Wednesday, September 1, 2010

எங்கே நிம்மதி?

"எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்"னு கேட்காத மன்சனே கிடையாது. ( தங்க நிம்மதிக்காக சனங்க நிம்மதியை குலைச்சு ,செழிச்ச  மவனுங்களுக்கு கூட நிம்மதியில்லேங்கறது தான்  க்ரூயல் ஜோக்)

பொருளாதார அடிப்படையில  மக்களை பல்வேறு குழுக்களா பிரிக்கிறாய்ங்க.ஏழை, லோயர் மிடில் க்ளாஸ், மிடில் க்ளாஸ்,அப்பர்  மிடில் க்ளாஸ், பணக்காரன் , மில்லியனர். எல்லாம் நல்லாத்தான் இருக்குது. ஆனால் மேற்சொன்ன வகையறாவுல எந்த வகையறாவாச்சும்  நிம்மதியா இருக்குதுனு சொல்ல முடியுமா? அட ஆட்சி,நிர்வாகத்தை கையில வச்சிருக்கிற ஆளுங்க,அவிக குடும்பங்களாவது நிம்மதியா இருக்காங்களா? இல்லே.

இல்லே அந்தந்த க்ரூப்புக்கு அந்தந்த க்ரூப்போட ரேஞ்சுக்கு கவலைகள் இருக்கவே இருக்கவே இருக்குது. ஒரு நாயும் நிம்மதியா இல்லே.

ஊஹூம். ஏன் ? ஒவ்வொரு  மனுஷனும்  தன்னை இன்ஃபிரியராவே  நினைக்கிறான். வேற ஏதோ கிடைச்சாதான் நிம்மதின்னு தன் நிம்மதிக்கு தானே நெருப்பு வச்சிக்கிறான்.

விவேகானந்தர் சொல்றாரு " கண்ணா ! உன் மனசை விட உயர்ந்த வஸ்து இந்த உலகத்துலயே கிடையாது. அப்படி நீ எதையாச்சும் உசந்ததுனு நினைச்சா உன் மனசு வீக்கா இருக்குன்னு அர்த்தம்"

என்னைப்பொருத்தவரை இன்வெஸ்ட்மென்டுன்னு ஒரு ம..ரும் கிடையாது. எல்லாமே மலைக்கு ம...ரை கட்டி இழுக்கிற வேலைதான். வந்தா மலை .போனா ம...ரு. கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிலதான் பிறந்தேன். கவர்ன்மென்ட் ஸ்கூல்,காலேஜ்லதான் படிச்சேன். எந்த இடத்துலயும் பெருசா காம்ப்ரமைஸ் ஆனதாவோ, உசுர கொடுத்து உழைச்சதாவோ சொல்ல முடியாது.

இங்கிலீஷ்ல "ரோலிங் ஸ்டோன் கேதர்ஸ் நோ மாஸ்"னு ஒரு சேயிங் இருக்கு. அடிக்கடி வேலைமாறிர்ரவங்களுக்கு,  டார்கெட்டை  மாத்திக்கிறவுகளுக்கு புத்தி மதி சொல்ற சேயிங் இது.  ஒர் குன்சா இதுக்கு அர்த்தம் சொன்னா சுழலும் கல்லுக்கு எடை கிடையாது. ஓடினா தான் அது  நதி .தேங்கினா அது சாக்கடை.

பூமியிருக்கு. அந்தரத்துல தொங்குது. இது சுழலன்னா என்னாகும்?  அதனோட எடைக்கு விழுந்து நொறுங்கியிருக்கும். வெறுமனே சுழன்றா போதுமா.. இதர கிரகங்களோட கவர்ச்சியும் ஒரு  காரணம்.

மனிதனும் அதே போல சுழலனும். சமுதாயம், மானிலம், நாடு ,உலகம் இத்யாதி மேல கவர்ச்சியோட இருக்கனும். இல்லைன்னா பாரம் சாஸ்தியாரும்ணா. இந்த தற்கொலை  கேசையெல்லாம் பார்த்திங்கண்ணா நிறைய சதவீதம் கேஸ்ல தனிமை, லேக் ஆஃப் கம்யூனிகேஷன், சோஷியல் லைஃப் இன்மைதான்  காரணமா இருக்கும். சமீபத்துல ஒரு தாயும் ,மகளும் கையை அறுத்து , கேஸ் சிலிண்டரை வெடிக்க வச்சு  கோராமை பண்ணியிருக்காய்ங்களே அவிக கூட இப்படித்தான் வாழ்ந்திருக்காய்ங்க.

கஜபதின்னு ஒரு நண்பர் "சாமீ ..கூகுல் அக்கவுண்ட் பாஸ்வோர்ட் மாத்திருங்க. என்னமோ  நடக்கப்போவுது பட்சி சொல்லுது " ன்னு உசார் பண்ணார். அவருக்கு வேலை வெட்டி இல்லையா? ரோசிக்க வேற விஷயமே இல்லையா? இருக்கும் மஸ்தா இருக்கும். ஆனாலும் ஏன் அவர் மெனக்கெடனும். அதான் சக (கிரகங்களின் )  மனிதர்கள் பால் கவர்ச்சி.

 நான் ஏன் தினசரி ரெண்டு மணி நேரம் தட்டச்சனும், இன்னொரு ரெண்டு மணி நேரம் ஆன்லைன்ல உட்கார்ந்து அப்டேஷன் பண்ணனும், தகவல் திரட்டனும்? சமூகம், மானிலம், நாடு,உலகின் பாலான கவர்ச்சி.

