Wednesday, July 14, 2010

பிரபாகரன் பிழைக்க வாய்ப்பே இல்லை

ஆமாங்கன்னா  நான் என்னவோ வெறுமனே பிறந்த தேதிய வச்சுக்கிட்டு பிரபாகரன் சாகவில்லைனு பதிவை போட்டுட்டன். இப்ப இவரோட ஜாதகத்தை கணிச்சு பார்த்தா பிரபாகரன் பிழைக்க வாய்ப்பே இல்லைனு ஆணித்தரமா தெரியவந்தது. நம்ம வலைப்பூவோட பேரே " நிர்வாண உண்மைகள்"னு இருக்கிறச்ச எப்படின்னா ஒரு பொய்யை தொடரமுடியும்

பை தி பை நக்சல்பிரச்சினைக்கு தீர்வுங்கற தலைப்புல ஒரு தனிப்பதிவும்போட்டிருக்கேன். படிங்க. கமெண்ட்டால அடிங்க.. உடுங்க ஜூட்தனக்காக வாழற வாழ்க்கைய பிழைப்புன்னுவாய்ங்க. தன் இனத்துக்காக தன்னை அர்ப்பணிச்சு வாழற வாழ்க்கையத்தான் வாழ்க்கைம்பாங்க. இந்த விதிப்படியும், அவர் பிறந்த நேரத்தை வச்சும்  பார்த்தா பிரபாகரன் பிழைக்க வாய்ப்பே கிடையாது.
கடந்த ஞா கிழமை நிறைஞ்ச அமாவாசைல  பிரபாகரன் சாகவில்லைனு ஒரு பதிவு போட்டிருந்தேன். பிறந்த நேரம் கூட இல்லாம என் அனுபவத்தையும் சிக்ஸ்த் சென்ஸையும் நம்பி நியூமராலஜிக்கலா அனலைஸ் பண்ணி அவரு ,சாகலை 2010 நவம்பர் 26க்கு அப்புறம் சாகசப்பயணம் துவக்குவாருனு அடுத்தடுத்த ரெண்டு பதிவுகள்ள  ஒரே போடா போட்டிருந்தேன்.

யாருக்கு பேதியாச்சோ  என்னமோ? யார் என்னல்லாம் காரணம் சொன்னாய்ங்களோ ?என்னெல்லாம் பூச்சி காட்டினாய்ங்களோ தெரியாது?

 "இன உறுப்பும் கேரக்டரும்" போன்ற  தலைப்புகள்ள போட்ட பதிவுகளையெல்லாம் திரட்டின தமிழ்மணத்துக்கு திடீர்னு கடமை உணர்ச்சி அதிகமாகி வில்லங்கபதிவுகள்ங்கற தலைப்புல போட்ட இணைப்புரையை காரணமா காட்டி  கவிதை 07 ஐ தடை பண்ணிருச்சு.

பிரபாகரனோட சிஸ்டரை கோட் பண்ணி  அவரோட சரிய்யான பிறந்த  நேரத்தை ஒரு பட்சி எடுத்துக்கொடுக்கவே வால்ல நெருப்பு பிடிச்ச அனுமாரா இந்த பதிவை எரிய விட்டிருக்கேன். எவனுக்கெல்லாம் கீழே எரியுதோ கையில நூறு இரு நூறு வச்சிக்கிட்டு 108க்கு ஃபோன் போடட்டும். மேட்டருக்கு வந்துருவம்.

பிரபாகரனோட பிறந்த நேரம் மதியம் 12.02 நிமிஷம். (தேதி ஞா இருக்கா? 26/11/1954 )இதை அபிஜித் முகூர்த்தம்னு சொல்வாய்ங்க. கோட்டை முற்றுக்கைக்குள்ளாயிட்டா அந்த நேரத்துக்கு அய்யரை தேடமுடியாது, அய்யரே இருந்தாலும் முகூர்த்தத்துக்காக வெயிட் பண்ண முடியாது. அந்த மாதிரி சந்தர்ப்பத்துல இந்த அபிஜித் முகூர்த்தத்தை அடாப்ட் பண்ணிக்குவாய்ங்க. குரான்ல கூட இந்த உச்சி வேளைய பத்தின பிரஸ்தாபனை இருக்கிறதா கேள்வி. ( பாய்ங்க யாருனா கன்ஃபர்ம் பண்ணா நல்லாருக்கும்)

அடுத்தது லக்னம். பிரபாகரன் பிறந்தது கும்ப லக்னத்துல. இந்த லக்னத்துக்கு அதிபதி சனி.இவரு லக்னத்துக்கு 9ஆவது ராசியான துலால உச்சமாகியிருக்கார். (வடிவேலு சொல்வாரே பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்குனு - நம்ம பிரபாகரன் மேட்டர் வேற மாதிரி பேஸ்மென்ட் டூ ஸ்ட்ராங்கு) மேலும் சனி ஆயுஷ்காரகங்கற மேட்டர் எல்லாத்துக்கும் தெரிஞ்ச மேட்டர்தான்.  

