Friday, September 17, 2010

மனைவி அமைவதெல்லாம் : 6

முதலிரவு கதை முடிஞ்சது. அது வெற்றியில முடிஞ்சிருந்தாலும்,  தோல்வில முடிஞ்சிருந்தாலும் நம்ம நாட்டுல பெருவாரியான  பெண்கள் அதை பெரிசா எடுத்துக்கறதில்லை. ( இப்ப இந்த மேட்டர்ல கூட பெரிய அளவுல மாற்றம் வந்துக்கிட்டிருக்கு. முக்கியமா சாஃப்ட் வேர், ஹார்ட் வேர், கால் சென்டர் கலாசாரத்தினால தாய்குலம் இந்த மேட்டர்ல ஜீரோ பர்சன்ட் டாலரன்ஸோட இருக்கிறதா கேள்வி டேக் கேர்)  முதலிரவுல வெற்றின்னா பெண் உச்சமைடைதல். இதுக்கு  நாக்க முக்க  நாக்க முக்கன்னு பாட்டு பாடினா போதாது. அதையெல்லாம் உபயோகிச்சு க்ளிட்டோரிசை தூண்டனும்.

முதலிரவுக்கப்புறம் ஹனிமூன். இந்த மேட்டர்ல சொல்லவேண்டியது ரெண்டே ரெண்டு மேட்டர் தான் . ஒன்னு சக்திக்கு மீறி இஷ்டத்துக்கு பணத்தை வேட்டு விட்டுட்டு அப்பாறம் நாறக்கூடாது. ரெண்டு பாதுகாப்பு. பாதுகாப்புன்னா பப்ளிக் ரொமான்ஸ் கூடாது, காலணா லாட்ஜுகள்ள தங்க கூடாது. ஸ்பை காம், வெப் காம் எதுனா இருக்கானு தீர பரிசோதிச்ச பிறகு சில்மிஷத்துல இறங்கனும். அந்த ஊர்ல இருக்கிற சொந்தக்காரவுக, ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் இத்யாதியினரோட காண்டாக்ட் டீடெயில்ஸ் கைல வச்சுக்கிறது நல்லது.

ஆச்சு முதலிரவாச்சு, ஹனி மூனாச்சு. இந்த பீரியட்லயே வத்தமாடு ரேஞ்சுக்கு வந்துட்டிருப்பிக. ஒரு விதமான "இவ்ளதானாங்கற" ஃபீலிங் .அய்யயோ வாழ் நாளெல்லாம் எப்படி சமாளிக்கப்போறோமோங்கற ஃபீலிங்கெல்லாம் வந்திட்டிருக்கும்.
பயந்துக்காதிங்க.

ஆர்காசம், உச்சம்லாம் ஒரே பெண்ணோட உடலுறவுல ஈடுபடும்போது ஒரு  நாளில்லை ஒரு நாள் பிடிபட்டுரும். அதுக்குத்தான் கண்ணாலம். இதுக்கு அந்த பெண்ணோட பிடிவாதம், குரூர குணங்கள், சுய நலம்லாம் கூட உதவும். அதாவது உங்க உணர்வுகள் மந்தப்பட்டு போயிரும்.

பல பெண்கள் கணவனை இன்சல்ட் பண்றது, கரிச்சு கொட்டறதெல்லாம் கூட அவனோட உச்சத்தை தள்ளிப்போட்டு தான் உச்சம் பெறத்தானோன்னும் எனக்கொரு சம்சயம் உண்டு.

