Thursday, July 15, 2010

பிரபாகரனும் நானும்

பிரபாகரன் ஒரு ஐடியல் ஹி. ஆம்பளையா பொறந்த எவனுக்குமே பிரபாகரனோட கேரக்டரிஸ்டிக்ஸ்ல எதுனா நம்ம கிட்டா இருக்கானு பார்த்து, இருந்தா துள்ளி குதிக்கிற ஆர்வம் இருந்தே தீரும். பொம்பளையா பொறந்த யாருக்குமே பிரபாகரன் மாதிரி ஒரு சகோதரன் இருந்தா எப்படியிருக்கும்னு ஒரு நெனைப்பு ஓடும்.சைக்காலஜில  இதெல்லாம்  சகஜமப்பா. ஒடனே அடிச்சு புடிச்சு பிரபாகரனோட ஒன்னை ஒப்பிட்டுக்கிறதானு மறுமொழி போட்டுராதிங்க தம்பி .

பை தி பை தேர்தல் செலவை இரட்டிப்பா திருப்பி தரனும்ங்கற தலைப்புல ஊழலை ஒழிக்க ஒரு ப்ரப்போசல் கொடுத்திருக்கேன். படிங்க . கமெண்டால அடிங்க‌

பிரபாகரன் பிறந்த தேதி: 26/11/1954

என் பிறந்த தேதி: 7/8/1967
பிரபாகரன் ஜாதகம்:
லக்னம் : கும்பம் ராசி: விருச்சிகம் லக்னத்துல செவ்வாய், அஞ்சுல கேது, 6ல குரு, 9ல புதன்,சுக்கிரன்,சனி, பத்துல சூரிய சந்திர சேர்க்கை. 11ல ராகு.

என் ஜாதகம்:
லக்னம் :கடகம் லக்னத்துல: புத,சூரியன்,குரு , ரெண்டுல :சந்திர சுக்கிர , நாலுல: செவ், கேது, 9ல சனி வக்கிரம். பத்துல ராகு

எண் கணித ஒப்பீடு:

பிரபாகரனோட உயிர் எண் 8 என்னோட ஸ்தூல எண் முப்பத்தி 8.  பிரபாகரனோட கூட்டு எண் 2  (அதனால தான் அவர் சுபாஷ் சந்திர போஸை தன் ஆதர்ச புருஷரா ஏத்துக்கிட்டு ஏறக்குறைய அவர் மாதிரியே வாழ்ந்திருக்காரு. மாயமா மறைஞ்சும் இருக்காரு.)

என் ஸ்தூல எண்ணான 38 ஐ ஒற்றை எண்ணாக்கினா 2. என் ஆதர்ச புருஷர் என்.டி.ஆர் ( கிஸ்ணர் வேசம் கட்டப்போறியானு கேட்காதே தலை.. சமுதாயமே என் கோவில் ஏழை மக்களே என் தெய்வங்கள்னாரு தலைவரு. அதான் நம்ம ஸ்லோகன். )

ஒற்றுமைகள்:
பிரபாகரன் ஜாதகத்துல குரு உச்சம். (ஆனால் 6ஆவது இடத்துல) இந்த கிரகஸ்திதிதான் மத்திய வெளியுறவுத்துறை பிராமண அதிகாரிகளை பிரபாகரனுக்கு எதிரா செயல்பட வச்சது.

என் ஜாதகத்துலயும் குரு உச்சம். ரோகாதிபத்யம் உண்டு( ஆறாமிடம்) இதனாலதான் நான் எப்போ தலைய தூக்கினாலும் உடனே இந்த பிராமண கருங்காலிக இடியை இறக்கிர்ரானுவ.அந்த நாள்  முதல் இந்த நாள் வரை இதேதான் தொடருது.  ஆனால் நம்ம ஜாதகத்துல அதே குருவுக்கு பாக்யாதிபத்யமும் இருக்கிறதால என் ஆயுள் காலத்துல பாதி முடிஞ்ச பிறவு அவிகனாலயே தூள் பறத்தறதும் நடக்கும். புக்மார்க் பண்ணி வச்சுக்கங்க.

பிரபாகரன் ஜாதகத்துல  லக்னாதிபதியான சனி  ரோகபாவத்துல உச்சமான குருவை பார்த்து கண்ட்ரோல் பண்றாரு. நம்ம ஜாதகத்துல பாக்ய பாவத்துல நின்ன பாவியான சனியை லக்னத்துல உச்சமா கீர குரு பார்த்து கண்ட்ரோல் பண்றாரு.

பிரபாகரன் ஜாதகத்துல குரு,சனி பார்வையால ரெண்டு பேரும் டப்ஸாயி (உச்சனை உச்சன் பார்த்து பிச்சை கூட கிடைக்காம போயிருச்சு) ஆனா நம்ம ஜாதகத்துல தூர தேச உதவிகளை லேட் பண்ற சனியை (வக்கிரம்ங்கறதால துரிதப்படுத்தவும் செய்யலாம்.ஆனால் இந்த உதவி காக்கிச்சட்டை போட்ட தொழிலாளர் வர்கத்துலருந்து கிடைக்கலாம்)  உச்ச குரு  பார்த்து  "அட போதும்பா டிலே பண்ணது ரிலீஸ் பண்ணு"ங்கறார்.

