Monday, September 20, 2010

மனுஷங்க ஒன்னுக்கடிச்சு வைக்கறதை விட்டுட்டாய்ங்க

வணக்கம் பாய்,
உங்க மறுமொழிக்கு முதற்கண் நன்றி.  மனுஷன் ஆடை கட்ட ஆரம்பிச்சுட்டானே தவிர ஆடைக்குள்ள அம்மணமாத்தான் இருக்கான் . காட்டுக்குள்ள மிருகங்கள்  தாங்கள் புழங்கற ஏரியாவுல எல்லாம் ஒன்னுக்கடிச்சு வைக்குமாம். அதாவது எல்லைக்கோடு கிழிக்கிறது. வெளி பிரதேசத்துலருந்து புதுசா எதுனா மிருகம் வந்துட்டா வார் ஸ்டார்ட் ஆயிரும்.

மனுஷங்க ஒன்னுக்கடிச்சு வைக்கறதை விட்டுட்டாய்ங்க. ஆனால் பேனர் கட்டறாய்ங்க. கொடியேத்தறாய்ங்க. கோவில் கட்டறாய்ங்க. அல்லது காலியா இருக்கிற கட்டிடத்துல சிலையை கொண்டு வைக்கிறாய்ங்க. 

நான் என் பதிவுல சொன்ன மாதிரி ஆன்மீகம்ங்கறது அக உலகை சார்ந்தது. ஆனா புற வாழ்க்கைல தான் பின்பற்றக்கூடிய எல்லா இழவையும் மனுஷன் ஆன்மீகத்துலயும் பின்பற்ற ஆரம்பிச்சுர்ரான்.

//என்னன்னா உங்க வீட்ட ஒருத்தன ஆட்டையப்போட வர்றான் என்னன்னே பண்ணுவீங்க. போனா போகட்டும்னு விட்டுடுவீங்களா?//

நான் விட்டுர சொல்லலைங்க பாய். இது அந்த மசூதியோட ஜமாத் டேக் அப் பண்ண வேண்டிய விஷயம். ஜஸ்ட்  லோக்கல் போலீஸ், முன்சீஃப்  கோர்ட் டீல் பண்ண வேண்டிய சின்ன சிவில் மேட்டர். இது  இந்த அளவுக்கு நாடு தழுவிய , நாடு கடந்த, உலகளாவிய உணர்வு பூர்வமான விஷயமா மாற காரணம்  வறுமைதான். கல்வியின்மை தான்.

 நான் சொல்றது ஜஸ்ட் இந்திய முஸ்லீம் குடும்பங்களை வாட்டும் வறுமையை ,கல்வியின்மையை மட்டுமில்லை. இந்த விஷயத்துல உ.வசப்படற இந்து குடும்பங்களை வாட்டும் வறுமை கல்வியின்மையையும் சேர்த்துத்தான் .அதுக்குன்னு படிச்சவுக எல்லாம் மத சார்பின்மையின் மறு உருவம்னு சொல்லலை. செல்வந்தர்கள் எல்லாம் இந்த மேட்டர்ல உ.வசப்படலை
,படமாட்டாய்ங்கன்னு  சொல்லவரலை.இருந்தாலும் கல்வி ,செல்வச்செழுமைங்கறது ரெகுலேட்டர் மாதிரி ஒர்க் ஆவுது)

// 1500ருந்து 1948வரை கிட்டத்தட்ட 450 வருடமா பாபர் மசூதியில தொழுகை நடந்துக்கிட்டு வந்தது. பாங்கு (தொழுகைக்கு அழைப்பது) சத்தம் கேட்க முடியாம அங்கிருந்த சங்பரிவார சக்திகள் சிலர் ராமர், சீதை, லட்சுமணன் சிலையைக் கொண்டு வந்து வெச்சிட்டாங்க.//

இலங்கை பிரச்சினைக்கு அடிப்படை காரணம் அங்கே மெஜாரிட்டி மக்களான சிங்களர்களுக்கு மைனாரிட்டி மக்களுக்கே உரிய இன்செக்யூரிட்டி ஃபீலிங் வந்ததுதான் ( கருத்து உபயம்: சுஜாதா)

இந்தியாவுல நேருவோட நாத்திக வாதத்தை மீறி  அவருக்கிருந்த சரிஸ்மாவை ஓவர் டேக் பண்ண அதிகார தாகம் கொண்ட மதவாத சக்திகள்  மெஜாரிட்டியான இந்துக்கள் மனசுல  மைனாரிட்டிகளுக்கே உரிய இன்செக்யூரிட்டி   ஃபீலிங்ஸை விதைக்க ஆரம்பிச்சிருக்கலாம். அது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் புளிய மரத்துல எருக்கம்பூ பூத்தாப்பல அன்னைக்கு விதிச்ச இன்செக்யூரிட்டி   இன்னைக்கு மரமாகி நிற்கிறது தான் விந்தை. கேப்பையில  நெய் வடியுதுன்னா கேட்கிறவன் கேணைய்யனானு திருப்பி கேட்காம  இந்து மக்கள் அந்த கற்பனா வாதத்தை நம்ப ஆரம்பிச்சுட்டதை என்னால இன்னைக்கு வரைக்கும் புரிஞ்சிக்கவே முடியலை. இதை இயல்பாவே தங்களுக்கு இருக்கிற இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸாலயும் , அறியாமையாலயும் மெஜாரிட்டி இந்து மக்களின் மனசுல சந்தேகத்தையும், இன்செக்யூரிட்டியையும் அதிகரிக்கிறாய்ங்க. ( இத்தனைக்கும் அதெல்லாம் உப்பு ஊறுகாய்க்கு ஒதகாத சமாசாரங்கள் .சொன்னா வெட்க கேடு)