அடுத்து ரொட்டீன் லைஃபுக்கு வரனும். அது கிடக்கு கழுதைன்னும் விட்டுரக்கூடாது. அதுக்குன்னு புரட்சித்தலைவிக்கு ஸ்டேஜ்லயே கழிவறை கட்டின ரேஞ்சுக்கும் போயிரக்கூடாது. அப்பாறம் இதே மாதிரி கவனிப்பை எதிர்பார்க்க ஆரம்பிச்சுருவாய்ங்க. ஏதோ சமையலறைக்கு பளிச் விளக்கு, ஒரு எக்ஸாஸ்டர் ஃபேன், நாலு டப்பா, நாலு கரண்டி, பெட் ரூம் ஃபேனுக்கு புதுசா வைண்டிங் பண்றது, கக்கூசுக்கு புதுசா ஒரு பயிட்டு இந்த ரேஞ்சுல செயல்படுங்க. உங்க செயலை விட , அதுக்கான செலவை விட அதும்பின்னாடி இருக்கிற காதல் ( அப்படியேதும் மிஞ்சியிருந்தா) தெரியனும்.

ஒரு தவளைய கொதிக்கிற தண்ணில தூக்கி போட்டா ரிஃப்ளெக்ஸ் ஆக்ட்ல  உடனே வெளிய குதிச்சுரும். அதையே  ஜில் தண்ணில விட்டு அந்த பாத்திரத்தை அடுப்புல தூக்கிவச்சு எரிக்க ஆரம்பிச்சா  கொஞ்சம்  கொஞ்சமா சூடேத்திக்கிட்டு வந்தா ஒரு எல்லை வரை தாக்கு பிடிக்கும்.

இதே ஃபார்முலாவை கடைபிடிச்சு கொஞ்சம் கொஞ்சமா ரொட்டீனுக்கு கொண்டுவரனும்.

என்னதான் ரஜினி சார் " பணம் பணம்.. என்னடா பெரிய பணம்னு வசனம் விட்டாலும் கலா நிதி மாறன் கிட்டே   நாலு காலையும் தூக்கி "கொஞ்சம் பணம்" சம்பாதிக்கிறார்.

ஏன்னா வறுமைங்கறது ரெம்ப மோசமானது. மனிதர்களோட  மனசு ஒரு குளம்னு வைங்க. அதனோட அடில பாம்புகள், விஷக்கொடிகள் இப்படி பலப்பல ஐட்டங்க மறைஞ்சிருக்கும். அதையெல்லாம் பணம்தான்  மறைச்சிருக்கு.

என்னதான் உசுருக்கு உசுரு , மசுருக்கு மசுருன்னு வசனம் பேசிக்கிட்டிருந்தாலும் வீட்ல பல சரக்கு இல்லாம, அரிசி , சாப்பாடு குறைச்சலா இருந்து , பசி அதிகமா இருந்தா  அவர் எங்கனா வெளிய சாப்பிட்டுட்டு வந்தா நல்லாருக்குமேன்னு ஒரு எண்ணம் வரும்பாருங்க. அதான் வறுமையின் உச்சம்.

அதனால திருமண வாழ்வு இனிக்க, அமைஞ்ச மனைவி பெண்டாட்டிங்கற ஜந்துவா மாறிராம இருக்க பொருளாதார பின்னணி ரெம்ப முக்கியம். அதுக்கு சில டிப்ஸ் இதோ.

செலவுல ரெண்டு வகை இருக்கு. ப்ரொடக்டிவ் அன் ப்ரொடக்டிவ். வேலைக்கு போற பெண்டாட்டிக்கு டூ வீலர் வாங்கித்தர்ரது ப்ரொடக்டிவ். ஹவுஸ் வைஃபுக்கு டூ வீலர் வாங்கி தர்ரது அன் ப்ரொடக்டிவ். முடிஞ்ச வரை ப்ரொடக்டிவ் செலவா பண்ண கத்துக்கிடுங்க

செலவுகள்ள மேலும் ரெண்டு வகை இருக்கு.ஒன்னு ஒரு தாட்டி செய்து உட்டுர்ரது ( உ.ம் : மிக்சி வாங்கறது)  இதை  தாராளமா செய்யலாம். ரெண்டாவது ஒரு தடவை தலையை கொடுத்தா வாழ் நாள் எல்லாம் செய்துட்டே இருக்கிறது உ.ம் புதுப்பட பைரேட்டட் டிவிடி வாங்கிட்டு போறது. ரெண்டாவதை தவிர்க்கிறது நல்லது. பட்ஜெட் எகிறிக்கும். அப்பாறம் முட்டிக்கிட்டு சாகனும்.

