எந்த நதியுமே புனிதமாத்தான் புறப்படுது. வழில தானே எல்லா இழவும் கலக்குது.ஹிட்லர் கூட ஒரு ஓவியராத்தான் வாழ்க்கைய ஆரம்பிச்சாரு. வைரமுத்துவோட திருத்தி எழுதிய தீர்ப்புகள்ளயே நிறைய பாசாங்குகளை கவனிச்சிருக்கேன். எனி வே இன்னைக்கு தமிழ் நாடு இருக்கிற நிலைல வைரமுத்துவை விட லிட்டரரியா போனால் நாஸ்தி ஆயிரும். அது வேற கதை. நானே இலக்கண தமிழை தூர போட்டுட்டு பேச்சுத்தமிழ்ல தான் காலத்தை ஓட்டறேன்.
என்ன முருகேசன் .."யந்திரன் விழாவில் போப்புக்கு அவமானம்"ன்னு தலைப்பை வச்சுட்டு ஜல்லியடிக்கிறிங்களே மேட்டருக்கு வாங்கனு துடிக்கிறிங்க.
வைரமுத்து இணையத்துல தான் பார்த்த தகவலை மேற்படி யந்திரன் ட்ரெயிலர் ரிலீஸ்ல சொன்னார். அதனோட சுருக்கத்தை அப்படியே தரேன்.
ரஜினியும் அமிதாப்பும் ஒபாமாவ பார்க்க போனாய்ங்களாம். ஒபாமா "ரஜினி ஹேவ் சம் டீ"ன்னாராம்.( அமிதாப்பை கண்டுக்கலை) அங்கருந்து வாடிகனுக்கு போனாய்ங்களாம். அங்கே போப் ரஜினியை அடையாளம் கண்டு மேடைக்கு கூப்டாராம். அங்கருந்து ரஜினி திரும்பி பார்த்தா அமிதாப் மயக்கம் போட்டு விழுந்து கிடந்தாராம். ஸ்டேஜ்லருந்து இறங்கி வந்த ரஜினி என்ன ஏதுன்னு விஜாரிச்சாராம். அதுக்கு அமிதாப் சொன்னாராம்
" பக்கத்துலருந்தவரு மேடைல குல்லா எல்லாம் போட்டுக்கிட்டு வெள்ளை ட்ரஸ்ல இருக்காரே அவரு யாருன்னு கேட்டார்"
அடங்கொய்யால போப்ங்கறவரு ஒரு மதத்து மக்களோட உலகளாவிய மதத்தலைவர். ரஜினி ஆஃப்டர் ஆல் ஒரு நடிகன் . அதுவும் பார்ட் டைம் நடிகன். முக்கியத்தொழில் கருணாநிதிக்கு லாலி பாடறது. அதுவும் அந்தகாலத்து சினிமா நடிகனா இருந்தாலும் பரவால்லை. இப்ப டி.டி.எஸ், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் புண்ணீயத்துல காலத்தை ஓட்டற ஒரு குழந்தை ( அவரோட பிரயோகம் தான் இது.அவர் குழந்தையாம் . டெக்னீஷியன்ஸ்தான் அவரை அழகா காட்டறாய்ங்களாம்) .
ரஜினியை போப்புக்கு தெரிஞ்சிருக்குதுன்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே. போப்பாண்டவர் தலைமை தாங்கற விழாவுக்கு வந்து முத வரிசைல அமிதாப் பக்கத்துல உட்கார்ந்திருக்கிற ஆளுக்கு போப்பை தெரியலையாம்.
இது வைரமுத்துவோட சொந்த சரக்கு இல்லேதான். இல்லேங்கலை. ஆனால் இணையத்தோடவே அது நின்னிருந்தா அதனோட வீச்சு என்ன? வைரமுத்து யந்திரன் ரிலீஸின் போது சன் டிவில சொன்ன பிறகு அதனோட வீச்சு என்ன?
