முன் கதை
(பூலோகத்தில் தரமான கல்வி, நேர்மையான பொருளாதாரம், உண்மையான வீரத்தை ஏற்படுத்த முப்பெரும் தேவியர் முடிவு பண்றாய்ங்க. இதுக்கு உதவக்கூடிய பார்ட்டி முருகேசன் தானு நாரதர் சொல்ல லட்சுமி ஸ்னேகா வடிவதுல முருகேசனை சந்திக்கிறாய்ங்க. அவர் யதார்த்தத்தை விளக்க மொதல்ல மக்களோட தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க அவிகளுக்கு உதவ ஒரு அமைப்பை ஏற்படுத்துவோம் . நாளடைவுல நம்ம பிரச்சினைகள் பிரச்சினைகளே அல்ல இந்த சிஸ்டத்துல இருக்கிற கோளாறோட சைட் எஃபெக்ட்ஸ் தானு புரிஞ்சுரும். அப்ப அவிகளை திரட்டி ஒட்டு மொத்த மாற்றத்துக்கு போராடலாம்னு முருகேசன் ஐடியா கொடுக்கிறாரு. இதை பத்தி ஸ்னேகா வடிவத்துல இருக்கிற லட்சுமி பேச்சுவார்த்தை நடத்தறாய்ங்க)
ஸ்னேகா:
வேலையை ஆரம்பிச்சுருவமா?
முருகேசன்:
அது சரி. மொதல்ல இந்த ப்ராஜக்டுல என் ரோல் என்ன? ரெம்யூனரேஷன் என்ன? முடிவு பண்ணுங்க
ஸ்னேகா:
நீயே சொல்லு.
முருகேசன்:
என் ரோல் ஒரு அவுட்டராதான் இருக்கனும். ஜஸ்ட் ஏஸ் எ பி.ஆர்.ஓ .என் ரெம்யூனரேஷன் மரியாதை + என் குடும்பம் பசியில்லாம காலத்தை ஓட்ட கொஞ்சமா காசு
ஸ்னேகா:
இதென்னப்பா ஆச்சரியமா இருக்கு? இந்த ப்ரஜக்டே உன்னை நம்பி தான் ஆரம்பிக்கிறேன்.
முருகேசன்:
ஆ...........மா இப்படித்தான் எல்லாருமே ஆரம்பிக்கிறாய்ங்க. எனக்கு வேணா தாயி. ஒரு ஆறு மாசத்துல அடுத்த ஆளை ட்ரெய்ன் பண்ணிட்டு நான் கழண்டுக்கறேன்.
ஸ்னேகா:
அது சரி அவுட்டருங்கறியே ஏன்?
முருகேசன்;
எல்லா இயக்கமும் ஒரு நதி புனிதமா புறப்படறாப்ல உத்தமமான டார்கெட்டோட தான் ஆரம்பிக்கப்படுது.வழில தானே கச்சாடாவெல்லாம் கலக்குது. இதே மாதிரி நீங்க ஆரம்பிக்க நினைச்சிருக்கிற இயக்கம்கூட நாறிப்போகலாம். நான் அவுட்டரா இருந்தா எனக்கொன்னும் சம்பந்தமில்லேப்பா ..புனிதமான லட்சியம் அது இதுனு சொன்னாய்ங்க. கூப்டாய்ங்க.. நான் அவிகளுக்காக ஸ்பென்ட் பண்ற நேரத்துக்கு பைசா தரேன்னாங்க. அவிக சொன்னதையெல்லாம் நடைமுறைல செய்தா நெஜமாலுமே நல்லது நடக்கும்னு நினைச்சேன். போனேன். எதுவும் உருப்படறாப்ல இல்லைனு புரிஞ்சது. அதான் கழண்டுகிட்டேனு சொல்லிக்கலாம்
ஸ்னேகா:
அதென்ன ரெம்யூனரேஷனுக்கு மிந்தி மரியாதைனு கேட்டே
முருகேசன்:
அதுவா.. மனிதன் சமூக பிராணிங்கறாய்ங்களே சமூகத்துக்குள்ள என்டர் ஆனதுமே பறிபோறது தனிமனித சுதந்திரம். சமூகத்தோட முட்டாள் தனம்,ஹிப்பாக்ரசியையெல்லாம் ஏத்துக்கிடனும். அதுலயும் ஒரு நிறுவனத்துக்குள்ள என்டர் ஆனா இன்னம் நாஸ்தி. தினத்தந்தில ஒரு சப் எடிட்டர் " என்னய்யா தமிழ் எழுதறே. மொதல்ல உனக்கு தமிழ் சரியா தெரியுமானு " கேட்டுப்புட்டார்.
ஸ்னேகா:
அடட ..தினத்தந்தி பராம்பரியம் மிக்க பத்திரிக்கையாச்சே. அதுலயா இப்படி?
முருகேசன்:
அதான் மொதல்லயே சொன்னேனே எல்லா இயக்கமும் ஒரு நதி புனிதமா புறப்படறாப்ல உத்தமமான டார்கெட்டோட தான் ஆரம்பிக்கப்படுது.வழில தானே கச்சாடாவெல்லாம் கலக்குது.
