குங்குமம்ங்கற வார்த்தைய அடுத்து என் மண்டையில மின்னின சில விஷயங்கள்
1.குங்குமம் குங்குமம்னு துவங்கும் டிவி விளம்பரம் ( டிவியோட இம்பாக்ட் இதான்) ஆனால் எத்தனை பத்திரிக்கைகளுக்கு இப்படி டிவில விரிவா விளம்பரம் தரக்கூடிய வாய்ப்பு,வசதி இருக்கும். இதுல மொபைல்ஸ் பரிசு வேற. அப்பாறம் பார்த்தா தாளி பக்கத்துக்கு பக்கம் படம் .அதே அக்மார்க் குமுதம் பிராண்டு தமிழ் பத்திரிக்கைதான். அடங்கொய்யால. சாவியோட எடிட்டர்ஷிப்ல துவக்கப்பட்ட வாரப்பத்திரிக்கை இது.இதுல கலைஞர் பராசக்திங்கற பேர்ல வாசகர் கேள்விகளுக்கு பதில் கொடுத்துக்கிட்டிருந்தாரு. இந்த இன்ஸ்பிரேஷன்ல வலம்புரி ஜான் தன்னோட தாய் இதழ்ல பைரவி பதில்கள் எழுதிக்கிட்டிருந்தாரு .இதுல கலைஞர் எழுதின "சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள் சூப்பர். இதுல நான் படிச்ச ஒரு சஸ்பென்ஸ் கதையைத்தான் பதிவா போடலாம்னு நினைச்சு இந்த பதிவை துவக்கினேன். இதுல டெக்காமெரான் கதைகள்னு பலான கதைகளின் தொடர் ஒன்றும் வெளி வந்தது கிழவாடிகளுக்கு ஞா இருக்கலாம். சுஜாதாவின் பதவிக்காக இதில் வெளிவந்தது எதிர்கட்சில இருக்கும்போது மட்டும் கலைஞருக்குள்ள ஊறி வர்ர கருத்து சுதந்திரத்துக்கு ஒரு சாட்சி.
2.குங்குமங்கறது இந்து மதத்து ஆண்,பெண்களுக்கு மங்கலச்சின்னம்.( இதை பத்தி பலரோட விளக்கங்களை படிச்சிருந்தாலும் - செக்ஸ் சாமியாருன்னு கீர்த்தி படைச்ச ஓஷோவோட விளக்கம்தான் தூள்) இதை ஒரு காலத்துல சனம் ( வேலை வெட்டியில்லாம இருந்தப்போனு நீங்க சொல்விங்க) அவிகவிக வீட்லயே தயாரிச்சாய்ங்களாம். நான் சின்ன வயசா இருந்தப்ப கூட சேமியா விக்கிற பாயம்மா வீட்ல மை தயாரிச்சு விற்பனை செய்துக்கிட்டிருந்தாய்ங்க. எண்ணைய் தூக்கு மாட்டி வைக்கிற சுவத்துலருந்து "ஜிகண்டூ"வை ( எண்ணெய் பசை) மொதல்ல தொட்டு வச்சிக்கிட்டு அப்பால அம்மா குங்குமம் வச்சிக்கிறத கவனிச்சிருக்கேன். சிங்கார்னு ஒரு கும்கும் ( குத்துச்சண்டை யில்லிங்கண்ணா..ப்ராண்ட் நேமே அப்படி) வந்தது .அதை தீக்குச்சில தொட்டு எங்கப்பா வச்சுக்கிறத பார்த்து நானும் வைக்க ஆரம்பிச்சேன் .(கொஞ்ச நாள் தேன்) .
3.குங்கும பொட்டின் மங்கலம்னு துவங்குற பாட்டை எழுதினது ஒரு பெண் கவிஞர். இந்த பெண்களுக்கு ஏன் ஆண்களை போலி செய்யற வழக்கம் போகமாட்டேங்குதுன்னு தெரியலை. தங்கள் தனித்தன்மை, தங்கள் பார்வையை ,தங்கள் பிரச்சினையை பதிவு செய்த படைப்பாளிகள் ரெம்ப கம்மி.பலர் ஆண் எழுத்தாளர்களை போலி பண்ணிர்ராய்ங்க. சிலர் மகளிர் பூங்கா கணக்கா எழுதறாய்ங்க ( லட்சுமி) சிலர் ஆண்கள் எல்லாம் ரேப்பிஸ்டுகள்னு எழுதிர்ராய்ங்க ( ஜோதிர்லதா கிரிஜா) ,சிலர் இங்கிலீஷ் புக்கெல்லாம் படிச்சுட்டு அவிக எழுத்தோட நோக்கம் என்னன்னே தெரியாம எழுதிர்ராய்ங்க ( வாசந்தி, இந்துமதி) . இந்த லிஸ்டுல ஓரளவாச்சும் பேலன்ஸ் பண்ணிக்கிட்டு எழுதினது அனுராதாரமணந்தான்.