சால்ரா தான் பொழப்புன்னு முடிவு பண்ணியாச்சு. போட்டுக்கோங்கய்யா. அதுக்குன்னு இப்படி ஒரு மதத்தை, மதத்தலைவரை கேவலப்படுத்த சொல்லுதா? தாளி இந்த ஒளிபரப்பை பார்த்த கிறிஸ்தவங்க மனசு சிவுக்கின்னிருக்காது. அட அந்த விழா மேடைல கிறிஸ்தவங்க இல்லாம இருந்திருப்பாய்ங்களா? ரசிகர்கள்ள இருக்கமாட்டாய்ங்களா?
இதை மத நல்லிணக்கமே உயிர் மூச்சா கொண்ட திராவிட பரம்பரைல வந்த கலா நிதி மாறன் கை தட்டி சிரிக்கிறாரு. வாழும் யோகி ரஜினி காந்தும் கை தட்டி ரசிக்கிறாரு. ரஜினி இரட்டை வேடக்காரருங்கறதுக்கு இது ஒரு ப்ரூஃப்.
அடக்கமானவன், ஒடுக்கமானவன்னு ஏக பில்டப் கொடுக்கிறதெல்லாம் நடிப்பா இல்லைன்னா எந்திரிச்சு "சாரி.. அமிதாப்பை விட நான் ஃபெமிலியருன்னு நான் ஒத்துக்கமாட்டேன். வைரமுத்து சார் ! நீங்க இந்த பேச்சை வாபஸ் வாங்குங்க"ன்னு சொல்லவேண்டாமோ?
எங்க போறாய்ங்க இவிக? இவிக யந்திரன் எடுத்தது காசு பொறுக்க. பொறுக்கினு போ. ஏமாந்த கூட்டம் இன்னம் இருக்கு. போஸ்டருக்கு பாலாபிஷேகம் பண்றாய்ங்கப்பா. அதை சன் ஒளி பரப்புது . தூத்தேறிக்க.
இப்படியெல்லாம் இன்னொரு மதத்தலைவரை கேவலமா பேசித்தான் யந்திரன் ஹிட் ஆகனும்னா அதை விட கேவலம் வேறு கிடையாது.
அட வைரமுத்துதான் கவிஞர் உ.வசப்பட்டுட்டாரு. திராவிட ரத்தம் பாயற உடம்புக்கு சொந்தக்காரரான கலா நிதி மாறன் ஒரு துண்டு சீட்டை அனுப்பி நிறுத்தியிருக்கலாம்.அட் லீஸ்ட் ஒளிபரப்பாம தவிர்த்திருக்கலாம். அட்லீஸ்டடொரு மன்னிப்பாச்சும் கேட்டிருக்கலாம்.
ரஜினி சாரு "எல்லாபுகழும் இறைவனுக்கே"ன்னு பேச்சை ஆரம்பிச்சாரு. ஆனால் இடையில ட்ராக் மாறி கலா நிதி மாறனுக்கும் அர்ப்பணம் பண்ணிட்டாரு. அப்போ எல்லா புகழும் இறைவனுக்கா? கலா நிதி மாறனுக்கா? கடவுள் என்ன கோர்ட்டுக்கா போகப்போறாரு.
யந்திரன் மேட்டர்ல இன்னொரு பாய்ண்ட் என்னடான்னா படத்தோட பிசினஸ் ப்ரமோஷனுக்காக டிவிக்களுக்கு இண்டர்வ்யூ கொடுக்கனும்னு மாறன் கண்டிஷன் வேற போட்டாராம். அதையும் இந்த மானங்கெட்ட "சூப்பர் ஸ்டார் " ஒத்துக்கிட்டு மண்டி போட்டிருக்கு. அப்பாறம் சினிமால மாத்திரம் பஞ்ச் டயலாகுக்கு பஞ்சமிருக்காது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணா நிதி ஆடியோ ரிலீஸுக்கு வாழ்த்துல்லாம் அனுப்பினாரே டைட்டிலே தப்புன்னு சொல்லலையா அ சொல்லியும் மாறன் கேட்டுக்கலையா?
