Tuesday, September 21, 2010

யந்திரன் ப்ளாஃப் டாக்

சிவாஜில கருப்பு வெளுப்பாறதும், லாப் டாப் கம்ப்யூட்டருமே சனத்துக்கு ( முக்கியமா ரஜினி ரசிகர்களுக்கு)  புரியலை. இதுல ரோபோட் எல்லாம் யாருக்கு புரிய போகுது. புரிஞ்சவன் இங்கிலீஷ்லயே பார்த்திருப்பான். புரியாதவன் தான் பார்க்க வருவான். மறுபடி வருவானானு சனம் டவுட் படறாய்ங்க. மேலும் வ்ச்ச 150 கோடியை பத்து மடங்கா அள்ள சன் பிக்சர்ஸ் டிஸ்ட் ரிப்யூட்டர்ஸை மொட்டை போட்டிருப்பாய்ங்க. அந்த நஷ்டத்தை ஈடுக்கட்ட அவிக தியேட்டர் காரவுகள ஆட்டைய போட்டிருப்பாய்ங்க. கடைசில எல்லாம் வந்து ரசிகன் தலையில விடியும். நூறு தடவை பார்க்கிற ரசிகன் கூட மொத நாளு ஆயிரம் ஐ நூறுன்னு மொழி எழுதிட்டு தியேட்டர் பக்கம் திரும்ப போறதில்லை. இப்படி பல காரணங்களை காட்டி யந்திரனை பத்தி ரஜினி ரசிகர்களே பேசிக்கிட்டிருக்காய்ங்க. இந்த சந்தர்ப்பத்துல நம்ம கற்பனை குதிரையை தட்டி விட்டேன்.

செப்டம்பர் 30 ஆம் தேதி  விடியல் 4.30 .

கலா நிதி மாறன் தன்னோட சேம்பர்ல  கவலையா நகம் கடிச்சிக்கிட்டிருக்காரு. எதிர்க்க ரஜினி, சங்கர், வைரமுத்து கவலையா உட்கார்ந்திருக்காய்ங்க.

"எப்படி..எப்படி  வண்டுகள் மலரை பிரிந்ததெப்படி? கனித்தமிழ் கலைஞரை பிரிந்ததெப்படி?  ரஜினியை ரசிகர்க்ள் பிரிந்ததெப்படி? ன்னுட்டு வைரமுத்து ஒரு  நீள் கவிதைக்கு  முயற்சி பண்ண மாறன் கண்கள்ள ஆல்ப்ஸ் எரிமலையோட வெப்பம். வைரமுத்து ஸ்விட்ச் ஆஃப் ஆறார்.

ரஜினி காந்த் கண்ணை சிமிட்டி சிமிட்டி மூக்கை தேய்ச்சிக்கிட்டிருக்காரு. சங்கரோட மூக்கு ஏற்கெனவே செர்ரி.

மாறன் பேச ஆரம்பிக்கிறாரு.

"ஒரு காலத்துல தான் எதிர்த்த, தன்னை எதிர்த்த, அதனால ரசிகர்களை  பின்னியெடுத்த பார்ட்டிகளையெல்லாம்  நேர்ல சந்திச்சு தன்னோட மகள் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வச்சது,  ரசிகர்கள் மட்டும்  வரக்கூடாதுன்னு  அறிவிச்சது, அப்பாறம் ஊர் ஊரா வந்து மணமக்களை அறிமுகப்படுத்தறேன்னுட்டு கொடுத்த வாக்குறுதிய காத்துல விட்டது, வைரமுத்து யந்திரன் ட்ரெய்லர் ரிலீஸ்ல சொன்ன போப் ஜோக் எல்லாமா சேர்ந்து ரஜினியோட ரசிகர்கள் யந்திரன் படத்தை பாய் காட் பண்றதோட இந்த படத்தை யாரும் பார்க்க கூடாதுன்னு வேற பிரச்சாரம் பண்ணிக்கிட்டிருக்காய்ங்க. இந்த பிரச்சாரத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறதாவும்,  நாம சன் டிவில போட்டா கூட பார்க்க ஆளில்லேன்னும் இன்ஃபர்மேஷன். இப்போ ரிலீஸ் நேரத்துக்கு சரியா 24 மணி நேரம் பாக்கியிருக்கு. ஏதோ ஒன்னை செய்து சனம் தியேட்டருக்கு வராப்ல செய்துரனும்"

