Sunday, September 26, 2010

எழுத்தாளர்களுக்கும் மெனோஃபஸ்

பெண்களுக்கு போலவே ஆண்களுக்கும் மெனோஃபஸ் வரும்னு முன்னொரு பதிவுல சொல்லியிருந்தேன்.இந்த பதிவுல எழுத்தாளர்களுக்கு வர்ர மெனோஃபஸை பத்தி பார்ப்போம்.
த பார்ரா இன்னா மாதிரி மேட்டருக்குஇன்னா மாதிரி டைட்டில் வைக்கிறான்னு திட்டிக்கிராதிங்க பாஸ். நமக்கு வாக்கு ஸ்தானத்துல சந்திரன், சுக்கிரன் இருக்காய்ங்க. சந்திரன்னா சைக்காலஜி, சுக்கிரன்னா செக்ஸாலஜி.

சரி மெனோஃபஸுக்கு வருவம்.

எழுத்தாளனும் ஒரு பெண் மாதிரி தான். அவனுக்குள்ளயும் ஒரு கருப்பை இருக்கு. சுற்றுச்சூழலும்,அனுபவங்களும் தான் உயிரணு மாதிரி   கருவை துளைக்க படைப்புகள்  உருவாகுது ,சுமக்கிறான். பிரசவிக்கிறான்.

படைக்கனும்னா அதுக்கு எனாரமஸ் செக்ஸ் பவர் தேவை. ஜஸ்ட் செக்ஸுலயே  மொத்தமா  செலவழிஞ்சு போயிராத மேனிக்கு மானாவாரியா செக்ஸ் பவர் இருந்தாதான் அவனால தொடர்ந்து படைக்க முடியும்.

மூளைல செக்ஸ் சென்டருக்கும்,  நாலெட்ஜ் சென்டருக்கும் ரெம்ப கிட்டயாமே. டீ மாஸ்டர் டீ போட்டு  கம்பில வச்ச பிறவு ஒரு க்ளாஸ்ல சர்க்கரை போட்டு கலக்கினா கலக்குற க்ளாஸுக்கு பக்கத்து க்ளாஸ் அதிகமா குலுங்கும்ல அந்த மாதிரி. ஒரு டிப்பார்ட்மென்ட்ல ஏற்படற அதிர்வுகள் அடுத்த டிப்பார்ட்மெண்டையும் தொடுமாம் தலைவா!

இதுலருந்து இன்னா தெரியுது காம வயப்பட்டவனுக்கு மூளை சூப்பரா வேலை செய்யும். ( குட்டிய ஓரம் கட்ட, அவிக வீட்டு வேலைக்காரிய கிடைக்காத பொருளை வாங்கி வர கடைக்கு அனுப்ப)  , அதே மாதிரி நாலேட்ஜ்ட் பர்சனுக்கு கில்மா மேட்டர்ல சீக்கிரமா ஆர்வம் வந்துரும்.

இதையே கொஞ்சம் டீப்பா பார்த்தா எழுத்தாளனுக்கு மட்டுமில்லை, மூளை தொடர்பான வேலை செய்யற எவனுக்குமே செக்ஸ் பவர் இருக்கிற வரை தான் கிரியேட்டிவிட்டியே வேலை செய்யும். இது விழுந்தா அதுவும் விழுந்துரும்.

செக்ஸுக்கு வழியில்லாத கட்டத்துல படைப்பை ஒரு அவுட் லெட்டா தேர்வு செய்துக்கிட்ட பார்ட்டிகள் கண்ணாலமானதும், மிஞ்சிப்போனா ஒரு குட்டி போட்டதும் வத்தமாடாயிரும். இதை உணர்ந்தோ என்னமோ சிலர் கண்ணாலம் பண்ணிக்காமயே இருந்துர்ராய்ங்க. எழுத்தாளர் ராஜேந்திர குமாரோட இறந்தவன் பேசுகிறேன் படிச்சிருக்கிங்களா?


செக்ஸ், திருமணம், குழந்தை பேறுல செலவழிஞ்சும் மிச்சம் மீதி இருக்கிற செக்ஸ் பவர் படைப்புகளில் ஸ்பெண்ட் ஆயிருச்சுன்னா அவன் மைண்ட் ப்ளாங்காயிரும் அந்த நேரத்துல ஓரங்கட்டிக்கிட்டா பிரச்சினையில்லை. பழைய ஞாபகத்துல தொடர்ந்து எழுதினா  நாஸ்திதான். ஜெயகாந்தன் கழண்டுக்கிட்டாரு. சுஜாதா ஒரு அஞ்சு வருஷம் முன்னாடி கழண்டுகிட்டிருந்தா இன்னம் சூப்பரா இருந்திருக்கும். பாலகுமாரன் பத்து வருசம் முந்தியே நீர்த்து போயிட்டாரு. ஆனால் சனம் அவிகளை  விடலை. கலைஞர்  இப்ப எழுதற கவிதையெல்லாம்  கவிதையிலயே சேர்த்தியில்லை. வாஜ்பேயி கவிதை  அய்யய்யோ ரகம்.