//இது சம்பந்தமா அதை அகற்றச் சொல் நேரு சொன்னப்ப அந்தப் பகுதியின் மாவட்ட ஆட்சியர் கே.கே. நாயர் என்பவர் இந்தச் செயல் நான் ஈடுபடுவதைவிட என் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று சொல் ராஜினாமாவே செஞ்சுட்டார்.//

என்னங்க இது கூத்தா இருக்கு. அரசு நிர்வாகமென்ன தனி நபர்களையா நம்பியிருக்கு. உடனே அந்த பார்ட்டியை சர்வீஸ்ல இருந்து ரிமூவ் பண்ணி அவருக்கு ஜூனியரை ப்ரமோட் பண்ணி காரியத்தை முடிச்சிருக்கலாமே

//அந்தக் கேடுகெட்டவன் உடனே நடவடிக்கை எடுத்து அந்தச் சிலைகளை அகற்றி இருந்தால் இப்போ நாம இதப்பத்தி பேச வேண்டிய அவசியமே இல்லை.//

"இளைதாக முள்மரம் கொல்க"ன்னு வள்ளுவர் சொன்னது வெறுமனே பஸ்ஸுல எழுதி வைக்கனு நினைச்சிட்டாய்ங்க போல. நான் ஒரு விஷயத்தை மறுபடி மறுபடி சொல்றது வழக்கம். நாட்டுல போலீஸ் ஸ்டேஷன், தாலுகா ஆஃபீஸ், அரசு மருத்துவ மனை, முன்சீஃப் கோர்ட்டுகளோட செயல்பாட்டை  பக்காவாக்கினா போதும். நாடு உருப்பட்டுரும். 

//இப்பக்கூட திண்டுக்கல் மலைக்கோட்டையில அம்மன் சிலை வைக்கப்போய் சில சங்பரிவார நபர்களை காவல்துறையினர் கைது செய்திருக்காங்க.//

எல்லா பூனையும் எலி பிடிக்கும். எல்லா கட்சிக்கும் முழு முதல் லட்சியம் அதிகாரம். அதிகாரத்தை லட்சியமா கொண்ட எந்த இயக்கமும்  தன் லட்சியமா சொல்லிக்கிற விசயத்தை சாதிக்கவே முடியாது. இதை இந்து ,முஸ்லீம் மக்கள் புரிஞ்சிக்கிடனும். "காமா துரா நாம் ந சிக்கு , ந லஜ்ஜா"ன்னு சொல்வாய்ங்க. ( காமவயப்பட்டவனுக்கு நாணம்,வெட்கமெல்லாம் இருக்காதுனு அர்த்தம். அதே மாதிரி அதிகார தாகம் கொண்ட கூட்டம் எவ்வித நீச செயலுக்கும் துணியும்.

//இது சம்பந்தமா அந்தப் பகுதி மாவட்ட ஆட்சியர் உடனே நடவடிக்கை எடுத்து மலைக்கோட்டையில் வச்சிருந்த சிலையை அகற்றியுள்ளார். அந்தப் பகுதி மக்களும் பெருமூச்சு விட்ங்க. அது மட்டுமில்லாம அதிகாரிகளை பாராட்டவும் செஞ்சாங்க. இதைத்தான் அனைவரும் எதிர்பார்ககுராங்கன்னே...//

இதைத்தாண்ணே நானும் மசூதி - மந்திர் மேட்டர்ல கூட எதிர்ப்பார்க்கிறேன். ரெண்டாம் நெம்பர் நெட்டை ரெண்டாம் நெம்பர் ஸ்பேனராலதான் கழட்ட முடியும். திறந்த மனசோடு உட்கார்ந்து பேசினா இது ஒரு பிரச்சினையே இல்லை. லோக்கலா உள்ள இந்து - முஸ்லீம் பெரியவுகளை உட்கார வச்சு பேச விட்டாலே பொசுக்குனு தீர்ந்து போற மேட்டர் .இதை இந்த அளவுக்கு பூதாகரமாக்கினவுகளோட ஒரே லட்சியம் அதிகாரம். இந்த  மேட்டர்ல அவிகளுக்கு உதவினது இந்து முஸ்லீம் மக்களை வாட்டும் வறுமையும், கல்வியின்மையும்தான்.