மாமியார் மருமகள் ரெண்டு பேரையும் ராவை ப்ளான் பண்ண சொன்னது அவிக படி தாண்டிருவாய்ங்கன்னு இல்லே. இது வெளிய சொல்ல முடியாத மேட்டர் மட்டுமில்லை. அவிகளூக்கே உறைக்காத மேட்டர். இதனோட பாதிப்பு அவிக உடல்,மனசு,வே ஆஃப் திங்கிங், ரீசனிங் ,பேச்சு நடவடிக்கை எல்லாத்தையும் நாற அடிச்சுரும். சந்தோசத்துல உள்ளவுகதான் எதிராளியோட சந்தோசத்தையும் முக்கியமா நினைப்பாய்ங்க. சந்தோசப்படுத்துவாய்ங்க. துக்கத்துல உள்ளவுக எதிராளிய துக்கப்படுத்தித்தான் பார்ப்பாய்ங்க. இப்படி துக்கப்படுத்தி பார்க்கிற ஸ்டேஜுக்கு வந்துட்ட மாமியார் மருமகளை விரட்டின பிறகு தன் புருசங்காரனையும் விரட்டத்தான் பார்ப்பா. மாமியாரை விரட்டின மருமக நாளைக்கு தன் புருசங்காரனையும் விரட்டித்தான் தீர்வா.
இதுக்கு தீர்வு ரெண்டு பார்ட்டியும் கைனகாலஜிஸ்டை பார்க்கிறதுதான். செக்ஸாலஜிஸ்ட்,சைக்கிரியாட் ரிஸ்டை பார்த்தாலும் பெட்டர் தான்.
இளமை துடிப்புல இருக்கிறச்ச பொஞ்சாதின்னா "அதுக்குத்தான்"ன்னு ஒரு எண்ணம் உள்ளூற இருக்கும். ஆனா வயசான காலத்துல "அதுக்குன்னு" இல்லைனாலும் ஜஸ்ட் பகத்துல இருந்தா போதும்ங்கற எண்ணம் ஆம்பளைக்கு மட்டுமில்லை .பொம்பளைக்கும் இருக்கும். இதை நினைச்சுப்பார்க்காம அப்பனை ஹால்லயும், அம்மாவை ஸ்டோர் ரூம்லயும் வச்சுட்டு அப்பாறம் "வீட்ல சம்சாரத்துக்கும் அம்மாவுக்கும் ஒத்துவரலை பாஸ்"னு மூக்கை சிந்தறதும், குவார்ட்டர் அடிக்கிறதும்
வீண் வேலை.
சிலர் இவிக நிம்மதியா "இருக்க" கைக்குழந்தைய அப்பா அம்மா கிட்டே தொள்ளிருவாய்ங்க.
மாமியாரோட திருமண வாழ்வு சராசரியா இருந்திருந்தாலே இம்சை தான். இதுல சாடிஸ்ட் கணவன் கிட்டே மாட்டி அவதிப்பட்டிருந்தா , புருசங்காரன் கை வலுத்து இருக்கிற வரை மசாக்கிஸ்டா இருந்து அவன் கை தாழ்ந்ததும் சாடிஸ்டா மாறிருவா.அப்ப பிரச்சினை கொஞ்சம் சிவியரா தான் இருக்கும்.
மேலும் மனிதர்கள்ள மிருகத்தனம் இன்னும் மிச்சமிருக்கத்தான் செய்யுது. முக்கியமா தெரு நாய்களை அப்சர்வ் பண்ணியிருந்தா இது புரியும். பக்கத்து தெருவுல இருந்து புதுசா ஒரு நாய் இந்த தெருவை பாஸ் பண்ணனும்னா அது பயந்த சுபாவமா இருந்தா தன் வாலை பின்னங்காலுக்குள்ள விட்டுக்கிட்டே பாஸாகும். கொஞ்சம்போல தகிரியமிருந்து எதுக்கு வீண் சண்டைன்னு நினைக்கிற சாதியா இருந்தா முன் பல்லை மட்டும் காட்டிக்கிட்டே பாஸ் ஆயிரும். இந்த தெரு நாய்ங்களும் சாஸ்திரத்துக்கு விரட்டற மாதிரியே பாவ்லா காட்டி விட்டுரும்.
இதே சண்டைக்குன்னே பிறந்த நாயா இருந்தா ரண களம் தான். அந்த நேரம் பார்த்து ட்ரெய்ன் பிடிக்க வேகமா போற பார்த்தசாரதியோ, பஸ் பிடிக்கப்போற பலராமனோ குறுக்கால மாட்டினா கடி வாங்கி ஆண்டி ரேபிஸுக்கு அலைய வேண்டியதுதான்.
