மார் எல்லாம் அவிக சாதி ஆம்பளையதான் கட்டுவேன்னு பிடிவாதம் பிடிக்க முடியாதில்லயா? ஆண் சனத்தொகை ஃபணாயிலிட்டிருக்கும் நைனா.

ஒரு ஐயரு மனைவி சத்ரியனை கட்டவேண்டிவரலாம். சத்ரியன் மனைவி வைசியனை, வைசியன் மனைவி சூத்திரனை கட்ட வேண்டி வரும். இப்படி கலப்பு திருமணம் நடந்தா குலம் அழிஞ்சுருமாம்.  குலம் அழியறதுல கீதாசிரியருக்கு ( கண்ணனை சொல்லலே .. கீதைய எழுதின பிராமணோத்தமருக்கு)  என்ன நஷ்டம்?

மிருகங்களை கூட க்ராஸ் பண்ணாதான் பெட்டர் வெரைட்டி கிடைக்குது. ஒரே லிமிட்ட்டட் க்ரூப்ல தொடர்ந்து கல்யாணங்கள் நடந்ததால தான் நம்ம நாட்ல மனிதர்களோட சராசரி  உயரம், உடல் பலம் எல்லாம் குறைஞ்சுகிட்டே வருது.

குலம் அழியாம இருந்தா பிராமண குலம் உத்தம வர்ணமா கன்டின்யூ ஆகலாம். பிராமண குலத்துல கலப்பு ஏற்பட்டுட்டா இவன் ஏற்படுத்திக்கிட்ட விதிப்படி பிறக்கற குழந்தை சூத்திரனாயிருது.

வர்ணக்கலப்பால ஒன்னு மைனாரிட்டி ஆயிர்ராய்ங்க. ரெண்டு க்ராசிங்க் ஆகி பேட்டண்ட் ரைட்ல குழப்பம் வருது.அக்மார்க் பிராமண சனத்தொகை குறையறதால என்ன நஷ்டம்னா ஆளும் வர்கத்துக்கு ஜல் ஜக் போட்டு முக்கியமான போஸ்டிங்ல போட்டுவைக்கவாவது பிராமண பிள்ளைங்க தேவையாச்சே.அப்புறம் அதிகாரத்துல பங்கு போயிரும். ரிமோட் கண்ட் ரோல் போயிரும்,  மானியம் போயிருமே,. கண்ட சூத்திர பயலுவ ராசாவுக்கு நெருக்கமாயிட்டா?

சரி   பிராமண இனம் அக்மார்க் முத்திரையோட  தொடர்ரதுல என்ன லாபம்? இவிக ஜீன்ல இருக்கிற சுய நலம், இன உணர்வு, சதி, புத்தி கூர்மை இதர வர்ணங்களுக்கு பரவாம இருக்கும். இனக்கலப்பால ராமானுஜர் மாதிரி அஷ்டாக்ஷரி மந்திரத்தை கோபுரமேறி கூவிர்ர கூமுட்டைங்க (?) பிறந்துருவாய்ங்க.

தங்கள் இனம் கலப்பில்லாம் தொடர்ந்தாதான் இதர வர்ணத்தாரையும் இனக்கலப்புக்கு வழியில்லாத அவிக ரத்ததுல உள்ள அடிமைத்தனம் தொடர்ராப்ல செய்யமுடியும்.

//குல தர்மம் அழிந்தால் தலைமுறை முழுவதையும் அதர்மம் சூழுமே//

குல தர்மம்னா என்ன ?

 பிராமணன் சூ .. நோகாம உட்கார்ந்து திங்கறது, ராசாவுக்கு சால்ரா போட்டு கிராமம் கிராமமா மானியமா வாங்கிக்கிறது. அடுத்தவன் உழைச்சு விளைவிச்ச தானியத்துல லையன்ஸ் ஷேரை பங்கா வாங்கி அனுபவிக்கிறது.

சத்ரியன் ராசா பண்ற அ நியாய யுத்தத்துல எல்லாம் சண்டை போட்டு சாகனும், இவன் பெண்டாட்டி தாலியறுக்கனும், வைசியன் வியாபாரம் தான் செய்யனும், சூத்திரன் இவிகளுக்கு அடிமையாத்தான் இருக்கனும்.அப்பத்தான் பிராமண குலத்தோட வாழ்வு ஜாஜ்வல்யமா தொடரும்.

வர்ணாசிரம தருமம் எல்லாம் நடைமுறைக்கு வந்தது சமீபத்துல தான்.அதுக்கு முன்னாடி? மாத்ரு ஸ்வாம்ய சமாஜம் தான். அம்மா யாருனு தெரியும் . அப்பன் யாருனு தெரியாது. அப்ப எந்த வர்ணத்தான் எந்த வர்ணத்தாளை போட்டானோ தெரியாது. ரத்தக்கலப்பு சர்வ சகஜம். கச்சாமுச்சானு இடம் மாறின ஜீன்கள் சில சமயத்துல பல நூறு வருஷங்களுக்கு பின்னாடி பிறக்கிற  குழந்தைகளுக்கு கூட கிடைக்கலாம்.

அப்படி ஒரு சூத்திரனுக்கு ஃப்ரீசிங்ல இருந்த பிராமண ஜீன் கிடைச்சு அவன் வேதம் படிக்கிறேன்னா அவன் காதுல ஈயத்தை காய்ச்சி ஊத்தனும். வேதத்தை உச்சரிச்சா அவன் நாக்கை வெட்டனும்னு சட்டம் இருந்தது (மனுஸ்மிருதி).

