Sunday, July 11, 2010

2010 நவம்பர் 26 க்கு பிரபாகரன் சாகச பயணம்?

வணக்கம்ணே !
ஊறுகாய் பானை மாதிரி கண்டபடி தலைய குலுக்கி  கணக்கு போட்டு பார்த்ததுல  பிரபாகரன் சாகலை 2010   நவம்பர் 26 க்கு பிறகு அவரோட   சாகச பயணம் மீண்டும் துவங்கும்னு தோணுதுங்கண்ணா. மேலும் குரு கிரகம் வேற டிசம்பர் 6 வரை வக்கிரத்துல இருக்கு. பழைய சம்பவங்கள் எல்லாம் திருப்பி நடக்கனும். உ.ம்: ஆந்திராவுல காங்கிரஸ் சிண்டுபிடி. தமிழ் நாட்ல அதிமுக காங்கிரஸ் கூட்டு , திமுக அரசு கலைப்பு இப்படி எதுவேணம்னா நடக்கலாம். இந்த லிஸ்ட்ல பிரபாகரன் மீடியா முன்னாடி தோன்றுவதை கூட எக்ஸ்பெக்ட் பண்ணலாம்.  ஆய்வு தொடருது.


நேத்து பிரபாகரன் பிறந்த அன்னைக்கிருந்த கிரக ஸ்திதிய வச்சும் அவரோட டேட் ஆஃப் பர்த்தை நியூமராலஜி படி அனலைஸ் பண்ணியும் ஒரு பதிவு போட்டிருந்தேன். பெயர் எண்ணை பொருத்தவரை சின்ன கன்ஃப்யூஷன் இருக்கிறதாவும் அவர் VELUPILLAI PRABAKARAN ஆ  அல்லது  VELUPILLAI PRABHAKARAN ஆனு தெரியலைன்னும் சொல்லியிருந்தேன். VELUPILLAI PRABAKARAN ஆ தான் இருக்கனும். அதனால அவர் பெயர் எண் 8னு வச்சி அனலைஸ் பண்ணியிருந்தேன். இதுக்கு பின்னாடி ஒரு சின்ன லாஜிக். ஹிந்தில,தெலுங்குல,சமஸ்கிருதத்துல எல்லாம் 4 "ப" இருக்கும். தமிழ்ல ஒரே ஒரு "ப"  தான். அதனால தமிழர்கள்  BH எல்லாம் உபயோகிக்கிறது ரேர்.  ஒரு வேளை அவர் பேர்ல BH வராப்ல இருந்தாலும் குடி முழுகிப்போறது ஒன்னுமில்லை. அப்ப பெயர் எண் 4 வரும். இது ராகுவுக்குரிய நெம்பர் . ராகுன்னாலே தலைமறைவு வாழ்க்கை தான். பிறப்பு எண்ணான 8 சனிக்குரியது.  4 ராகுவுக்குரியது. சனி,ராகு மத்தில எந்த தகராறும் கிடையாது (அட்லீஸ்ட் ஸ்டாலின் அழகிரி ரேஞ்ஜுல கூட) .ராகுவும் பிராபாகரன் ஜாதகத்துல நல்ல இடத்துல தான் இருந்திருக்கனும் .வெற்றிகரமான ஆயுத கடத்தல், வெற்றிகரமான உளவு பிரிவு, தலைமறைவு வாழ்க்கை, சினிமா உலக பிரமுகர்களின் ஆதரவு இதெல்லாம் இதைத்தான் காட்டுது.

அவருக்கு இந்த அளவுக்கு அவப்பெயர் , துஷ்பிரசாரம் நடக்க காரணம் அவரோட ஸ்தூல எண்ணான சந்திரன் தான். சந்திரன் ராகுவோட சேரும்போது இப்படி அவப்பெயர் ஏற்படறது, (நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினை கூட வரலாம்)சகஜம். சனி, சந்திர சேர்க்கை ஏற்படும்போது  (இது ஹிட்லர் ஜாதகத்துல இருந்ததாம்)  எதிராளிய ப்ளாக் மெயில் பண்ணி மிரட்டி வழிக்கு கொண்டுவர்ர நேச்சர் வரும். ஆனா சனி சந்திர  சேர்க்கை போக போக நரம்பு, மனம் தொடர்பான பிரச்சினைகளையும் தந்துரும். இதெல்லாம் பிரபாகரனுக்கு இருந்ததானு நெடுமாறன் மாதிரி பார்ட்டிங்க தான் சொல்லனும். நமக்கென்னங்க தெரியும் வெளியூரு.