ஏன் இந்த கொலை வெறி? இந்த நாய்ங்க சுத்தி வர்ர ரெட்டி அண்ட் ரெட்டி காலனில அல்லது காந்தி நகர் காலனில எத்தனையோ மனிதர்கள் வசிப்பாய்ங்க. யாரும் அந்த புது நாயை கவனிச்சிருக்கவே மாட்டாய்ங்க. ஆனால் இந்த நாய்கள் மட்டும் ஏதோ மேற்படி காலனி தங்களோட பேர்ல ரெஜிஸ்டர் ஆயிருக்கிறாப்பல ஒரு ஃபீலிங்கோட புது நாயை துரத்தும். ஏன்னா இதுகளும் , அதுவும் ஒரே இனம்.
காலம் காலமா இருக்கிற மாமியாருக்கோ, முந்தா நேத்து வந்த மருமகளுக்கோ அந்த வீட்டுல எந்த மசுரு உரிமையும் இருக்காது. ரெண்டுமே அடிமைகதான். சீனியாரிட்டில தான் வித்யாசம். ஒரு அடிமை என்னைக்குமே தன் எஜமானன் மேல ரெபல் ஆகமாட்டான். சக அடிமைதான் அவன் டார்கெட்.
லாஜிக் படி பார்த்தா புது அடிமையும், நீண்ட கால அடிமையும் கை கோர்த்து சுதந்திரத்துக்காக போராடனும். ஆனால் இதுக ஒன்னோட ஒன்னு வெட்டி மடியுதுங்க. ஏன்? பல நூற்றாண்டு கால அடிமை ஜீன்ஸ் இன்னம் அவிக உடம்புல இருக்குது.
தன் ஆண்மை, கமாண்ட் மேல முழு நம்பிக்கை இருக்கிற ஆம்பளை எவனும் பொம்பளைய அடக்கியாளனும்னு நினைக்கவே மாட்டான். எவனொருத்தன் உள்ளுக்குள்ள தன்னை பொம்பளையா உணர்ரானோ அவன் தான் பொம்பளைய தனக்கு சமமா பாவிச்சு அ அவள் எங்கே கை மீறி போயிருவாளோனு அடக்கி வைக்க பார்ப்பான்.
ஒரு வீட்ல ஒரே ஒரு ஆண்மகன் ஆண்மையின் சின்னமா , தன்னம்பிக்கையின் மறு உருவமா இருந்துட்டா போதும் ( அது மாமனாரானாலும் சரி, மச்சினனாலும் சரி தன்னை உள்ளுக்குள்ள பெண்ணா உணராம , பெண்களோட சுதந்திரத்தை பாடதிக்காம இருந்துட்டா போதும் அந்த வீட்ல மாமியார் மருமக தகராறே வராது. அவிக அவனை பூஜை பண்ணிக்கிட்டே காலத்தை ஓட்டிருவாய்ங்க. அவன் மதில் மேல் பூனையா இருந்தாத்தான் மாமியார் ஒரு பக்கம் மருமக ஒரு பக்கம் முந்தானையை விரிச்சு பிடிச்சுக்கிட்டு இந்தப்பக்கம் குதி, அந்தப்பக்கம் குதிக்காதேன்னு குத்தாட்டம் போடுவாய்ங்க.
மாமியார்,மருமகள்னே இல்லை எந்த உறவா இருந்தாலும் தகராறுகள் வர உடல் ரீதியிலான பலகீனங்களும் ஒரு காரணம். எந்த வயசா இருந்தாலும், ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி ஹெல்த் ரூல்ஸை ஃபாலோ பண்ணியே தீரணும். இல்லைன்னா வாயிதா போயிரும். கோபம்ங்கறது பலகீனத்துக்கு அடையாளம். பலகீனத்தோட பின் விளைவு.
சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி. எண்ணம் போல் மனம் . மனம் போல் வாழ்வு. உடல் மனம்ங்கற ரெண்டுல எது வலிமையா இருக்கோ அது மத்ததை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும். மனித உடல் ஒரு அற்புத இயந்திரம். அது மனுஷன் சொல்றதை கேட்கனுமே தவிர அது சொல்றதை மனுஷன் கேட்கிற ஸ்டேஜ் வந்துருச்சுன்னா உலகமே நாறிடும். உடல் மனசு ரெண்டுமே வலிமையா இருந்தா நாய்குட்டி கணக்கா கீழ்படியும். அப்போ மனுஷன் கண்ட பன்னாடைகளுக்கு கீழ்படியாம மனசாட்சிக்கு மட்டும் பயந்து உலகத்தையே இன்ஃப்ளுயன்ஸ் பண்ணலாம்.
ஆக மாமியார் மருமக யுத்தத்தை தவிர்க்கனும்னா டயட்டிஷன், பியூட்டிஷன், காஸ்ட்யூமர், ஃபிசிஷியன்,செக்ஸாலஜிஸ்ட், சைக்காலஜிஸ்ட் இப்படி ஒரு படையே வேலை செய்யனும்ங்கோ..
மாமியர் மருமக யுத்தத்துக்கு பல காரணங்கள் உண்டு. ஜோசியப்படி பகை ராசியா இருக்கலாம். செவ் தோஷம் காரணமா மருமக கோபக்காரியா இருக்கலாம். சர்ப்ப தோஷம் காரணமா அவளே மாமியாரை பேயா பிசாசா கற்பனை பண்ணிக்கிறவளா இருக்கலாம். சில வீட்ல வாஸ்துல்லாம் பார்த்தா அரண்டு போயிருவன். அந்த வீட்டுக்குள்ள நண்பனா நுழைஞ்சவன் கட்டாயம் எதிரியாத்தான் வெளிய வருவான்.
