Showing posts with label prabakaran alive. Show all posts
Showing posts with label prabakaran alive. Show all posts

Thursday, January 20, 2011

பிரபாகரன் உயிருடன் : நக்கீரன் ; அன்றே சொன்ன கவிதை07

பிரபாகரன் உயிருடன்? : அன்றே சொன்ன கவிதை07

ஜோதிஷ அடிப்படையில் பார்த்தால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சாக வாய்ப்பில்லை. உயிருடன் தான் இருக்கவேண்டும். 2010 நவம்பர் 26 க்கு பிறகு தம் சாகசப்பயணத்தை துவக்குவார் என்று என் பதிவுகள்ள சொல்லியிருந்தேன். 

இப்போ பிரபாகரன் குறித்த தகவல்கள் சாகசப்பயணம் துவக்கியிருக்கு. முதல்ல லேட்டஸ்டை அதிகாலைல  பிடிக்க படிக்க இங்கே  அழுத்துங்க (உபயம்: நக்கீரன்)

இப்போ கவிதை07ல் நான் எழுதிய பதிவுகளை ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்க.



பிரபாகரன் பிழைக்க வாய்ப்பே இல்லை ( தலைப்புதான் பாஸ் நெகட்டிவ்)


பிரபாகரன் சாகவில்லை


நவம்பர்26க்கு பிறகு பிரபாகரன் சாகசப்பயணம்


பிரபாகரனும் நானும் (ஹி ஹி.. ஜாதகரீதியிலான ஒப்பீடுங்கோ)


எச்சரிக்கை:
ஜோதிடம் பொய்த்தால் அது ஜோதிடத்தின் பெருமை
அது பொய்த்தால் சொன்ன ஜோதிடனின் சிறுமை

Wednesday, July 14, 2010

பிரபாகரன் பிழைக்க வாய்ப்பே இல்லை

ஆமாங்கன்னா  நான் என்னவோ வெறுமனே பிறந்த தேதிய வச்சுக்கிட்டு பிரபாகரன் சாகவில்லைனு பதிவை போட்டுட்டன். இப்ப இவரோட ஜாதகத்தை கணிச்சு பார்த்தா பிரபாகரன் பிழைக்க வாய்ப்பே இல்லைனு ஆணித்தரமா தெரியவந்தது. நம்ம வலைப்பூவோட பேரே " நிர்வாண உண்மைகள்"னு இருக்கிறச்ச எப்படின்னா ஒரு பொய்யை தொடரமுடியும்

பை தி பை நக்சல்பிரச்சினைக்கு தீர்வுங்கற தலைப்புல ஒரு தனிப்பதிவும்போட்டிருக்கேன். படிங்க. கமெண்ட்டால அடிங்க.. உடுங்க ஜூட்



தனக்காக வாழற வாழ்க்கைய பிழைப்புன்னுவாய்ங்க. தன் இனத்துக்காக தன்னை அர்ப்பணிச்சு வாழற வாழ்க்கையத்தான் வாழ்க்கைம்பாங்க. இந்த விதிப்படியும், அவர் பிறந்த நேரத்தை வச்சும்  பார்த்தா பிரபாகரன் பிழைக்க வாய்ப்பே கிடையாது.
கடந்த ஞா கிழமை நிறைஞ்ச அமாவாசைல  பிரபாகரன் சாகவில்லைனு ஒரு பதிவு போட்டிருந்தேன். பிறந்த நேரம் கூட இல்லாம என் அனுபவத்தையும் சிக்ஸ்த் சென்ஸையும் நம்பி நியூமராலஜிக்கலா அனலைஸ் பண்ணி அவரு ,சாகலை 2010 நவம்பர் 26க்கு அப்புறம் சாகசப்பயணம் துவக்குவாருனு அடுத்தடுத்த ரெண்டு பதிவுகள்ள  ஒரே போடா போட்டிருந்தேன்.

யாருக்கு பேதியாச்சோ  என்னமோ? யார் என்னல்லாம் காரணம் சொன்னாய்ங்களோ ?என்னெல்லாம் பூச்சி காட்டினாய்ங்களோ தெரியாது?

 "இன உறுப்பும் கேரக்டரும்" போன்ற  தலைப்புகள்ள போட்ட பதிவுகளையெல்லாம் திரட்டின தமிழ்மணத்துக்கு திடீர்னு கடமை உணர்ச்சி அதிகமாகி வில்லங்கபதிவுகள்ங்கற தலைப்புல போட்ட இணைப்புரையை காரணமா காட்டி  கவிதை 07 ஐ தடை பண்ணிருச்சு.

பிரபாகரனோட சிஸ்டரை கோட் பண்ணி  அவரோட சரிய்யான பிறந்த  நேரத்தை ஒரு பட்சி எடுத்துக்கொடுக்கவே வால்ல நெருப்பு பிடிச்ச அனுமாரா இந்த பதிவை எரிய விட்டிருக்கேன். எவனுக்கெல்லாம் கீழே எரியுதோ கையில நூறு இரு நூறு வச்சிக்கிட்டு 108க்கு ஃபோன் போடட்டும். மேட்டருக்கு வந்துருவம்.

