Wednesday, September 22, 2010

லலிதா டீச்சர் செய்த வஸ்திராபரணம்

அண்ணே வணக்கம்ணே,
லலிதா டீச்சரின் வஸ்திராபரணம்ங்கற இந்த பதிவோடயே
"விடை பெறுகிறேன்"  "தமிழ்த்தாயுடன் பேட்டி" ஆகிய தனிப்பதிவுகளும்
"அவள்"  என்ற ஜிலு ஜிலு தொடரும் ஆரம்பம்.எல்லாத்தையும் படிங்க. கமெண்ட் போடுங்க. ஓட்டு போடுங்க. நாலு பேரோட ஷேர் பண்ணுங்க. நான் பதிவரா உங்களோட இருக்கப்போறது அக்டோபர் 2 வரைக்கும்தான். அதுவரைக்குமாச்சும் ஆதரவு கொடுங்க பாஸ்.
டீச்சருக்கும், ஸ்டூடண்டுக்கும் உள்ள உறவு தாய் -மகனுக்கிடையிலான உறவு போன்றதுதான். தாய்-மகன் உறவுல அடி நாதமா செக்ஸ் கலந்திருக்கிற மாதிரி டீச்சர் ஸ்டூடண்ட் உறவுலயும் செக்ஸ் கலந்திருக்கு. இதை இந்த பதிவுல டச் பண்ணிருவம்.

அதுக்கு முந்தி லைம் லைட் பத்தி சிலவரிகள். மீடியா வெளிச்சத்தில் / புகழின் சிகரத்தில் இருப்பதை லைம் லைட் என்று கூறுகிறார்கள் மேடையேறிர்ரதோ லைம் லைட்டுக்கு போறதோ பெரிசில்லிங்கண்ணா. எஃப் டிவில அவுத்து போட்டுட்டு வராளுகளே அவளுகளும் லைம் லைட்ல தானே கீறாளுங்க. நம்ம சூப்பற ஸ்டாரு ரஜினியை விடவா ?

ஆனால் அவர் லைம் லைட்ல இருந்துக்கிட்டு கிழிச்சது ஒரு ...ருமில்லை. கமல்,ஷங்கர் எல்லாம் பொழப்புக்கு ஒன்னு பண்ணா ரசனைக்கு இன்னொன்னு பண்றாய்ங்க. ரஜினி என்ன பண்ணாலும் பொழப்புக்குத்தான் பண்றாரு.

என்.டி.ஆர் ஃபுல் ஸ்விங்ல இருந்தப்ப பாரத தேசம்ங்கற பேர்ல ஒரு தேசீய கட்சியை ப்ளான் பண்ணாரு. தமிழ் நாட்டுக்கு ரஜினியை தலைவரா போடறதா கூட வாக்கு கொடுத்ததா டாக். திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுவுல கூட ஏதோ போஸ்டிங் போட்டாப்ல ஞா. அந்த ஆர்டர்ல அண்ணகாரு கையெழுத்து போட்ட இங்க் கூட காயலை. சந்திரபாபு வச்சாரு ஆப்பு. நம்ம சூ ஸ்டாரு ஆந்திராவுக்கு வந்தார். லட்சுமி பார்வதி தீய சக்தி. கட்சித்தலைவர் பதவியை காலியா வைங்கன்னு ரெண்டு முத்து உதிர்த்தாரு.

என்.டி.ஆர் பெரலிசிஸ் ஸ்ட்ரோக் வந்து பெட் ரிடனா இருந்தப்ப பீ மூத்திரம் வாரினது ல.பார்வதிதான். அவிக தீய சக்தியாம். தெ.தேசம் வந்து ஒரு பங்க் கடை மாதிரி. அதனோட சோல் ப்ரொப்ரைட்டர் என்.டி.ஆர் .அவரை ப்ளாட்பாரத்துக்கு தள்ளிட்டானுவ. ஆனால் தலைவர் பதவியை காலியா வைக்கனுமாம். என்.டி.ஆர் வந்து காலை பிடிச்சா கொடுக்கறதுக்கு.