கண்ணாலத்து பெண்ணை பார்க்கிறச்சயே செவ் தோஷம் ,நாக தோஷம்லாம் இருக்கா இல்லையானு பார்த்து ஆறு மாசம் முந்தியே பரிகாரம் ஸ்டார்ட் பண்ணிரனும். செவ் தோஷத்துக்கு உடனடி பரிகாரம் ரத்த தானம் அல்லது அங்கம் அறுபட்டவர்கள் தீக்காயங்களுடையவர்களுக்கு பெரிய அளவில் உதவுதல். சர்ப்பதோஷத்துக்கு பரிகாரம் அன்னியமத கிரந்தங்களை வாசித்தல், அன்னிய மொழி ஒன்றை கற்றல் ( ஜெர்மனி, ஃப்ரென்ச் மாதிரிங்கோ) . முக்கியமா பையன் பெண்ணுக்கு பொருத்தம் பார்க்கிறச்சயே மாமியாருக்கு ஃப்ரெண்ட்லி ராசியான்னு பார்த்துக்கறது நல்லது. அப்படியே எக்ஸ்ட்ரா பெட்ரூம் போடறச்சயே வாஸ்துவும் கொஞ்சம் போல கரெக்ட் பண்ணிக்கிறது நல்லது பாஸு.
கண்ணாலத்துக்கு முந்தியே மாமியார் டயட்டிஷன், பியூட்டிஷன், காஸ்ட்யூமர், ஃபிசிஷியன்,செக்ஸாலஜிஸ்ட், சைக்காலஜிஸ்ட்டுன்னு ஒரு ரவுண்டு பார்த்துரலாம். அடுத்தது ஏழ்மை, பொருளாதார பற்றாக்குறைகளால் ஏற்படற சின்ன சின்ன பிரச்சினைகள். ஒரே டிவி,ஒரே ஃபேன், ஒரே கக்கூஸு இதெல்லாம் சால்வபிள். என்ன மாமியார்,மருமக சிண்டை பிச்சுக்காம வீட்டு ஆண்களை என் கரேஜ் பண்ணா இதெல்லாம் ஜ்ஜுஜுபி.
மாமியார் -மருமகள் -மகன் இந்த முக்கோணம் போலவே இன்னொரு முக்கோணமும் இருக்கு. மருமகள் - மாமனார் - மாமியார் அடங்கொய்யால இதென்னய்யா புதுக்கரடின்னு சிலும்பாதிங்க.
ஆம்பளைங்க சைக்காலஜி என்னடான்னா பெண்டாட்டிய தவிர எல்லா பொம்பளை கிட்டயும் பெண்ணுரிமை,சம உரிமை பத்தியெல்லாம் வாய்கிழிய பேசுவாய்ங்க. அட உறவு எதுவேணம்னா இருக்கட்டும் ..( ரிப்பீட்டட் ஆடியன்ஸா இருக்கக்கூடாது ) - ரேர் விசிட்ஸ் கொடுக்கிற எந்த பொம்பளையானாலும் ரெம்ப லிபரலா இருப்பாய்ங்க.
பொஞ்சாதி கேஸ் சிலிண்டர் ஆயிருச்சு. ஃபோன் பண்ணுன்னா எரிஞ்சு விழற பார்ட்டி மருமக வந்து "மாமா கேஸ் ஆயிருச்சு"ன்னவுடனே ஃபோனை மடியில எடுத்து நெம்பரை சுழற்ற ஆரம்பிச்சுர்ரது, "எம்மாடி சொம்மா சொல்ல கூடாது பொங்கல் சொம்மா அருமை.."ன்னு காம்ப்ளிமெண்ட் கொடுக்கிறது இதெல்லாம் கூட மாமியார் -மருமக யுத்தத்துக்கு காரணம்தான். வாரத்துக்கொருதரம் கூட ஷேவிங் பண்ணாத பார்ட்டி மருமகள் இருக்கான்னு வாரத்துக்கு 3 தரம் ஷேவ் பண்ண ஆரம்பிச்சா கடுக்குமா இல்லியா?
இந்த பிஹேவியர் பின்னாடி இன்னொரு அருவறுப்பான உள் மன படிவமும் இருக்கு. மகன்ங்கறவன் யாரு? இவரோட மறுபதிப்பு. அதனால சல்லாத்துணி பின்னால ஒரு வித நாசூக்கான மறைமுகமான செக்ஸுவல் இன்ஸ்டிங்ட்ஸ் கூட இருக்கும். ஏற்கெனவே சொன்ன மாதிரி ஒரு பெண்ணுக்கு ( மாமியார் ) இன்னொரு பெண் ஜஸ்ட் போட்டிதான். உறவுகளோட தொடர்பே கிடையாது.
(தொடரும்)