தமிழ்ல மெய்யெழுத்துக்கள் மூன்று பிரிவு. வல்லினம்,மெல்லினம், இடையினம். இதுல ய,ர,ல,வ,ழ,ள இடையினம் . இந்த எழுத்துக்கள் வார்த்தையின் முதல் எழுத்தா வரக்கூடாதுன்னு ஒரு விதி இருக்கு.
உ.ம்:
ரயில் தவறு. இரயில் சரி இதே போல யந்திரன் தவறு இயந்திரன் கரெக்ட்.
ரஜினிக்கு சில டிப்ஸ்
புலிவாலை பிடிச்ச நாயர் கதை, ஆப்பசைச்ச குரங்கு கதையெல்லாம் உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். ( நீங்க தான் குட்டிக்கதை மன்னாராச்சே ).முன்னேற்றம் வளர்ச்சிங்கறது பிரமிட் மாதிரி. மேலே போக போக தனியாயிருவம். அந்த நிலைல தனிமை , அன் செர்ட்டினிட்டி , இன் செக்யூரிட்டியெல்லாம் ஒரு பதற்றத்தை கொடுத்துரும்.
இதெல்லாம் ஒரு மனிதனை ஆன்மீகத்துக்கு உந்தி தள்ளலாம். அதுல தவறு கிடையாது. ஆன்மீகம்ங்கறது ஒரு விசித்திரமான ஃபீல்டு. இதுல உச்சிக்கு போனா என்னாகுமோ அது வேறு கதை. ஆனா ஆரம்ப நிலைலயே நின்னுட்டா கஞ்சா, அபின், ஓப்பியத்தை விட ஆபத்தானது.
ஆன்மீகத்தோட உச்ச நிலை நாத்திகம். நாத்திகத்தோட உச்ச நிலை ஆத்திகம். நம்ம துறைல எப்படி உச்சிக்கு போயிட்டோமோ அப்படியே ஆன்மீகத்துலயும் சிகரங்களை தொட்டுரனும்.
இல்லேன்னா கதை கந்தலாயிரும்.
நாம நம்ம துறையில உச்சில இருக்கிறச்ச நமக்கு கீழே இருக்கிறவங்க எப்படிரா உச்சிக்கு போறதுன்னு முட்டி மோதிக்கிட்டிருப்பாய்ங்க. உண்மையிலயே உச்சிக்கு போகனுங்கற வெறி இருக்கிறவன் தன் வேலை வெட்டியை விட்டுட்டு உச்சில இருக்கிறவனோட லகேஜ் கணக்கா இருக்கனும்னு நினைக்க மாட்டான்.
டேமேஜ் பார்ட்டிங்க, செத்தை,செதாரம், ஸ்க்ராப் பார்ட்டிங்க தான் வந்து மூஞ்சை நக்கிட்டு போவும். அந்த நாய்களோட பேச்சையெல்லாம் நம்பிட்டா ஆப்புதான். நம்பறது அப்பாறம். சொம்மா கேட்டுக்கிட்டு இருந்தாலே ஆப்புதான். வைரமுத்துவோட போப் ஜோக் ஒரு உதாரணம்.
உங்களுக்கு நொய் நொய்னு இப்படி புதுசா புதுசா டிப்ஸ் கொடுக்கிறதை விட கட்ட கடைசியா ஒரே ஒரு டிப்பு தரேன் நீங்க உங்க பழைய சினிமாக்கள்ள விட்ட வசனங்களை மனப்பாடம் பண்ணுங்க. முடிஞ்ச வரை ஃபாலோ பண்ணுங்க. அட அதுக்கு எதிரா பேசாத இருங்கய்யா. நெஜமாலுமே சூப்பர் ஸ்டார் ஆயிருவிக.
இல்லேனு வைங்க.. பேச்சு ஒன்னும் செயல் வேறுமா இருக்கிறவனை குறிப்பிட படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவிலுன்னெல்லாம் நீட்டி முழக்காம ரஜினி மாதிரி இருக்கான்னு சனம் சொல்ல ஆரம்பிச்சுருவாய்ங்க
ஜெய் ஹிந்த்.