சங்கர்  முகம் சட்டுனு மலருது கையை சொடுக்கி " ஏரியல் வ்யூ ஒரு ஏர் போர்ட்லருந்து ஒரு டஜன் குட்டி விமானங்கள் சீறி கிளம்புது."

மாறன் " படம் பார்க்க வரமாட்டேன்னுட்டவுகளை யெல்லாம் குண்டு வீசி கொன்னுரபோறிங்களா?"

ஷங்கர் " நோ நோ.. என்னோட அடுத்த படத்தை பார்க்க கூட்டம் வேணமே ஒரு டஜன் விமானங்களும் தலா ஒரு திசையில பிரிஞ்சு பறக்குதுங்க. இப்போ ஒரே விமானம். உச்சி வானத்துல வட்டமடிக்குது.  அப்படியே டவுன் பண்ணா தியேட்டர் வாசல்ல ரஜினி சாரோட கட் அவுட் அனாதையா நிக்குது. விமானம் இன்னம் டவுன் ஆகி.."ன்னுட்டு இன்னம் என்னவோ சொல்ல வர்ராரு.

ரஜினி கடுப்பாகி "ஷங்கர் சார் இப்பயே எல்லாம் டவுன் ஆகித்தான் கிடக்கோம். இன்னம் இன்னம் ஏன் டவுன் பண்றிங்க"ன்னு ப்ளாஸ்ட் ஆறாரு.

மாறன் "ரஜினி நீங்க  பண்ணதே போதும் . ஷங்கருக்கும் ஒரு சான்ஸ் கொடுப்போம்.அதை ஏன் தடுக்கறிங்க. நீங்க சொல்லுங்க ஷங்கர் !"ங்கறார்

ஷங்கர் கன்டினியூஸ் " விமானம் நிறைய லாலா கடை லட்டுகள் இருக்கு."

மாறன் , எரிச்சலுடன் "என்ன ஷங்கர் ..ராகவேந்திரா கல்யாண மண்டப வாசல்ல ஐஸ் மோர் கணக்கா இருக்கு "ங்கறார்.

ஷங்கர் உஷாராகி " விமானத்துல தன் குடும்பத்தோட ரஜினி சார் இருக்காரு. ஒவ்வொரு தட்டா லட்டுகளை தன் கையில வாங்கி அப்படியே கொட்டறார்"

மாறன் யோசனையுடன் "ரஜினி - வாய்தா போன பார்ட்டி, லட்டா - லாலா கடை சரக்கு இதை எப்படி ஹைலைட் பண்ணலாம்? ஐடியா.. 1,116 லட்டுல தங்க மோதிரம் வச்சு புடிச்சா? "ங்கறாரு.

ரஜினி கிண்டலாக "116 லட்டுல வைர மோதிரம் கூட வைக்கலாமே"ங்கறாரு. மாறன் " பெட்டர் ஐடியா!"ன்னுட்டு தலையை ஆட்டறாரு.

இதே மேட்டரு ப்ரஸ் மீட், ப்ரஸ் நோட் மூலமா மீடியால ரிலீஸ் ஆகுது.

அக்டோபர் 1 விடியல் 4.30

ரஜினி மேல கடுப்பு இருந்தாலும், வைர மோதிரமும், தங்க மோதிரமும் இழுக்க யந்திரன் ரிலீஸ் ஆகிற தியேட்டர்களாண்டை கூட்டம் அம்முது.

குட்டி விமானங்கள்ளருந்து   லட்டுகள் கொட்டப்படுது. தங்க, வைர மோகம் காரணமா கூட்டத்துல தள்ளு முள்ளு ஏற்பட்டு    நூத்துக்கணக்கான பேர் செத்துப்போறாய்ங்க.

