Friday, September 3, 2010

எங்கே நிம்மதி : 2

அண்ணே வணக்கம்னே ,
இந்த பதிவோடயே சுகுமார்ஜியோட ராத்திரியில் நான் எப்படிப்பட்டவன் தொடருது. படிச்சு பாருங்க . என்னை கண்டுக்கிடலைன்னாலும் சுகுமார்ஜியோட எழுத்தை படிச்சுட்டு உங்க கருத்தை தெரிவிங்க. நீங்களூம் கவிதை07 ல் எழுதலாம். உங்க படைப்பை  swamy7867@gmail.com மெயிலுக்கு அனுப்புங்க.

எங்கே நிம்மதி : 2
நிம்மதிக்கு டெஃபனிஷன் என்னனு  தெரீமா ப்ரதர்? யார் பிக்கல் பிடுங்கல்ல சிக்கி தவிக்கிறாய்ங்களோ அவிக " இந்த பிக்கல் பிடுங்கல் இல்லாத இருந்தா போதும்  சாமீ அதான் நிம்மதி"ம்பாய்ங்க. மேற்படி பி ஸ்கொயர் இல்லாத அதிர்ஷ்ட சாலிய கேளுங்க." என்னவோ போ சாமி உப்பு சப்பில்லாத லைஃபு"ம்பான்.  அதாவது கன்னத்துல கண்ணீர் உப்பு, சப்பு சப்புன்னு அறை இதெல்லாம் இருந்தாதான் நிம்மதியாடா பன்னாடை" ன்னு கேட்க முடியுமா? முடியாது.

தெலுங்குல "கோதி புண்டு ப்ரம்ஹாண்டம்" னு ஒரு சொலவடை உண்டு. அதாவது குரங்குக்கு புண்ணு வந்துட்டா அது சொம்மா இருக்காது அதை கிள்ளி கிள்ளி ப்ரம்மாண்டமாக்கிக்குமாம்.

குரங்குலருந்து வந்ததாலயோ என்னமோ நாமும் பிரச்சினையை காம்ப்ளிக்கேட் பண்ணிக்கிறதுல துடியா இருக்கோமே தவிர தீர்வுக்கு முயற்சி பண்றதே இல்லை.
ஆமாங்கண்ணா.

நம்ம தீர்வு பிரச்சினையை விட பெரும் பிரச்சினையா மாறிப்போவுது. நம்ம தீர்வுலருந்து  ஆயிரத்தோரு பிரச்சினைகள் முளைக்குதே கண்டி மொத பிரச்சினை தீர்ரதுல்ல.

நானும் கவனிச்சுட்டே இருக்கேன். தானா வர்ரது, தானா நடக்கிறதெல்லாம் நன்மையாவே முடியுது. நாமா அலைஞ்சு பறைசாத்தி வருந்தி வருந்தி இழுக்கறதுதான் தாளி ஆப்பா முடியுது.

அதுக்குன்னு முயற்சியே பண்ணாதிங்கனு சொல்ல மாட்டேன். நம்ம முயற்சி எல்லாம்  ப்ளாங்க் செக்ல ஃபில் பண்ற பூஜ்ஜியங்கள் மாதிரி . நெம்பர் லெஃப்ட்ல விழுமா ரைட்ல விழுமான்னெல்லாம் ரோசிக்காம முட்டை வச்சிக்கிட்டே போகவேண்டியதுதான்.

கணக்கு நோட்ல ரஃப் ஒர்க்குக்குன்னு ரைட் சைட் அகல மார்ஜின் தருவான் பாருங்க. அதுல கூட்டல் பெருக்கல் கழித்தல் எல்லாம் பண்ணி நெட்டை கொண்டாந்து ரைட்,லெஃப்டுக்கு மத்தில உள்ள பகுதில போடுவம். அந்த மாதிரி தான் நம்ம முயற்சியும்.

பிரச்சினைன்னு வந்ததும் டென்சன் ஆயிர்ரம். எப்படியாச்சும் ( அண்டர்லைன்) இதுலருந்து வெளிய விழுந்துட்டா போதும்னு கரை மேல் மீன் மாதிரி துடிச்சு போயிர்ரம்.

ஒரு ஒதகாத என்கொய்ரிக்குனு ஸ்டேஷன்லருந்து கான்ஸ்டபிள் வந்ததும் டென்சன் ஆயி ஊர்ல இருக்கிற கவுன்சிலர், எஸ்.பி மச்சான், ஹோம் மினிஸ்டர் சின்ன வீடுன்னு சிபாரிசுக்கு அலையறோம்.

