Tuesday, September 28, 2010

அழகிரியின் நண்பர்களை எனக்கும் பழக்கம்

ஹிட்ஸை கூட்டனும்னு , சைட்ல மெம்பர்ஸை சேர்க்கனும்னுட்டு   ஏதோ ஒரு அழகிரிய வச்சு இந்தாளு அலப்பறை பண்றான்யானு நினைச்சுராதிங்க பாஸ். நெஜமாலுமே தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் அருமை மைந்தர் மு.க அழகிரியோட நண்பர்களைத்தான் சொல்றேன். அதுவும் எந்த அளவுக்கு நெருக்கம்னா அழகிரி சித்தூர் வந்தப்போ இவிகத்தான் கோர்ட் வரை வந்தாய்ங்க.

டெல் மி யுவர் ஃப்ரெண்ட்ஸ் ஐ வில் டெல் யு வாட் யுவார்ம்பாய்ங்க ( உன் நண்பர்கள் யாருன்னு சொல்லு நீ யாருன்னு சொல்றேங்கறது இந்த பழமொழியோட அர்த்தம்) 

ரஜினி வேணம்னா "பேரை சொன்னா அதிருதில்லைன்னு வசனம் பேசியிருக்கலாம். ஆனா இந்த பில்டப் ஒரு அழகிரிக்குத்தான் தகும். ஆனானப்பட்ட விகடன் க்ரூப்பே பேதியாகிக்கிடக்கு. நாமெல்லாம் எந்த மூலைக்குண்ணே. அதனால அழகிரியை பத்தி எழுதி முதுகுல  டின் கட்டிக்கிறதை விட அவரோட சித்தூர்  நண்பர்களை பத்தி எழுதிரலாம்னு ஒரு  ஸ்பார்க்.

சித்தூர் நண்பர்களும் கம்மியானவுக இல்லைத்தான். லோக்கல்லன்னா அட்லீஸ்ட் முன் கூட்டி ஹின்ட் கிடைக்கும் அண்டர் கிரவுண்ட் போயிரலாம். அல்லது எஸ்.பியை பார்க்கலாம். மதுரைலருந்து ஆள் வந்தா நடுத்தெருத்தானே. எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைத்தான்.

தா.கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணை எங்க ஊர்லதானே நடந்தது. அப்போ அழகிரியோட கோர்ட் வரை வந்த சித்தூர் காரவுகளோட தான் எனக்கு பழக்கம் உண்டுனு சொல்றேன்.

மொதல் நண்பர் ஜங்கால பள்ளி ஸ்ரீனிவாசுலு. இவர் ஒன்னும் கம்மியான ஆளில்லை. ஏ ஒன் காண்ட் ராக்டர்.   சித்தூர்ல 2009 எலக்சன்ல பிரஜாராஜ்ஜியம் கட்சியோட எம்.எல்.ஏ வேட்பாளர்.   2004லருந்து 2009 வரை எம்.எல்.ஏ ஆக இவர் செலவு பண்ண பணத்தை  குத்து மதிப்பா கணக்கு போட்டா 40 கோடி தேறும்.

ஆனாலும்  30 வருசமா சனத்தோட சனமா  அரசியல்ல/ கேங் வார்ல   அடிபட்டு உதைப்பட்டு கிழிபட்ட  சி.கே பாபுதான் செயிச்சாரு அது வேற கதை. ஜ.ப.ஸ்ரீனிவாசுலுவோட கதையை விவரமா பார்க்கிறதுக்கு முந்தி ரெண்டாவது நண்பரை பத்தியும் சுருக்கமா பார்ப்போம்.

ரெண்டாவது   நண்பர்  புல்லட் சுரேஷ் என்னும் டி.ஜி.சுரேஷ். இவர் 1987ல நம்ம க்ளாஸ் மேட். இவரு இதே சி.கே.பாபுவோட  ஆதரவோட சேர்மனா போட்டியிட்டார். தோத்துப்போயிட்டாரு. நாம சுயேச்சையா களமிறங்கினாலும் கடைசி மூவ் மெண்ட்ல தெ.தேசம் ஆதரவு க்ரூப் நம்மை அடாப்ட் பண்ணிக்கிச்சி. சுமார் 468 ஓட்டு வாங்கி 3 ஓட்டு வித்யாசத்துல தோத்துட்டம். இவிங்க அப்பா புல்லெட் டீலர் .( டூ வீலருங்கோ) அதனால இவருக்கும் அந்த பேரு ஒட்டிக்கிச்சி.