எழுத்தாளனை மெனோஃபஸ் தாக்காம இருக்கனும்னா அட்லீஸ்ட் இளமையிலயாவது அவன் ஒரு பாதுகாப்பற்ற வாழ்க்கையை வாழ்ந்திருக்கனும்.  சில கேஸ்ல கூண்டுக்கிளி மாதிரி வளர்ரதே அற்புதமான கற்பனையை கொடுக்குது- இந்த சமுதாயத்தோட நேரடி  தொடர்பு கொண்டிருக்கனும் - இந்த கண்டிஷன் எதுக்குன்னா இந்த மாதிரி பார்ட்டிகளோட படைப்புத்தான் சனத்துக்கு கொஞ்சமாவாச்சும் பிரயோஜனப்படுது -  படைக்க ஆரம்பிச்ச பிறவும் தொடர்ந்து படிக்கனும் - படைக்க ஆரம்பிச்ச பிறவு படிக்கிறது உடலுறவுக்கு பிறகு சுய இன்பம் மாதிரி ரெம்ப கஷ்டம் தான் ஆனால் முயற்சி பண்ணனும்.

(நாம சமீப காலமா - 2007லருந்து -  இந்த பாயிண்டை ஃபாலோ பண்றதில்லிங்கண்ணா -  நமக்கு அவெய்லபிலிட்டில உள்ள பத்திரிக்கை எல்லாம் அரைச்ச மாவுதான் - ஆன் லைன்ல  நல்ல நல்ல மேட்டர் மாட்டுது -ஆனா படிக்க  முடியலை - கண்ணை கட்டுது - அதுலயும் ஒரு மணி நேரம் தாண்டிட்டா இருட்டடிக்குது - ஒரு மணி நேரம் டீ ,சிகரட், ரவுண்ட்ஸுன்னு முடிச்சுட்டு வந்தா இன்னொரு மணி நேரம் சமாளிக்கலாம் அம்ப்ட்டுதேங் -  இந்த இழவுக்காகவே நெட் கனெக்சன் வாங்கப்போறேன் )

புத்தகங்கள் பிறர் நமக்காக செய்த தவங்கள். லைஃப்ல எல்லாத்தையும் பார்த்து,பட்டு த்தான் தெரிஞ்சிக்கிடனும் அப்பாறம் தான் படைக்கனும்னா எவனும் எதையும் எழுதியே இருக்கமுடியாது.

பிரயாணங்களை பத்தி ரெம்ப சொல்றாய்ங்க. அதுவும்  நெஜம்தான், ஆனா  நமக்கு பிரயாணம்னாலே அலர்ஜி. ஒரு சென்னை பயணத்தையே வருசக்கணக்கா வாய்தா போடற பார்ட்டி நாம. பாரதியார்  கணக்கா ஞான ரதம் தான்   நம்ம ஆப்சன்.

இந்த சாக்குல என் இளமை காலத்தை ( வெஜிட்டேரியன் தான் பாஸ்) கொஞ்சம் போல அசை போட்டுக்கறேன். எங்க வீடும் ( 19X64)  பக்கத்து  வீடும் அண்ணன் தம்பியோடது. பங்கு  பிரிச்சப்ப குறுக்கால ஒரு ஒத்தக்கல்லு  சுவர் ஏத்திக்கிட்டானுவ போல. ரெண்டு போர்ஷன்லயும் இரு வேறு குடும்பங்கள் வாடகைக்கு இருந்தாய்ங்க. அதுல எங்க குடும்பம் ஒன்னு. எங்க அத்தைக்கு கண்ணாலம் பண்றதுக்காக அந்த சுவத்தை இடிச்சு தள்ளிட்டு கண்ணாலம் பண்ணாய்ங்களாம். கண்ணால முடிஞ்சதும் சுவரை மறுபடி கட்டிட்டாய்ங்களாம் இதெல்லாம் இந்த காலத்துல கற்பனைக்காச்சும் எட்டுமா?

