அண்ணே வணக்கம்ணே,
இந்த தனிப்பதிவோடயே "எழுத்தாளர்களுக்கு மெனோஃபஸ்"என்ற வில்லங்க பதிவும் போட்டிருக்கேன்.படிச்சு உங்க கருத்தை கமெண்டா போடுங்க..
By the by.. அக்டோபர் ரெண்டுக்குள்ள நம்ம ப்ளாகோட ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 500 ஐ எட்டினாத்தான் புதுப்பதிவு இல்லைன்னா பழைய சோறுதான்ங்கற மேட்டர்ல பாரதி சிமெண்ட் மாதிரி ரெம்ப உறுதியா இருக்கேன். எனக்கொன்னுமில்லை.. தெலுங்கு கரை பக்கம் ஒதுங்கிருவன். டேக் கேர். இப்ப முதல் அனுபவத்துக்கு வந்துரலாம்.
கச்சா முச்சானு குட்டிகள் மாட்ட என்ன காரணம்னு ரோசிச்சா நம்ம லைஃப்ல படக்கு படக்குனு மாறின ஜாப்ஸ், ரெசிடென்ஸ், ஸ்டேஷன்ஸ் தானோனு ஒரு சம்சயம். ( மூத்திர குட்டைல மீன் பிடிக்கிற தலையெழுத்து நமக்கு அமையல ப்ரதர்)
முதற்கண் குட்டிகள் மாட்ட காரணம் வெள்ளைத்தோல், அப்பனோட வற்புறுத்தலுக்காக வச்சிக்கிட்ட விபூதி கீற்று, குங்குமம்.அவமானங்களை ரகசியமா புதைச்சுக்கிட்டு ( கடக லக்னமாச்சே) ஒன்னுமே நடக்காத மாதிரி பிஹேவ் பண்றது, சீக்ரெட் மெயின்டெய்னென்ஸ்.
சக ( பெண்) வேட்டைக்காரர்கள் கிட்டே பகிர்ந்துக்கிட்டாலும் ( அனுபவத்தை சொன்னேன் மாமூ..!) எழுத்தாளர்கள்/கிரைம் ரிப்போர்ட்டர்ஸ் மாதிரி ஊர்,பேர், சிச்சுவேஷனையெல்லாம் சகட்டு மேனிக்கு மாத்தித்தான் சொல்றது, பப்ளிக்ல பார்த்தா போஸ்ட் பாக்ஸை பார்த்த மாதிரி ப்ளர்ரா பார்க்கிறது.
இதெல்லாம் அப்பத்துல ப்ளான் பண்ணி பண்ணதெல்லாம் கிடையாது பாஸ் .. நான் தான் சொல்ட்டனே 6 ஆம் கிளாஸ்ல ஒரு பிக்காலி வாத்தி கேவலமா பேசின ஒரே காரணத்துக்காக என்.டி.ஆர் படம் பார்த்து அவரை அப்படியே மார்ஃபிங் பண்ணீட்டம். என்.டி.ஆர்னா செல்ஃப் ரெஸ்பெக்ட். இது ஒன்னுதான் நம்ம நமக்கு முக்கியம்.
தனிமைல ஜொள்ளின ஆன்ட்டி புருசங்காரனோட பப்ளிக்ல வரச்ச சதி சாவித்திரி கணக்கா பில்டப் கொடுப்பானு எக்ஸ்பீரியன்ஸ் ஆயிட்ட பொறவு ஜொள்ளு விட பைத்தியமா.. அதான் போஸ்ட் பாக்ஸ் பார்வை.
