ரசிக்க தெரிஞ்சாதான் வாழ்க்கை
ஆமாங்கண்ணா ரசிக்க தெரிஞ்சாதான் வாழ்க்கை. இல்லைன்னா அது மரணத்தை விட வேதனையதான் தரும். ஏன்னா வாழ்க்கைங்கறதே சினிமா ஸ்க்ரீன் மாதிரி. இது மேல என்னென்னமோ ஓடும். கடைசியில மிஞ்சறது பளிச்சிடும் சூப்பர் ரின்னின் வெண்மைதான்.
ரசிக்க தெரியனும், ரசிக்கனும், ரசிச்சதை பகிர்ந்துக்கனும் அப்பத்தான் வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம். ரசிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டா எதை வேணம்னா ரசிக்கலாம். கோகுலத்துல கிருஷ்ணர் வீட்டு திண்ணைலருந்து ஒன்னுக்கடிக்கிறாராம். அப்ப கடைசி ட்ராப் அவரோட லுல்லாவுலயே நின்னுருச்சாம். அது கூட கவிஞர் கற்பனைல கவிதையா மலருது.
கமல் சினி ஃபீல்டுக்கு போறேன்னப்ப அவிக அப்பா 3 கண்டிஷன் போட்டாராம். தம்மடிக்காதே ,தண்ணியடிக்காதே ,பொம்பளை கிட்டே போகாதே . மொத ரெண்டு கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்ட கமல் 3 ஆவது கண்டிஷனுக்கு மட்டும் ஒத்துக்கலியாம். அது இயற்கை அதை கட்டுப்படுத்த முடியாதுன்னாராம்.
அதுக்கு அவிக அப்பா ஒரு பெண் மலம் கழிக்க உட்கார்ந்திருக்கிற மாதிரி கற்பனை பண்ணிக்க பொம்பளை ஆசைய கண்ட்ரோல் பண்ணலாம்னாராம். அதுக்கு கமல் ஒரு செகண்ட் கண்ணை மூடி திறந்து "இல்லேப்பா அந்த ஆங்கிள்ள கூட என்னால ரசிக்க முடியுது" ன்னாராம்.
இன்னைக்கு ஒரு நண்பர் கிட்டே ஆத்மார்த்தமா பேசிட்டிருந்தப்ப ரசனைய பத்தி பேச்சு வந்து அதை ரெண்டா பிரிச்சேன். காம வயப்பட்டவனோட ரசனை வேறே. காமம் தீர்ந்தவன் ரசனை வேறே. காம வயப்பட்டவனை ஒரு கலைஞன் ரொம்ப ஈஸியா திருப்தி படுத்திரலாம். காமம் தீர்ந்தவனோட ரசனை உச்சத்துல இருக்கும் அவனை திருப்தி படுத்தறது கஷ்டம்னேன்.
ரெண்டு வகை மட்டுமென்னா ரெண்டு லட்சம் வகையா பிரிக்கலாம். லோகோபின்ன ருசி. ஆனால் ருசிங்கறது இருக்கனும். ( உடுப்பி ஹோட்டல் இட்லி,சாம்பாருக்கு நாக்கை தொங்க போட்டுக்கிட்டு அலையற ருசியில்லிங்கண்ணா) . அப்பத்தான் ரசனை வரும்.
ரசனை இருந்தாதான் வாழ்க்கை ருசிக்கும். ரசனையில்லாத வாழ்க்கை மனிதனை மனிதனா தொடர அனுமதிக்காது. மேலும் அவன் உடைக்குள்ள மறைஞ்சிருக்கிற மிருகம் எப்பவேணா தன்னை வெளிப்படுத்திக்கும்.
உயிர்களோட முழு முதற்கடமை உயிர் வாழ்தல். நுட்பமான அறிவிருக்கிறவனுக்கு பத்து பதினைஞ்சு வருசத்துலயே வாழ்க்கையோட அர்த்தமற்ற தன்மை புரிஞ்சு போயிரும்.
அவன் மரணத்தை பத்தி, செத்துப்போறத பத்தி யோசிக்க ஆரம்பிச்சுருவான். முட்டாள்கள் கல்ப கோடி காலங்கள் வாழ்ந்தாலும் மரணத்தை பத்தி யோசிக்க மாட்டாய்ங்க.
மரணத்தை பத்தி யோசிக்காதவன் சரியான வாழ்க்கையை வாழவே முடியாது.