பிரபாகரனோட பிறந்த நேரம் மதியம் 12.02 நிமிஷம். (தேதி ஞா இருக்கா? 26/11/1954 )இதை அபிஜித் முகூர்த்தம்னு சொல்வாய்ங்க. கோட்டை முற்றுக்கைக்குள்ளாயிட்டா அந்த நேரத்துக்கு அய்யரை தேடமுடியாது, அய்யரே இருந்தாலும் முகூர்த்தத்துக்காக வெயிட் பண்ண முடியாது. அந்த மாதிரி சந்தர்ப்பத்துல இந்த அபிஜித் முகூர்த்தத்தை அடாப்ட் பண்ணிக்குவாய்ங்க. குரான்ல கூட இந்த உச்சி வேளைய பத்தின பிரஸ்தாபனை இருக்கிறதா கேள்வி. ( பாய்ங்க யாருனா கன்ஃபர்ம் பண்ணா நல்லாருக்கும்)

அடுத்தது லக்னம். பிரபாகரன் பிறந்தது கும்ப லக்னத்துல. இந்த லக்னத்துக்கு அதிபதி சனி.இவரு லக்னத்துக்கு 9ஆவது ராசியான துலால உச்சமாகியிருக்கார். (வடிவேலு சொல்வாரே பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்குனு - நம்ம பிரபாகரன் மேட்டர் வேற மாதிரி பேஸ்மென்ட் டூ ஸ்ட்ராங்கு) மேலும் சனி ஆயுஷ்காரகங்கற மேட்டர் எல்லாத்துக்கும் தெரிஞ்ச மேட்டர்தான்.  

இது போதாதுனு மேற்படி சனி சுக்கிரன்,புதனோட வேற சேர்ந்திருக்காரு. சுக்கிரனுக்கு துலா ஆட்சி வீடுவேறே. கும்பலக்னத்துக்கு நல்லதை பண்ண வேண்டிய 3 கிரகமும் கோணஸ்தானமான 9ல நின்னதுதான் இந்த ஜாதகத்துலயே ஹைலைட். இதுக்கு உதாரணம் சொல்லனும்னா திமுகவும் அதிமுகவும் இணைஞ்சு காங்கிரசோட கூட்டுவச்சிக்கிட்ட மாதிரினு சொல்லலாம்.

ஒன்பதுங்கறது தந்தையை,  தூரதேசங்களை, அங்கன வாழற ஆதரவாளர்களை காட்டுது. ( என் ஜாதகத்துல 9ல சனி அவரை உச்ச குரு சொம்மா பார்க்கிறார். இதுக்கே தூரதேசத்து ஜோதிட பிரியர்கள் தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைக்காக  நம்ம வங்கி கணக்குல  காசு போட்டு ஆதரிக்கிறாய்ங்க) .  ஜாதகரோட தந்தை தீர்காயுசா வாழ்ந்ததும் , இவருக்கு உலகமெங்கும் உள்ள ஆதரவும் 9 ஆம் இடம் சுபபலமா இருக்குங்கறதுக்கு ஆதாரம்.

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி, ஓடினவனுக்கு 9ல குருனு ஒரு ஜோதிடபழமொழி உண்டு.  அதாவது எட்டாவது இடம் கெட்டுப்போனா  நிலைமை எக்குத்தப்பாகி வசம்மா  மாட்டிக்குவம்.  ஆனால்  ஒன்பதாமிடம் (தூர பிரயாணங்களை கூட இந்த இடம் தான் காட்டும்)  சுபமா இருந்தா அந்த ஆபத்துலருந்து  தப்பிவிடலாம் .

குருவெல்லாம் சுபகிரகம். அந்த அளவுக்கு பவர் ஃபுல் கிடையாது. ஆனால் இந்த ஜாதகத்துல பாருங்க சனி பாவகிரகம், பாவ கிரகமான சனியோட சேர்ந்ததால பாவியான புதன் என்று இரண்டு பாவ கிரகங்கள். அடிஷ்னலா சுக்கிரன் என்ற  ஒரு சுபகிரகம்  எல்லாம்  சேர்ந்திருக்கு.  அதெப்படிங்கண்ணா மாட்டுவார்.

மேலும் அகால மரணம், துர்மரணத்துக்கு வழி வகுக்ககூடிய  8,12 ஆகிய ரெண்டு இடங்களும் காலி.  சனிக்கும், செவ்வாய் சேர்க்கை கிடையாது.   ஏன் பரஸ்பர  பார்வை  கூட  கிடையாது.  குரு 6ல இருக்காரே அதுவும் உச்சமா இருக்காரேனு கேட்கலாம் .  உன்னிப்பா பார்த்தா உச்ச குருவை , துலால உச்சம் பெற்ற  சனி பார்க்கிறாருங்கோவ்.  இதனால குருவோட கொட்டம் அடங்கிருச்சுங்கோ. இல்லேன்னா குரு  6ல உச்சத்துல இருக்கிறதால எப்பவோ  ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்திருப்பாரு. அதனால குரு ஸ்விட்ச் ஆஃப். இது கன்ஃபார்ம்.மேலும் 6ல் உள்ள குரு , ஜன்மத்துல இருக்கிற செவ்வாய்க்கிடையில பார்வை கிடையாது. இதனாலதான் ஹார்ட் Hard ஆ இருந்திருக்கு.

(உச்சனை உச்சன் பார்த்தா - கெட்டுப்போன நேரத்துல -  பிச்சை கூட கிடைக்காதுங்கறது ரூல். அதனால தான் கடைசி வரை இந்தியா உதவும் உதவும்னு வெயிட் பண்ணியும் உதவி கிடைக்கலை)

ஜன்மத்துல செவ்வாய் கீறாரே அவரு எட்டை பார்ப்பாரேனுவிங்க. வர்ரேன். செவ்வாய் கொடுக்கிற பலன் ரெண்டு. ஒன்னு ஆயுதம் தரிக்கனும். இல்லே ஆயுதங்களால தாக்கப்படனும். ஜாதகர் சதா சர்வ காலம் ஆயுதம் தாங்கியே வாழ்ந்ததால இந்த தோஷம் ஃபணால் .