இந்த கில்மா வேட்டைல உதவினது மாறிய வேலைகள்னு சொல்லியிருந்தேன்
என் வேலைகள் எங்கருந்து ஆரம்பம்னா மேற்சொன்ன மைதானத்துல வேர் கடலை விக்கிற ஃபேமிலி ஒன்னு குடி வந்தது. அங்கன கடலைக்காய் உறிச்சிருக்கேன் படி, சேரு,பல்லா ( கெட்ட வார்த்தையில்லிங்கண்ணா- இது ஒரு அளவு) எல்லாம் தெரியும். வறுமை கிறுமையெல்லாம் கிடையாது .சொம்மா டைம் பாஸு - மேலும் சின்னபையனாச்சேன்னு ஆன்டிங்க நெருக்கமா உட்கார்ந்து உறிப்பாய்ங்கல்ல
பக்கத்து வீட்டு பெண்களோட டீ பொட்டலம் ஒட்டினது, தீப்பெட்டி ஒட்டினது , தீக்குச்சி அடுக்கினது , செண்டு சுத்தினது இதெல்லாம் வேலையில சேர்த்தியில்லைன்னாலும் இதுக்கப்பாறம் நாம பார்த்த வேலைகளோட எண்ணிக்கை ஆஃப் செஞ்சுரியை தாண்டும்.. இந்த வேலைகள்ள என்னோட கில்மா அனுபவங்களை பத்தி எழுதி மிச்சமிருக்கிற 5 நாளை ஓட்டிர்ரண்ணே.
மொத வேலை 1987ல மாவட்ட கருவூல அலுவலகத்துல முதியோர் உதவித்தொகை , விதவைகள் உதவித்தொகைக்கு எம்.ஓ எழுதினப்ப கிடைச்சது ( நம்ம ஜாதகத்துல குரு உச்சம் அதனாலதான் முதியோர் பென்ஷன், பத்துல ராகு , அதனாலதான் விடோ பென்ஷன்- மாட்டினாப்ல இருக்கு) .
ஒரு எம்.ஓக்கு அம்பது பைசானு கணக்கு போட்டு 3 மாசத்துக்கொருதரம் பேமெண்ட் கொடுப்பாய்ங்க. அட இதுல என்ன கில்மா இருக்குன்னு சலிச்சுக்கிராதிங்க. மொத்தம் 14 குட்டிக ( இப்ப முக்காலே மூணு வீசம் கிழவிங்க). கோகுலத்துல கிருஷ்ணன் மாதிரி அப்படி ஒரு அமைப்பு. ( அங்கன வேலை பார்த்த கிழவாடி யு.டி.சி கூட இதைத்தான் நினைச்சிருப்பான் அது வேற கதை)
இதுல ஒரு பெரிய ஸ்காம் ஒன்னு நம்மால அவுட் ஆச்சுங்கோ. மூணு குட்டிங்க. அவுக உறவுக்காரவுக பெனிஃபிஷியரீஸா இருக்கவே ஒரே சேங்க்சன் ஆர்டரை பல தடவை லெட்ஜர்ல என்ட்ரி போட்டு எஸ்.டி.ஓங்க கிட்டே கை.எ வாங்கி வச்சிருக்காளுக, எத்தனை என்ட்ரி இருக்கோ அத்தீனி தாட்டி எம்.ஓ அனுப்பறதும் அப்பாறம் போய் பங்கு பிரிச்சிக்கிறதுமா இருந்திருக்கு. இந்த இழவெல்லாம் நமக்கு தெரியாதே.
நம்ம தேஜஸை DTO பழைய லெட்ஜரை பார்த்து (அது ஹவுஸ் ஃபுல்) பெனிஃபிஷியரீஸ் டேட்டாவை புது லெட்ஜர்ல காப்பி பண்ண சொன்னாரு. பண்ணியாச்சு. அதுக்கான எம்.ஓசையும் என்னையோ அனுப்ப சொல்ட்டாரு.
