ஆகஸ்டு 15 ஆம் தேதியே கழண்டுக்கலாம்னு பார்த்தேன். அதனாலதான் கு.பட்சம் 500 பேராச்சும் மெம்பராகனம்னு அழுத்தம் கொடுத்தேன். அப்பாறம் காம்ப்ரமைஸ் ஆகி தொடர்ந்தேன். நான் சொல்லவேண்டி இருந்தது ஜஸ்ட் ஒரு ஆப்பரேஷன் இந்தியா 2000 பத்தியும், லைஃபை டேக்கிள் பண்ண ஒரு சில டிப்ஸும் தான். இதையெல்லாம் சலிக்க சலிக்க சொல்லியாச்சு. சலிப்பு உங்களுக்கு ஏற்பட்டுதோ இல்லையோ எனக்கு ஏற்பட்டுருச்சு.
இன்னம் என்னன்னு ரோசிக்க ஆரம்பிச்சுட்டன்.
ஒரு பதிப்பகம் ஆரம்பிச்சு இந்த பதிவுகளையெல்லாம் தமிழ்ல புஸ்தவமா போடனும். விளம்பர தாரர்களோட உதவியால லோக்கல்ல நம்ம முயற்சி சக்ஸஸ் ஆகி சின்ன சின்னதா புஸ்தவங்க போட்டு இலவச வினியோகம் பண்ணியிருக்கு.
சாதாரணமா எழுத்தாளர் புஸ்தவம் போடனும்னா பெண்டாட்டி தாலியெல்லாம் அடகு வச்சி போடனும்.( நல்ல வேளையா ப்ளாக் போஸ்டெல்லாம் அப்படி கிடையாது. நான் சொல்ல நினைச்சதையெல்லாம் சொல்லியாச்சு. அட்லீஸ்ட் ஒரு கேட்லாக் ப்ரிப்பேர் ஆயிருச்சு)
ஆரு படிச்சா என்ன படிக்காட்டா என்னன்ன் விட்டுரலை. முடிஞ்சவரை அதிகம்பேர் படிக்கனும்னுதான் கில்மா ஐட்டமெல்லாம் சேர்த்து விறு விறு சுறு சுறு பதிவுகள் எல்லாம் போட்டேன்.
என் எழுத்தெல்லாம் சிரஞ்சீவித்தன்மை பெற்றாச்சு.என் எழுத்தை இந்த தலைமுறை மட்டுமில்லை நாளைய தலை முறையும் படிக்க போவுது. நோ ப்ராப்ளம்..
நான் எழுதின எழுத்தெல்லாம் கூட்டம் சேர்க்க எழுதினதில்லை. வழி தவறி வந்த பார்ட்டிகளை கூட விரட்டறாப்லதான் எழுதினேன் . உண்மைகளுக்கு டூ பீஸ் போட்டு எழுதினா கூட கூட்டம் சேரும். அதனாலதான் நிர்வாண உண்மைகள்னு விரட்டினேன்.
உலகம் தான் ஹிப்பாக்ரட்டிக்கா இருக்குன்னா இலக்கிய உலகம் அதை விட ஹிப்பாக்ரட்டா இருக்கு மனுஷ்ய புத்திரனோட உயிர்மையை இதுக்கு உதாரணமா சொல்லலாம். ஏதோ வேண்டுதலைக்கு போல ஈழ பிரச்சினை, ஊழல்னு தொட்டுக்காட்டிட்டு உலக சினிமா, இசைன்னு போயிர்ராய்ங்க. யாருக்காக எழுதறாய்ங்க. இந்த எழுத்துக்களால யாருக்கு என்ன புண்ணியம் புரியலைங்கண்ணா.
ஒரு ப்யூரக்ரட்டோட மகனா பிறந்தாலும் நான் வித்யாசமாவே யோசிச்சேன்.
நான் என்னெல்லாம் கொடுக்கனும்னு நினைச்சேனோ அதையெல்லாம் கொடுத்தாச்சு. என்ன அதெல்லாம் ஒரு சிறிய வட்டத்துக்குத்தான் போய் சேர்ந்தது.( உ.ம் லதா ரஜினி காந்தும் என் எதிரிகளும் ஒரு ஆறாயிரம் பேரை சென்றடைந்தது) அது இன்னைக்கு பெரிசாகும், நாளைக்கு பெரிசாகும்னு வெய்ட் பண்ணேன். அது ஆகற மாதிரி இல்லே.
