செலக்சன், நிச்சயதார்த்தம் ஒரு வழியா முடிஞ்சது. அப்பாறம். உங்களுக்கு லாலா போடற பழக்கம் இருந்தா கூட்டாளிங்கல்லாம் பாட்டில் பார்ட்டி கேப்பாய்ங்க. கொடுத்து தொலைச்சுருங்க. நீங்க நீச்சலடிக்காதிங்க. கண்ணாலத்துனன்னு மட்டும் எக்காரணம் கொண்டும் பார்ட்டி கொடுக்காதிங்க. நக்கல்,கக்கல் எல்லாம் சேர்ந்து முத கோணை முத்தும் கோணையாயிரும்.
கண்ணால தேதி நெருங்க நெருங்க மூத்திரம் குடிச்ச கன்னுக்குட்டி மாதிரி ( சுஜாதா பிரயோகம்) கிறு கிறுன்னு இருக்கும். அதுக்குன்னு கூட்டாளிங்க கிட்டே உங்க உட்பி புராணத்தை பாடி சீப்பாயிராதிங்க. பரீட்சை ,இண்டர்வ்யூ மாதிரி தான் கண்ணாலமும்,ஓரளவுக்காச்சும் உடல்,உள்ள,புத்தி அளவுல மேரீட் லைஃபுக்கு ப்ரிப்பேர் ஆக பாருங்க.
உடல் :
மொதல்ல ஒரு மோஷன் டெஸ்ட் எடுத்து பாருங்க. பூச்சி கீச்சி இருந்தா மருந்து சாப்பிடுங்க. அஜீரணம், பசியின்மை ,வாயு கோளாறு இருந்தா எனிமா கினிமா எடுத்து கிட்டு பசிச்சு சாப்பிடறது, அளவோட சாப்பிடறது, ஈசியா செரிக்கறத மட்டும் சாப்பிடறது, அரை வயிறுமட்டும் சாப்பிடறது. கால் வயிறை தண்ணியால, கால் வயிறை காத்தால நிரப்பப்பாருங்க. லேசான எக்ஸர்சைஸ் அல்லது நடை பயிற்சின்னு ஒர்க் அவுட் பண்ணுங்க. தலை முடி, முகம் எல்லாம் முக்கியம் தான். அதுக்குனு ரெம்ப மெனக்கெடாம ( மறைக்க முயற்சி பண்ணாம ரெக்டிஃபை பண்றது) ஹ்யூமன் பாடி விசித்திரமானது இதை எந்த அளவுக்கு சிரமப்படுத்தறிங்களோ அந்த அளவுக்கு ஸ்ட்ராங்காகும்.
பலான மேட்டர் பத்தி நாராயண ரெட்டி,மாத்ரு பூதம் மாதிரி ஆத்தன்டிகேட்டட் பர்சன்ஸ் எழுதின புக்ஸை படிங்க. கொட்டுவாய்ல ( சுஜாதா பிரயோகம் - இதுக்கு யோனின்னு ஒரு அர்த்தம் வருமோன்னு ஒரு சம்சயம்) ப்ராக்டிக்கல்ஸுக்கு போயிராதிங்க. எக்கு தப்பா மாட்டினா அசலுக்கு மோசம் வந்துரும்.
உள்ளம்:
ஏமாற்றத்துக்கு முதல் படி எதிர்பார்ப்புத்தான். இது ரெண்டுத்துக்கும் நேர் விகித பொருத்தமிருக்கு. எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க ஏமாற்றமும் அதிகரிக்கும். கண்ணாலங்கறதே ஒரு லாட்டரி டிக்கெட் மாதிரிதான். லா.டிக்கெட்டே பெட்டர் ப்ரைஸ் அடிச்சா வச்சுக்கலாம் அடிக்கலைன்னா கிழிச்சு போட்டுரலாம். பெண்டாட்டிய ஒன்னும் பண்ண முடியாது. வச்சு மாரடிக்கனும். இதுக்கு சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிரனும்.