4.குங்கும பொட்டுக்கு இன்னா மாதிரி இம்பார்ட்டென்ஸுன்னா பெண்ணோட முகத்தை வர்ணிக்கிறச்ச பொன் குடத்துக்கு பொட்டு வச்ச மாதிரின்னு சொல்வாய்ங்க. மக்கள் திலகம், நடிகர் திலகம், நடிகையர் திலகம்ங்கற பட்டத்துக்கெல்லாம் பேஸ் பொட்டுத்தான்.
5.ஆரோ ஒரு கவிஞர் உலகம் விதவைங்கற வார்த்தைக்கு கூட பொட்டு ( புள்ளி) வைக்கறதில்லைனு வருத்தப்பட்டு கவிதை எழுதினாராம். உடனே கலைஞர் விதவைங்கறது வட மொழி வார்த்தை. கைம்பெண்ங்கறது தான் தமிழ் வார்த்தை. இதுல ரெண்டு பொட்டு வச்சிருக்கு பாருங்கன்னாராம்.
6. பழைய இலக்கிய கர்த்தாக்கள் கணவனை இழந்தாள்னு சொல்றது வழக்கமில்லை. பொட்டிழந்தாள்,பூவிழந்தாள்னு தேன் சொல்றது வழக்கம்.பெண் புருசங்காரன்னு ஒருத்தன் வந்த பிறவு பொட்டும்,பூவும் வைக்க ஆரம்பிக்கலை..அதனால அதை இழக்க வேண்டியதில்லைன்னும் ஒரு வாதம் உண்டு.
7.தென்னிந்திய நாஸ்ட்ரோ டாமஸ் உலக எதிர்காலத்தை காலஞானம்ங்கற தலைப்புல (ஓலைச்சுவடிகள்ள) எழுதி வச்ச ஸ்ரீபிரம்மங்காரு தன் சமாதிக்கு பிறகும் தன் மனைவி பூவையும் பொட்டையும் இழக்கத் தேவையில்லைனு சொல்லிவச்சிருந்தாராம்.
8.குங்கும திலகத்தை பொட்டுன்னும் சொல்றாய்ங்க. துளிங்கற வார்த்தைக்கு பதிலா பொட்டுங்கற வார்த்தை உபயோகத்துல இருக்கு. உ.ம் பொட்டுத்தங்கமில்லை.
9.தெலுங்குல பொட்டுங்கற வார்த்தைக்கு தாலின்னும் ஒரு அர்த்தம் இருக்கு. தேவதாசி முறையை குறிப்பிட கூட இந்த வார்த்தை உபயோகிக்கப்படுது.
10.சிலருக்கு ( ஆண்களுக்கு கூட) குங்கும பொட்டு ஒரு ட்ரேட் மார்க் ஆயிர்ரதுண்டு. அழகாபுரி அழகப்பனோட சக்களத்தி கதையில பொட்டோட நிறம் முக்கிய ரோலை ப்ளே பண்ணும்.
11.குங்குமம் ரெண்டு சந்தர்ப்பத்துல அழியும். ஒன்னு புருசங்காரன் அல்பாயுசுல போயிட்டப்ப. ரெண்டு கில்மா மேட்டர்ல
12.அடியார் ஞா இருக்கா .இவர் எழுதின கவிதை ஒன்னு இன்னம் ஞா இருக்கு. (மகளை பத்தி) ஸ்டிக்கர் பொட்டுகள் வந்துவிட்ட பீரியட்ல எழுதின கவிதை இது. பாத்ரூம் கதவுல இருந்து ட்ரஸ்ஸிங்க் அலமாரி ,கண்ணாடி உட்பட எல்லா பொருட்களும் சுமங்கலிகளாக இருக்க மகள் நெத்தில மட்டும் இல்லையாம் பொட்டு ( தூங்கறாய்ங்க போல) . பாம்பு ஷேப்லயே ஒரு பொட்டு வருதுங்கண்ணா. சர்ப்பதோஷம் உள்ள பெண்கள் அதுலயும் 1-7 ல உள்ள பெண்கள் இதை யூஸ் பண்ணா பரிகாரம் கிடைக்கும்.
13.பெண்களோட கன்னம் சிவக்கிறதை குங்குமமாய் சிவந்ததுன்னு வர்ணிப்பது உண்டு. ஆமா பெண்களோட கண்கள் எப்ப சிவக்கும்? கரீட்.. முதலிரவுக்கு மறு நாள் சிவந்திருக்குமாம்.
14.அம்மனுக்கு குங்குமார்ச்சனை விசேஷம்.
15.சினிமாக்காரவுகளுக்கு ( ஆண்/பெண்) மேக் அப் போடறதுக்கு மிந்தி சின்னதா குங்கும பொட்டு வச்சிட்டுத்தான் ஆரம்பிப்பாய்ங்களாம்.