Monday, September 6, 2010

திருமணமான பெண்ணை ஏதோ செய்து விட்டதாய் புகார்

காவலர்கள் மீதான காதலால் இல்லையென்றாலும் அப்பாவி மக்கள் நலம் கருதி இந்த கட்டுரையை வலையில் பதிகிறேன். ஆந்திரத்தில் உள்ள காவலர் பணிச்சுழலின் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்படுகிறது. இருந்தாலும் என்ன ....வீட்டுக்கு வீடு வாசற்படி.


சமீபத்தில் வலைப்பதிவுகளை ரகசிய போலீசார் பார்த்து குறிப்புகள் எடுப்பதாய் அறிந்து ( தேர்தல் சமயமாச்சே)  இதனை தமிழில் பதிகிறேன்.

இந்த கட்டுரைக்கான விஷயங்கள் பல வருடங்களாய் என் மனதில் இருந்தாலும், இதனை இன்று பதிய உடனடி காரணம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு பத்திரிக்கை நிருபன். ஒருவாரத்திற்கு முன் என் க்ளையண்டுகளில் ஒருவரான் திருமதி. .......... என்பவர் என்னை செல்லில் தொடர்பு கொண்டு தன் மகன் ஒரு திருமணமான பெண்ணை ஏதோ செய்து விட்டதாய் புகார் கொடுக்கப்பட்டதாகவும், அவனை தேடி வேளை தவறிய வேளைகளில் போலீசார் தம் வீட்டுக்கு வந்து மிரட்டுவதாகவும் கூறி அழுதார். நானும் காலையில் இருந்து எஸ்.ஐ அவர்களை சந்தித்து பேச முயன்று கொண்டே இருந்தேன்.


காலை தி.தி.தேவஸ்தான இலவச திருமண நிகழ்ச்சிக்கான செக்யூரிட்டி யில் இருந்தார். (மக்கள் தொகை பெருக்கத்தால் திணறும் ஒரு நாட்டில் இது தேவையா?)

மீண்டும் மாலை சென்றேன். அவருக்காக அப்போதுதான் ஜீப் அனுப்பப்பட்டு கொண்டிருந்தது. சரி நாமும் வீட்டுக்கு போய் ப்ரஷ் அப் ஆகி வரலாம் என்று வீட்டுக்கு போனேன்.


அதற்குள் திருமதி............. அவர்களின் மகள் போன் செய்தார். "அம்மாவை போலீஸ்காரங்க கூட்டிட்டு போயிட்டாங்க."அப்போது நேரம் மாலை 6.உடனே ஸ்டேஷன் போனேன். யார் செய்த புண்ணியமோ அதற்குள் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டிருந்தார்கள்.


பிறகு எஸ்.ஐ.யிடம் பேசினேன். அவர் குரலில் இனம் புரியாத எரிச்சல், இயலாமை,தாழ்வு மனப்பான்மை,நாசூக்கான மிரட்டல். சரி எப்படியோ நான் அந்த பையனின் நண்பர்களை விசாரித்து தேடிப் பார்க்கிறென் ,கிடைத்தால் அழைத்து வருகிறேன், நீங்களே தீர்த்து வைய்யுங்கள் என்று கூறினேன்.


அவரோ தன் ஈகோவை திருப்தி படுத்திக்கொள்வதிலேயே குறியாயிருந்தார்."நான் கேட்கவில்லையே அழைத்து வரச்சொல்லி..அவனென்ன்ன வீரப்பனா ? நாங்களே பிடித்துக் கொள்கிறோம்" என்றெல்லாம் பேசினார்.


எனக்கு ஓரளவுக்கு பாடி லாஙுவேஜ், பேஸ் ரீடிங் எல்லாம் தெரியும். ஆசாமி பார்ட்டி கைக்கு கிடைத்தால் பார்ட் பார்ட்டாய் கழட்டாது விடமாட்டார் என்பது புரிந்து விட்டது. நான் அந்த பையனை அழைத்து வரும் வரையிலாவது காவலர்களை வீட்டுக்கு அனுப்பாதீர்கள் என்று கேட்கும் சூழல் கூட இல்லை.


அடுத்து 2 நாட்களும் தொடர்ந்து காவலர்களை அனுப்பியபடியே இருந்தார். நேற்று என்னை ஸ்டேஷனுக்கு அழைத்து "அழைச்சிட்டு வரேன்னிங்க என்னாச்சு? குடும்ப நண்பர் உங்களுக்கே அவங்க தகவல் தரலை.. எங்களுக்கு வேறு வழியே இல்லை என்னும்போதுதான் பெண்களை அழைத்து வருவோம் " அது இது என்று பேசி அனுப்பினார்.