 2009 தேர்தல்ல தன்னோட பழைய பாஸ் சி.கே பாபுவுக்கு எதிரா  காங்கிரஸ் கட்சில எம்.எல்.ஏ டிக்கெட்டுக்கு ட்ரை பண்ணாருங்கண்ணா. ஆனா சி.எம்முக்கு  சி.கே பாபு மேல   இருந்த வாத்சல்யம் காரணமா சுரேஷ் போட்ட ஸ்கெட்ச் ஒர்க் ஆவல்லை.

இவிக ரெண்டு பேருமே அழகிரி சித்தூர் கோர்ட்டுக்கு  வந்தப்பல்லாம் அவரோட கோர்ட்டுக்கு  விசிட்டடிப்பாய்ங்க.தினத்தந்தி நிருபரா நாமளும் தான் ரிப்பீட்டு ( என்ன ஒரு இம்சைன்னா நாம அனுப்பின மேட்டர்ல  ஒரு வரி கூட தந்தில செய்தியா வரலை) 

இப்போ ஜ.ப.ஸ்ரீனிவாசுலுவோட ஜாதகத்தை பார்ப்போமா?  இன்னைக்கு 4 ஆவது முறையா எம்.எல்.ஏ வா ஜெயிச்சு கோலோச்சிக்கிட்டிருக்கிற சித்தூர் டைகர்ங்கற விருதாலயே குறிப்பிடப்படற   சி.கே பாபு முனிசிப்பல் வைஸ் சேர்மனா இருந்த காலத்துல இந்த பார்ட்டி ஒரு காலணா காண்ட்ராக்டர்.  சி.கே பேரை சொல்லிக்கிட்டு அப்படி இப்படி எப்படியோ பிக் அப் ஆயிக்கிட்டே வந்தாரு. கொஞ்சம் போல காசுபணம் சேர்ந்ததுமே தெ.தேசத்துல ஐக்கியமாகி மாவட்ட கட்சி பொருளாளர் ரேஞ்சுக்கு உசந்தார்.

தெ.தேசத்துல ஒரு லொள்ளு என்னடான்னா இன்னைக்கு மானில செயலாளரா இருக்கிற ராஜ சிம்முலுவுக்கு என்.டி.ஆர் எம்.எல்.ஏ சீட் கொடுத்தாரு .புட்டுக்குச்சி. அன்னைலருந்து அந்தாளு ஒரு விரதம் கை கொண்டுட்டாரு. தாளி ஜெயிக்கிற சான்ஸ் இருக்கிற எவனுக்கும்  கட்சி சீட் கொடுக்க விடக் கூடாது,  எவனுக்கு சீட் கொடுத்தாலும் அவன் ஜெயிக்ககூடாது . இதான் அந்தாளோட டூ பாய்ண்ட் ப்ரோக்ராம். இதனால நம்ம ஜ.ப வுக்கு சீட் பெப்பே.

2004 தேர்தலுக்கு 2003லருந்தே ஜ.ப புதுப்பணத்தை வச்சுக்கிட்டு  வாரி விட்டுக்கிட்டே வந்தாரு. தன்னோட  ஜாதிக்கராரும் (பலிஜா)  தன்னைபோலவே புதுப்பணக்காரருமான எம்.பி மற்றும் தி.தி.தே. சேர்மன் (இப்போ எக்ஸுதேன்) ஆதிகேசவுலு தனக்கு சீட் வாங்கி கொடுத்துருவாருன்னு நம்பிட்டிருந்தாரு. இவிகளுக்கெல்லாம் ஏன் இப்படி ஒரு அரசியல் ஆசை வருதுன்னு ரோசிச்சு பார்த்தா நண்டு கொழுத்தா வளையில தங்காதுங்கற பழமொழிதான் ஞா வருது. இவரு பணத்தை அள்ளிவிட ஆரம்பிச்சது எதுக்கு? எல்லாம்  தெ.தேசம் கட்சில  எம்.எல்.ஏ சீட்டுக்குத்தேன். அந்த நேரம் பார்த்து ராவூரி ஈஸ்வர்ராவுன்னு ஒரு புதுப்பணக்காரரும் போட்டிக்கு இறங்கினார். 