கேப்பிடல் ,ரெவின்யூன்னு ரெண்டு விதமான செலவுகள் உண்டு. கேப்பிடல்னா இப்போ பேட்டரில ஓடற வண்டி வாங்கிர்ரது, வாட்டர் ப்யூரிஃபையர் வாங்கறது இதெல்லாம் கேப்பிட்டல் எக்ஸ்பெண்டிச்சர். அதாவது ஒரு வகையில முதலீடு மாதிரி. பெட்ரோல் போடற செலவு மிஞ்சும். வாந்தி பேதி வராது. இந்த மாதிரி கேப்பிடல் எக்ஸ்பென்டிச்சர் எல்லாம் கை மாத்து வாங்கி கூட செய்துரலாம்.

மல்லிகைப்பூ அல்வால்லாம் எக்ஸ்கியூஸ். (இதுவும் ரெவின்யூ எக்ஸ்பெண்டிச்சர்தான்) அதுக்குன்னு வாராவாரம் நைட்டி வாங்கறது ,மாசாமாசம் பியூட்டிபார்லர் அனுப்பறதுல்லாம் சாரி கொஞ்சம் ஓவர். வாழ் நாள் எல்லாம் சமாளிக்கமுடியுங்கற சவுண்ட் பார்ட்டியா இருந்தா ஓகே. இல்லைன்னா கண்ணாலமாகி 6 மாசமாறதுக்குள்ள " நீங்க முன்ன மாதிரி இல்லே"ங்கற பேச்சை/பாட்டை  கேட்க வேண்டி  வந்துரும்.

அதுலயும் பெண்களுக்கு ஞா சக்தி வேற அதிகம். எதிர்காலத்துல பேரன் பேத்தி எடுத்த காலத்துல கூட  ஞாபகமா நீங்க கண்ணாலமான புதுசுல என்னெல்லாம் பண்ணுவிக படிப்படியா எல்லாம் எப்படி தேய்ஞ்சு போச்சுன்னு பாரா பாராவா பேசி மானத்தை வாங்குவாக.

இந்த ஞா சக்திக்கு காரணம் பல காரணம் இருக்கு. அவிக வீக்கர் செக்ஸுங்கறதால  தங்கள் வெற்றிக்கு தங்கள்  அழகே காரணம், ரெம்ப  ரோசிச்சா அழகு, நளினம், கவர்ச்சி எல்லாம்   குறைஞ்சுரும்ங்கற ஃபீலிங் அண்டர் கரெண்ட்ல ஓடுதோ என்னமோ.. ரோசிக்கவே  மறுப்பாய்ங்க.

உண்மைல இந்த அழகு ,கவர்ச்சி, நளினம்லாம் 3 மாசத்துல திகட்டிப்போயிரும். அழகான பெண் உப்பு போடாம சமைச்சிருக்க , நீங்க கடுப்பா சாப்பாட்டை பார்த்திட்டிருக்க   அல்லது நீங்க சோத்துல இருக்கிற மயிரை பார்த்துக்கிட்டிருக்க அவள்  தன் விரல் நகத்தை பார்த்துக்கிட்டிருந்தாலோ அல்லது டிவில அழகு குறிப்புகளை பார்த்துக்கிட்டிருந்தாலோ உங்க மனசுல அவள் அழகை பத்தி ஓடுமா? இல்லை எச்ச கையாலே அறைஞ்சா என்னனு தோனுமா?

அப்ப எதுதான் அழகு ?

