Saturday, September 18, 2010

இன்றே கடைசி

பாடாவதி படமா இருந்தாலும் போஸ்டர் மேல இன்றே கடைசின்னு ஒரு வரி இருந்தா கூட்டம் அம்மும். ஏன்? சனத்தோட சைக்காலஜி என்னன்னா எது அவெய்லபிளிட்டில இருக்கோ அதை கண்டுக்கிட மாட்டாய்ங்க.

நாம ஏன் இந்த வாழ்க்கைய இது அவெய்லபிலிட்டில இருக்கிறச்சயே  இன்னைக்கே இன்றே கடைசின்னு கொண்டாட கூடாது?

அண்ணா உசுரா இருக்கிறச்ச அவரை தோற்கடிப்பாய்ங்க. காமாராஜர் உசுரா இருக்கிறச்ச அவரை தோற்கடிப்பாய்ங்க. காந்தி உசுரா இருக்கிறச்ச அவரை கொல்வாய்ங்க. அப்பாறம் கிடைச்ச மூத்திர  சந்துல எல்லாம் சிலை வைப்பாய்ங்க. காந்திய பத்தி ஒரு மாஸ் ஹீரோ படம் எடுத்தா தலைல வச்சு கொண்டாடுவாய்ங்க. நாம ஏன் உசுரா இருக்கிறப்பயே நல்லவுகளை கொண்டாட கூடாது?

இவ்ள எதுக்கு ஆண்மைய கூட அது அவெய்லபிலிட்டில இருக்கிறச்ச கழிவறைலயும், தூக்கத்துலயும் விரயம் பண்ணுவாய்ங்க. பேட்டரி வீக் ஆன பிற்பாடு லாட்ஜு வைத்தியர்கள் கால்ல விழ கூட தயாரா இருப்பாய்ங்க . நாம ஏன் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கேட்டு குரல் கொடுக்ககூடாது?

தாயோட நிலையும் இதான். தாரத்தோட நிலையும் இதான். தாரம் வர்ர வரை தாயை  கண்டபடி இம்சை பண்ணியிருப்பான். சம்சாரம் வந்த பிறவு அதுலயும் அவள் ஒன்னை பிள்ளையாண்டிருக்கிறச்ச,  பெத்து  இறக்கி அவதிபடறச்ச தன்னை பிள்ளையாண்டிருந்தப்ப தன் தாயோட நிலைய ரீ கலெக்ட் பண்ணி உ.வசப்படுவான்.அதுவும் எப்படி தாரத்தை தரங்கெட்டு பேசி. "ஏய் கையை சொடுக்கினா பத்து பெண்டாட்டி தெரியுமில்லை? ( வயாக்ரா ஃபேக்டரிக்கு ஓனர் கணக்கா)..ஆனா அம்மா.. ஒருத்தித்தாண்டீய்"

நான் என்ன சொல்றேன்னா பட்டாசு வெடிக்கனும்னா அதை  தீபாவளியன்னைக்கு வெடிச்சுரு. தாளி கார்த்திகை தீபத்துக்குன்னு ஏன் எடுத்துவைக்கிறே. நீ செத்தா உன் பிண ஊர்வலத்துக்குத்தான் சனம் வெடிப்பாய்ங்க.

தாயை கொண்டாடனும்னா இப்பயே கொண்டாடு. நாளைக்கு கொண்டாட அவிக இல்லாம போயிரலாம். பொஞ்சாதி விரைய நசுக்கி கொன்னுரலாம். பொஞ்சாதி இருக்கிறச்சயே அவளை கொண்டாடலாம். அவ செத்து புதைச்ச பிற்பாடு அங்கிட்டு போக கூட சக்தியில்லாம போயிரலாம்ல.

ஒவ்வொருத்தனும் தீபாவளிக்கு கொளுத்தற பூத்தொட்டி மாதிரி. அது பத்திக்கிற வரை இதுவா? பூவா சிதறும்.. அட ..த பார்ரானு நக்கலடிப்பாய்ங்க. காலால உதைச்சு விளையாடுவாய்ங்க. அது மேல ஒரு பொறி விழுந்து பூவா சிதறும்போது "அடடா" ன்னு அண்ணாந்து பார்ப்பாய்ங்க. எனக்கு அப்பவே தெரியும்பான்னு பீலா விடுவாய்ங்க. அது சிதறி முடிஞ்ச பிறகு "எல்லாம் குப்பையா கிடக்கு பாரு ..பெருக்கி மூலைல சேரும்பாய்ங்க. இதான் லைஃபு.

தாளி அந்த உச்ச கட்டம் ரெண்டு வருஷமோ, பத்து வருஷமோ அந்த மயித்துக்காக  இன்னைலருந்தே அல்லாடனுமா? கேஷ் கவுண்டர்ல  உங்க முறை வந்ததும் டோக்கன் நெம்பர் சொல்லி கூப்டுவாய்ங்கப்பு. அதுவரைக்கும் வேற வேலை பார்க்கலாம்ல. அதோ பணம் கட்டற கவுண்டர்ல ஒரு அம்மா ஸ்ரீவித்யா கணக்கா நிக்குது பாரு. பார்த்தாலே அவிக முந்தாணைய பிடிச்சுட்டு போயிரனும் போல இல்லை. சுத்து முத்தும் பாரப்பு.