முதல் பதிவுல அமாவாசை, சூரிய சந்திர சேர்க்கையோட அருமை பெருமையையெல்லாம் சொல்லியிருக்கேன். அந்த சேர்க்கை ஜீவன ஸ்தானத்துல நடந்திருக்குங்கண்ணா. இவிகளுக்கு 6,7 க்கு ஆதிபத்யம் கிடைச்சதாலதான் அவருக்கு நண்பர்களும், எதிரிகளும் (சாரி துரோகிகளும்) சமமா இருந்தாய்ங்க. அதுலயும் ரோகாதிபத்யம் சந்திரனுக்கு கிடைச்சதால ரெண்டு நாள்ள விரோதியான பார்ட்டியெல்லாம் உண்டுங்கோ. ஆனால் 7க்கான ஆதிபத்யம் சூரியனுக்கு கிடைச்சதால சூரியன் ஆத்ம காரகன் என்பதால  நண்பர்கள் ஒரு ஆடிமாசம் தவிர மத்த 11 மாசமும் ஸ்ட் ராங்கா இருந்திருப்பாய்ங்க.

இத்தீனி ப்ளஸ்பாயிண்ட் இருந்தாலும் இவருக்கு  ஏன்  இத்தனை கெட்ட பேரு வரணும், ஏன் இப்படி  செமர்த்தியா தோக்கணும்,ஏன் இப்படி எல்லாரையும் பலி கொடுக்கனும், ஏன் இப்படி மாயமா மறையனும்னு லாஜிக்கலா கேள்வி கேட்பிங்க . வரேன். அஞ்சுல கேது குந்திக்கினு கீறாரே அவரு கொடுத்த வேலை இது. அஞ்சுன்னா புத்திஸ்தானம். புத்திர ஸ்தானம், பேர் புகழை ,அதிர்ஷ்டத்தை காட்டற இடம், இந்த இடத்துல கேது இருந்ததால  14/Dec/2009 => முதல்  14/Jul/2010 வரை சந்திர தசைல கேது புக்தி நடந்ததால இதெல்லாம் நடந்தது. அஞ்சுல கேது தற்கொலை பண்ணிக்க வைக்கலாம், விரக்தியடைஞ்சு களத்துலருந்து வெளியேற வைக்கலாம். அட்லீஸ்ட் விஷ பிரயோகத்தால சாகப்பண்ணியிருக்கலாமே தவிர துப்பாக்கி குண்டுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. அஞ்சு பிள்ளைகளை காட்டற இடம்ங்கறதால அவரோட வாரிசுக்கு அந்த கொடிய நிலை ஏற்பட்டுது.
ராகு,கேது பத்தி புதுசா சொல்ல தேவையில்லை.ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் சம சப்தகத்துல அதாவது ஏழாவது வீட்ல/ 180 டிகிரியில  இருப்பாய்ங்க. ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிடுவாய்ங்க. இவர் அவரை கண்ட் ரோல் பண்ணுவார். இவர் அவரை கண்ட்ரோல் பண்ணுவாரு. இவர் அவரை பேலன்ஸ் பண்ணுவாரு. அவரு இவரை பேலன்ஸ் பண்ணுவாரு
இப்போ கேது அஞ்சுல நின்னு  புத்ர நாசத்தை கொடுத்துட்டாரு. அடுத்து ராகு இதை பேலன்ஸ் பண்ணனும் .இவர் 11ல இருக்கிறதால எதிர்பாராவிதமா,  லாட்டரித்தனமா , மேஜிக் மாதிரி, அற்புதத்தை நிகழ்த்தனும். 14/Jul/2010 => முதல்  14/Mar/2012 வரை சந்திர தசைல சுக்கிர புக்தி ஆரம்பமாகப்போகுது. இவர் பாக்யாதிபதி . தூர தேசத்துலருந்து ஆதரவை, உதவிய தரனும். இவருக்கு தாயை காட்டற சதுர்தாதிபத்யமும் இருக்கு. கிருகாதிபத்யம் இருக்கு. இவர் களத்திரகாரகர் வேற.
பைத்தியக்காரத்தனமா இருந்தாலும் கிரகம் சொல்றதை அப்படியே சொல்றேன். என் கணக்கு கரெக்டாயிருந்தா14/Jul/2010 முதல்  14/Mar/2012க்குள்ள பிரபாகரன் தன் தாயை,மனைவியை, பிறந்த வீட்டை சந்திக்கனும்.
14/Mar/2012 => முதல்  15/Sep/2012 வரை நடக்க உள்ள சந்திர தசை சூரிய புக்தியில்  தமிழ் ஈழத்தை வென்றெடுத்து விரக்தி காரணமாய் தான் ஆட்சி தலைமையை ஏற்காது   தமது  சக போராளி ஒருவரை ஆட்சி பீடத்தில் அமரவைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ( 7க்கு அதிபதியான சூரியன் -10 ல்).
16/Sep/2002 அன்று சந்திர தசை துவங்கியது. சந்திர தசையெல்லாம் முதல் பாதி (5 வ) எப்படி இருக்குமோ அடுத்த பாதி அதுக்கு கொய்ட் ஆப்போசிட்டா இருக்கும். இந்த கணக்குப்படி 16/செப்/2007லருந்தே ஜாதகருக்கு தேய்பிறை ஆரம்பமாயிருச்சு. என்னதான் தேய் பிறைன்னாலும் சந்திரன் மனதைத்தான் பாதிப்பார். மிஞ்சிப்போனா  நுரையீரல், அப்படியும் மிஞ்சிப்போனா கிட்னியை பாதிப்பானே தவிர உயிர் போகறதுக்கெல்லாம் வாய்ப்பேகிடையாது.
அதுலயும் சந்திரன் வந்து  உள்ளதை  இல்லாம ஆக்கிரமாட்டார்.தன் தசையோட முதல் பாதில  தான் கொடுத்ததை வேணம்னா  ரெண்டாம் பாதில ஒழிச்சுரலாம்.
முக்கியமா சந்திரனோட ஸ்பெஷாலிட்டியே நிச்சயமற்ற தன்மை தான். இது இந்த தசை முழுக்க கன்டின்யூ ஆகலாம். அதாவது 15/Sep/2012 வரை கூட . பிரபாகரனே மீடியா முன்னாடி தோன்றி பேசினால் கூட சனம் அதை நம்பாத நிலையே 15/Sep/2012 வரை கூட இருக்கலாம்.
நியூமராலஜிப்படி பிறப்பு எண்ணான எட்டை வச்சு பார்த்தாலும்  8X7 56 வயசு வரை அதாவது நவம்பர் 26 ,2010 வரை இவர் வாழ்வின் மையம் மனைவியும், சக போராளிகளுமாகத்தான் இருக்கவேண்டும்.   அதுக்கு பிறவு வரப்போற எட்டாவது ரவுண்டுலதான் மரணம் கார்க் பாலை பலான இடத்துல வச்சு தேய்க்க ஆரம்பிச்சிருக்கனும்.
பிழைச்சே கிடந்தாலும் எட்டாவது ரவுண்டுல சங்குதானு சில அவசர குடுக்கைங்க அவசரப்படலாம். அண்ணா !  சனி ஆயுஷ் காரகர்ங்கறதால அவரு டிக்கெட் கொடுக்கறது டவுட்டுதான் .அப்படியே எட்டாவது ரவுண்டு கொடுத்தே தீருவேன்னு நினைச்சாலும் செகண்ட் ஆஃப்ல தான் டிக்கெட் தரமுடியுங்கண்ணா. (அதாவது  2014 நவம்பர் 26க்கு அப்புறம்)  அட் தி சேம் டைம் பார்ட்டிக்கு  நெர்வஸ் சிஸ்டத்துக்கு சம்பந்தப்பட்ட பிரச்சினை வந்துருச்சுன்னா   ஃபெடல் காஸ்ட்ரோ மாதிரி தீர்காயுசா ரிமோட் கண்ட்ரோல்ல  ஈழத்தை கட்டியமைப்பதை  தொடர்வாரு.