ரசனையில்லாத வாழ்க்கை மரணத்துக்கு சமம். மரணத்தை பத்தி சிந்திக்க கூட கொஞ்சம் புத்தி சாலித்தனம் வேணம். வாழ்க்கையை அரைகுறையாவாச்சும் வாழ்ந்திருக்கனும். அப்பத்தான் வாழ்க்கையோட அர்த்தமற்ற தன்மை அவனுக்கு உறைச்சிருக்கும்.
உயிர்களோட அடுத்த கடமை பரவுதல்,படைத்தல். ( இது ஆரம்ப நிலையில , ஸ்தூல நிலையில இருக்கும்போது அது செக்ஸாவும் குழந்தை பிறப்பாவும் தான் முடியுது) இந்த பரவுதல்,படைத்தலுக்கான துடிப்பும், இயற்கையின் கொடையும் செக்ஸுல தீர்ந்துபோகாம, குழந்தை பிறப்பால நீர்த்துப்போகாம இருந்தாத்தான் அது படைப்பா வெளிப்படுது.
நீங்க ஒன்னை படைக்கும்போது நீங்க பரவுறிங்க. உங்க படைப்பு உங்களோட நீட்சித்தான். அது பரவும் போது நீங்களும் பரவுறிங்க. படைப்புக்கு அதிக சக்தி தேவை. அந்த சக்தி போதாத போது ரசனை பிறக்குது. நீங்க ஒரு கலையை ரசிக்கிறச்ச அந்த கலையில, படைப்புல நீங்களும் ஒரு பார்ட் அண்ட் பார்ஷலாயிர்ரிங்க.
மகா வெடிப்பு காரணமா ஏற்பட்ட உஷ்ணத்தால இந்த கேலக்ஸியே ஒரு பக்கம் விரிவடைஞ்சிக்கிட்டும், மறுபக்கம் அந்த உஷ்ணம் குறைஞ்சிக்கிட்டிருக்கிறதால சுருங்கிக்கிட்டும் இருக்குனு சொல்றாய்ங்க.
இந்த இயற்கையின் மீனியேச்சரான நீங்க படைக்கும்போது விரிவடையறிங்க. உங்களுக்குள்ள இருக்கிற ஈகோ சுருங்குது. ஒரு கலையை ,படைப்பை ரசிக்கும்போது அந்த படைப்புல பங்கெடுத்துக்கறிங்க. படைக்கிறதை விட ரசிக்கிறதுல உங்க ஈகோ பல மடங்கு சுருங்குது. ஈகோ சுருங்க சுருங்க உங்களுக்கு படைப்போட இணைப்பு ஏற்படுது.
வாழ்க்கைய பத்தி பேசாம ரசனைய பத்தி பேசறிங்களேனு முணுமுணுக்கலாம். வாழ்க்கைங்கறதே ஒன்னை மாத்தி ஒன்னை பிடிக்க முயற்சி பண்ணி எதையுமே பிடிக்காத போயிர்ரதான்னு எங்கயோ படிச்சேன்.
வாழ்க்கைன்னா என்ன? பிறக்கறோம். சாகிறவரை இம்சைய அனுபவிக்கிறோம். ஸ்கூல்ல வாத்தியா இம்சை. வீட்ல அப்பன்,ஆயி, அண்ணனுங்க இம்சை, காலேஜ் போனா காதல் இம்சை.படிச்சு முடிச்சா வேலையில்லேனு இம்சை. வேலை கிடைச்சா கண்ணாலம் ஆகலேனு இம்சை. ஆனால் பொஞ்சாதி இம்சை. பசங்க இம்சை ,கிழவாடியாயிட்டா வாழ்க்கையே இம்சை.
ஒவ்வொரு இன்பமும் ஒரு துன்பத்துக்கான முன்னுரை தான். வாழ்க்கைங்கற ரயில் தாளி சாவுங்கற டெஸினேஷனை நோக்கித்தான் பயணிக்குது.
வாத்தியாரை ஒரு படத்துல போட்டு கழட்ட ஜீப்ல கூட்டிப்போவாய்ங்க. வாத்தியார் சிரிப்பாரு. வில்லன் கேட்பான் " சாக போறோமேனு பயமில்லையா?" அதுக்கு வாத்தியார் சொல்வாரு. " நானிருக்கும் வரை மரணம் வருவதில்லை. மரணம் வந்த பின் நான் இருக்கப்போவதில்லை"இதானே நெஜம்.