பெண்டாட்டின்னா பெட்டர் ஆஃப், ஈருடல் ஓருயிர்னெல்லாம் பீலா விடுவாய்ங்க . அதெல்லாம் டுபுக்கு. அது வேற உயிர். அதனோட ஜீன்ஸ் வேற, அதனோட வளர்ப்பு சூழல் வேற . உடலளவுல ஒன்னு ரெண்டு மாற்றம் உண்டே தவிர அதுவும் மனித உயிர்தான். உங்களூக்குள்ள இருக்கிற அதே ஈகோ, அதே பிடிவாதம், அதே முரட்டுத்தனம் எல்லாம் அதுலயும் இருக்கும்.
நீங்க ரிஷ்ய ஸ்ருங்கரா இருந்தாலும் சரி சந்துல சாக்குல அடிபட்டிருந்தாலும் சரி மொதல்ல உங்களை கவர்ரது அவளோட உடல் தான். எப்படியும் அவளோட உள்ளம் அதுல உள்ள வக்கிரங்கள், குரூரம், அவளோட புத்தி அதுல உள்ள சதி, முன் ஜாக்கிரதை சந்தேகம் எல்லாத்தயும் பார்க்க போறிங்க.
நான் சொல்றது என்னன்னா ஆரம்பத்துலயே இதுக்கெல்லாம் சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிட்டிங்கன்னா அவளோட உடல் மேல உள்ள மோகம் கொஞ்சம் போல குறையும். உங்க செயல்பாடுகள்ள ஒரு வித மெச்சூரிட்டி வந்துரும். கொஞ்சம் போல பேலன்ஸ் வந்துரும்.
பொய்:
இந்த உலகத்துல, சமுதாயத்துல எல்லா புழுத்த உண்மைகளும் பொய்ங்கிற திரை போட்டு மூடியிருக்கு. என்னதான் நான் நிர்வாண உண்மைகள்னு வலைப்பூ வச்சிருந்தாலும் கவிதைக்கு மட்டுமில்லே வாழ்க்கைக்கும் பொய்தான் அழகு. அதை மெல்லிசா ஒரு திரை போட்டு மூடியிருக்கு. அதை விலக்காம , அதே நேரம் அதும்பின்னாடி என்ன இருக்கும்னு ஒரு ரஃப் ஐடியாவோட மேரீட் லைஃப்ல என்டர் ஆனா சமாளிச்சுக்கலாம்.
அதனால புருசன் பொஞ்சாதி மேட்டர்லயும் சில பூச்செல்லாம் இருக்கும். அதை கண்டுக்காம , சொரண்டாம காலத்தை ஓட்டினா இந்த தொடரோட ஆரம்பத்துல சொன்னேனே அந்த ........"பொம்பளை பெண்டாட்டிங்கற ஜந்துவா மாறிர்ர விபத்தை " கொஞ்சம் போல தள்ளிப்போடலாம்.
புத்தி:
என்னதான் பொய், பூச்சை சகிச்சுக்கனும், சுரண்டக்கூடாதுன்னு சொல்லியிருந்தாலும் நீங்க ஒரு குன்சா கெஸ் பண்ணிவச்சிக்கிறது நல்லது. என்னதான் இப்படி பாரா பாராவா உபதேசம் கொடுத்தாலும் கண்ணாலமான புதுசுல இதையெல்லாம் ஃபாலோ
பண்றது சிரமம்தான். ட்ரை பண்ணிப்பாருங்க.
பொருளாதாரம்:
நல்ல செக்ஸுக்கு பிரம்மச்சரியம் அவசியம். பிரம்மச்சரியத்துக்கு தயாராக நல்ல ஆழமான செக்ஸ் தேவை. அப்படியே ஒரு வீக் எண்டை எஞ்ஜாய் பண்ணனும்னா ஒரு வாரம் முழுக்க சேமிக்கனும். அதுக்குனு புதுபெண்டாட்டி முன்னாடி பட்ஜெட் பத்மநாபன் கணக்கா சீப்பாக சொல்லலே. வீண் செலவை குறைச்சாலே போதும்.