இன்று அது "வேறு" வகையில் தீர்ந்துவிடப்போகிறது.அது வேறு விஷயம். அவரின் பேச்சு,செயல் யாவும் என்னில் அவர் மேல் பரிதாபத்தைத் தான் ஏற்படுத்தியது. கோபம் என்பது பலவீனத்தின் அடையாளம்.


"செல்லாவிடத்து சினம் தீது "என்பது வள்ளுவர் மொழி.
நான் எங்கள் மானில முதல்வர் மீதே மனித உரிமைகள் கமிஷனுக்கு புகார் கொடுத்தவன், நுகர்வோர் மன்றத்தில் புகார் கொடுத்து தீர்ப்பும் பெற்றவன். குண்டர் தலைவர் என்று பார்ப்பன மீடியாவால் வர்ணிக்கப் படும் தற்போதைய முதல்வர் முதல்வராக இருக்கும் போதே அரசை கண்டித்து தன்னந்தனியே உண்ணாவிரதம் இருந்தவன். என்னை மிரட்டுகிறார் அவர்.
ஜோதிட ஞானம் வேறு இருப்பதால் சரி ஒழியட்டும் அஷ்டமத்தில் செவ்வாய் என்று அட்ஜஸ்ட் செய்து கொண்டேன்.


இது யாரோ ஒரு எஸ்.ஐ. பற்றி என்று நினைத்து விடாதீர்கள். காவலர் பணிச்சூழல் அப்படி.


இதை மாற்ற என் ஆலோசனைகளை அடுத்த பதிவில் பதிகிறேன்.1.காவலர் தேர்வு என்பது போட்டியற்றதாகி விட வேண்டும். அதற்கு இப்போதுள்ள காவல் துறை அதிகாரிகள்,காவலர் எண்ணிக்கையை 3 மடங்காக்கி விடவேண்டும்.
2.காவலர் தேர்வு என்பது இயந்திரங்களால்,கணிணிகளால் ந்டத்தப்படவேண்டும்.
3.தேர்வான காவலர்களுக்கு விலை வாசியே தெரியவராத வகையில் அவர்களுக்கும்,அவர்கள் குடும்பத்தாருக்கும் தேவையான உயிர் பாதுகாப்பு,உணவு,உடை,இருப்பிடம்,செக்ஸ்,காப்பீடு,சேமிப்பு எல்லாவற்றுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். அவர்களுக்கு தரப்படும் சம்பளம் என்பது அத்தியாவசிய,விபரீத சூழல்களில் மட்டுமே பயன் படவேண்டும்.(கிட்னாப்புக்குள்ளாதல் Etc.,)
4.காவலர்களின் உடல் நிலை,மன நிலை,பொருளாதார நிலை,(தாம்பத்திய வாழ்க்கை உட்பட) 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது அன்னிய நாட்டு சேவை நிறுவனங்களால் பரிசீலிக்கப் படவேண்டும்
5.காவலர்களுக்கான பதவி உயர்வு,இடமாற்றம்,பணிமாற்றம்,விடுப்பு,சகலமும் கணிணிகளால் நிர்ணயிக்கப்பட வேண்டும். மேலதிகாரிகளின் தயவை எதிர்ப்பார்க்கும் துரதிர்ஷ்டமான நிலை மாறவேண்டும்.(இவர்கள் மேலதிகாரிகளின் இம்சையால் மசாக்கிஸ்டுகளாகி, மக்கள் விஷயத்தில் வரும்போது சாடிஸ்டுகளாகி விடுகிறார்கள்.
6.எந்த அதிகாரியும்,எந்த காவலரும் எக்காரணம் கொண்டும் 8 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றக்கூடாது.
7.அனைத்து மானில போலீஸ் துறையையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்து விட வேண்டும்.((IAS & IPs, மாதிரி) நாடெங்கிலும் உலகத்தரத்தில் போலீஸ் குவார்ட்டர்ஸ் ,அவர்களின் பிள்ளைகள் படிப்புக்கான கல்வி நிலையங்கள்,ஹாஸ்டல்கள் கட்டப்பட வேண்டும்.பணிமாற்றம் என்பது அகில இந்திய அளவில் நடைபெறவேண்டும். பணிமாற்றம் என்பது காவலரை பாதிக்காத வண்ணம் நாடெங்கிலும் ஒரே பணிச்சூழல்,ஒரே விதி ஏற்படுத்த வேண்டும்
8.காவலன் என்பவன் மக்களுக்கு காவலனாக இருக்கும் வரை நாடு அவனுக்கு காவலாக இருக்க வேண்டும். அவன் அரசியல் விபச்சாரிகளின் தரகனாய் மாறிவிட்டால் நாடு கடத்த வேண்டும்