ஆனால் நாம என்ன பண்றோம் எந்தெந்த இழவுக்கோ சாவோட முடிச்சு போட்ட வாழ்க்கையை மவுன ஊர்வலம் மாதிரி, இறுதி ஊர்வலம் மாதிரி மாத்திர்ரம். தனிமை,ஏழ்மை, இருட்டு,அவமானம், தூரம்,காலம், நிராகரிப்பு இப்படி கண்டதையும் மரணத்தோட முடிச்சு போட்டு வாழ்க்கைய தொலைச்சுர்ரம். இதெல்லாம் மரணத்தோட நிழல்கள். நிழல் கூட பயமுறுத்துதுன்னா கேவலமா இல்லியா?
அட ..உங்களுக்கு புலின்னா பயம்னு வைங்க. அது ப்ராக்டிக்கல். ஒத்துக்க வேண்டிய விஷயம். அதைவிட்டுட்டு பூனைய பார்த்தா புலி ஞா வருது, எலிய பார்த்தா பூனை ஞா வருது. பூனைய நினைச்சா புலி ஞா வருதுன்னு இப்படி கண்டதுக்கும் பயப்பட ஆரம்பிச்சா இதை மனவியாதின்னுதானே சொல்லனும்.
இந்தமரண பயத்துலயும், மரணத்தோட நிழல்கள் குறித்த பயத்துலயும் வாழ்க்கைய தொலைச்சுர்ரம். மரணத்தோட மோதறதா நினைச்சுக்கிட்டு மரணத்தோட நிழல்களோட மோதறோம். இது ஒன்னுதான் வாழ்க்கையா?
தெலுங்குல வேட்டூரியோட பாட்டுவரி ஒன்னு ஞா வருது. " நோ கோக்க நச்சிந்தி.. நீ ரைக்க நச்சிந்தி .. கோக்கா ரைக்கா கலவனி சோட்டா சோக்கு நச்சிந்தி" இதுக்கு என்ன அர்த்தம்னா..........
உன் புடவை பிடிச்சிருக்கு, ரவிக்கை பிடிச்சிருக்கு. புடவையும் ரவிக்கையும் சேராத இடத்துல அழகு பிடிச்சிருக்கு.
நம்ம வாழ்க்கையை ரெண்டு பாகமா பிரிக்கலாம். ஒன்னு மரணத்தோட நிழல்கள் கிட்டே ஜெயிச்சுட்டாப்ல ஒரு ஃபீலிங் .அதனால சந்தோசம். ( மொத மொதலா ஹேர் டை போட்டப்ப கூட இந்த ஃபீலிங் வந்திருக்கும். முதுமைங்கறது மரணத்தோட நிழல் தானே)
ரெண்டு : மரணத்தோட நிழல்களோட மோதி தோத்து போயிர்ரது. ஹேர் டை போட்டா முடி கொட்டுதுன்னு டை போடறத விட்டுர்ரது
இது ரெண்டையும் புடவை,ரவிக்கைன்னு வைங்க. இது ரெண்டுமல்லாதது கூட வாழ்க்கைல இருக்குங்கன்னா அதான் அழகு..அதான் ரசனை. அந்த ரசனையை ஸ்மெல் பண்ணலன்னா உயிரில்லாத புடவையையும் ,ரவிக்கையையும் மட்டும் ரசிச்சிக்கிட்டிருந்தா அந்த குட்டியே இவன் ஏதோ சரவணா ஸ்டோர்ஸ்ல சேல்ஸ் மேன் மாதிரியிருக்குனு நினைச்சுருவா. புடவையும்,ரவிக்கையும் சேராத இடத்தை அதாவது நிழல் யுத்தங்களுக்கு இடையிலான இடை வெளியை ரசிக்க கத்துக்கிடனும்னா.
மனிதன் மிருக நிலைக்கும், தேவ நிலைக்கும் இடையில இருக்கிறான். அவன் தேவனாகாட்டா ம..ரே போச்சு மிருக நிலைக்கு தாழ்ந்துராம இருக்கனும்.அதுக்கு ரசனை உதவுது. நீங்க எதை ரசிக்கிறிங்கங்கறது முக்கியம் இல்லை. ரசனை இருக்காங்கறது தான் முக்கியம். நான் கூட ஒரு காலத்துல ரஜினி ரசிகன் தான். கமலை தயிர் வடைன்னு கிண்டலடிச்சவன் தான். ஆனால் நேத்து புஷ்பகவிமானம் ( பேசும் படத்தோட தெலுங்கு வெர்ஷன்) பார்த்துட்டு " நடிகண்டா"ன்னு கூவாத குறை.