இந்த செட்டப் அப்படியே தொடரனும்னா வர்ணாசிரம தர்மம் (கர்மம் ! கர்மம்!) குலதர்மம் தொடரனும். செருப்பு தைக்கிறவன் பிள்ளை செருப்பு தைக்கனும், கக்கூஸ் கழுவறவன் பிள்ளை கக்கூஸ் கழுவனும். இதான் குலதர்மம். யுத்தம் வந்தா இதெல்லாம் ஃபணாலாயிரும்னு அர்ச்சுனன் பயப்படறான். (அப்படின்னு கீதையை எழுதின பஞ்ச கச்சம் பயப்படுது , சொல்லுது)

//கண்ணா தர்மம் கெட்டால் மாதர் கற்பும் மடவார் நோன்பும் கெடும்//
பாருங்க இங்கே தர்மங்கற வார்த்தைய கரெக்டா புரிஞ்சிக்கிடனும் அது வெறும் தர்மமில்லே குலதர்மம். இனக்கலப்பு ஏற்பட்டா கற்பு கெட்டுருமாம்.

இவிக கற்போட அழகென்னனு கடைசில  சொல்றேன். பார்ப்பனன் தன் மனைவியை இன்னொரு பார்ப்பனனுக்கு விட்டா கற்பு கெடாது. ஒரு பார்ப்பனன் ராசா மனைவிய பதம் பார்த்துட்டா கற்பு கெடாது. இனக்கலப்பு (அதாவது பார்ப்பன பெண் பார்ப்பனனல்லாத ஆணை மணந்தால் மட்டுமே) கற்பு கெடும்.

இதே மனு ஸ்மிருதில பார்ப்பனன் ஒருவன் சூத்திரப்பெண்ணை ரேப் பண்ணிட்டா அவன் மயிரை(குடுமியை)  வெட்டிட்டா போதும், ஆனா ஒரு சூத்திரன் பார்ப்பன  பெண்ணை கெடுத்துட்டா அவன் உயிரை எடுத்துரனும்னு சொல்லியிருக்கு.

இவன் சூத்திர பெண்ணை தக் ஜம் பண்ணிட்டா  பார்ப்பன இனம் பெருகும். ( ஜஸ்ட் மேல் ஷேவனிசம் தட்ஸால்) அவன் ஒரு பார்ப்பன பெண்ணை   தக்க ஜம் பண்ணிட்டா சூத்திர இனம் பரவும்னு இப்படி வச்சானுங்களா இல்லை அவாள் மயிரும் இவன் உயிரும்   ஒன்னுங்கற அகம்பாவத்துல வச்சாளா தெரியலை. எதுக்கு இதை சொல்லவரேன்னா மாதர் கற்பு சாந்தி காலத்துலயே  மானாவாரியா கெட்டிருக்கு அதனால தான் மனு ஸ்மிருதில  இப்படி ஒரு செக்ஷன் வருது. ஆனால் கீதாசியரோட ( பஞ்ச கச்சத்தோட) உத்தேசத்துல அவாள் அவாள் எப்படி போனாலும் கற்பு கிடையாது. பார்ப்பனன் சூத்திரச்சியை தக்க ஜம் பண்ணாலும் கற்பு கெடாது. சூத்திரன் பார்ப்பன பெண்ணை பண்ணா மாத்திரம் கற்பு கெடும்.

ராசாவுக்கு பிள்ளையில்லன்னா இவாள் தான் கர்ப தானம் பண்றது அதுக்குத்தான் புத்ர காமேஷ்டி யாகம்னு பேரு. ஒரு பார்ப்பன சிறுவன்  வேதம் கத்துக்க தூர தேசம்போயி ரிட்டர்ன் ஆகறச்சே பொலி காளை கணக்கா இருப்பான். அவனுக்கு வீரியம் புரண்டு எவளையாச்சு கச முசா பண்ணீட்டா பேஜாருன்னு வர்ர வழியில உள்ள பிராமணாள் வீடுகள்ள தங்கி அதிதி மரியாதைய ஏத்துக்கிட்டபடியே ரிட்டர்ன் ஆவாரு. அதிதி மரியாதைன்னா சோத்த போடறது மட்டுமில்லிங்கண்ணா பெண்டாட்டிய படுக்க போடறதும்தான்.

என்னடா முருகேசன் சுத்தி வளைச்சு அர்ச்சுனன் பேச்சுக்கு  தானா ஒரு அர்த்தம் கொடுத்து  ஆப்பு வைக்கற மாதிரி இருக்கேனு நினைக்கிறிங்க . அடுத்த வரிய பாருங்க நான் சொன்னது 100 சதம் கரெக்டுனு அர்ச்சுனனே கன்ஃபார்ம் பண்றான்.

//மாதர் கெட்டால் நான்கு வருணங்களும் குழப்பமடையும்//

அவிகளோட அசலான உத்தேசம் என்னனு புரியுதா "நான்கு வர்ணமும் குழப்பமடையுமாம்"  வர்ணாசிரம தர்மம் ஃபணாலாயிட்டா இவிக நாட்டாமை நட்டாத்துல போயிருமில்லியா.. இதான் அசலான மேட்டர்.

(தொடரும்)