எப்படியோ கொளுத்தி போட்டுட்டம். ஆனால் பாருங்கண்ணா .. எத்தீனி அய்யர்மாருக்கு சோசியம் தெரியும் . ஒருத்தராச்சும்   பிரபாகரன் ஜாதகத்தை பார்த்து சாகலைப்பா.. அது தீர்காயுசு ஜாதகம்னு ஒரு பேச்சு சொன்னாய்ங்களா ? இதாங்கண்ணா பார்ப்பன புத்திங்கறது.

Sunday, July 11, 2010

2010 நவம்பர் 26 க்கு பிரபாகரன் சாகச பயணம்?

வணக்கம்ணே !
ஊறுகாய் பானை மாதிரி கண்டபடி தலைய குலுக்கி  கணக்கு போட்டு பார்த்ததுல  பிரபாகரன் சாகலை 2010   நவம்பர் 26 க்கு பிறகு அவரோட   சாகச பயணம் மீண்டும் துவங்கும்னு தோணுதுங்கண்ணா. மேலும் குரு கிரகம் வேற டிசம்பர் 6 வரை வக்கிரத்துல இருக்கு. பழைய சம்பவங்கள் எல்லாம் திருப்பி நடக்கனும். உ.ம்: ஆந்திராவுல காங்கிரஸ் சிண்டுபிடி. தமிழ் நாட்ல அதிமுக காங்கிரஸ் கூட்டு , திமுக அரசு கலைப்பு இப்படி எதுவேணம்னா நடக்கலாம். இந்த லிஸ்ட்ல பிரபாகரன் மீடியா முன்னாடி தோன்றுவதை கூட எக்ஸ்பெக்ட் பண்ணலாம்.  ஆய்வு தொடருது.