வெறுமனே பெயர் எண்ணை வச்சு (BH) கணக்குபோட்டா கூட பிரபாகரன் கொல்லப்பட்டதா சொல்ற நேரத்துல அவரோட வயசு 55. இதை நாலால வகுத்தா 13 வரும். அதாவது நாலு நாலு வருசமா 13 ரவுண்டு முடிஞ்சு 14 ஆவது ரவுண்டுல 3 வருஷம் தான் கம்ப்ளீட் பண்ணியிருக்காரு. ( ஒரு பெரிய சுற்றை முடிச்சு புதுசா ஒரு பெரிய சுற்று ஆரம்பமாகி 7 வருசம் தான் ஆகியிருக்கு. ரெண்டு ரவுண்ட் கம்ப்ளீட் ஆகவே இன்னம் ஒரு வருசம் பாக்கியிருந்தது. அதுவும் இந்த நவம்பருக்கு கம்ப்ளீட் ஆயிரும். மூணாவது ரவுண்டு ஆரம்பமாகப்போகுது.

மூணாவது ரவுண்டோட சென்ட் ரல் தீமே பயணங்கள் தான். சாகசம் தான். சாகச யாத்திரைகள் தான். வீரம், தீரம் இத்யாதி தான். என் கணக்கு மட்டும் கரெக்டாயிருந்தா  2010 நவம்பர் 26 க்கு அப்புறம் பிரபாகரன் தன் சாகச பயணத்தை துவக்கிருவாரு. ஜஸ்ட் 4 வருஷத்துல அடிச்சு தூள் கிளப்பி தன் நாலாவது ரவுண்டை தமிழ் ஈழத்துல துவக்குவாருங்கண்ணா.

12 ரவுண்டு முடிஞ்சாலே ( 12 ஐ பெயர் எண்ணான நாலால பெருக்குங்க  அப்போ 48 வயசு) பார்ட்டி தீர்காயுசுனு அர்த்தம்.

டுபாகூர் ஜாதகத்துல பிறந்த பார்ட்டியெல்லாம் ஜஸ்ட் கோசாரத்துல சனி 9,10,11 ல சஞ்சரிக்கிற காலத்துல இமாலய சாதனைகளை படைச்சு மறுபடி தங்களோட பிக்காலி வாழ்க்கைக்கு திரும்ப இந்த பெரிய ரவுண்டு கோ இன்சைட் ஆவறது கூட ஒரு காரணம்தான்.

பிரபாகரன் மாதிரி சூப்பர் ஜாதகருங்க விஷயத்துலயும் இந்த பேக் டு தி பெவிலியன் நடக்கலாம். ஆனால் இவிக ஜாதகம் தங்க பஸ்பம், சிட்டுக்குருவி லேகியம்லாம் சாப்ட ஜாதகமா இருக்கிறதால கம்ப்யூட்டர்ல கண்ட்ரோல் ஜெட் குடுத்த மாதிரி படக்குனு பழைய ரேஞ்சுக்கு போயிரும். உ.ம் கமல் மாதிரி.

இப்போ தமிழ் நாட்ல ஒரு பாட்டிக்கு 120 வயசுல  பல் முளைச்சதாமே அந்த கேஸு ம் இப்படித்தான் பெரிய ரவுண்டை முடிச்சு ரெண்டாவது பெரிய சுற்றுல முதல் ரவுண்டை ஆரம்பிச்சிருக்கும்.

பிரபாகரன் பிறந்த நேரத்தை யார்னா கரெக்டா சொன்னா அடிச்சு சொல்லிரலாம். இருந்தாலும் பிறப்பின் போதான கிரக நிலை ,அதிலான ரேர் சிட்டிங்ஸ், நியூமரலாஜிக்கல் அனலைஸ் எல்லாம் வச்சுப்பார்க்கிறப்ப பிரபாகரன் இன்னொரு ஃபெடல் காஸ்ட்ரோ மாதிரி 48+48 வருஷம் வாழ்ந்து  இன்னொரு  ரவுண்டு வருவாருனு தோணுது.

ஒரு வேளை  அவர் பேர்ல BH இல்லாம  B மட்டும் வராப்ல இருந்தாலும் 96 வயசு வாழ்வாருங்கண்ணா.  
Post a Comment