Wednesday, September 8, 2010

குட்டி போட்ட கதை

அண்ணே வணக்கம்ணே,

இந்த குட்டிப்போட்ட கதைங்கற கில்மா பதிவு மட்டுமில்லாம டிரிங்கிங் வாட்டர் ஃப்ரம் அலாஸ்கா ங்கற தலைப்புல ( ந்யூஸு பாஸு) இன்றைய அரசியல்,சமூக,பொருளாதார அமைப்புகளை கிழி கிழின்னு கிழிச்சிருக்கேன். உபரியா மனிதர்கள் ங்கற தலைப்புல ஒரு கவிதையும் இருக்கு.காதலிய  புரிஞ்சிக்கிறது  எப்படி? கள்ளக்காதலிய புரிஞ்சிக்கிறது எப்படின்னெல்லாம் வாரபத்திரிக்கைகள்ள உதவாக்கரை டிப்ஸ் ,அறுதப்பழசான டிப்ஸை படிச்சிருப்பிங்க. கடவுளை புரிஞ்சிக்க சில டிப்ஸ்  கொடுத்திருக்கேன் படிங்க.

Now begins ..... குட்டிப்போட்ட கதை................

அடடா ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாய்ங்கன்னு அலுத்துக்கிடாதிங்க. நம்ம முருகேசன் ஒரு பாமரேனியன் நாய் குட்டிய வளர்த்துக்கிட்டிருந்தாரு அது குட்டிப்போட்ட கதைக்குத்தான் இப்படி ஒரு வில்லங்கமான  தலைப்பை வச்சிருப்பாருனு சலிச்சுக்கிராதிங்க.நெஜமாலுமே இது குட்டி போட்ட கதைதான். மொதல்ல எதெல்லாம் குட்டிப்போடும்னு பார்ப்போமா?  பணம் குட்டிப்போடும் , வட்டி குட்டிப்போடும். பன்னி குட்டிப்போடும். அய்யய்யோ பக்கத்தை மூடிராதிங்க பாஸு. மேட்டருக்கு வந்துர்ரன்.

அது  1985 டு 1987 பீரியடுன்னு நினைக்கேன். அப்போ ஒடுகத்தூர்லருந்து ஒரு பார்ட்டி புதுசா வந்து காலேஜ்ல சேர்ந்தான். பார்க்க கமல் மாதிரி சூப்பர் பர்சனாலிட்டி. ஒரே ஒரு குறை  குள்ள கமல்.  நம்ம லைஃப்ல என்ட்ரி கொடுத்த சமயம் அவன் ஹைட்டுக்கு  தாடி வேற. இன்னாடா இது ராவடின்னா லவ் ஃபெயிலியராம். செத்து கித்து பூட்டாளாப்பான்னேன் பயந்துக்கினே (  நாம மறந்திருன்னு மோட்டிவேட் பண்ண அவ ஆவியா வந்து அலப்பறை பண்ணா இன்னா பண்றதாம்?)

அதெல்லாம் இல்லே அவளுக்கு வேற பையனோட கண்ணாலமாயிருச்சுன்னான். போடாங்கோ கண்ணாலம் கட்டினவனுக்கு ஒரு ராத்திரிதான் மொதராத்திரி நமக்கு தினம் தினம் முத ராத்திரி அது இதுனு வில்லன் தனமா பேசி தேத்திக்கிட்டே வந்தேன்.

க்ளாஸ் ஃபங்ஷன் ல டான்ஸ் ஆடற ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டன். அப்பாறம் தான் தெரிஞ்சது பார்ட்டி "பலான "விஷயத்துல ரெம்ப தேறிட்டான். அக்கம் பக்கம் ஆன்டிகளுக்கு கை மாத்தா பணம் தர்ரது தடவறதுன்னு தூள் கிளப்பிக்கிட்டிருக்கான்.