நேத்து பிரபாகரன் பிறந்த அன்னைக்கிருந்த கிரக ஸ்திதிய வச்சும் அவரோட டேட் ஆஃப் பர்த்தை நியூமராலஜி படி அனலைஸ் பண்ணியும் ஒரு பதிவு போட்டிருந்தேன். பெயர் எண்ணை பொருத்தவரை சின்ன கன்ஃப்யூஷன் இருக்கிறதாவும் அவர் VELUPILLAI PRABAKARAN ஆ  அல்லது  VELUPILLAI PRABHAKARAN ஆனு தெரியலைன்னும் சொல்லியிருந்தேன். VELUPILLAI PRABAKARAN ஆ தான் இருக்கனும். அதனால அவர் பெயர் எண் 8னு வச்சி அனலைஸ் பண்ணியிருந்தேன். இதுக்கு பின்னாடி ஒரு சின்ன லாஜிக். ஹிந்தில,தெலுங்குல,சமஸ்கிருதத்துல எல்லாம் 4 "ப" இருக்கும். தமிழ்ல ஒரே ஒரு "ப"  தான். அதனால தமிழர்கள்  BH எல்லாம் உபயோகிக்கிறது ரேர்.  ஒரு வேளை அவர் பேர்ல BH வராப்ல இருந்தாலும் குடி முழுகிப்போறது ஒன்னுமில்லை. அப்ப பெயர் எண் 4 வரும். இது ராகுவுக்குரிய நெம்பர் . ராகுன்னாலே தலைமறைவு வாழ்க்கை தான். பிறப்பு எண்ணான 8 சனிக்குரியது.  4 ராகுவுக்குரியது. சனி,ராகு மத்தில எந்த தகராறும் கிடையாது (அட்லீஸ்ட் ஸ்டாலின் அழகிரி ரேஞ்ஜுல கூட) .ராகுவும் பிராபாகரன் ஜாதகத்துல நல்ல இடத்துல தான் இருந்திருக்கனும் .வெற்றிகரமான ஆயுத கடத்தல், வெற்றிகரமான உளவு பிரிவு, தலைமறைவு வாழ்க்கை, சினிமா உலக பிரமுகர்களின் ஆதரவு இதெல்லாம் இதைத்தான் காட்டுது.

அவருக்கு இந்த அளவுக்கு அவப்பெயர் , துஷ்பிரசாரம் நடக்க காரணம் அவரோட ஸ்தூல எண்ணான சந்திரன் தான். சந்திரன் ராகுவோட சேரும்போது இப்படி அவப்பெயர் ஏற்படறது, (நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினை கூட வரலாம்)சகஜம். சனி, சந்திர சேர்க்கை ஏற்படும்போது  (இது ஹிட்லர் ஜாதகத்துல இருந்ததாம்)  எதிராளிய ப்ளாக் மெயில் பண்ணி மிரட்டி வழிக்கு கொண்டுவர்ர நேச்சர் வரும். ஆனா சனி சந்திர  சேர்க்கை போக போக நரம்பு, மனம் தொடர்பான பிரச்சினைகளையும் தந்துரும். இதெல்லாம் பிரபாகரனுக்கு இருந்ததானு நெடுமாறன் மாதிரி பார்ட்டிங்க தான் சொல்லனும். நமக்கென்னங்க தெரியும் வெளியூரு.

வெறுமனே பெயர் எண்ணை வச்சு (BH) கணக்குபோட்டா கூட பிரபாகரன் கொல்லப்பட்டதா சொல்ற நேரத்துல அவரோட வயசு 55. இதை நாலால வகுத்தா 13 வரும். அதாவது நாலு நாலு வருசமா 13 ரவுண்டு முடிஞ்சு 14 ஆவது ரவுண்டுல 3 வருஷம் தான் கம்ப்ளீட் பண்ணியிருக்காரு. ( ஒரு பெரிய சுற்றை முடிச்சு புதுசா ஒரு பெரிய சுற்று ஆரம்பமாகி 7 வருசம் தான் ஆகியிருக்கு. ரெண்டு ரவுண்ட் கம்ப்ளீட் ஆகவே இன்னம் ஒரு வருசம் பாக்கியிருந்தது. அதுவும் இந்த நவம்பருக்கு கம்ப்ளீட் ஆயிரும். மூணாவது ரவுண்டு ஆரம்பமாகப்போகுது.

மூணாவது ரவுண்டோட சென்ட் ரல் தீமே பயணங்கள் தான். சாகசம் தான். சாகச யாத்திரைகள் தான். வீரம், தீரம் இத்யாதி தான். என் கணக்கு மட்டும் கரெக்டாயிருந்தா  2010 நவம்பர் 26 க்கு அப்புறம் பிரபாகரன் தன் சாகச பயணத்தை துவக்கிருவாரு. ஜஸ்ட் 4 வருஷத்துல அடிச்சு தூள் கிளப்பி தன் நாலாவது ரவுண்டை தமிழ் ஈழத்துல துவக்குவாருங்கண்ணா.

12 ரவுண்டு முடிஞ்சாலே ( 12 ஐ பெயர் எண்ணான நாலால பெருக்குங்க  அப்போ 48 வயசு) பார்ட்டி தீர்காயுசுனு அர்த்தம்.

டுபாகூர் ஜாதகத்துல பிறந்த பார்ட்டியெல்லாம் ஜஸ்ட் கோசாரத்துல சனி 9,10,11 ல சஞ்சரிக்கிற காலத்துல இமாலய சாதனைகளை படைச்சு மறுபடி தங்களோட பிக்காலி வாழ்க்கைக்கு திரும்ப இந்த பெரிய ரவுண்டு கோ இன்சைட் ஆவறது கூட ஒரு காரணம்தான்.

பிரபாகரன் மாதிரி சூப்பர் ஜாதகருங்க விஷயத்துலயும் இந்த பேக் டு தி பெவிலியன் நடக்கலாம். ஆனால் இவிக ஜாதகம் தங்க பஸ்பம், சிட்டுக்குருவி லேகியம்லாம் சாப்ட ஜாதகமா இருக்கிறதால கம்ப்யூட்டர்ல கண்ட்ரோல் ஜெட் குடுத்த மாதிரி படக்குனு பழைய ரேஞ்சுக்கு போயிரும். உ.ம் கமல் மாதிரி.

இப்போ தமிழ் நாட்ல ஒரு பாட்டிக்கு 120 வயசுல  பல் முளைச்சதாமே அந்த கேஸு ம் இப்படித்தான் பெரிய ரவுண்டை முடிச்சு ரெண்டாவது பெரிய சுற்றுல முதல் ரவுண்டை ஆரம்பிச்சிருக்கும்.