அந்த அலையல்லயே ஸ்டேஷன் போக லேட்டாயிரும். இந்த தடவை எஸ்.ஐ ஜீப்பை போட்டுக்கினு வீட்டாண்டை வந்துட்டா நாஸ்தி.  நம்ம எதிக்க சமந்தா ஃபாக்ஸ் வந்தா ஒரு ஹலோ சொல்லமாட்டமா? அதே மாதிரி  பிரச்சினை வந்தப்பயும்  ஹலோ சொல்லனும்.

ஓடற நாய கண்டா துரத்தற நாய்க்கு இளப்பம்னு ஒரு சொலவடை உண்டு தெரியுமில்லே.


தாளி  எல்லா சிபாரிசுக்கும் அதனோட கப்பாசிட்டிக்குனு ஒரு லிமிட் இருக்கும்.  உங்க கேஸ் அந்த லிமிட்டை தாண்டியிருந்தா சிபாரிசெல்லாம் வேலை செய்யாது.

பிரச்சினைனு வந்ததும் அதை லாங் ஷாட், க்ளோசப் ஷாட், ஏரியல் வ்யூன்னு பல கோணத்துலருந்து பார்த்து  அப்பால டைட் க்ளோசப்புக்கு போகோனும். அதை விட்டு எடுத்ததுமே டைட் க்ளோசப்ல பார்த்து அரண்டுர கூடாது.

பிரச்சினைய பிரச்சினையா பாருங்கப்பு. ஏற்கெனவே 99 பிரச்சினை இருக்கட்டும். வந்தது நூறாவது பிரச்சினை. அவ்ளதானேனு நினைக்காம  அதை விட்டுட்டு "அய்யய்யோ ஆண்டவனுக்கு கண்ணில்லையா ? ஐ டெஸ்ட் பண்ணலியா ? ட்ராப்ஸ் விடலியானு புலம்பல் எதுக்கு?

ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியா பார்த்தா பிரச்சினை கிடையாது. அல்லாத்தையும் போட்டு குழப்பிக்கிட்டா நாஸ்திதான்.

மனுசனுக்கு பிரச்சினையை விட பிரச்சினைல இருக்கோம்ங்கற ஃபீலிங் தான் பெரும் பிரச்சினை ஆயிருது.  ஆமா ..பிரச்சினை முருகேசனுக்கு வந்திருந்தா தெரியும்னு  சாபம் விட்டுராதிங்கண்ணா.

நானும் உங்களை மாதிரிதான் ,அல்லாடி,பதறி துடிச்சுத்தான் "போடாங்கோத்தா"ன்னு பேக் டு தி பெவிலியன் ஆயிட்டன். பிரச்சினையெல்லாம் பால் மாதிரிங்கண்ணா. அந்த பிரச்சினையோட வேக்குவம் நம்ம ஸ்கோரை ஏத்த கூட உதவலாம். அதேதோ படத்துல சிபி பவுலிங் போடறச்ச  பாவ்லா காட்டறாப்ல பிரச்சினை கூட பாவலா காட்டும் நாம வடிவேலு மாதிரி ரெஸ்பாண்ட் ஆனா வேஸ்டு.

பிரச்சினையை காமப்வுண்டுக்கு வெளியவே வச்சு ( அறிவு வெளில -  உணர்ச்சிகளுக்கு இடம் தராம)   டிசக்சன் பண்ணா அது ஜுஜுபி. அதை காம்பவுண்டுக்குள்ள வர விட்டுட்டம்னு வைங்க ( உணர்வு மையத்துக்கு) அது நம்ம நெஞ்சு ரணத்துல ஈ மாதிரி  போய்  உட்கார்ந்துக்குது.

அதென்ன ரணம்னு கேட்பிக . ஒவ்வொரு நெஞ்சுலயும் ஒரு புண் இருக்கு.ரணமிருக்கு.  அதை ஆத்தறதுக்கு முயற்சி பண்ணாம அது மேல எதையெதையோ போட்டு கவர் பண்ணி வச்சிருக்கோம். காத்தாடாம அது புழுத்துக்கிடக்கு.

அந்த கவரை தெரியாத்தனமா எவனாச்சும் டச் பண்ணிடாண்ணு வைங்க அவன் நெஞ்சுல என்ன ரணமிருக்குன்னு பார்த்து அதை கீற ஆரம்பிச்சுர்ரம். துக்கத்துல உள்ளவன் எதிராளியையும் துக்கப்படுத்தி தானே பார்ப்பான்.