தன்னை சுத்தி சின்ன வட்டமா போட்டுக்கறதும்,சதா தன்னை பத்தி, தன் உதவாக்கரை அப்பனை,தம்பியை பத்தி,அடுத்தாத்து அம்புஜத்தை பத்தி ரோசிச்சிட்டிருக்கிறதும் அழகுதான்.  எதுவரை அழகு ? புருசங்காரனோட ஜீவனோபாயத்துக்கு ஆப்பு வராத வரை அழகு.  அந்த பொண்ணு தன்னோட சின்ன வட்டத்துல புருசங்காரன் பஞ்சாயத்துக்கு அவசியமே இல்லாம பப்ளிக் ரிலேஷன்ஸ் மெயின்டெய்ன் பண்ற வரை அழகு. சீன் மாறிட்டா.. ஒரு எமர்ஜென்சிலயும் நான் இப்படித்தான்னு இருந்துட்டா கடுப்பாயிருமா ஆகாதா?

எப்படியோ தாய்குலத்துக்கு ஞா சக்தி சாஸ்தி. அதுவும்  தன் விஷயங்கள்ள, அதுவும் தன்னோட முக்கியத்துவம் குறைய ஆரம்பிக்கிற மேட்டர்ஸ்ல ஞா சாஸ்தியோ சாஸ்தி இதை ஞா வச்சுக்கிட்டு டீல் பண்றது நல்லது.

இந்த நேரத்துல அழகுன்னா என்னனு ஒரு ஓட்டு ஓட்டிரலாம். உனக்கு 22 எனக்கு32 ல வந்த மாயாவோட  புறப்பாடு ரெண்டு நிமிஷத்துல நடக்கும். காது குத்தி மொட்டை போடறப்ப ஆசாரி போடுவாரே ஸ்டாரு அந்த மாதிரி துக்கிளியூண்டு கம்மல், கழுத்துல மெல்லிசோ மெல்லிசா ஒரு தங்க செயின். கையில ஒத்தை வளையல் .

அவளோட அறைல மதிய சாப்பாடை முடிச்சுட்டு மறுபடி ரெண்டு பேரும் ஆஃபீஸ் போயாகனும்.  நான் முகம் அலம்பி முன்னுச்சி முடி நனைஞ்சிருக்க ஹேர் ஸ்டைல்(?)  செட் ஆகாம மாத்தி மாத்தி வாரிப்பார்த்துக்கிட்டிருக்க  எப்பவோ முகம் கழுவி மெல்லிசா பவுடர் தீத்தி, சின்னதா பொட்டு வச்சி ஹேண்ட் பேக் மாட்டி, பூட்டை கையில வச்சுக்கிட்டு நான் தலை வார்ரதை பார்த்து நக்கலடிச்சிக்கிட்டிருப்பா.

அவள் அழகுக்குறிப்புனு ஃபாலோ பண்ணி பார்த்ததே இல்லே. என்ன நடுத்தர உயரம். மதர்லி ஸ்ட்ரக்சர், வட்ட முகம்,  சின்ன கண்கள், துக்கிளியூண்டு மூக்கு, வரிசையான பற்கள், முகத்துல ஃபெவிக்கால் போட்டு ஒட்டின  மாதிரி ஒரு புன்னகை , அன்ன நடை, சின்ன இடை இத்யாதிக்கெல்லாம் சான்ஸே இல்லை. அடக்கம் ஒடுக்கம்லாம் நோ நோ. சேர்ல உட்கார்ந்ததும் புடவை கொசுவத்தை சின்னதா தூக்கி உதறி புடவைக்குள்ளவே கால் மேல கால் போட்டுத்தான் உட்காருவா. ஆனாலும் சின்ன சின்ன குட்டிகள் எல்லாம் கில்மாவுக்காக  வெயிட்டிங்ல இருக்க மாயாவை பைத்தியமா சுத்தி சுத்தி வந்தேன்.