இது போதாதுனு மேற்படி சனி சுக்கிரன்,புதனோட வேற சேர்ந்திருக்காரு. சுக்கிரனுக்கு துலா ஆட்சி வீடுவேறே. கும்பலக்னத்துக்கு நல்லதை பண்ண வேண்டிய 3 கிரகமும் கோணஸ்தானமான 9ல நின்னதுதான் இந்த ஜாதகத்துலயே ஹைலைட். இதுக்கு உதாரணம் சொல்லனும்னா திமுகவும் அதிமுகவும் இணைஞ்சு காங்கிரசோட கூட்டுவச்சிக்கிட்ட மாதிரினு சொல்லலாம்.

ஒன்பதுங்கறது தந்தையை,  தூரதேசங்களை, அங்கன வாழற ஆதரவாளர்களை காட்டுது. ( என் ஜாதகத்துல 9ல சனி அவரை உச்ச குரு சொம்மா பார்க்கிறார். இதுக்கே தூரதேசத்து ஜோதிட பிரியர்கள் தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைக்காக  நம்ம வங்கி கணக்குல  காசு போட்டு ஆதரிக்கிறாய்ங்க) .  ஜாதகரோட தந்தை தீர்காயுசா வாழ்ந்ததும் , இவருக்கு உலகமெங்கும் உள்ள ஆதரவும் 9 ஆம் இடம் சுபபலமா இருக்குங்கறதுக்கு ஆதாரம்.

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி, ஓடினவனுக்கு 9ல குருனு ஒரு ஜோதிடபழமொழி உண்டு.  அதாவது எட்டாவது இடம் கெட்டுப்போனா  நிலைமை எக்குத்தப்பாகி வசம்மா  மாட்டிக்குவம்.  ஆனால்  ஒன்பதாமிடம் (தூர பிரயாணங்களை கூட இந்த இடம் தான் காட்டும்)  சுபமா இருந்தா அந்த ஆபத்துலருந்து  தப்பிவிடலாம் .

குருவெல்லாம் சுபகிரகம். அந்த அளவுக்கு பவர் ஃபுல் கிடையாது. ஆனால் இந்த ஜாதகத்துல பாருங்க சனி பாவகிரகம், பாவ கிரகமான சனியோட சேர்ந்ததால பாவியான புதன் என்று இரண்டு பாவ கிரகங்கள். அடிஷ்னலா சுக்கிரன் என்ற  ஒரு சுபகிரகம்  எல்லாம்  சேர்ந்திருக்கு.  அதெப்படிங்கண்ணா மாட்டுவார்.

மேலும் அகால மரணம், துர்மரணத்துக்கு வழி வகுக்ககூடிய  8,12 ஆகிய ரெண்டு இடங்களும் காலி.  சனிக்கும், செவ்வாய் சேர்க்கை கிடையாது.   ஏன் பரஸ்பர  பார்வை  கூட  கிடையாது.  குரு 6ல இருக்காரே அதுவும் உச்சமா இருக்காரேனு கேட்கலாம் .  உன்னிப்பா பார்த்தா உச்ச குருவை , துலால உச்சம் பெற்ற  சனி பார்க்கிறாருங்கோவ்.  இதனால குருவோட கொட்டம் அடங்கிருச்சுங்கோ. இல்லேன்னா குரு  6ல உச்சத்துல இருக்கிறதால எப்பவோ  ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்திருப்பாரு. அதனால குரு ஸ்விட்ச் ஆஃப். இது கன்ஃபார்ம்.மேலும் 6ல் உள்ள குரு , ஜன்மத்துல இருக்கிற செவ்வாய்க்கிடையில பார்வை கிடையாது. இதனாலதான் ஹார்ட் Hard ஆ இருந்திருக்கு.