அடங்கொய்யால சந்திரபாபு அதை காலியா வைக்கலியே ..ஆந்திராவந்து கழட்டியிருக்கலாமில்லை.

ஜெயலலிதா ஆட்சி தொடர்ந்தா தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பத்த முடியாதுன்னு சொன்னாலும் பொழப்புத்தான்.

அதே ஜெயலலிதாவை வீரலட்சுமின்னு புகழ்ந்தாலும் பொழப்புத்தான். பாரதியாருக்கு சமஸ்கிருதத்துல, இங்கிலீஷ்ல இருந்த கமாண்டுக்கு அவர் டப்பிங் பண்ணியே பொழப்பை ஓட்டியிருக்கலாம். டலியே. அவர் என்ன ரஜினிகாந்தா?

சரிங்கண்ணா டீச்சர் கதைக்கு போறதுக்கு முந்தி லைம்லைட்டை பார்த்துருவம். லைம் லைட்டுக்கு போய்தான் ஆகனும். அப்பத்தான் வர்க எதிர்களோட யுத்தம் பண்ணமுடியும். மாயாவதியோட அரசியல் குரு கன்ஷி ராம் எம்3 ன்னுட்டு ஒரு சித்தாந்தம் சொன்னாரு. அதாவது (அரசியல்ல ) சக்ஸஸ் ஆகனும்னா மணி ,மாஃபியா,மீடியாங்கற 3 எம் கட்டாயம் தேவை.

அதுலயும் இன்னைக்கிருக்கிற நிலைமல மணி,மாஃபியா கூட மீடியா முன்னாடி புஸ்வானமாயிருது. அட லைம் லைட்டுக்கு போறதால குறைஞ்ச பட்சம் நாம யாருக்காக போராடறமோ அவிகளை நம்ம மெசேஜ் போய் அடையுமில்லையா?

நான் பெருமைப் படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களை நினைத்துப் பார்க்கிறேன். அதாவது லைம் லைட்ல நின்ன தருணங்கள். நாலாம் வகுப்பு முதலே தமிழ் சங்க துணை செயலாளர். ( தலைவர் தலைமையாசிரியை தான்) .நட்சத்திர பேச்சாளனாக அங்கீகாரம். ஏறக்குறைய என் அம்மாவைப் போன்ற சரீர வாகு கொண்ட லலிதா டீச்சரின் அன்பு.

அப்பா கஜானாவையே கட்டிக்காக்கிற ட்ரஷரி ஆஃபிசரா இருந்தாலும் ஜனதா புடவைல தான் எங்களுக்கு ( நான்கு மகன்கள்) சட்டைகள். எங்கப்பா அக்மார்க் மிடில் கிளாஸ் பார்ட்டி. தூர திருஷ்டியோட அரை டஜன் பின்னி காக்கி அரை கால் சட்டை. அரை டஜன் வெள்ளை சட்டை ( ஜனதா புடவை) அரை டஜன் கலர் சட்டை ( ஜனதா புடவை).

தாளி போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல்,காணும்பொங்கலுன்னு நாலு பண்டிகைக்கும் ஒரே டிசைன் ட்ரஸ்ஸுதான்.

இதுல கலர் புடவையில ஒரு பிட்டும், வெள்ளைபுடவையில ஒரு பிட்டும் மிச்சமாயிரவே அது ரெண்டையும் சேர்த்து ஒரு சட்டை. ஒரு தாட்டி ஸ்கூல்ல இன்ஸ்பெக்சன் வந்துருச்சு.

யூனிஃபார்ம் இல்லின்னா வெளிய அனுப்பிரனும். அன்னைக்குனு பார்த்து நான் டூ இன் ஒன் சட்டை போட்டுக்கிட்டு போயிருந்தேன். எங்கப்பனுக்கு இருந்த தூர திருஷ்டி டெயிலருக்கு இல்லாததால முன் பக்கம் கலர் பின் பக்கம் வெள்ளை பிட்டை வச்சு தச்சிருந்தான்.