ஸ்னேகா:
சப் எடிட்டர் தமிழ் தெரியுமானு கேட்டாரு சரி .. அதுக்கு நீ என்ன சொன்னே?
முருகேசன்:
அட பிக்காலி ! சலவைக்கணக்கை கூட சந்தக்கவிதையா எழுதற பார்ட்டி நானு. என் தமிழை தட்டித்தரம் சொல்ற தகுதி உங்க சி.எம்முக்கே கிடையாது. அந்தாளு எழுதறது அவுட் டேட்டட் தமிழ். நான் எழுதறது அப் டு டேட் தமிழ். போனை வைடா
தண்டம்னேன்
ஸ்னேகா:
அதனால தான் மரியாதைக்கு ஃபர்ஸ் ப்ரிஃபரன்ஸா?
முருகேசன்:
இன்னொரு காரணமும் இருக்கு. எல்லா கிரகமும் கோண (1,5,9) கேந்திரங்கள்ள (4,7,10) இருந்தா அது பரிவ்ராஜக யோகமோ என்னமோனு படிச்சிருக்கன். என் ஜாதகத்துல ஜஸ்ட் சந்திரனும் சுக்கிரனும் மட்டும்தான் வாக்கு ஸ்தானத்துல இருக்காய்ங்க.பரிவ்ராஜக யோகம்னா எல்லாத்தயும் விட்டு விலகி நிக்கிற நிலைனு அர்த்தம். சுக்கிரன்னா செக்ஸாலஜி, சந்திரன்னா சைக்காலஜி. இது ரெண்டையும் சொல்றது மட்டும்தான் நம்ம வேலை. மத்தபடி இவிக யாரோ? நான் யாரோ? தேவையில்லாம என்னை இன்சல்ட் பண்ணா அது இவிகளுக்கே நல்லது கிடையாது.
ஸ்னேகா:
அ.. சொம்மா விடாதேப்பா
முருகேசன்:
இல்ல தாயி .. என் அனுபவத்தை சொல்றேன். எவனெல்லாம் என் மின்னாடி புலி வேஷம் போடாறானோ அவனெல்லாம் தக்கையாகி,மொக்கையாகி நாறி பூடறான்
ஸ்னேகா:
நாங்க கூடவா?
முருகேசன்:
தாயீ .. ரசிகர்களாலதான் ரஜினி சூப்பர் ஸ்டாரானாரு. அந்த ரசிகர்களை மொக்கையாக்கினதாலதான் பாஷா ஷுகர் பேஷண்ட் ஷூ கீழே பாதுஷா மாதிரி நாசுங்கிருச்சு. சனங்களாலதான் தெய்வத்துக்கு பலம். சனம் சாமியில்லே பூதமில்லேனு முகத்தை திருப்பிக்கிட்டா ரோசய்யா கதிதான்.
ஸ்னேகா:
என்னமோப்பா செமர்த்தியா டர்ராக்க கத்துக்கிட்டிருக்கே. அவுட்டராவே இரு. மரியாதை நிச்சயமா கிடைக்கும் . பைசான்னியே அது எவ்ளோனு சொல்லிரு தீர்த்துரலாம்
முருகேசன்:
ரூ.6000/
ஸ்னேகா: என்னது ? ரூ.6 ஆயிரமா? அவனவன் அஞ்சு இலக்க சம்பளமே பத்தாம அந்த லோனு,இந்த லோனு ,க்ரெடிட் கார்டுன்னு அல்லாடறான். 6 ஆயிரம் ரூபாயையும் மரியாதையயும் வச்சுக்கிட்டு என்ன பண்ணுவே?
முருகேசன்:
வாழுவேன். என் இனத்தை வாழவைக்க உழைப்பேன்.
ஸ்னேகா:
தோடா இந்த டகுலுதானே வேணாங்கறது.. 6ஆயிரம் ரூபாய்ல நீ வாழறதே கஷ்டம். இதுல இனத்தை வேற வாழ வைப்பயா
முருகேசன்:
ஜஸ்ட் செல்ஃபிஷ் கோல்ஸ் இருக்கிறவன் மாசத்துக்கு 40 ஆயிரம் இல்லை 40 கோடி சம்பாதிச்சாலும் அவனுது பொழப்புதான். நோபல் கோல்ஸோட வாழறவன் மாசத்துக்கு 6 ஆயிரமில்லே 3ஆயிரம் சம்பாதிச்சாலும் அது வாழ்க்கை.
ஸ்னேகா:
சரி கண்ணா ரூ.6 ஆயிரம் சேங்ஷன்ட். வேலையை ஆரம்பி
முருகேசன்:
அ அஸ்கு புஸ்கு. நீங்க மொத்தம் 3 பார்ட்டி. மூணு பார்டிங்களுக்கும் என் திட்டம் ருசிக்கனும். அவிகளும் என் கண்டிஷனுக்கு ஒத்துக்கிடனும்.
ஸ்னேகா;
அதுக்கென்ன உடனே வரவச்சுர்ரேன்