பூமி எப்படி சுழலுதோ அப்படியே மனிதனும் அவன் மனமும் சுழலனும். அப்பத்தான் பாரம் கூடாது. வீட்டோட செய்துக்கறாப்ல ஜோசிய தொழில் இருக்கு - 1989 முதலான சீனியாரிட்டி ,குட் வில் இருக்கு.  நான் ஏன்  சொந்த பத்திரிக்கை  நடத்தனும். நான் ஏன் ப்ளாக் எழுதனும்.

சொன்ன நம்ப மாட்டிங்க.. ப்ளம்பிங் வேலைக்கு போயிருக்கேன், எலக்ட் ரீஷியனுக்கு அசிஸ்டண்டா போயிருக்கேன், கார்பெண்டரிங் செய்திருக்கேன். இபபவும் சந்தர்ப்பம் கிடைச்சா  செய்யறேன்.

கலைஞரை "இந்த பிசி ஷெட்யூல்ல உங்களுக்கு எப்படி ஓய்வு கிடைக்குது"ன்னு கேட்டா  ஒரு வேலைய முடிச்சு அடுத்த வேலையை எடுத்து செய்யும்போது ஓய்வு கிடைக்குதுன்னிருக்காரு. மனமிருந்தால் மார்கமுண்டு. ஹேவ் எ வில் . தி வில் ஃபைண்ட் தி வே

டேபிள் ஒர்க் செய்யறவுக ஃபீல்ட் ஒர்க்ல ரெஸ்ட் எடுக்கலாம். ஃபீல்ட் ஒர்க் செய்யறவுக டேபிள் ஒர்கல ஓய்வு தேடலாம். ஆத்திகவாதிங்க பெரியாரை படிக்கலாம். நாத்திக வாதிங்க வாரியாரை படிக்கலாம்.

இஃப் யு வாண்ட் டு லூஸ் தி மாஸ்.. பிகம் எ ரோலிங் ஸ்டோன். அம்புட்டுதேங்.

அதுக்குன்னு பொறுப்புலருந்து நழுவச்சொல்லமாட்டேன். சவால் மொதல்ல கிங்காங் மாதிரி எதிர்படும் " இன்னா வாத்யாரே இன்னான்றே இப்போ"ன்னு விஜாரிச்சுட்டா ஏக் மார் தோ துக்கடான்னு பிரச்சினை ஓவர். ஆனால் நாட்ல நடக்கிறதென்ன?

மனைவி குறித்த பொறுப்பிலிருந்து கணவர்கள் நழுவுகிறார்கள். அவள் சம்பளத்துலருந்து வாடகை,இன்ஷியூரன்ஸ்  மட்டும் தான் சார் கட்டறா நான் என்ன பண்ண முடியும்? என்பது ஒரு ரகம். நான் செலவுக்கு ரெண்டோ மூணோ எடுத்து வச்சிக்கிட்டு (ஆயிரங்கள்) மொத்த சம்பளத்தையும் அவள் கிட்டதான் கொடுத்துர்ரன் சார் இதுக்கு மேல என்ன பண்ணமுடியும்?  

பிள்ளைகள் குறித்த பொறுப்பில் இருந்து பெற்றோர் நழுவுகிறார்கள். ( இன்னும் என்ன சார் பண்ண முடியும் அஞ்சு லட்ச ரூபா டொனேஷன் கொடுத்து சீட் வாங்கி தந்தேன். அவன் படிக்கலைன்னா நான் என்ன பண்ண முடியும்?   அடமுட்டாள்களே !

உடலை அரிசி மட்டும் வளர்ப்பதென்றால்... பாசுமதி அரிசி தின்பவனுக்கும் ஏன் நோய்கள் வருது?  மெத்தை மட்டுமே தூக்கத்தை தந்துவிடும் என்றால் கடைத்தெருவில் ஏன் அத்தனை ஆயிரம் மெத்தைகள் விற்காமல் கிடக்கின்றன. நள்ளிரவு வரை ஏன் டிவி சேனல்கள் தொப்புளையும், பிருஷ்டங்களையும் காட்டுகின்றன.

மருந்துகள்  மட்டுமே நோயை குணப்படுத்திவிடும் என்றால் இத்தனை லட்சம்  கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகளை மீறி உங்கள் உடல் நலனை பாதுகாத்தது எது?

புத்தகங்கள் மட்டுமே உங்கள் அறிவை வளர்த்துவிடும் என்றால் அதை எழுதிய  சொல்லேர் உழவர்கள் ஏன் ஆள்வோரின் பாதங்களை முத்தமிட்டுக்கொண்டு இருக்கவேண்டும்.

அதுக்குதாங்கண்ணா சொல்றேன். முருகன் மாதிரி உலகத்தை சுத்திவாங்க. தாளி மாங்கனி கிடைக்கலைன்னாலும் ஒன்னுக்கு ரெண்டா கிடைக்கும் ( சம்சாரமுங்கோ) , பிள்ளையார் மாதிரி ஒன்னையே சுத்தி வராதீங்க. அப்பாறம் ஆத்தோரம் - அரசமரம் - மணல் கொள்ளைக்கு ரெஃபரியாதான் கிடக்கனும். ஆமாம் சொல்ட்டேன்