நீங்க நம்பினாலும் நம்பாட்டாலும் நம்ம ஊர்ல நமக்குன்னு ஒரு இமேஜ் இருக்குதுங்கண்ணா ( சோசியரா மட்டுமில்லே -   நல்ல அனலிஸ்டுன்னு) இந்த நேரத்துல , மேற்படி  அனலிஸ்டுங்கற ஹோதால  இரண்டு புதுப்பணக்காரவுகளையும்  சந்திக்க முடிஞ்சது. கொஞ்ச நாளு ஆளனுப்பி கூப்டு வச்சி டிஸ்கஸ் பண்ணதெல்லாம் உண்டு.

ஜ.ப நமக்கு டச் ஆக  நாம ஒரு ப்ரைவேட் எலக்ட்ரிக்கல்  யூனியன் பி.ஆர்.ஓவா இருந்ததும் ஒரு காரணம். அந்த காலகட்டத்துல ஜ.ப பண மூட்டைய வச்சிக்கிட்டு கண்ட யூனியன்,சங்கம், க்ரூப்ஸுக்கு வாரி விட்டுக்கிட்டிருந்தாரு. இத்தனைக்கும் அடிப்படையில பயங்கர பிசுனாரித்தான்.

நம்ம யூனியனுக்கும் ஆஃபர் வந்தது .நான் என்னவோ இந்த யூனியன் காரங்களை உசாரய்யா உசாருன்னு உசார் பண்ணேன். அரசியல் வேணாம்யா யூனியன் பிளந்துரும். மேலும் ஜ.ப எல்லாம் பத்தாயிரம் ரூபா நன்கொடை தரேன்னு வராண்ணா யூனியனே அவனுக்கு சேவகம் பண்ண வேண்டி வந்துரும்னு உசார் பண்ணேன். சனம் கேட்டாத்தானே.

தமிழகத்துல கலைஞருக்கு நடாத்தற மாதிரி ஜ.ப வுக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணன்ம்ங்கற  கண்டிஷனோட ரூ 10,000 நன்கொடைய சேர்மன் வாங்கிக்கிட்டாரு. விழாவை ஆர்கனைஸ் பண்ணது நாம. முத்திரைக்கு கேட்கணூமா? ஜ.ப நம்ம நெம்பரை  ( பி.பி தேன் - சேர்மனோட நெம்பரு) வாங்கினு போனாரு .

டிக்கெட் வாங்க அவிக அடிச்ச கூத்தையெல்லாம் சொன்னா சிரிச்சி சிரிச்சி வயிறே புண்ணாயிரும். அரசியலும் இவிக ரேஞ்சுல தான் இருக்குங்கண்ணா இவிகளை குறை சொல்லி என்ன பண்ண?

என்.டி.ஆர் கட்சி ஆரம்பிச்சதுலருந்து தெ.தேசத்துக்கு ஃப்ரீ சர்வீஸ் பண்றதை ஒரு விரதமாவே கை கொண்டிருந்த நமக்கு ஜ.பவுக்கு மதியூக மந்திரியா சஜஷன்ஸ் கொடுக்கிறதுல எந்தவித கில்ட்டியும் கிடையாது. என்ன ஒரு லொள்ளுன்னா நாம சொல்றதை ரெம்ப அக்கறையா கேட்பாய்ங்க. எல்லாத்தயும் காத்துல விட்டாலும் பரவால்லை நாம சொன்னதுக்கு கொயட் ஆப்போசிட்டா செய்வாய்ங்க .பல்பு வாங்குவாய்ங்க இதான் அவிக ( நம்ம )  தலையெழுத்து . போடாங்கோன்னு கழண்டுக்கிட்டேன்.

என்னென்னவோ அரசியல் எல்லாம் நடந்து கடைசில இதுக்கு முன்னாடி எலக்சன்ல  நின்னு தோத்துப்போன ஏ.எஸ்.மனோகருக்கே சீட் மாட்டிக்கிச்சி. அன்னைக்கிருந்த  ஆட்சிபலம், சி.கே பாபு மேல போட்ட பொய்யான  கொலைக்குற்றச்சாட்டு இத்யாதியெல்லாம் வச்சி சொற்ப வாக்கு வித்யாசத்துல ஜெயிச்சும் உட்டாரு.