அது என்ன ரணம் ? மரணம்.ஆமாங்கண்ணா நாம பல ஆயிரம் தடவை பிறவி எடுத்து பல ஆயிரம் தடவை செத்துப்போயிருக்கம். அதனால அதனோட வடு நம்ம நெஞ்சத்துல அப்படியே இருக்கு. அதனால கண்டதையும் மரணத்தோட முடிச்சு போட்டு ரோசிக்கறோம்.

உ.ம் தனிமை,இருட்டு, நிராகரிப்பு, ஏழ்மை, தூரம் ( நம்மவங்கனு நினைக்கிற  சனத்துக்கும் நமக்கும் இடையிலான தூரம்) , காலம் ( நம்மவங்கனு நினைக்கிற சனத்தோட நாம இருக்கிறச்ச கரைகிற காலம்) , இப்படி அனேகமிருக்கு. கண்டதையும்
மரணத்தோட முடிச்சு போட்டு ரோசிக்கறோம். அதனால தான் நிம்மதி எட்டாக்கனியா இருக்கு.

தாளி சாவுன்னா பயம்னா சாவுக்கு மட்டும் தான் பயப்படனும்.  அதை விட்டுட்ட் கண்டதையும் சாவோட முடிச்சு போட்டு பார்த்தா தெனாலி கமல் மாதிரி ஆயிரவேண்டியதுதான்.

மரண பயத்தையே சால்வ் பண்ண வழியிருக்குங்கண்ணா . செத்துப்போயிரனும். செத்துப்போயிட்டா மரண பயம் தெளிஞ்சு போவுதுல்ல. செத்துப்போறதுன்னா தற்கொலை இல்லிங்கண்ணா ஆஆஆஆஆஆஆஆஆழமான உடலுறவு, அல்லது தியானம். மரண பயம் உங்க மனசுக்குத்தான். ஆத்மாவுக்கு இல்லே.

உங்க நிம்மதி பறிபோச்சுன்னா அதை பறிகொடுக்க நீங்க ரெடியா இருந்திங்கனு அர்த்தம்.  தாளி செத்தாதான் 100 % நிம்மதி . ( ஆஆஆஆஅழமான உடலுறவு அ தியானம்) அப்படி சாகாதவரை உங்க நிம்மதி பக்கிள் போடாத ப்ரா மாதிரி எப்பவேணா கழண்டுக்கும்.

என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருந்தான். அவனுக்கு வேலை கிடைக்கிற வரை ரோட்ல எவனை பார்த்தாலும் என்ன பண்றேன்னுதான் கேட்பான். "எதுவும் இல்லிங்க ..வேலை தேடிக்கிட்டிருக்கேன்"னா நம்மாளுக்கு நிம்மதி.

இவனுக்கு வேலை கிடைச்சுருச்சு. அப்பாறம் எந்த நாயையும் "இன்னா பண்றேன்"னு கேட்கறதை விட்டுட்டான். கேள்வி மாறிப்போச்சு " மேரேஜ் ஆயிருச்சா?"ன்னு கேட்பான்.ஆகலைன்னா நம்மாளுக்கு நிம்மதி.

இது ஒரு விதமான கேரக்டர்.  அதாவது  இவிகளுக்கு  தன்னோட சர்க்கிள்ள தனக்கு தெரிஞ்ச நாலு பேர்  தன் நிலையில இருந்தா போதும் அதான்  நிம்மதி .

நம்ம நிம்மதி பறிபோக காரணமே  நாம இப்போ இருக்கிற நிலையை  தாழ்வா நினைக்கிறது .இன்ஃபிரியரா நினைக்கிறது. இன்னம் என்னமோ நடந்தாதான் நிம்மதின்னு கற்பனை பண்ணிக்கிறது. அதுக்காக உழைக்கிறேன் பேர் வழி நிம்மதிய கெடுத்துக்கறது.

என்னப்பா லைஃப் பீஸ் ஃப்ல்லா இருக்கான்னு எவனையாச்சும் கேளுங்க. "ஜஸ்ட் 5 இயர்ஸ் பாஸ்..அப்பால ஃப்ரீதான். பீஸ் ஃபுல் லைஃப்" . வருசக்கணக்குத்தான் மாறுமே தவிர இப்போ பீஸ் ஃபுல்லா இருக்கேன்னு எந்த பன்னாடையும் சொல்றதில்லை.