தமிழ் பத்திரிக்கைகள் தப்பித்தவறி நம்ம முயற்சியை பத்தி நாலு வரி எழுதிர மாட்டாய்ங்களா, நம்ம வலைப்பூவோட வீச்சு ,ரீச்சு அதிகரிக்காதான்னு எதிர்பார்த்தேன். ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
இந்த 16 மாசத்துல நூற்றுக்கணக்கான வலைப்பூக்கள் தமிழ் ப்ரிண்ட் மீடியாவால அறிமுகப்படுத்தப்பட்டிருக்கு. ஆனால் நீண்ட நெடுங்காலமா தமிழ்10 ரேங்க் லிஸ்டுல 50க்குள்ள இருக்கிற "கவிதை07"க்கு அந்த அங்கீகாரம் கிடைக்கலை.
நான் பிராமணீயம் பத்தி கிழிச்சா சனம் குறுகிய பார்வை, குள்ள மணி பார்வைன்னு வாயை கிழிச்சுக்குது. இந்த நிராகரிப்புக்கு பேர் என்ன.. பிராமணீயம் இல்லையா?
ஓஷோ தான் சொல்வாரு எதையாச்சும் கொடுக்க வந்தவுக எதையோ பெற வந்தாப்ல காட்டிக்க வேண்டியதாயிருக்காம். உங்களுக்கு எதையோ நான் கொடுக்கிறேங்கற போது, அது வேல்யுபிளா தோணும்போது உங்க ஈகோ காயப்பட்டுரும்.அப்பாறம் நான் எழுதினதெல்லாம் தவறாவே படும். அதனாலதான்
மெம்பரா சேருங்க, நண்பர்களையும் சேரச்சொல்லுங்க.இண்ட்லி, தமிழ்10 இத்யாதி தளங்கள்ள ஓட்டுப்போடுங்க, நான் பதில் போட்டாலும்,போடலைன்னால்ம் கமெண்ட் போடுங்கன்னெல்லாம் கோரிக்கை வச்சபடி இருந்தேன்.
கடந்த 16 மாசமா நான் சொல்லிட்டிருக்கிற மேட்டரை தான் பல்லாயிரம் பிறவிகளா நான் சொல்லிட்டிருக்கேன். நீங்க கேட்டுக்கிட்டிருக்கிங்க. ஆனால் அப்ளை பண்ணலை.
என் எழுத்தெல்லாம் ஜஸ்ட் மெடிக்கல் ப்ரிஸ்க்ரிப்ஷன் மாதிரி. என் எழுத்துக்களை தலையணை அடியில வச்சுட்டு தூங்கினா பிரச்சினை தீராது. எழுதினதை புரிஞ்சிக்கிடனும், அப்ளை பண்ணனும். அப்பத்தான் தீர்வு.
சனத்தோட சைக்காலஜி என்னன்னா எவனும் எவன் சொல்லியும் மாறமாட்டான். அவன் செய்ய நினைச்சதை இன்னொரு பிக்காலி சொன்னா உடனே செய்துட்டு சொன்னவன் மேல பழியை போடுவான் (அல்லது அந்த க்ரெடிட்டை சொன்னவுகளுக்கு கொடுப்பான் ).
இன்று முதல் புதிய பதிவுகள் வெளிவராது. ஆனால் பழைய பதிவுகளை படிச்சுட்டு கட்டணத்துடன் கூடிய ஜோதிட ஆலோசனை, இலவச ஜோதிட ஆலோசனைக்கு இத்யாதிக்காக தொடர்பு கொள்பவர்களுக்கு எப்போதும் போல் எனது சேவை தொடரும்.
இனி ஜஸ்ட் தமிழ் வலையுலகத்தை வேடிக்கை பார்க்கிறேங்கண்ணா.. என் கருத்துக்களை நிச்சயம் சொல்வேங்கண்ணா..
குறிப்பு:
மறுபடி பழைய பல்லவிதான். அக்டோபர் 2க்குள்ள வலைப்பூவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 500 ஆக மாறினால் புதிய பதிவுகள் தொடரும். இல்லாட்டி அம்பேல் தான்.