ஒரு நாள் விலேஜ்ல ஒரு கலெக்சன் இருக்கு போய் வரலாமான்னான். சரி சித்தூர்ல உள்ள நாலு தெருவையே சுத்தி சுத்தி வந்து என்னத்த ஆகப்போவுது போய் தான் பார்ப்பமே பொழுதாச்சு போவும்னு கிளம்பிட்டேன்.  ஹீரோ மெஜஸ்டிக் வண்டியை ஸ்டார்ட் பண்ணான்.  (இப்ப ஆயிரத்து ஐ நூறு ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லை அப்ப அதான் பந்தா) பதைக்க  பதைக்க எட்டி எட்டி மிதிச்சு புர்ருனு அதை சீற விட்டு  அதனோட ஆரோக்கியத்தை பரீட்சை பண்ணிட்டு ரூமுக்குள்ளாற போனான்.  ( வீடெல்லாம் ஒடுகத்தூர் தான். சித்தூர்ல ரூமு மட்டும்) போனவன் போனானடின்னு திரும்பவே இல்லை.

இன்னாங்கடா இதுன்னு போனா பவுடர் டப்பாவை காலி பண்றான். தலைக்கு ப்ரில் க்ரீம் போடறான். தலைய மாத்தி மாத்தி சீவறான்.  இன்னாபா மேட்டருன்னா பக்கத்து கிராமத்துல எவனோ இவனோட பெரியப்பனுக்கு பணம் தரணுமாம் .அவன்  பெண்டாட்டி மடியறாப்ல இருக்குதாம். மதியமா வா அண்ணன் கொல்லைக்கு போயிருப்பாரு பேசலாம்னு நூல் விட்டுச்சாம்.

அடங்கொய்யால நான் எதுக்குடா விளக்கு புடிக்கவான்னேன். "பாஸ் பாஸ் அப்படி கோவிச்சுக்கிட்டா எப்படி பாஸ் .. எதுனா ஜாஸ்தி கம்மியா ஆனா காப்பாத்த ஆள் வேணம்ல"ன்னு ஜொள்ளுவிட்டான்.

சரி ஒழியுது போன்னிட்டு வண்டி ஏறினேன். ஆந்திராவுலமட்டுமில்லண்ணே இந்தியாவுல எந்த கிராமத்துக்கு போனாலும் தாளி செனேரியா ஒரே மாதிரி தான் இருக்கு. அந்த பக்கம் ஒரு நாயுடு வீடு இந்த பக்கம் ஒரு ரெட்டி வீடு. பால்வாடி ஸ்கூலு, பால் பண்ணை கூட்டுறவு சங்கம், ஒரு பஜனை கோயில். பப்பரக்கானு ஒரு திண்ணை திண்ணைல சீட்டுக்கச்சேரி மூலைல ஒரே அலமாரில பீடி ,சிகரட்டு ..

இப்ப செக்யூரிட்டி இன்சார்ஜு நாம தானே கில்மா மூடெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு நம்மாளு போவ வேண்டிய வீட்டை வெளிய இருந்து ஒரு வட்டம் போட்டு  காட்ட சொன்னேன். வீடென்னவோ பெருசா தான் இருக்கு. சீமை ஓடு வேஞ்சு சுண்ணாம்பு சுவரு. முன்னாடி ஒரு சோடி திண்ணை உள்ளாற ஒரு சோடி திண்ணை பெருசா தேக்கு கம்பம். உள்ளாற வாசலு.   நாலா பக்கம் ரூம்பு. பின்னாடி பொழக்கடை. வண்டியை பின்னாடி விடச்சொன்னேன்.  அந்த கால டூரிங் கொட்டாய்  மாதிரி ரெண்டாள் உசரத்துக்கு தகடு வேஞ்ச கேட்டு .

நம்மாளூ தேடி வந்த பார்ட்டி உள்ளாறத்தான் இருந்தாள்.  மாநிறமா இருந்தாலும் கண்ணழகும்,முன்,பின்னழகும் நின்னு விளையாடுது . படியுமா தெரியலை. பரவால்லை நம்மாளு ட்ரை பண்ணட்டும். முடியலன்னா அப்பாறம் பார்க்கலாம்னு ஒரு நப்பாசை.

இருந்தாலும் திண்ணை கடைக்கு வந்து ரெண்டு ஃபில்டர் வாங்கிக்கிட்டு ஒதுங்கி நின்னோம். நான் ஸ்கெட்சை சொன்னேன். 