இந்த தகவலை கேட்டு மாறன் அண்ட் கோ அரண்டு போயிர்ராய்ங்க.  பைலட்டை விமானத்தை பாக்கிஸ்தானுக்கு திருப்ப சொல்றாய்ங்க. ஆனால் கோளாறு காரணமா சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்டுல தரையிறங்க வேண்டியதாயிருது.

அந்த நேரம் பார்த்து லட்டு கொட்டப்போன குட்டி விமானங்கள்ள ஒன்னு கோளாறு காரணமா  சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்டுல தரை இறங்கி இருக்கிறதா தகவல் பரவுது.  ஒடனே மக்கள் கொலை வெறியோட சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்டை நோக்கி ஓடறாய்ங்க.

அப்போ மாறன் மத்தவுகளுக்கு தைரியம் சொல்றாரு. 

"மத்த 11 விமானத்துலயும் நம்ம மாதிரியே டம்மி டாய்ஸை ரெடி பண்ணி வச்சிருக்கேன். இப்போ ஒடனே இன்னொரு விமானத்தை இங்கே கொண்டுவரச்சொல்லி அதுல உள்ள டம்மி டாய்ஸை இந்த விமானத்துக்கு மாத்திட்டு , வர்ர விமானத்துல  பாக்கிஸ்தான் தப்பிச்சு போயிரலாம் . ஒரு வேளை சனம்  டம்மி டாய்சை கொலைவெறியோட அழிச்சுட்டா பாக்லயே தங்கிரலாம். ஏதாவது அற்புதம் நடந்து சனம் தடுக்கப்பட்டுட்டா  இண்டியா திரும்பி வர்ரதை பத்தி யோசிக்கலாம்"

தான் சொன்னதை போலவே  விமானம் வரவழைக்கிறாரு.  ரஜினி,மாறன், வைரமுத்து மூணு பேரும் பாக்கிஸ்தான் போயிர்ராய்ங்க.

கொலை வெறியோட மக்கள் கூட்டம் சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்டை நோக்கி வராய்ங்க. அப்போ ஒரு சுதந்திர போராட்ட வீரர்  ஒரு மலை மேல நின்னு  மெகா ஃபோன் மூலமா சனங்களை தடுக்கறாரு.

"என்று  தணியும் எங்கள் அடிமையின்  மோகம்னு பாரதியார் பாடினாரு. என்று தணியும் எங்கள் சினிமா மோகம்னு பல காலமா  தமிழ் தாய் கேட்டுக்கிட்டிருந்த
கேள்விக்கு இன்னைக்கு பதில் சொல்ல கங்கு கரையெல்லாம் உடைச்சுக்கிட்டு  காட்டாற்று வெள்ளமா ஓடிவர்ர நீங்க ஒரு ரஜினியையோ, ஒரு மாறனையோ, ஒரு வைரமுத்துவையோ கிழிக்க வேண்டிய அவசியமில்லே.  கிரிக்கெட் கிரவுண்டை நோக்கிய உங்க ஓட்டமே அதுக்கான பதிலை கொடுத்துருச்சு"

மக்கள் அமைதி பெற்று  வீடு திரும்பறாய்ங்க. ஆனால் போற வழில உள்ள சினிமா ப்ளெக்ஸ் போர்டெல்லாம் நாசம் . மாறன் அண்ட் கோவை சுமந்துகிட்டு போன குட்டி விமானம் டாக்கால தரையிறங்குது.

பாக்கிஸ்தான் பிரசிடெண்ட் பாக் ஏவியேஷன் அமைச்சகத்துக்கு ஃபோன் மூலம் உத்தரவிடறார் " என்னைக்கோ ஒரு நாள் சினிமா மோகத்தாலயாச்சும் இந்தியா நாசமாகும்னு ஒரு ஆசை பாக்கியிருந்தது. அந்த ஆசையை கூட வேரோட கெல்லியெறிஞ்சிட்ட அந்த இந்திய எலிகளை சிறையில் தள்ளி தோலை உறியுங்கள்"