பிரபாகரன் பிறந்த நேரத்தை யார்னா கரெக்டா சொன்னா அடிச்சு சொல்லிரலாம். இருந்தாலும் பிறப்பின் போதான கிரக நிலை ,அதிலான ரேர் சிட்டிங்ஸ், நியூமரலாஜிக்கல் அனலைஸ் எல்லாம் வச்சுப்பார்க்கிறப்ப பிரபாகரன் இன்னொரு ஃபெடல் காஸ்ட்ரோ மாதிரி 48+48 வருஷம் வாழ்ந்து  இன்னொரு  ரவுண்டு வருவாருனு தோணுது.

ஒரு வேளை  அவர் பேர்ல BH இல்லாம  B மட்டும் வராப்ல இருந்தாலும் 96 வயசு வாழ்வாருங்கண்ணா.  

பிரபாகரன் சாகவில்லை


எச்சரிக்கை:1
1.நான் புலிகளை மட்டுமே அல்ல தடை செய்யப்பட்ட எந்த இயக்கத்தையும், வன் முறையில் நம்பிக்கை வைத்து செயல்படும் (தடை செய்யப்படாதிருந்தாலும் சரி) எந்த இயக்கத்தையும் ஆதரிப்பதாயில்லை.அதே நேரம் மனிதம் காக்க, மனித குலத்தை காக்க குரல் கொடுக்கும் யாரையும் என்னவராகவே கருதுவேன் அவர்களுக்கு ஆதரவாக என்  ஒலித்துக்கொண்டே இருக்கும் . என் குரல் வளை நெறிக்கப்படும் வரை.

2.கண்ணை மூடிக்கொண்டு  தனி மனிதர்களை ஆதரிப்பதும் என் கொள்கை அல்ல. மகாத்மாவே ஆனாலும் பிரிச்சு மேஞ்சுருவமில்லே. அதுக்காக எம்.ஜி.ஆரிலான தரும குணத்தையும், ஜெயாவிலான தன்னம்பிக்கை,துணிச்சலையும் ,கலைஞரிலான கவிதையையும் ,பிரபாகரனிலான தீரத்தையும் ஏத்துக்க மறுக்க மாட்டோம்ல

3.இந்த பதிவு  நூத்துக்கு நூறு எண் கணித அடிப்படையிலானது. ப்ராக்கெட்ல இருக்கிற மேட்டர்ங்க மட்டும் நம்ம இன்டர்ப்ரிட்டேசன்ஸ்.எண் கணிதத்தோட மைனஸ் பாயிண்ட் என்னனு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். அதாவது குறிப்பிட்ட எண்கள் பிறப்பு, கூட்டு,பெயர் எண்களா அமைஞ்சா மட்டும் போதாது. அவிக பொறந்த ஜாதகத்துல மேற்படி எண்களுக்குரிய கிரகங்கள் பலம் பெற்றிருக்கனும். பிரபாகரன் மேட்டர்ல நம்மகிட்டே அவரோட டைம் ஆஃப் பர்த் இல்லே. அதனால நோ ஜாதகம், நோ கிரக பலம். இந்த பலன் எல்லாம் ஒத்தை கண்ணுல பார்த்து சொன்ன மாதிரி.

4.இப்படி பெரி பெரி மேட்டர்ல எல்லாம் பலன் சொல்ல உனுக்கு இன்னா தகுதி கீதுனு கேட்கலாம். உங்க புரட்சி தலைவி மேட்டர்ல அவிக ஜாதகபலனை அவிகளுக்கு  அனுப்பி தேங்க்ஸ் கார்டு கூட பெற்றவன். எங்க ஊர்ல சந்திரபாபு மூத்திரம் வைட் பெட்ரோல் கணக்கா எரியற காலத்துல "ஊத்திக்குவாரு"னு அவிக சம்சாரத்துக்கே தெரிவிச்சவன். கடந்த தமிழக தேர்தல்ல தாத்தாவுக்கு (கலைஞர்) மெஜாரிட்டி கிடைக்காது. ராமதாசு குடைச்சல் குடுப்பாருனு தினகரன் நாளிதழுக்கு குரியர் மூலம் தெரிவிச்சவன். 2009 ல நடந்த தேர்தல்கள்ள ஒய்.எஸ் மறுபடி சி.எம் ஆவார், சீட்ஸ் குறையலாம். பிரஜா ராஜ்ஜியத்துக்கு 20 டு 30 சீட் தான் வரும்னு தெலுங்கு ப்ளாக்ல எழுதினவன். லேட்டஸ்டா நித்யானந்தா சந்தேக மரணத்துக்கோ, விஷம் வைத்து சாவுக்கோ ஆளாவார்னு சொல்லியிருக்கேன்.

இனி பதிவுக்கு வந்துருவம் .பிரபாகரனோட பிறந்த தேதி 26 -11- 1954 . பிறப்பு எண் 2+6 எட்டு. கூட்டு  எண் (2+6+1+1+1+9+5+4 ) 29 ( 2+9) 11 (1+1) = 2 பெயர் எண் VELUPILLAI PRABAKARAN னு கணக்கு போட்டா  8 வருது.VELUPILLAI PRABHAKARAN னு  போட்டா 4 வருது. இலங்கை அரசோட டாக்குமெண்ட் படி எது கரெக்டுனு யாராச்சும் சொன்னா நல்லாருக்கும்.