பிரபாகரன் ஜாதகத்துல செவ்வாய் ஜன்மத்துல நின்னு நாலை பார்க்கிறார். என் ஜாதகத்துல 4லயே நின்னாரு

பிரபாகரன் ஜாதகத்துல அஞ்சாம் பாவத்துல கேது நின்னாரு. என் ஜாதகத்துல அஞ்சாமிடத்ததிபதியான செவ்வாயோட கேது சேர்ந்தாரு. ( அஞ்சாம் பாவம் தான் பெயர் புகழை காட்டும். இங்கன வெறும்  கேது நின்னதால பிரபாகரனுக்கு தன் மீதான விமரிசனங்களை திருப்பியடிக்க கூட பெரிசா வாய்ப்பில்லாம போயிருச்சு.

என் ஜாதகத்துல பஞ்சமாதிபதியான செவ்வாயோட சேர்ந்ததால அட்வெஞ்சரஸ் மேட்டருங்களை வெளிச்சம் போடறச்ச மட்டும் அவப்பெயர் கிடைக்குது. இந்த சேர்க்கை 4 ஆவது இடத்துல நடந்ததால பேச்சு பேச்சாவே போயிக்கிட்டிருக்கு.

பிரபாகரன் ஜாதகத்துல 9ஆவது இடத்துல சுக்கிரன் நின்னதால அவரு சஞ்சீவினி மந்திரம் வச்சிருந்தவருங்கறதால தூர தேசங்கள்ளருந்து பணம் கொட்டோ கொட்டுனு கொட்டிக்கிட்டிருந்தது.

என் ஜாதகத்துல இவர் ரெண்டாவது இடத்துல உட்கார்ந்து எதை எழுத ஆரம்பிச்சாலும் பாயிண்ட் பாயிண்டா கொட்டுது. செத்துப்போன சப்ஜெக்டுக்கெல்லாம் உயிர் வந்துருது.

பிரபாகரனோட ஜாதகத்துல சூரிய சந்திர சேர்க்கையிருக்கு ( 10 ஆமிடத்துல)
என் ஜாதகத்துல ரெண்டு பேரும் பரிவர்த்தனம். பக்கத்து பக்கத்து ராசில இருக்காய்ங்க. இதுக்கு சிவசக்தியோகம்னு பேரு.( கடகம் சந்திரன் வீடு. இங்கன சூரியன் இருக்காரு. சிம்மம் சூரியனோட வீடு ,இங்கன சந்திரன் நின்னாரு. அதனால தான் அமாவாசைல பிறந்தவன் மாதிரி ஒரே ராத்திரி நாலஞ்சு பதிவெல்லாம் அடிச்சு போட்டு தூக்கி தட்டறேன்.

நல்லது நடந்தா தாயா உச்சி முகர்ரேன். பொல்லாதவனையெல்லாம்  பிச்சி உதர்ரேன்.

பிரபாகரன் ஜாதகத்துல ராகு 11ல இருக்காரு. நமக்கு பத்துல.

பிரபாகரன் ஜாதகத்துல 8/12 காலி . நம்ம ஜாதகத்துல 6,8.12 எல்லாமே காலி.  அவர் ஜாதகத்துல செவ்வாய் ஜன்மத்துல நின்னதால ஆயுதம் தாங்கி போராடினார். நம்ம ஜாதகத்துல லக்னத்துல குரு நின்னதால தெய்வ பலத்தை மட்டும் நம்பி போராடிக்கிட்டிருக்கேன்.

ஓஷோ தான் சொல்வாரு. உன்னை எது கவருதோ அது உன் கப் ஆஃப் டீ இல்லேன்னு. இதை ரிவர்ஸ்ல போட்டா எது உன்னை கவரலையோ அதான் உன் கப் ஆஃப் டீ. ஆரம்பத்துலருந்து எனக்கு பிரபாகரன் மேல ஆர்வம் கிடையாது. ஏதோ பிடிப்பு கிடைச்சது அதை ஏன் இந்த ஆளு அறுந்து போற வரை இழுக்கிறார் ஏதோ ஒன்னு செட்டில் பண்ணிக்கிட்டு ஆசுவாசப்படுத்திக்க வேண்டியதுதானேனு விமர்சிச்சும் இருக்கேன்.

அண்டைவெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் சிதறுது என் எழுத்துக்களில்னிட்டு வசனம் விட்டுக்கிட்டிருந்தேன். இப்போ அந்த அமுதம் தமிழுணர்வு கொண்ட தமிழ் நெஞ்சங்களில்  செத்துப்போயிருந்த நம்பிக்கைகளை உயிர்ப்பிச்சிருக்கு.

கவலைப்படாதிங்கண்ணா.. என் வாக்குஸ்தானத்துல சுக்கிரன் கீறாரு. என் வாக்கும்,எழுத்தும்  சஞ்சீவினி வேர்  மாதிரி  எதையும் உயிர்பிச்சிரும். 

பி.கு: நம்ம ப்ளாக்ல நான் எழுதற மேட்டர் எல்லாம் அடுத்த வாரம் வெளி வர்ர பத்திரிக்கைகள்ள டச் ஆகுது பார்த்திங்களா?