Wednesday, September 29, 2010

அழகிரியின் நண்பர் : 2

இது 2010. நான் சொல்ல போற கதை 1987 ல ஆரம்பிக்குது. அப்போ அழகிரியின்  நண்பர்கள்ள நெம்பர் டூவா மென்ஷன் பண்ண டி.ஜி சுரேஷ் டிகிரி ஃபைனல் இயர் ஸ்டூடண்ட். சி.கே பாபுவோட ஃபாலோயரா   சேர்மனா கன்டெஸ்ட் பண்ணாரு. தோத்துப்போனது வேற கதை. அவிக அப்பா கவுன்சிலர் கம் புல்லெட் டீலர். அங்கன இருந்து டி.ஜி.சுரேஷ் தொழிலதிபரா வளர்ந்து நிக்கிற வரை அவரோட வளர்ச்சியில சி.கே பாபுவோட ரோல் ரெம்ப இம்பார்ட்டன்ட். அதையெல்லாம் என்ன ஏதுன்னு விவரிச்சா நாறிடும். அதனால விட்டுருவம். ரெண்டு தாட்டி அட்டெம்ப்ட் நடந்து கடந்த முறை விட்டதை பிடிக்கனும்னு சி.கே களத்துல இறங்கறாரு. அன்னைக்கு பார்த்து சி.கேவோட அரசியல் எதிரி மட்டுமல்லாது அவரை போட்டு தள்ள ஸ்கெட்ச் பண்ணதாவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிற எம்.பி.மகன், அவரோட தந்தை  மற்றும் இதர பார்ட்டிகளோட அனுசரணையோட திருப்பதி போய் காங்கிரஸ் கட்சில சேர்ந்தாரு.

இடையில ஒரு தாட்டி தெ.தேசம் ஜம்ப் ஆகி மொக்கையாகி அரசியல்லருந்தே ஓரங்கட்டிக்கிட்டதால மறுபடி சேர வேண்டி வந்துருச்சுங்கோ. பெரியார் அண்ணா, எம்.ஜி.ஆர் எல்லாம் வீடு கட்டி குடிப்போனாய்ங்க. கலைஞர் மட்டும் கட்டின வீட்டுல குடி போனவருன்னு விஜய காந்த் சொல்றாரே அப்படி இந்த சுரேசுக்கும் ஒரு அதிஸ்டம் உண்டு. ரஜினி ஃபேன்ஸ் அசோசியேஷனாகட்டும், முதலியார் சங்கமாவட்டும் கட்டின வீடா இருக்க இவரு குடி புகுந்துட்டார்.

ஒரு காலத்துல பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்ல இருந்து இடையில நீக்கப்பட்ட முதலியார் வகுப்பை மறுபடி BC ல சேர்க்கனும்னு ஒரு டிமாண்ட் ரெம்ப காலமா இருந்தது . மேற்படி சுரேஷ் ஒரு பொசிசன்ல இருந்ததால சங்க தலைகள் எல்லாம் போய் உதவி கேட்டாப்ல இருக்கு. அதையும் ஹைஜாக் பண்ணிட்டாரு.

ஒய்.எஸ்.ஆர்  எலக்சனுக்கு போற வேகத்துல முதலியார் வகுப்பை BC பட்டியல்ல சேர்த்துட்டாரு . இதுக்கான க்ரெடிட்டும் சுரேஷ் அக்கவுண்டுக்கு போயிருச்சு. கட்சியில சேர்ந்தவரு கொஞ்சம் போல பொறுமையா இருந்து நகராட்சி சேர்மன்ல இருந்து தன் அரசியலை ஆரம்பிச்சிருக்கலாம்.

ஆனால் பாவம் அவரு வெறும் பொம்மை. சி.கேவை நேரிடையா எதிர்கொள்ள முடியாத கிழவாடிங்க இவரை பொம்மையாக்கி பின்னாடி இருந்து கீ கொடுத்துக்கிட்டிருந்தா அவர் மட்டும் என்ன செய்வாரு.

நம்ம தமிழ் காரரு, ஃப்ரெண்ட்லி மேன், சாதராண பொசிஷன்லருந்து முன்னுக்கு வந்தவரு,  ஹி ஹி நம்ம சாதிக்காரருன்னு ஒரு சாஃப்ட் கார்னர் எனக்கும்  உண்டு. ஆனால் இவரு ஆக்கப்பொறுத்தவ ஆறப்பொறுக்கலேங்கற மாதிரியா எம்.எல்.ஏ சீட்டுக்கே ஸ்கெட்ச் போட்டாரு. அங்கனதான் மனசு வெறுத்துப்போச்சு.

ஜன நாயகத்துல ஓட்டு,வயசு இருக்கிறவுக யார் வேணம்னாலும் டிக்கெட் கேட்கலாம்,கிடைச்சா போட்டியிடலாம். கட்சி டிக்கெட் கிடைக்கலைன்னா சுயேச்சையா கூட நிக்கலாம். ஆனால் மேற்படி சுரேஷ் கிழவாடிங்க பேச்சை கேட்டுக்கிட்டு குறுக்கு சால் ஓட்டினாரு. அழகிரியோட இன்னொரு நண்பரான ஜங்கால பல்லி ஸ்ரீனிவாசுலுவுக்கு ஆதரவா வேலை செய்தாரு.