கிரக நிலை;
பிரபாகரனோட டைம் ஆஃப் பர்த் தெரியாததால அன்னைக்கு கிரக நிலைய ஒரு லுக் விடலாம்னு காலை 6 மணி டைம் போட்டு ஒரு சாதகம் போட்டுப்பார்த்தேன்.
இனிய அதிர்ச்சிகள் ஒன்னா ரெண்டா ? பார்ட்டி அமாவாசைக்கு மறு நாள் பிறந்திருக்கு. அமாவாசைன்னா சூரிய நட்சத்திரங்கள் ஒரே நட்சத்திரத்துல சஞ்சரிக்கிறதுதான் அமாவாசை.

ரஜினியோட மனிதன்  சினிமால  வர்ர விளக்கத்தை நம்பாதிங்க - திருடனாவான். அல்லது  போலீஸாவான்) சூரியன் செல்ஃப்னு சொல்ற சுயம். சந்திரன் மனோகாரகன்.சாதாரணமா மனிதனோட சுயம்/இகோ வேறா இருக்கும். ஆனால் அவன் மனசு வேற வேற மேட்டர்ல அலை பாய்ஞ்சுகிட்டிருக்கும். அதனால தான் பல லட்சியங்கள்  பொய்ச்சு போவுது. ஆனால் பிரபாகரன் மேட்டர்ல இப்படி நடக்க சான்ஸே இல்லை. ஒக்கட்டே மாட்டா, ஒக்கட்டே பார்யா மாதிரி ஒக்கடே எண்ணம், ஒக்கட்டே செயல்தான்.

அட..சொம்மா விடாதிங்க முருகேசன் பிரபாகரன் பிறந்தது அமாவாசைக்கு மறு நாள் தானேனு கேட்கிறிங்க அப்படித்தானே.

சூரிய சந்திரர்கள் பக்கத்து பக்கத்து ராசிகள்ள இருந்தாலே சிவசக்தியோகம் அது இதுனு ஹைலைட் பண்றாய்ங்க ( இது நம்ம ஜாதகத்துலயும் உண்டுங்கண்ணா. மேலும் பரிவர்த்தனம் வேற) . ஒரே ராசிலருந்தா இன்னா மாதிரி கான்சன்ட்ரேசன் வரும் கற்பனை பாருங்க.

உபரிபலமா நட்சத்திரம் அனுஷமாகியிருக்கு ( அதிபதி சனிங்கோ. ஆயுஷ்காரகர்) . ராசி விருச்சிகம். விருச்சிகம்னா தேளுனு அர்த்தம் . தேளு மறைஞ்சி வாழத்தான் விரும்பும் . அது வெளிச்சத்துக்கு வர்ர வரை  அது இருக்குன்னு சொன்னாலும் எவனாச்சும் நம்புவானா? தேள் வந்து கொட்டற வரை இது இன்னா பண்ணிரும்ங்கற எண்ணம் தான் இருக்கும்.

இந்த ராசிக்காரவுகளுக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் ( தான்)  இவர் டீலாகிவிடுவார். ராஜபக்சே ராஜபோகமா கீராருங்களே.

இது எட்டாவது ராசிங்கறதால மரணம் அப்பப்போ வந்து ஹலோ சொல்லிட்டு போகும்.  ( இவிகளுக்கு ரத்தம்,எரிச்சல் தொடர்பான பிரச்சினைகளும், ப்ளட் ப்யூரிஃபிகேசன்ல பிரச்சினைகள் காரணமா கிட்னி, நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம்.அதி கோபத்தால் வரும் வியாதிகள் (ஹை பிபி) அல்லது கோபத்தை அடக்குவதால் வரும் வியாதிகள் ( அல்சர்) இவருக்கு வந்திருக்கலாம். .இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்

கடகத்துல குரு உச்சமா இருக்காரு. இவிக உள்ளுணர்வு இவிகளை ஏமாத்தவே ஏமாத்தாது.   புதன்,சுக்கிரன்,சனி எல்லாம் ஒரே ராசில அதுவும் துலாம்ல இருக்காய்ங்க. குரு சுபனா இருக்க கூடிய லக்னங்கள்ள பிறந்திருந்தா கடக குரு தூக்கிவிட்டுருவாரு. தர்காதீதமான  தெய்வ பலம்  அவரை பின் தொடர்ந்துகிட்டே இருக்கும். தீர்காயுசுனு ஜோதிஷ கிரந்தங்கள் அடிச்சு சொல்லுது.

அட குரு பாபனா இருக்ககூடிய லக்னங்கள்ளயே பிறந்திருந்தாலும்  புதன்,சுக்கிரன்,சனி சேர்க்கை சொம்மா தூக்கிவிட்டுரும். ஆயுள் காரகனாகிய சனி வேற உச்சம். சுக்கிரன் ஆட்சி. ஆயுள் காரகனான சனி உச்சம் பெற்றாலும் தீர்காயுசுக்கு நிறைய வாய்ப்பு ஏற்படுது. முக்கியமா சனி செவ்வாய்க்கு தொடர்பு ஏற்படாததால துர்மரணத்துக்கு வாய்ப்பில்லைன்னுதான் சொல்லனும்.