நாமளும் வரிஞ்சு வரிஞ்சு எழுதி தள்ளிட்டம்.பில்,அனெக்சர் போட்டாச்சு , டிடி வந்தாச்சு போஸ்டாஃபீஸுக்கும் போயாச்சு. மூணு பார்ட்டிக்கும் தலா ஒரு எம்.ஓ டெலிவரியும் ஆயாச்சு. பாவம் யாரோ ஒரு ஏரியா போஸ்ட் மேனுக்கு டவுட் வந்து செகண்ட் எம்.ஓ டெலிவரியை நிறுத்தி, போஸ்ட் மாஸ்டருக்கு கம்ப்ளெயிண்ட் பண்ண, போ.மா DTOக்கு லெட்டர் எழுதிட்டாரு.
DTO ஒரு காலத்துல எங்கப்பா கீழே வேலை பார்த்த பார்ட்டி ,அப்பங்காரன் வேற நம்ம கல்யாண குணங்களையெல்லாம் அட்வான்ஸா போட்டுக்குடுத்துட்டாப்ல இருக்கு. DTO காய்ச்சு காய்ச்சுனு காய்ச்சி எடுத்துட்டாரு.
என்னை பொருத்தவரை வீட்டு சொத்தை அழிச்சிருக்கனே தவிர , தேர்ட் பார்ட்டிக்கு நஷ்டம் கொடுத்ததில்லை ( நான் பட்டிருக்கேன் அது திமிர்) அதுலயும் அரசாங்கத்தோட பணத்துக்கு ஆசைப்பட்டதில்லை. உ.ம் கலைஞர் தொலைக்காட்சி சீப்பா கிடைச்சாலும் டச் பண்றதுல்ல.
ஒரு ரிப்போர்ட்டனா இருந்துக்கிட்டு அந்த ஹோதாவுல எம்.ஜி.ஆர் வேலைங்க பண்ணியிருக்கேனே தவிர சொந்தத்துக்கு உபயோகிச்சதில்லை. சரி மேட்டருக்கு வரேன். DTO காய்ச்சு காய்ச்சுனு காய்ச்சி எடுத்துட்டாரா.. நான் பொங்கிட்டன்.
பழைய லெட்ஜர்ல இல்லாத பயனாளி பேரு நான் எழுதின புது லெட்ஜர்ல இருந்தா தூக்குல போடு அது இதுன்னு வசனம் விட்டதும். ஒப்பீடு துவங்குச்சு.ஸ்காம் சேங்க்ஷன் ஆர்டரை லெட்ஜர்ல பதிவு பண்ற ஸ்டேஜுலயே நடந்துருச்சுன்னு ப்ரூவ் ஆச்சு. ஊழல் பண்ண பார்ட்டிங்க கிட்ட என்னா இருக்கு ரிகவரி பண்ண ? அதனால குவார்ட்டர் குவார்ட்டருக்கு பாதி பணத்தை பிடிச்சுக்கிறதா அரேஞ்ச் பண்ணினாய்ங்க.
இந்த ஊழல்ல ஈடுபட்ட 3 குட்டிகளும் ரெண்டு க்ரூப்பா பிரிஞ்சுருச்சுங்க. அதுல ஒன்னு மாஞ்சா ( கண்ணாலமான பார்ட்டி) மத்த ரெண்டும் பத்தாம் நெம்பரு. ஒரு மாஞ்சா, ஒருபத்தா நெம்பரு ஒரு செட்டாயிருச்சுங்க. ஒரு பத்தாம் நெம்பரு தனியாயிருச்சு.
நாலு எருமைகளும் ஒரு சிங்கமும் கதை தெரியுமில்லை. இங்கன சிங்கம் யாரு? எருமை யாரு? நெம்பர் மட்டும் நாலு கிடையாது மூணுதான்
(தொடரும்..
பதிவர்களுக்கு ஒரு டிப்:
நாலு டிவிடி பார்த்து ஒரு படம் எடுக்கிறதை சினிமாக்காரவுகளுக்கு விட்டுரலாம் - நம்ம பதிவுகளுக்கான கருவை நம்ம வாழ்க்கைலருந்தே எடுக்கலாம்ணே - அப்பத்தான் அது படிக்கிறவுக மனசுல போய் நச்சுனு உட்காரும் )