இருந்தாலும் என்ன ஊத்திக்கிச்சு. லாஜிக்கே இல்லாம பல பேரு பல க்ரூப்ஸ் சி.கே வுக்கு ஆதரவா ஒர்க் பண்ணதை பத்தி தனிப்பதிவே போடலாம். அழகிரியோட நண்பர்களோட பண பலம், சாராய வெள்ளம், புடவை பார்சல்களை மீறி சி.கே ஜெயிச்சுட்டாரு.

(தொகுதி முழுக்க சுத்தி வந்து நானும் பிரச்சாரம் பண்ணேங்கண்ணா. பிரச்சார வாகனத்தோட நான் இருக்கிற ஃபோட்டோவைத்தான் பதிவின் ஆரம்பத்துல பார்த்திங்க)

சரி தேர்தல் முடிஞ்சது. ஆச்சு போச்சு.  அதிஸ்டத்தை நொந்துக்கிட்டு வேலை வெட்டி பார்க்க போயிருக்கலாம். ஆனால் அவர் தான் சொந்தமா யோசிக்கிற நிலையே இல்லையே. கிருஷ்ணய்யான்னு ஒரு ஐ.ஏ.எஸ் ஆரம்பிச்ச பி.சி. அமைப்பு ஒன்னுல சேர்ந்து மாவட்ட தலைவராவும் ஆயிட்டாரு.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஃபீஸ் ரீ எம்பர்ஸ் மென்ட் தாமதமாறதா தான் உறுப்பினரா உள்ள ஆளுங்கட்சியை எதிர்த்து, தன் அரசியல் குருவான ஆதிகேசவுலுக்கு  தி.தி.தே சேர்மன் பதவியை கொடுத்த காங்கிரஸ் கட்சி அரசை
( இவர் காங்கிரஸுக்கு ராஜினாமா செய்ததா தகவலில்லே) எதிர்த்து உண்ணாவிரதமெல்லாம் இருந்தாரு.  முதலியார் வகுப்பை BC பட்டியல்ல சேர்த்த நன்றியை கூட நினைக்காம இந்த காரியத்தை பண்ணாரு.

சரி அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு விட்டுரலாம். ஜோதிராவ் பூலே சிலையை நிறுவி சி.கே பாபு திறந்துவச்சாரு ( சிகே ரெட்டியார் வகுப்பை சேர்ந்தவர். ஆனால் அவரோட ஆதரவாளர்கள்ள  நம்மாளுங்க - தமிழர்கள்  தான் அதிகம்) . அதுக்கான கல்வெட்டை பத்து நாளைக்குள்ள பெயர்த்துருவம்னு ஸ்டேட்மென்ட் கொடுத்து சாமானியர்கள் மனசுல பீதியை கிளப்பினார். ( மாவட்ட பிற்படுத்தப்பட்ட அமைப்புகளுக்கு தகவல் கொடுக்காம திறந்தது குற்றமாம் )

இதையெல்லாம் கூட ஏதோ அரசியல்ல தன் இருப்பை ஸ்திரப்படுத்திக்கிற சீப் பாலிடிக்ஸ்னு தள்ளி விட்டுரலாம். முந்தா நேத்து இவரோட சகலை யாரையோ அடிச்சு உதைச்சு வீட்டை காலி பண்ண சொன்னதா கட்டை பஞ்சாயத்து செய்ததா புகார் வரவே போலீஸ் அவரை கைது பண்ணிருச்சு. உடனே இந்த சுரேஷ் நிருபர்களை கூப்பிட்டு இதையெல்லாம் சி.கே தான் செய்யவைக்கிறாருன்னு குற்றப்பட்டியலை வாசிச்சு காட்டா குஸ்திக்கு சவால் எல்லாம் கேட்டாரு.

ஒரு அரசியல் நியதிப்படி பார்த்தாலும் தி,முகவுக்கும் காங்கிரசுக்கும் கூட்டு இருக்கு. அந்த கட்சியோட லோக்கல் எம்.எல்.ஏவோட கோர்ட்டுக்கு வந்தாலும் புரிஞ்சிக்கலாம். அதைவிட்டுட்டு அழகிரி சார் செலக்ட் பண்ணி தோள் உரச  கோர்ட்டு க்கு வந்த நண்பர்களோட பர்சனாலிட்டிய பார்த்திங்கள்ள.

எப்படியும் அக்டோபர் 2க்கு அப்பாறம் நாம அம்பேல் .அதுக்குள்ளாற உ.வசப்பட்டுராதிங்கனு சொல்லி வைங்கப்பா ..

( வாக்குல சனி நெல்லாவே வேலை செய்யுது வாத்தியாரே.- ஏன் டாக்டருக்கு சளி பிடிக்கக்கூடாதா - ஜோசியருக்கு சனி பிடிக்க கூடாதா - ஆனா ஒன்னுங்கண்ணா நல்லவனுக்கு சாபமும் வரமாயிரும் - தசரதனுக்கு சிரவண குமாரனோட பெற்றோர் கொடுத்த புத்ர சோக சாபம் தானே ராமனை தந்தது- ஊர்வசி அர்ஜுனனுக்கு கொடுத்த சாபம் தானே விராட பர்வத்துல தலைமறைவா இருக்க உதவுச்சு.- சாபங்களே வரமாயிர்ரப்போ கிரக பீடையெல்லாம் ஒரு கணக்கா என்ன உடு ஜூட்)