எண் கணித பலன்:

பிறப்பு எண் , கூட்டு எண்:
ரெண்டுமே 8 வருது. எட்டுக்குரிய கிரகம்  சனி.சனி காலை குறிக்கிற கிரகம், நிறம் கருப்பு. சின்னவயசுல வெடிகுண்டு தயாரிக்கிறச்ச பை மிஸ்டேக் அது வெடிச்சு பிரபாகரனோட கால் கருப்பா மாறிட்டதாவும் அதனால அவருக்கு கரி காலனு ஒரு பேர் வந்ததாகவும் படிச்சிருக்கேன். மேலும் எட்டு தொழில் நுட்ப அறிவை தரும் எண். அதிலயும் இரும்பு தொடர்பான டெக்னிக்கல் நாலெட்ஜுக்கு சனி ரெம்ப முக்கியங்கண்ணா.  கண்ணை கட்டிக்கிட்டு யந்திர துப்பாக்கிய  அக்கக்கா பிரிச்சு  பூட்டற ரேஞ்சுக்கு இருந்தாருனு தகவல்.லாங் டெர்ம் ப்ராஜக்டுல இறங்கனும்னாலே சனி பலம் தேவைங்கண்ணா.ட்

எட்டு எட்டா பிரிங்க:
பெயர் எண், பிறப்பு எண் இரண்டுமே எட்டுங்கறதால இவர் வாழ்க்கையை எட்டு எட்டா பிரிக்கனும். ஒவ்வொரு எட்டு வருடம் கொண்ட காலத்துக்கும் ஒவ்வொரு பலன் வரும்.

இப்படி பிரிக்கனும்:

26/11/1954 முதல் 26/11/1962  முதல் எட்டு:
கடுமையான மலச்சிக்கல், கால் பாதம் தொடர்பான பிரச்சினைகள். தலித்துகளின் பராமரிப்பு, நெருக்கம். படிப்பில் தடை . ஸ்கூல் மாற்றம். செக்சன் மாற்றம்
26/11/1962 முதல் 26/11/1970  இரண்டாவது எட்டு:
கண், தொண்டை,வாய் தொடர்பான பிரச்சினைகள். மித பாஷி. குடும்பத்தில் வறுமை அ எவரேனும் குடும்பத்திலிருந்து வெளியேறுதல். பிரபாகரனுக்கு டெக்னிக்கல் பிரிவில் ஆர்வம்
26/11/1970 முதல் 26/11/1978  மூன்றாவது எட்டு
தைரிய சாகசங்கள், சாகச பயணங்கள், அல்லல் அலைச்சல். கேட்கும் திறன் பாதிக்கப்படுதல்
26/11/1978 முதல் 26/11/1986  நான்காவது எட்டு:
தாய், தாய் வழி உறவினர் பிரிவு, வீட்டை விட்டு வெளியேறுதல், வாகன விபத்து, இயக்கத்தில் உச்சக்கட்ட உட் கலகம்.
26/11/1986 முதல் 26/11/1994  ஐந்தாவது எட்டு:
தவறான முடிவுகள், அவமானம், ஏமாற்றம், மிஸ் கேரி, பிள்ளைகள் தொடர்பான வேதனை.
26/11/1994 முதல் 26/11/2002  ஆறாவது எட்டு:
சத்ரு ஜயம், விவகார ஜெயம், எதிரிகளே அற்றுப்போதல், எதிரிகளில் பிளவு,
26/11/2002 முதல் 26/11/2010  ஏழாவது எட்டு
மரணம் அ  நோய்கள்

மேற்படி  காலகட்டங்களுக்குரிய பலனை தந்தாச்சு . விவரம் தெரிஞ்சவங்க ஆர்வம் உள்ளவுக இந்த பலனை யதார்த்தத்தோட பொருத்திப்பார்த்து எத்தனை சதவீதம் பொருந்துதுனு சொல்லுங்க.  இந்த பலன் 50 முதல் 60 சதவீதம் பொருந்தினா கூட பிரபாகரன் உயிரோட தான் இருக்காருனு அடிச்சு சொல்லலாம் !. அடிச்சு சொல்லலாம். !!   அடிச்சு சொல்லலாம். !!!

மேற்படி  கணக்குப்படி பிரபாகரனுக்கு 26/11/2010க்கு பிறகுதான் எட்டாவது ரவுண்டு ஆரம்பமாகுது. மரணம்னா இதுக்கப்புறம்தான் வாய்ப்பிருக்கு. ஆனால்  இப்போ அவரு யு.ஜில இருக்கிறதால ( அண்டர் கிரவுண்ட் லைஃப் ) இந்த எட்டாவது ரவுண்டோட தோஷம் வேலை செய்யாது. என்னைக்கேட்டா பிரபாகரன் தன்னை வெளிப்படுத்திக்கறத விட அடுத்த எட்டு வருசங்களுக்கு  யு.ஜி லயே இருக்கிறது பெட்டர். அதான் அவருக்கு பலம். யு.ஜில இருந்தா இந்த தோஷம் நெர்வஸ் செட் அப் மேல எஃபெக்ட் காட்டலாம். அல்லது பைல்ஸ் மாதிரி வியாதிகளை தரலாமே தவிர அபாயம் ஆபத்து இருக்காது. அப்படி வெளிய வந்து கலக்கறேனு இறங்கினாலும் ஆயுள் காரகனான சனியோட எட்டாவது ரவுண்டு மரணத்தை கொடுக்காம நிரந்தர ஊனமாக்கிரவும் வாய்ப்பிருக்கு.

(அடுத்த பதிவுல பிரபாகரனோட  கூட்டு எண்  2  ஆனதால் நிகழக்கூடிய  பலன் களையும் புதிய புலிகள் அமைப்பை ஏற்படுத்தின தேதி, மதிவதனியுடனான திருமண தேதி ஆகியவற்றை பொருத்தும் நிகழக்கூடிய பலன் களையும் பார்ப்போம்.)