ரசனையோட ஸ்பெஷாலிட்டியே என்னன்னா போக போக டெவலப் ஆயிட்டே இருக்கும். அதுக்காக நான் யதார்த்தத்தை தவற விட்டுர சொல்லலை. பெண்ணோட தொப்புளை பாற்கடல்ல ஏற்பட்ட சுழியா 1987ல ஒரு நண்பர் வருணிச்சாரு. அதை பயாலஜிக்கலா பார்த்தா நாறும். அதுக்குன்னு பயாலஜிக்கலாவே பார்த்துக்கிட்டிருந்தா வாழ்க்கையே மீனிங்லெஸ் ஆயிரும்.
யாதார்த்தம் பாட்டுக்கு யதார்த்தம். அதையும் மீறியதா ரசனை இருக்கனும். ரசனைன்னா வெறும் பெண்ணை ரசிக்கிறதில்லை. பெண் என்பவள் ஒரு ஸ்டார்ட்டிங் பாய்ண்ட். அதனோட தொடர்ச்சி இயற்கை மீதான ரசனை.
எத்தனாம் பெரிய கலைஞனுக்கும் ரசனை பெண்லருந்து தான் துவங்குது. எத்தனை அடிமட்ட ரசனை கொண்ட கலைஞனுக்கும் அவன் ரசனை தீட்டப்பட்டு , ஒரு தினம் அவனுக்குள்ள இயற்கை மீதான காதல் கருக்கொள்ளுது. தேடல் துவங்குது. தாளி அடையறமோ இல்லியோ அது வேற சமாசாரம் தேடலே இல்லேன்னா கிரிமினல் வேஸ்டு.
ரசனைக்கும் இதர ஃபேக்டர்ஸுக்கும் லின்க் இருக்கு. இல்லேங்கலை.ஆனால் ரசனைங்கறது உங்க மைண்ட்ல என்டர் ஆயிட்டா உங்க சமூக நிலை,வயசு, பொருளாதார நிலை இப்படி எதுவும் உங்க ரசனையோட வளர்ச்சியை பாதிக்கவே முடியாது.
ரசனை எந்த அளவுக்கு வளருதோ அந்த அளவுக்கு இந்த வாழ்க்கை அர்த்தமுள்ளதா மாறும். பிறர் எதையெல்லாம் ( பணம்,பேர்,புகழ்,செக்ஸ்) தங்கள் வாழ்க்கையா நினைச்சு அதையெல்லாம் பெற பதைச்சு,பதறி, துடிச்சு சாகிறாய்ங்களோ வாழ்க்கையையே தொலைச்சுர்ராய்ங்களோ இதையெல்லாம் உங்க ரசனைப்பூர்வமான வாழ்க்கைக்கு தடைகள்னு உணர்ந்துக்குவிங்க.
அதுகளுக்காக பதைக்க மாட்டிங்க. வந்தா சரி இதுகளும் இவிகளுக்கு தேவைப்படுதேன்னு பிறருக்காக வச்சுக்கவும், வராட்டா விட்டது பீடைன்னு நிம்மதியா இருக்கவும் உங்களால முடியும்.
நமக்கும் முன் வாழ்ந்த ஆண்டான்,அடிமைகளின் எண்ணங்கள் ஆகாய வெளியில் மிதந்து கொண்டிருக்கின்றன.
அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்திலிருந்து அமுதமும் ஆலகால விஷமும் நாளும் பொழிந்து கொண்டே இருக்கின்றன..
விஷம் எதையும் அரித்து, துளைத்து உட்புக வல்லது. ஆனால் அமுதம் ?
உங்கள் மண்டை ஓட்டின் கனத்தால் அல்ல மண்டை கனத்தால் அது நிலத்தில் வழிந்து போகிறது.
ரசனை அதை லேசாக்குகிறது.
ரசிக்க கற்றுக்கொண்டால் மரணத்தை வெல்ல முடியா விட்டாலும் அதற்கு சொல்லலாம் ஹலோ !