கொக்குக்கு ஒன்னே மதின்னு நீ சிறு மீன் ஓட உறுமீன் வர காத்திருந்தா வேட்டைக்காரன் புல்லெட்டும் கரீட்டான ஆங்கிளுக்காக வெயிட் பண்ணுதுல்ல.

நேத்திருந்தவன் இன்னைக்கில்லை. இன்னைக்கிருக்கிறவன் நாளைக்கு இருப்பான்னு கியாரண்டி இல்லே.உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. புனரபி மரணம் புனரபி ஜனனம்.

வீட்ல அப்பன் ஒரு மேட்டரை ரெண்டாவது தடவை ஞா படுத்தினாலே "இந்த கிழவனோட பெரீ பேஜாரா பூட்ச்சிப்பா"ன்னு அலுத்தக்கறோம். தாளி எத்தனை எத்தனை பிறவில ஒரே லைஃபு.  கடந்த பிறவியோட முடிவுல உடலை உதிர்த்த பிறகு ஆன்ம ரூபத்துல இருக்கிறச்ச அடடா இந்த பிறவியையும் வீணாக்கிட்டமேனு வெம்பி, வெதும்பி,புலம்பி  அந்த பிறவில எதெல்லாம்  நம்ம ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடையா இருந்ததோ அதையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணி  அதெல்லாம் இல்லாத வாழ்க்கைய கோட் பண்ணி அதுக்கான கிரக நிலை வர்ரவரை  காத்திருந்து பிறக்கிறோம். ஆனால் என்ன பண்றோம்? எதையெல்லாம் நாம வேணம்னே அவாய்ட் பண்ணி கொட்டேஷன் கொடுத்தோமோ ( அழகான,விசுவாசமான மனைவி, சில்லறை, பாசமுள்ள அப்பா அம்மா அண்ணன் தம்பி தங்கை ) அதுக்காகவெல்லாம் ஏங்க ஆரம்பிச்சுர்ரம்.  நெனச்சி பார்த்தாலே பேஜாரா இல்லை.

அட மாத்தி யோசிங்கப்பா..  நாட் நாட்லருந்து உரல் நிலையா நிக்க குழவிக்கல்லு  தான் புதுப்பெண்டாட்டிய சுத்தி சுத்தி வர்ர ஆம்பளை மாதிரி சுத்தி வந்துக்கிட்டிருந்தது. ரெண்டுமே சுத்தினா எப்படி இருக்கும்னு ரோசிச்சான் ஒருத்தன். பட்டைய கிளப்பினான்.

அல்லாரும் மொதல்ல ஜட்டி போட்டு பேண்ட் போட்டுக்கிட்டிருந்தப்ப ஒருத்தன் மொதல்ல பேண்ட் போட்டு ஜட்டி போட்டா சூப்பர் மேன் ஆயிட்டான். மாத்தி யோசிங்கப்பு. ஈயடிச்சான் காப்பிக்கெல்லாம் மார்க்கெட் இல்லே தலைவா.. ஆனானப்பட்ட மணிரத்தினம் இருவர்,தளபதி, ராவணன் எல்லாமே ஊத்திக்கிச்சி.

அட தப்பு பண்ணாலும் சொந்தமா பண்ணலாமப்பு. தாத்தன்,முத்தாத்தன்,அப்பன் ஆயி காலத்துலருந்து அவிக பண்ண தப்பையேவா நாம பண்றது. தூத்தேரிக்க. வாழ்க்கைல எல்லா தப்பையும் பண்ணித்தான் திருந்தனும்னா லட்சம் பிறவி எடுத்தாலும் ஆவாதுப்பா. இன்னைக்கு நாலு பேருக்கானது நமக்கு.

ஜகன்மோகன் ரெட்டி மெகபூபாபாத் போனச்ச தெலுங்கானா ராஷிடிர சமிதி காரவுக கல்லு விட்டாய்ங்க. சந்திரபாபுக்கு உச்சந்தலைல செருப்பாலடிச்ச சந்தோஷம். நேத்திக்கு இவரு போனாரு இவருக்கு கல்லடி கிடைச்சது.  இன்னைக்கு சித்தூர் முருகேசன் செத்தா நாளைக்கு உங்களூக்கும் சாவு வரும். அட ஒரு நாள் ரெண்டு நாள் ஒரு வருஷம் ரெண்டுவருசம், அட மிஞ்சி போனா பத்து இருபது வருஷத்துலயாவது செத்துத்தானே ஆகனும்.

உங்களையே நீங்க தொலைவுல வந்து பாருங்க.. உங்க ரொட்டீன் லைஃபை எட்டி நின்னு பாருங்க. இதைவிட பெஸ்ட் காமெடி ட்ராக் வேற உண்டா?  இல்லே. அதனாலதான் சொல்றேன். இன்றே கடைசின்னு பெரிய எழுத்துல எழுதி வச்சுக்கங்க. இன்றே கடைசி போலவே பிஹேவ் பண்ணுங்க. அப்பாறம் பாருங்க.

உங்க ரூட்டே மாறிரும். ரூட்டுன்னா வழி மட்டுமில்லே ராசா? வேர் கூட மாறிரும்.