ஜ.ப சுயேச்சையா நாமினேஷன் போடறேன்னு கிளம்பினாரு. அப்போ ஆதிகேசவுலு பாதி வழியில மறிச்சு "என்னய்யா செலவழிச்ச மொத்தம் நான் தரேன்"னு அஜீஸ் பண்ணிட்டாரு. இதெல்லாம் நடந்தது 2004 தேர்தல்ல. மேலும் இன்னொரு புதுப்பணக்காரரும் ஆஸ்பிரண்டுமான  ஈஸ்வர்ராவும் நமம் சஜஷன்ஸை வணங்கி  வேண்டி வாங்கி காத்துல விட்டு பல்பு வாங்கிக்கிட்டாரு.

(ஆப்பரேஷன் இந்தியா2000 ப்ளான் மேட்டர் - அதை சந்திரபாபுவுக்கு அனுப்பினது -அவரு கண்டுக்காதது - பத்து ரூபா மணியார்டர் அனுப்பினது - நுகர்வோர் நீதிமன்றத்துல கேஸை போட்டது - கடேசில சந்திரபாபு  பதில் போட்டது - ஆகிய எல்லா மேட்டரையும் ஒன்னு விடாம சொல்லி , ஆள விடுங்கப்பான்னு பேதிக்கு கொடுத்தும் - அவிக நம்மை விடலைங்கண்ணா- அதான் விசித்திரம் - ஆக இவிக மென்டாலிட்டி என்னடான்னா தலைவனுக்கு ஆப்பு வச்சவனா இருந்தாலும் சரி - தனக்கு உபயோகம்னு தெரிஞ்சா  வச்சுக்குவாய்ங்க- இந்த மாதிரி பார்ட்டிகளை நம்பி சந்திரபாபு அரசியல் பண்றாரு. ஹும்!  )

2004 தேர்தல்ல ஒய்.எஸ்.ஆர் ஒரு லட்சம் கோடிகள் செலவுல அணைகள், விவசாயிகளுக்கான மின் கட்டண பாக்கி ரத்து, இலவச மின்சாரம் இத்யாதி  வாக்குறுதிகள்  கொடுத்தாரா - இதெல்லாம் என்.டி.ஆர் ப்ராண்ட் பாலிடிக்ஸ் - என்.டி.ஆர் தான் நமக்கு கடவுளாச்சே - தாளி என்.டி.ஆர் ஆத்மாவே ஒய்.எஸ்.ஆர்ல பிரவேசிச்சுருச்சு போலன்னு தனி ஆவர்த்தனம் ஆரம்பிச்சேன்.

இருந்தாலும் நினைவு தெரிஞ்ச நாளா காங்கிரஸ் எதிர்ப்புல ஊறிட்டு திடீர்னு காங்கிரஸுக்கு ஓட்டுப்போடுங்கனு கேட்க  கூச்சமா இருந்ததா.. ஆப்பரேஷன் இந்தியா2000 மேட்டர்ல சந்திரபாபு, சி.எம் ஆஃபீஸ் கொடுத்த பல்பையெல்லாம் ஒரு மேட்டராக்கி கடேசில இந்த மானங்கெட்ட ஆட்சியை வீட்டுக்கனுப்புங்கனு முடிச்சு ,  பத்தாயிரம் பாம்லெட் போட்டு  (ஆதரவாளர்களோட ?) டவுன்ல டோர் டு டோர் கொடுத்து கேன்வாஸ் பண்ணேன். ( அந்த சமயம் சோத்துக்கே லாட்டரிங்கண்ணா - மேலும் இன்னைக்கு மாதிரி கமர்ஷியல் ப்ளானிங் எல்லாம் அன்னைக்கு கிடையாது- இருந்திருந்தா ஊர்பணத்துலயே மஞ்ச குளிச்சிருக்கலாம்) .  அந்த தேர்தல்ல ஸ்டெட்ல காங்கிரஸ் ஜெயிச்சது. தொகுதில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சி.கே பாபு சொற்ப வாக்குகள் வித்யாசத்துல தோத்து போயிட்டாரு.( ஏன் தோத்துப்போயிட்டாருன்னு ஒரு தீஸிஸே எழுதி டாக்டர் பட்டம் வாங்கலாம். அந்த ரேஞ்சுக்கு தெ.தே.ஆட்சி அட்டூழியம் பண்ணுச்சு)

ஜஸ்ட் ஆறே மாசத்துல வந்த நகராட்சி தேர்தல்ல தெ.தேசம் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் சீட்ஸ் தான் கிடைச்சதுங்கறத வச்சே மக்களோட உண்மையான ஆதரவு யாருக்குன்னு  கணக்கு பண்ணீரலாம்.