அடிப்படை தயாரிப்பு:
தமிழ்ல "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்"ம்பாய்ங்க. இங்கிலீஷ்ல லுக் அப் எய்ம் ஹைம்பாய்ங்க. இதெல்லாம் ரொட்டீன் தெலுங்குல "கீடெஞ்சி மேலெஞ்சு"ம்பாய்ங்க. இதுக்கு என்ன அர்த்தம்னா ஒரு காரியத்தோட விளைவுகளை கணக்குப்போடறச்ச கெட்ட விளைவுகளை நினைச்சுப்பார்த்தப்பாறம் , நல்ல விளைவுகளை நினைச்சு ப்ளான் பண்ணனும். கண்ணால மேட்டர்ல இதான் பெட்டர்.
முதலிரவு:
ஹோமப்புகை, தூக்கமின்மை, கண் எரிச்சல், டென்ஷன்,பரபரப்பு, அயோமயம் இதெல்லாம் முதலிரவில் பெண் உச்சம் எய்துதலுக்கு எதிரிகள். ஆணின் கதை வேறு. ரேஷன் கடை க்யூவில் முட்டக்கொடுத்து உச்சம் கண்ட நீச்சர்களை சந்தித்திருக்கிறேன். இயற்கை இந்த விஷயத்தில் ஆணுக்குஒரு வகையில் ரெம்ப அனுகூலமாவும், இன்னொரு வகையில ரெம்ப பிரதிகூலமாவும் இருக்கு.
பெண் உடலுறவுக்கு இணக்கமான ,சுமுகமான மன நிலையில் இருந்தால் தான் யோனிப்புழை நெகிழ்ந்து கொடுக்கும். சுரப்பு இருக்கும். அப்பத்தான் எந்த விதமான இம்சையுமில்லாம ஆணுறுப்பு உட்புக ஏலும். மேற்சொன்ன ஹோமப்புகை, தூக்கமின்மை, கண் எரிச்சல், டென்ஷன்,பரபரப்பு, அயோமயம் இத்யாதி காரணத்தால் இது ஏறக்குறைய அசாத்தியம்.
இந்த சாத்தியத்தை சாத்தியமாக்கனும்னா அது நீங்க ரெம்ப மெனக்கெடனும். இந்த மேட்டர்லாம் நம்ம வலைப்பூவுல ஏற்கெனவே விவரமா வெளியாகியிருக்கு தேடிபிடிச்சு படிச்சுருங்கண்ணா.
முடிந்தால் தவிர்க்க வேண்டியவை;
1. லாஜிக் இல்லாத அதீத கொஞ்சல்கள், தேவையற்ற உரசல்கள்
2. மோகாவேசத்தில் மெகா மன்னிப்புகள்
3. அதீத முக்கியத்துவம்
4. ரொட்டீனை அவிகளுக்காக மாத்திக்கிர்ரது
5. உங்க பக்கத்து ஆளுங்களோட வீக் பாயிண்ட்ஸை பட்டியலிடறது
6.மறைக்க வேண்டிய மேட்டரையெல்லம் ஓப்பன் பண்ணிர்ரது
7. பொருளாதார ஆதாரங்களை மிகைப்படுத்தி சொல்றது கடன் வகையறாக்களை மறைச்சுர்ரது
8.உங்க காதல் ,காம லீலைகளை பத்தி நெஜமும் பீலாவுமா கலந்து அளந்துவிடறது
9.அவிக அவிக பக்கத்து ஆளுங்களை பத்தி சொன்னா அசால்டா ஹியர் பண்ணி மறந்துர்ரது
10. நான் ஒன்னும் ஜொள்ளு பார்ட்டியில்லைனு நிரூபிச்சுக்கற ஆவேசத்துல அறிவுப்பூர்வமா பேசறேன் பேர்வழி உன் கலருக்கு இந்த புடவை சூட்டே ஆகலைனு போட்டு உடைக்கிறது
கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:
1.குலப்பெருமை + அவிக பக்கத்தை நக்கலடிக்கிறது
2.தற்பெருமை + அவிகளை இன்சல்ட் பண்றது
3.குத்தல் பேச்சு