நான் என்ன சொல்லவரேன்னா ( தாய்குலத்துக்கு) யுத்தகாலம், சமாதான காலம்னு ரெண்டிருக்கு. சமாதான காலத்துல பொழுது போனதும் விளக்கை போடனும்.யுத்த காலத்துல விளக்கை அணைக்கனும்.  இல்லாட்டி பாம்பர்ஸ் ஃப்ளைட் வந்து கதைய முடிச்சுட்டு போயிரும்.

என் வேலை சமையல், என் இடம் கிச்சன், என் கடமை உன் நிழலா இருக்கிறதுல்லாம் சமாதான காலத்துக்கு ஓகே. புருசங்காரங்களும் தங்களோட காலம் இப்படியே ஓடிரும்னு இதை என் கரேஜ் பண்றாய்ங்க. சிவிலியன்களுக்கும் ஒரு மூணு  மாசம் ராணுவ பயிற்சி கொடுத்து வைக்கிறது நல்லது. சமாதான காலத்துலயே யுத்தகாலத்துக்கான பயிற்சி எடுத்துவைக்கிறது நல்லதுல்லயா?

ஆணோ பெண்ணோ நீங்க உங்க இயல்பு படி செய்யறதை  செய்துக்கிட்டே இருங்க.வேணாங்கலை .அதுக்கப்பாறமும் ஒரு லைஃப் இருக்கிறதை மனசுல வச்சி செயல்படுங்கன்னு தான் சொல்றேன்.

பெண் தன் கணவனுக்கு காலணா வருதுன்னா அதுக்கு அவன் என்னெல்லாம் பண்ணவேண்டியிருக்குன்னு தெரிஞ்சுக்கனும், அதுல உள்ள ரிஸ்க் என்னனு புரிஞ்சுக்கனும். " ஆமா சம்பள கவரை கொண்டாந்து கொடுத்துட்டா ஆச்சா ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து  செய்யவேணாம் - ஒரு மாசம் நடத்தி பார்க்கட்டும் அப்ப தெரியும்" னு உடையல் விடக்கூடாது.

ஆண் வீட்ல உட்கார்ந்துக்கிட்டு நூறு கேள்வி வக்கணையா கேட்க மட்டும் தெரியுது ஒரு பல்பு ஃப்யூஸ் போனாலும் உடனே ஆஃபீஸுக்கு போன் பண்றா. ஆஃபீஸ்ல எல்லாரும் சிரிக்கிறான்னு கடுப்படிக்க கூடாது.

யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமேன்னு கவிஞர் எழுதி வச்சுட்டு போயிட்டாரு. மாத்தி யோசிங்க. இடம் மாறிப்பாருங்க. மாறி யோசிச்சு பாருங்க. செயல்படுங்க. எல்லாம் கரீக்டா வரும்.

ஒரு நா காஃபி போட ,ஒரு நா டிஃபன் பண்ண,  ஒரு நா சமைக்க ,ஒரு நா பத்து பாத்திரம் தேய்க்க , ஒரு நா சமையலறைய ஏற கட்டி கழுவித்தள்ள  கத்துக்கங்க. அதே மாதிரி உங்க ஆஃபீஸ்ல/தொழில்ல  என்னெல்லாம் தகிடுதத்தம் பண்றிங்கனு
( சண்டையின் போதல்லாது) போகிற போக்கில், அசால்ட்டா விவரிங்க.

(இதெல்லாம் ரொட்டீன் லைஃபுக்கு வந்த தினத்துலருந்து படிப்படியா வலிக்காம,கசக்காம செய்ய வேண்டிய வேலைகள் . இன்னம் அம்மா, மனைவி அரசியல், மச்சினி ,மச்சினனுகளை டேக்கிள் பண்ணவேண்டிய ஸ்டைல், நீங்க மேரீட் ஆன பிற்பாடு அன் மேரீட் ஃபெலோஸை எப்படி கழட்டி விடறது மாதிரி நிறைய ஆப்பரேஷன்ஸ் இருக்கு இதெல்லாம் அடுத்தடுத்த பதிவுகள்ள வெளியாகும்.)

(தொடரும்)