(உச்சனை உச்சன் பார்த்தா - கெட்டுப்போன நேரத்துல -  பிச்சை கூட கிடைக்காதுங்கறது ரூல். அதனால தான் கடைசி வரை இந்தியா உதவும் உதவும்னு வெயிட் பண்ணியும் உதவி கிடைக்கலை)

ஜன்மத்துல செவ்வாய் கீறாரே அவரு எட்டை பார்ப்பாரேனுவிங்க. வர்ரேன். செவ்வாய் கொடுக்கிற பலன் ரெண்டு. ஒன்னு ஆயுதம் தரிக்கனும். இல்லே ஆயுதங்களால தாக்கப்படனும். ஜாதகர் சதா சர்வ காலம் ஆயுதம் தாங்கியே வாழ்ந்ததால இந்த தோஷம் ஃபணால் .

முதல் பதிவுல அமாவாசை, சூரிய சந்திர சேர்க்கையோட அருமை பெருமையையெல்லாம் சொல்லியிருக்கேன். அந்த சேர்க்கை ஜீவன ஸ்தானத்துல நடந்திருக்குங்கண்ணா. இவிகளுக்கு 6,7 க்கு ஆதிபத்யம் கிடைச்சதாலதான் அவருக்கு நண்பர்களும், எதிரிகளும் (சாரி துரோகிகளும்) சமமா இருந்தாய்ங்க. அதுலயும் ரோகாதிபத்யம் சந்திரனுக்கு கிடைச்சதால ரெண்டு நாள்ள விரோதியான பார்ட்டியெல்லாம் உண்டுங்கோ. ஆனால் 7க்கான ஆதிபத்யம் சூரியனுக்கு கிடைச்சதால சூரியன் ஆத்ம காரகன் என்பதால  நண்பர்கள் ஒரு ஆடிமாசம் தவிர மத்த 11 மாசமும் ஸ்ட் ராங்கா இருந்திருப்பாய்ங்க.