லலிதா டீச்சர் பார்த்தாய்ங்க. டே இங்க வாடான்னுட்டு வஸ்திராபரணம் பண்ணி
சட்டையை அந்த காலத்து ரவிக்கை கணக்கா திருப்பி போட்டுவிட்டாய்ங்க. இன்ஸ்பெக்சன் ஓவர்.

இந்த சம்பவம் ஏழ்மைய காட்டினாலும் கூடவே நாம என்னா மாதிரி லைம் லைட்ல இருந்தோம்னும் காட்டுதுல்லை.

6 முதல் பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து பேச்சு,கட்டுரை போட்டிகளில் பரிசு. நாம படிச்ச பள்ளி எய்டட் பள்ளி. வாத்தியாருங்க சுட்டதெல்லாம் போக சுருக்கமா புஸ்தவம், பேனான்னு பரிசு கதையை முடிச்சுருவாய்ங்க. பத்தாம் வகுப்பு முடிஞ்சப்போ உபரியா ஒரு சர்ட்டிஃபிகேட். தமிழ் சங்க செயலாளரா சர்வீஸ் பண்ணதுக்கு.

சங்க செயலாளர் என்ற முறையில தமிழ் வாத்தியாரோட வாரியாரை கூட்டத்திற்கு அழைக்க போனதும், அதுக்கு முந்தின நாளு உபன்யாசத்துல அவர் கேட்ட கேள்விகளுக்கு நான் ஒருத்தன் மட்டும் டான் டான்னு பதில் சொல்லி குட்டி குட்டியா புஸ்தவங்க பரிசா வாங்கினதும் ஞா இருக்கு. அவர்கிட்டே இருந்த புஸ்தவங்களோட வெரைட்டியெல்லாம் தீர்ந்து போய் கடைசி பதிலுக்கு ஒரு மலை வாழைப்பழம் கொடுக்க வேண்டியதாயிருச்சு.

அடிஷ்னலா 8,9,10 வகுப்பு காலத்துல ஆங்கிலம்,அறிவியல்,சமூகவியல் நோட்சுகளை டிக்டேட் செய்யும் சட்டாம்பிள்ளை உத்தியோகமும் பார்த்தன். காலை 8.30 முதல் பள்ளி ஆரம்பமாகும் வரை என் ராஜ்ஜியம். ஆசிரியர்களைப் போலவே தலைமை ஆசிரியரின் அறையில் நுழைந்து சாக்பீசு எடுத்துக் கொண்டுதான் வகுப்பறைக்குள் நுழைவேன்.


1982 ல் பள்ளியின் கடைசி வேலை நாளன்று மாணவிகள் க்யூவில் நின்று என்னிடம் ஆட்டோக்ராப் வாங்கியதை இன்று நினத்தால் கனவாகத்தான் தோன்றுகிறது. இன்டர் இரண்டாம் ஆண்டில் பேச்சு,கட்டுரை போட்டிகளில் பரிசு. தமிழ் மாணவர் இன்டர் இரண்டாம் ஆண்டில் கல்லூரி ஆண்டு மலரில் முதல் கவிதை பிரசுரம்.(பெண்ணையும்,நிலவையும் ஒப்பிட்டு ஒரு நாள் ஓய்வு,மூன்று நாள் ஓய்வு என்று எழுதிய வில்லங்க கவிதைங்க)

டிகிரி படிக்கையிலேயே நான் எழுதிய கவிதைகளுக்கு தமிழ் விரிவுரையாளர் மணி அவர்களின் பாராட்டு. டிகிரி 3 ஆம் ஆண்டில் புதுசு,நவதா என்ற பெயரில் சிற்றிதழ்கள் பிரசுரம்லாம் சாதனைகள்ள சேர்த்திதானே. இதுல எங்க ஜூனியர் காலேஜ் தமிழ் லெக்சரரோட கதையை எடிட் பண்ணி போட்டதும் அவிக ஷார்ப்பாக்கிட்டப்பானு பாராட்டினதும்தான் ஹைலைட். அவிக எழுதின கதை என்னனு கேட்டா சொல்றேன்