Friday, September 3, 2010

பெண் எஸ்.பி ஜீப்போடு 1கி.மீ இழுத்துசென்ற காவலர்கள்

பெண் எஸ்.பி ஒருவரை ஜீப்போடு தொங்க தொங்க‌ 1 கிமீ வரை இழுத்து சென்று ரணகளமாக்கிய காவலர்கள் பற்றிய செய்தி இது. உத்தரபிரதேசம்  பரேலி மாவட்ட எஸ்.பி கல்பனா சக்ஸேனா. இவருக்கு ஆர்மி ஜவான் ஒருவர் ஃபோன் செய்தார் "மேடம் ! ஜாட் ரெஜிமென்ட் சென்டர்ல உங்காளுங்க ( ட்ராஃபிக் போலீஸ்) வண்டிகளை நிறுத்தி லஞ்சம் வாங்கிட்டு இருக்காய்ங்கனு" என்று சொன்னார். உடனே எஸ்.பி மேடம் கன் மேனுடன் ப்ரைவேட் வெயிக்கிள் ஒன்றில் ஸ்பாட்டுக்கு போனார்.

ஃபோனில் வந்த தகவல் உண்மைதான். ட்ராஃபிக் போலீஸ் வசூல் வேட்டையில் இருந்தனர். கல்பனா அவர்களது சட்டை,பேண்ட் பாக்கெட்ஸை செக் செய்யும்படி தமது கன் மேனுக்கு உத்தரவிட்டார். செக் செய்தால் மாட்டிக்கொள்வோம் என்று ட்ராஃபிக் போலீஸ் காவலர்கள் மூவரும் ஜீப்பில் ஏறி தப்பிச்செல்ல பார்த்தனர். எஸ்.பி அம்மா ஒரு காவலரின் சட்டை காலரை பற்றினார். அப்பயும் ஊஹூம்.

தப்புவதிலேயே குறியாய் ஜீப்பை ஸ்டார்ட் செய்தனர். எஸ்.பி அம்மாவும் விடலை. காலரை விட்டு கழுத்தை பிடிச்சாய்ங்க. ஊஹூம்.. அப்பயும் வேலைக்காகலை.

ட்ராஃபிக் போலீஸ் எஸ்.பி அம்மாவை 1 கி.மீ தூரம் இழுத்துட்டு ஜீப்பை வேகமா செலுத்தினாய்ங்க. கல்பனாவுக்கு தலையில் படுகாயம்.  தற்போதைய நிலவரம்:

எஸ்.பி சிகிச்சையில் . ஒரு காவலரை கைது பண்ணியிருக்காய்ங்க. மத்த ரெண்டு பேரு தலைமறைவு. வலை வீச்சு.

நல்லாவே டெவலப் ஆயிட்டாய்ங்கப்பா