எதிர் வீட்டு போஸ்ட் மேன் , பக்கத்து வீட்டு சோடா ஃபேக்டரி காரரு, பஸ்ஸ்டாண்ட் பங்க் கடைக்காரர் , மாவட்ட கருவூல அதிகாரியான எங்கப்பா எல்லாரும் ஒரே திண்ணைல உட்கார்ந்து மணிக்கணக்கா  பேசுவாய்ங்க. இன்னைக்கு ? மனுசாளை ஹை கிளாஸ்,மிடில் க்ளாஸ்,லோ க்ளாஸ்,சாதி, ஏரியா இப்படி எத்தனையோ ஃபேக்டர்ஸ் பிரிச்சு வச்சிருக்கு. இவ்ள ஏன் பக்கத்து மைதானத்துல குடியிருந்த  மேஸ்திரி + மொடா குடி  பொஞ்சாதிக்கு நான் தேன் போய் போஸ்ட் கார்ட் எழுதி தருவேன். அதான் அப்பல்லாம் மோட் ஆஃப் கம்யூனிகேஷன். அவிக அட் ரஸ் சொல்ற ஸ்டைலே தலை கீழா இருக்கும். இப்ப ரோசிச்சா அதான் கரெக்டுன்னும் தோணுது. தபால் துறை யோசிக்குமா?

எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமா சில பிக்காலிகளோட லவ்ஸு, ரவுசு காரணமா (அந்த பிக்காலிகள்ள ஹி ஹி நானும் ஒருத்தன் தேன்)  கம்யூனிகேஷன் எல்லாம் அடிவாங்கிருச்சு. அதுவேற கதை.

கிரியேட்டிவிட்டி வளரணும், தொடரனும்னா சமுதாயத்தோட, சக மனிதர்களோட இன்டர் ஆக்ட் ஆகனும். ஆஃபீஸு ஆஃபீஸ் விட்டா வீடுன்னு இருக்கிற பார்ட்டிகள் எல்லாம் ரெம்ப நாளைக்கு தாக்கு பிடிக்க முடியாது.

நம்ம வாழ்க்கையில இன்டர் ஆக்ஷனுங்கறது  பால்யத்துலயே துவங்கிருச்சு. நாலாங்கிளாஸுலயே தமிழ்  சங்க துணை செயாளருங்கோ. போதாததுக்கு செக்யூர்ட் லைஃப் இருந்தாலும் திமிரெடுத்து போய் கெட்ட ஆட்டம்லாம் போட்டதால அதிரடி, அதன் விளைவா நாயடிங்கறதுல்லாம் 17 வயசுலயே ஸ்டார்ட். 

அங்கன இருந்து ஒன்னை இழக்கிறதும், அதை பேலன்ஸ் பண்ண இன்னொன்னை பிடிக்கிறதுமாவே காலம் ஓடிக்கிட்டிருந்தது. இந்த குணத்தை எப்பயோ உணர்ந்துட்டாலும்  2007ல தான் முழுசா  விட்டேன். பல ஆஃபர் வந்தும் இனி நான் ரிப்போர்ட்டர் வேலை பண்றதா  இல்லேனு டிக்ளேர் பண்ணிட்டன். தினகரன்ல ட்ரான்ஸ்லேட்டர் வேணம்னா ஒரு நடை போய் வந்தென் அவ்ளதான்.

பாரதியார் சொன்னாரே நமக்கு தொழில் கவிதை , நாட்டுக்குழைத்தல்னு - அதுமாதிரி நமக்கு தொழில் ஜோதிடம், நாட்டுக்குழைத்தல்னு நின்னுட்டன்.

ஒரு எழுத்தாளனுக்கு குடும்ப பின்னணி  கூடரெம்ப முக்கியம்.  அப்பா,அம்மா,அண்ணன் மாரு, தம்பியையெல்லாம் உனக்கு 22 எனக்கு 32 லயே தீர்த்துட்டன். ஆனா ஒன்னுங்கண்ணா நமக்கு மெனோஃபஸே வராதுங்கண்ணா.

நான் கணக்கு பண்ண ஒவ்வொரு குட்டிய பத்தி அவிக ஃபேமிலி பேக் கிரவுண்டு,அவிக சைக்காலஜிய வச்சு,  நான் பார்த்த வேலைங்க, அங்கன ஒர்க்கிங் கண்டிஷன் பாஸுங்களோட சைக்காலஜியிய வச்சு, என்னோட க்ளையண்ட்ஸ் சொன்ன அனுபவங்களை ஊர் பேர் மாத்தி  எழுதிக்கிட்டு  வந்தா  40 வருஷம் ஓட்டலாம். உடுங்க ஜூட்.

எழுத்தாளர்கள், பதிவர்கள் சக்ஸஸ் ஆக சில ஜோதிஷ டிப்ஸ் எல்லாம் தரனும்னு நினைக்கேன். அடுத்த பதிவுல பார்ப்போமா?