2009 தேர்தல் வந்தது.பிரஜா ராஜ்ஜியம் கட்சியும் வந்தது. சிரஞ்சீவியும் பலிஜா, ஜ.பவும் பலிஜா ஜிங்குனு ஒட்டி சீட்டும் வாங்கி கோதாவுல இறங்கிட்டாரு. பணத்தை வாரி விட்டாரு. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பாண்டுல கை.எ வாங்கிக்கிட்டு தலா அஞ்சாயிரம் கேஷ். நான்  ஜெயிச்சா  ரிட்டர்ன் பண்ண தேவையில்லை . தோத்துட்டா திருப்பித்தரனும்னு கண்டிஷன்.  தொகுதில ஏழை மக்கள் உள்ள எல்லா ஏரியாலயும் இலவச புடவை  வினியோகம். இத்தனை வருஷம் இரும்பு பெட்டில மக்கிக்கிட்டிருந்த காசு பணம்லாம் புதுவெள்ளம் மாதிரி தொகுதிக்குள்ள பாஞ்சது. ஆனாலும் என்ன பல்பு வாங்கிட்டு இப்ப தர்ணாவும், சாலை மறியலும் பண்ணிக்கிட்டு கிடக்காரு. இவரு ஒருத்தர் தான் அழகிரியோட கண்ணுக்கு பளிச்சுனு தெரிஞ்சாப்ல கீது.  அதனால இவரை பின் பளூவா போட்டுக்கிட்டு கோர்ட்டுக்கு  வந்தாரு அழகிரி.

2009 தேர்தல்ல சி.கே.பாபு வோட வெற்றி   நெஜமாலுமே ஜன நாயகத்துக்கு கிடைச்ச வெற்றி.  ஒரே வருஷம் பிப்ரவரில ஃபைரிங் , டிசம்பர்ல கண்ணி வெடி தாக்குதல் - பிரச்சாரத்துக்கே வரமாட்டாருன்னு பிரச்சாரம் - நகராட்சி கால்வாய்ல எல்லாம் ஜ,ப சப்ளை பண்ண பெங்களூர் சரக்குத்தான் ஓடுச்சு - பண மூட்டை - புடவை மூட்டை - காங்கிரஸ்ல சேர்ந்தாலும் தனிப்பட்ட விரோதம் காரணமா குழி பறிச்ச ஆதிகேசவுலு - காங்கிரஸ் கட்சி எம்.எல்.சியா இருந்தாலும் சி.கேவை தோற்கடிக்கிறதே லட்சியமா வேலை செய்த ஆர்.கோபி நாத் - தனக்கு சீட் கிடைக்கலேன்னு பிரஜாராஜ்ஜியத்துக்கு வேலை செய்த இன்னொரு நண்பரான புல்லட் சுரேஷ் - இத்தீனி மேட்டர் ஆன்டியா இருந்தாலும் ஜெயிச்சு வந்த சி.கே பாபுவுக்கு ஆதரவா சொந்த பத்திரிக்கைய நடத்தினதும், (லேட்டஸ் மல்ட்டிகலர் இஷ்யூவை பார்க்க இங்கன அழுத்துங்க ) தொகுதி முழுக்க பிரச்சாரம் பண்ணதையும் - வேட்பாளர் செலவுலத்தேன் - பெருமையா நினைக்கிறேன்.

என்னடா இரண்டு நண்பர்கள்னுட்டு மொத நண்பரை பத்தியே சொல்லி முடிச்சிட்டாருனு நினைக்காதிங்க - ஜ.ப வாச்சும் பெட்டர் ஏதோ தான் ரேலி சைக்கிள்ள திரிஞ்சப்ப தூக்கிவிட்ட பார்ட்டியாச்சேன்னு சி.கே மேட்டர்ல அடக்கி வாசிக்கிறாரு .

ஆனா அழகிரியோட  இரண்டாவது நண்பர் புல்லட் சுரேஷ் தமிழரா இருந்துக்கிட்டு, என்னன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகர்க்குங்கற வள்ளுவர் வாக்கை மறந்து  செயல்பட்டுக்கிட்டிருக்காரு. மேட்டர் கொஞ்சம் பெருசுங்கண்ணா அடுத்த பதிவுல விவரமா பார்ப்போம்.