என் பதிவுகள் மீதான திருத்தங்கள், எதிர்வினைகள், விமர்சனங்களை எப்போதும் வரவேற்பவன் நான். ஜன்ய பாகங்களை பிரஸ்தாபித்தல், குடும்பத்திலான பெண்களின் கற்பை சந்தேகப்படுதல் போன்ற அம்சங்கள் நிறைந்த மறுமொழிகளை இடும் மண்டூகங்களுக்கு ஒரு சொல்.
கவிதை07 955 பதிவுகளை தாண்டி 10 மாதங்களில் ஒரு லட்சம் , இரண்டே மாதங்களில் 50 ஆயிரம் வருகைகளை பெற்று தூள் கிளப்பிக்கொண்டிருக்கிறது. ஆரம்ப காலத்திலிருந்து சரோஜா தேவி நாவல் தனமான மறுமொழிகளை போட்ட பார்ட்டிகள் இருக்கவே இருக்கின்றனர்.
ஆனால் நம்ம வலைபூவுல ஒரு சீசன்ல அலப்பறை பண்ண பார்ட்டி அந்த சீசனுக்கு அப்புறம் தலையே காட்டாம போனதை கவனிங்க. அவிகளுக்கு என்ன ஆச்சு?
கை போச்சா, கால் போச்சா, பேச்சு விழுந்து போச்சா, என்னமோ ஆயிருச்சு. அதான் இந்த பக்கம் தலைய காட்டறதில்லை. இப்ப மேற்படி விதமான மறுமொழி போடற பிகில் ரவுடிகளுக்கு அவர்களின் வராகை (வருகைக்கு எதிபதம்னா) ஒரு பாடமானால் சந்தோஷம்.
நான் சொல்றதெல்லாம் தப்பாவே கூட இருக்கட்டும். (ஒரு பேச்சுக்குண்ணா) ஆனால் என் நோக்கத்துல ஒரு புனிதம் இருக்கு. மனிதகுல நலத்தின் மேல் ஒரு அக்கறை இருக்கிறது. மலத்தின் மீது மட்டும் அக்கறை உள்ள அலப்பறை பார்ட்டிகள் த்த்தமது உடல் உறுப்புகளை பத்திரமாக பார்த்துக்கொள்வது நல்லது.
அனுபவம்ணா .. நம்ம வயித்தெரிச்சலை கொட்டிக்கிட்டு எவனும் உருப்பட்டதே இல்லைண்ணா. அதுக கெட்டு நொந்து நாசமா போயி அதை பார்த்து நமக்கே மனசு கேட்காம அய்யோ பாவம்னு கடவுளுக்கு ப்ரே பண்ணா கூட நோ சேஞ்ஜ்.
அதனாலதான் சொல்றேன். மரு மொழி வேண்டாம். மறுமொழி போடுங்க..
குறிப்பு:
பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி தொடர்பதிவு குறித்து என்னை வானளவு புகழ்ந்து எனக்கு வந்த பத்துக்கும் மேலான மெயில்களை ப்ளாகில் பிரசுரிக்க அவற்றை அனுப்பியவர்களின் அனுமதியை கேட்டிருக்கிறேன்.