4. அவிக ஏதோ ஒரு கிறக்கத்துல கொடுத்த ஸ்டேட்மெண்டை மிஸ் யூஸ் பண்றது
5. தோ பார் நீ நேத்து வந்தே எனக்கு எங்கம்மா தான் முக்கியம்னு டிக்ளேர் பண்றது
6. நீ என்ன சொல்றியோ நான் அப்படியே கேட்டு நடந்துக்குவனாம் என்று பொய் வாக்குறுதி வழங்கறது
7.நீ படிடா, வேலைக்கு போடா அது இதுன்னு உசுப்பேத்திவிடறது
8.அதான் கயிறு மாட்டி இழுத்துட்டு வந்துட்டமேன்னுட்டு உங்க வீட்டு கக்கூஸு கதவை கூட திறந்து 4 ஆம் கிளாஸ் படிக்கிறப்பன்னுட்டு ஃப்ளாஷ் பேக்கெல்லாம் சொல்றது
9.நான் குடிப்பேன், சீட்டாட்ட க்ளப்புக்கு போவேன் என் ஃப்ரெண்ட்ஸ் எனக்கு முக்கியம் அது இதுன்னு வசனம் விடறது
10.ஹோட்டல்ல மெனு சொல்றாப்ல எனக்கு இதெல்லாம் ஆகாது. இதெல்லாம் பிடிக்காதுன்னு லிஸ்ட் ரிலீஸ் பண்றது..
ஒரு எதிரிய டீல் பண்றாப்ல:
ஒரு எதிரி போன ஜென்மத்துல உங்க கிட்டே மோதி தோத்துட்டாள்(ன்). செத்துட்டாள். படையப்பால ரம்யா கிருஷ்ணனோட க்ளைமேக்ஸ் டயலாகை ஞா வச்சுக்கங்க. சாகிறப்ப சபதம் போட்டான்(ள்) " மவனே இந்த ஜென்மத்துல தோத்துட்டன் ஆனா அடுத்த ஜென்மத்துல உன் பெண்டாட்டியா வந்து உன் தாலியறுக்கிறேண்டா" - இந்த சீனை,டயலாகை ஞா வச்சுக்கங்க.
பெண்டாட்டின்னா தமாசில்லை " செப்புலோ ராயி, கண்டிலோ நலுசு, செவிலோ ஜெர்ரீக" அதாவது செருப்புக்குள்ள கல்லு, கண்ல தூசு, காதுல தேனீ மாதிரி.
இந்திய பிரதமர் பாக் பிரசிடெண்ட் கிட்டே மூவ் பண்ற மாதிரியே மூவ் பண்ணனும்.புருசன் பொஞ்சாதி மத்தில காஷ்மீர் பிரச்சினை மாதிரி ஒன்னிருக்கும். அதை எந்த காலத்துக்கும் தீர்க்க முடியாது. ஒபாமா இல்லே ஒபாமாவுக்கு தாத்தா இறங்கி வந்தாலும் இதான் நிலைமை . அதுக்குன்னு அது தீர்ந்தாதான் பேச்சு வார்த்தைன்னும் இருக்க முடியாது (பொழப்பு ஓடனுமே)
சினிமாவுல, நாவல்ல உறவுல,அக்கம்பக்கத்துல, நீங்க பார்த்த ஆதர்ச தம்பதியெல்லாம் ரீலு. சைக்காலஜிப்படி 4 நிமிஷத்துக்கு ஒரு தரம் மூட் மாறுது. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் கம்ப்ளீட்டா மூட் மாறிப்போவுது. ஜோதிஷப்படி ரெண்டு மணி நேரத்துக்கு (சுமார்) ஒரு தரம் லக்னம் மாறுது, 6 மணி நேரத்துக்கொருதரம் நட்சத்திர பாதசாரம் மாறுது, 24 மணி நேரத்துக்கொரு தரம் நட்சத்திரம் மாறுது,ரெண்டே கால் நாளைக்கொருதரம் மனோகாரகனான சந்திரன் மாறிர்ரார், மாசத்துக்கொருதரம் கில்மாவுக்கும் தாம்பத்ய்த்துக்கும் காரகரான சுக்கிரன் ராசி மாறிர்ராரு. ஒன்னரை மாசத்துக்கொருதரம் உங்க வாழ்க்கையையே தலை கீழா மாத்தக்கூடிய செவ்வாய் மாறிர்ராரு.