இத்தீனி ப்ளஸ்பாயிண்ட் இருந்தாலும் இவருக்கு  ஏன்  இத்தனை கெட்ட பேரு வரணும், ஏன் இப்படி  செமர்த்தியா தோக்கணும்,ஏன் இப்படி எல்லாரையும் பலி கொடுக்கனும், ஏன் இப்படி மாயமா மறையனும்னு லாஜிக்கலா கேள்வி கேட்பிங்க . வரேன். அஞ்சுல கேது குந்திக்கினு கீறாரே அவரு கொடுத்த வேலை இது. அஞ்சுன்னா புத்திஸ்தானம். புத்திர ஸ்தானம், பேர் புகழை ,அதிர்ஷ்டத்தை காட்டற இடம், இந்த இடத்துல கேது இருந்ததால  14/Dec/2009 => முதல்  14/Jul/2010 வரை சந்திர தசைல கேது புக்தி நடந்ததால இதெல்லாம் நடந்தது. அஞ்சுல கேது தற்கொலை பண்ணிக்க வைக்கலாம், விரக்தியடைஞ்சு களத்துலருந்து வெளியேற வைக்கலாம். அட்லீஸ்ட் விஷ பிரயோகத்தால சாகப்பண்ணியிருக்கலாமே தவிர துப்பாக்கி குண்டுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. அஞ்சு பிள்ளைகளை காட்டற இடம்ங்கறதால அவரோட வாரிசுக்கு அந்த கொடிய நிலை ஏற்பட்டுது.
ராகு,கேது பத்தி புதுசா சொல்ல தேவையில்லை.ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் சம சப்தகத்துல அதாவது ஏழாவது வீட்ல/ 180 டிகிரியில  இருப்பாய்ங்க. ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிடுவாய்ங்க. இவர் அவரை கண்ட் ரோல் பண்ணுவார். இவர் அவரை கண்ட்ரோல் பண்ணுவாரு. இவர் அவரை பேலன்ஸ் பண்ணுவாரு. அவரு இவரை பேலன்ஸ் பண்ணுவாரு
இப்போ கேது அஞ்சுல நின்னு  புத்ர நாசத்தை கொடுத்துட்டாரு. அடுத்து ராகு இதை பேலன்ஸ் பண்ணனும் .இவர் 11ல இருக்கிறதால எதிர்பாராவிதமா,  லாட்டரித்தனமா , மேஜிக் மாதிரி, அற்புதத்தை நிகழ்த்தனும். 14/Jul/2010 => முதல்  14/Mar/2012 வரை சந்திர தசைல சுக்கிர புக்தி ஆரம்பமாகப்போகுது. இவர் பாக்யாதிபதி . தூர தேசத்துலருந்து ஆதரவை, உதவிய தரனும். இவருக்கு தாயை காட்டற சதுர்தாதிபத்யமும் இருக்கு. கிருகாதிபத்யம் இருக்கு. இவர் களத்திரகாரகர் வேற.
பைத்தியக்காரத்தனமா இருந்தாலும் கிரகம் சொல்றதை அப்படியே சொல்றேன். என் கணக்கு கரெக்டாயிருந்தா14/Jul/2010 முதல்  14/Mar/2012க்குள்ள பிரபாகரன் தன் தாயை,மனைவியை, பிறந்த வீட்டை சந்திக்கனும்.
14/Mar/2012 => முதல்  15/Sep/2012 வரை நடக்க உள்ள சந்திர தசை சூரிய புக்தியில்  தமிழ் ஈழத்தை வென்றெடுத்து விரக்தி காரணமாய் தான் ஆட்சி தலைமையை ஏற்காது   தமது  சக போராளி ஒருவரை ஆட்சி பீடத்தில் அமரவைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ( 7க்கு அதிபதியான சூரியன் -10 ல்).
16/Sep/2002 அன்று சந்திர தசை துவங்கியது. சந்திர தசையெல்லாம் முதல் பாதி (5 வ) எப்படி இருக்குமோ அடுத்த பாதி அதுக்கு கொய்ட் ஆப்போசிட்டா இருக்கும். இந்த கணக்குப்படி 16/செப்/2007லருந்தே ஜாதகருக்கு தேய்பிறை ஆரம்பமாயிருச்சு. என்னதான் தேய் பிறைன்னாலும் சந்திரன் மனதைத்தான் பாதிப்பார். மிஞ்சிப்போனா  நுரையீரல், அப்படியும் மிஞ்சிப்போனா கிட்னியை பாதிப்பானே தவிர உயிர் போகறதுக்கெல்லாம் வாய்ப்பேகிடையாது.
அதுலயும் சந்திரன் வந்து  உள்ளதை  இல்லாம ஆக்கிரமாட்டார்.தன் தசையோட முதல் பாதில  தான் கொடுத்ததை வேணம்னா  ரெண்டாம் பாதில ஒழிச்சுரலாம்.
முக்கியமா சந்திரனோட ஸ்பெஷாலிட்டியே நிச்சயமற்ற தன்மை தான். இது இந்த தசை முழுக்க கன்டின்யூ ஆகலாம். அதாவது 15/Sep/2012 வரை கூட . பிரபாகரனே மீடியா முன்னாடி தோன்றி பேசினால் கூட சனம் அதை நம்பாத நிலையே 15/Sep/2012 வரை கூட இருக்கலாம்.
நியூமராலஜிப்படி பிறப்பு எண்ணான எட்டை வச்சு பார்த்தாலும்  8X7 56 வயசு வரை அதாவது நவம்பர் 26 ,2010 வரை இவர் வாழ்வின் மையம் மனைவியும், சக போராளிகளுமாகத்தான் இருக்கவேண்டும்.   அதுக்கு பிறவு வரப்போற எட்டாவது ரவுண்டுலதான் மரணம் கார்க் பாலை பலான இடத்துல வச்சு தேய்க்க ஆரம்பிச்சிருக்கனும்.
பிழைச்சே கிடந்தாலும் எட்டாவது ரவுண்டுல சங்குதானு சில அவசர குடுக்கைங்க அவசரப்படலாம். அண்ணா !  சனி ஆயுஷ் காரகர்ங்கறதால அவரு டிக்கெட் கொடுக்கறது டவுட்டுதான் .அப்படியே எட்டாவது ரவுண்டு கொடுத்தே தீருவேன்னு நினைச்சாலும் செகண்ட் ஆஃப்ல தான் டிக்கெட் தரமுடியுங்கண்ணா. (அதாவது  2014 நவம்பர் 26க்கு அப்புறம்)  அட் தி சேம் டைம் பார்ட்டிக்கு  நெர்வஸ் சிஸ்டத்துக்கு சம்பந்தப்பட்ட பிரச்சினை வந்துருச்சுன்னா   ஃபெடல் காஸ்ட்ரோ மாதிரி தீர்காயுசா ரிமோட் கண்ட்ரோல்ல  ஈழத்தை கட்டியமைப்பதை  தொடர்வாரு.

எப்படியோ கொளுத்தி போட்டுட்டம். ஆனால் பாருங்கண்ணா .. எத்தீனி அய்யர்மாருக்கு சோசியம் தெரியும் . ஒருத்தராச்சும்   பிரபாகரன் ஜாதகத்தை பார்த்து சாகலைப்பா.. அது தீர்காயுசு ஜாதகம்னு ஒரு பேச்சு சொன்னாய்ங்களா ? இதாங்கண்ணா பார்ப்பன புத்திங்கறது.
Post a Comment