லைஃபுங்கறது அழகான கன்னிப்பொண்ணு மாதிரி. ஒரு குட்டிய தள்ளிக்கிட்டு போறச்ச மொதல்ல  ரூமுக்குள்ள போயிரனும். அப்பாறம்னுட்டா ப்ளான் பண்ணுவிக. இல்லையே கிடைச்ச எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் விடாம சில்மிஷம் பண்ணலை. அந்த மாதிரி லைஃபை எஞ்ஜாய் பண்ணனும். அதைவிட்டுட்டு எவனோ ஏரிக்கு பயந்து கழுவாம போன கணக்கா வாழக்கூடாது.

அதுக்குன்னு தேங்கி போயிரனும்னு சொல்லலை. "இருக்கிறதை விட்டுட்டு பறக்கறதை பிடிக்க ஆசைப்படாதேங்கறது  பழமொழி. நான் என்ன சொல்றேன்னா இருக்கிறதை கூடையிலயோ, கூண்டிலயோ அடைச்சுட்டு அப்பாறம் பறக்கறதை எய் பண்ணுங்கங்கறேன்.

மொதல்ல நம்மை நாம மதிக்கனும். அதுக்கு நாம எந்த நிலைல இருக்கமோ அதை கரீட்டா ஜட்ஜ் பண்ணனும். நம்ம ஸ்டேஜுக்கு கீழே எத்தனை லட்சம் பேர் இருக்கானு பார்க்கனும்.  நம்ம கிட்டே என்னெல்லாம் இருக்குன்னு ஒரு லிஸ்ட் இருக்கனும். அதில்லாத எத்தனை லட்சம் பேர் இருக்காய்ங்கனு பார்க்கனும்.


ரெண்டு மூணு பாராவுக்கு முந்தி சொன்ன ஃப்ரெண்டுக்கு இப்போ வேலை கிடைச்சுருச்சு, கண்ணாலமாயிருச்சு. அப்பா அம்மா காலி, வீடு சொந்த வீடு. பக்கத்து போர்ஷன்ல காலொடிஞ்ச கண்ணாலமாகாத அண்ணன்.


தினம் தினம் முதலிரவா நடக்குது. இல்லிங்கண்ணா. பாவம் பார்ட்டிக்கு ப்ளட் ஷுகர் மாட்டிக்கிச்சு, டி.பி அட்டாக். பேட்டரி வீக். பெண்டாட்டி வேற விருச்சிக ராசியாச்சா அவளை டூ வீலர்ல ஏத்திக்கிட்டு  நகைக்கடைக்கும் புடவைகடைக்கும்  அலையறான். பெண்டாட்டி இவனை  கடை உள்ளாற சேர்க்கிறதில்லை. ஷாப்பிங் முடியற வரை பொழுது போகனுமேன்னு கண்ட ஃப்ரெண்டுக்கு ஃபோன் பண்றான். மேட்டர் தெரிஞ்ச எவனும் ஃபோனே லிஃப்ட் பண்றதில்லை.

அவன் ஃப்ரண்ட்ஸுக்கு ஃபோன் பண்ற சந்தர்ப்பம் இன்னொன்னு இருக்கு. அது என்னடான்னா  க்ளினிக்கல் லேபரட்டரில மூத்திரத்தை கொடுத்துட்டு டெஸ்ட் ரிப்போர்ட் வர்ர வரை டைம் பாஸுக்கு கூப்பிடுவான். அப்பயும் சனம் ஃபோன் லிஃப்ட் பண்றதில்லை.

அந்த பிக்காலி பன்னாடை வேலை கிடைக்கட்டும், கண்ணாலமாகட்டும்னு நிம்மதியை போஸ்ட் போன் பண்ணிக்காம அப்பத்துலருந்தே கொஞ்சம் பாசிட்டிவா ரோசிச்சு வாழ்ந்திருந்தா எப்படி இருந்திருக்கும்.

சரிங்கண்ணா  நிம்மதின்னா என்னனு ஆளுக்கு ஆள் தனித்தனி டெஃபனிஷன் இருந்தாலும்  நிம்மதி  பறிபோயிருச்சுங்கற  கருத்துல மட்டும் யாருக்கும் கான்ட்ராடிக்சன் இல்லே. நம்ம நிம்மதி  எங்கேருந்து, எப்போத்துலருந்து, எப்படி  பறிபோயிருச்சுன்னு அடுத்த பதிவுல  கொஞ்சமா ரோசிக்கலாமா?

உடுங்க ஜூட்..  மறக்காம போடுங்க ஓட்...