அதனால தான் சொல்றேன் உங்களுக்கிடையில ஏதானும் தகராறு வந்தப்ப பஞ்சாயத்துக்கு வர்ர எந்த புருசன் பொஞ்சாதியாவது ( சீனியர் சிட்டிசன்ஸ்) அய்யய்யே குடும்பமா நடத்துதுங்க.. கீரியும் பாம்புமா வெட்டி மடியுது நாங்க இதுங்கள மாதிரியா வாழ்ந்தோம் ..ஒரு நா ஒரு பேச்சு? ,ஒரு அடி ? ஊஹூம் ..கிடையவே கிடையாதேன்னு வசனம் விட்டா நம்பாதிங்க .
என்னதான் டெய்லி பேப்பர், ந்யூஸ் சேனல்,மொபைல் வச்சுக்கிட்டு பெண்டாட்டிக்கிட்டருந்து தப்பிச்சுரலாம்னு பார்த்தாலும் முடியாது ஒரு நா இல்லை ஒரு நா மாட்டியே தீருவிங்க.
ஏதாச்சும் வில்லங்கம் தகராறு வருதுன்னா பரஸ்பரம் ஒரு வித ஈர்ப்பு உருவாகியிருக்குன்னு அர்த்தம். நமீதா மேலயோ, நயனதாரா மேலயோ கோபம் வராதில்லையா? வெளிக்காட்டப்பட்ட கோபம் மன்னிப்புக்கு வழி தேடும். வெளிக்காட்டப்படாத கோபம் பழிவாங்கலுக்கு திட்டமிடும். டேக் கேர்.
பொஞ்சாதி அடிமையா கிடக்கனும்னு நினைச்சிங்கனா அடிமை என்னைக்கோ ஒரு நா புரட்சி பண்றது கியாரண்டி. தாம்பத்யத்துல தகராறு வர காரணமே அந்த பந்தம் நிரந்தரம்ங்கற ஃபீலிங் தான். உங்களுக்கு ஒரு யூரோ லாட்டரி அடிச்சாலோ, உங்க எம்.டி மகள் ஐ லவ் யூன்னு சொன்னாலோ , உங்க பொஞ்சாதிக்கு ஒன்னு அண்ணனுக்கு கோர்ட் கேஸு ஜெயிச்சு 50 கோடி சொத்து வந்தாலோ இந்த பந்தம் சொத்துன்னு விழுந்துரும்.
ஒரு டெட்லைன் இல்லாததாலதான் தாம்பத்யம் நாறிப்போகுது. நீங்களா ஒரு டெட்லைன் வச்சுக்கங்க. அட நிறைவேறுதோ இல்லையோ ஒரு ஐந்தாண்டு திட்டம் ஒன்னை தீட்டுங்க. ( அவிகளையும் கலந்துகிட்டு, கன்வின்ஸ் பண்ணி) அதை இம்ப்லிமென்ட் பண்ண பாருங்க.
பொம்பளைகல்லாம் பேய் மாதிரி. பேயை அடக்கனும்னா வேலை கொடுத்துரனும். வேலைன்னா சமைக்கறது, படுத்துக்கறதில்லை. ஏதோ ஒரு வேலை . ஹவுஸ் வைஃபுன்னா இது மஸ்ட் . ஏதோ ஒன்னை ச்சூ காட்டி விட்டுரனும். ( அதுக்குன்னு என் சைக்ளோ பீடியாவை காப்பி பண்ண சொல்லாதிங்க)
தொடரும்