"த பாரு நீ உள்ளாற போ.டவுனு மாதிரி வேத்து ஆம்பளைய உள்ளாற விட்டு  கதவெல்லாம் மூட முடியாது. பேச்சு வாக்குல  கொல்லைப்பக்கமா போயி ஆத்திரம் அவசரத்துக்கு கொல்லைப்புற  கேட்டு மேல ஏறி ரோட்டு பக்கம் குதிக்க முடியுமா பார்த்துக்க. அப்பாறம் உன் கில்மா வேலைய ஸ்டார்ட் பண்ணு.  காதை மட்டும் திறந்தே வச்சுக்க தெரு வாசக்கதவு அசைஞ்சா மவனே ஒரே ஓட்டம் கொல்லைப்பக்க கேட்டை தாண்டி குதிச்சு ரோட்டுக்கு வந்துரனும்.  நான் எதிர்க்க திண்ணை கோஷ்டில ஐக்கியமாகி வாசல்ல ஒரு கண்ணை வைக்கிறேன்.  ஆள் வந்தா வண்டிய பின்னாடி கேட்டாண்டை கொண்டாந்து வைக்கிறென். நீ குந்து . ஒரே மெறி . ஹை வேயை பிடிச்சுரலாம். கையும் களவுமா பிடிச்சாய்ங்க.. ஆலமரத்தடில பஞ்சாயத்து கூட்டி சாணியெல்லாம் கரைச்சு ஊத்துவாய்ங்க"

சிகரட்டை முடிச்சுட்டு  நான் திண்ணைக்கும் , நம்மாளு எதிர் வீட்டுக்கும் நகர்ந்தோம். ஒரு அரை மணி நேரம் போல எந்த பிரச்சினையுமில்லை. நல்லா தானே போயிட்டிருக்குன்னு நினைக்கிறச்ச திடீர்னு சின்னதா ஒரு கும்பல் எதிர் வீட்டுக்குள்ளாற நுழையுது.. நான் பரபரன்னு வண்டியை ஸ்டார்ட் பண்ணி பின் பக்கமா போய் நின்னேன்.

கொல்லைப்புற கதவுக்கு அந்தப்பக்கம் நம்மாளு ஓடி வர்ர சத்தம் கேட்குது.  கேட்டுக்கு அந்த பக்கம் ரீப்பர் கேப்ல காலை வச்சு ஏறி வர்ர சத்தமும் கேட்குது .. அடுத்த செகண்ட்  களி மண் பிள்ளையாரை தண்ணியில்லாத ஏரில தள்ளின மாதிரி  "சொத்" துனு ஒரு சத்தம்.  நிக்கவா ? கிளம்பவா?ன்னு நாடி நரம்பெல்லாம் துடிக்குது. இன்னம் ஒரு செகண்ட் பார்ப்போம்னு ஒரு நப்பாசை . மறுபடி கேட் ரீப்பர் கேப்ல ஆள் ஏறி வர்ர சத்தம் . அட நம்மாளுதான்னு வண்டிக்கு நல்லா எக்ஸலேட்டர் கொடுத்து அலர்ட் ஆனேன்.  கேட் உச்சிலருந்து ஒரு கூடை சாணி வந்து விழுந்தாப்ல நம்மாளு வந்து லேண்ட் ஆனான். "எந்திரிடா சோமாரி வண்டில ஏறு "
ஏறக்குறைய அலறினேன். அவன் பின்னாடி வந்து உட்கார்ந்ததும் ஹீரோ மெஜஸ்டிக் பறக்க ஆரம்பிச்சுது.

பஸ் ஸ்டாண்டு கக்கூஸுல ரூபா கொடுத்து எல்லாத்தையும் கழுவி முடிச்சு லாட்ஜுல ரூம் வாங்கி இன்னொரு குளியல் போட்டு பீரை சப்பிக்கிட்டே கேட்டேன்.
" இவ்ளோ அவஸ்தை பட்டதுக்கு எதுனா தேறிச்சா இல்லியா"

"அட போப்பா ஊர்காரங்க கிட்டே  சிக்கியிருந்தாலும் கொஞ்சமா கரைச்சு ஊத்தியிருப்பாய்ங்க . நான் கேட்ல கால வச்சு ஏறி பிடி தவறி ஒரு வருஷ சாணக்குழில விழுந்து எழுந்து வந்தேன்"