Friday, September 3, 2010

இராத்திரியில் நீ எப்படிப்பட்டவன்? : 2



உயிர்களிடத்தில் ஏன் காமத்தில் இவ்வளவு ஆசை? அது அதிலிருந்து உருவானதாலயேதான். ஆனால் ஐந்தறிவு வரை ஒரு வரைமுறையிருக்கிறது. இயற்கையோடு ஒத்த காமத்தூண்டுதல் இருக்கும். ஆனால் மனிதருக்கோ அவன் நினைத்தால் எல்லாம் நடக்கும். உலகமே 99.9% காமத்தை வழிமொழிவார்கள்... 1% சட்டமோ, நல்லெண்ணமோ, வெட்கமோ அல்லது பயமோ அதை தடுத்துவிடும்.

அரிசி சாத்திற்காக உலையில் கொதித்துக்கொண்டு இருக்கும்பொழுது எத்தனை தடவைதான் தட்டை திறந்து மூடி கொதியை அடக்குவீர்கள்...

நன்றாக உணருங்கள்... நீங்கள் ஏறக்குறைய ஒரு முற்றும் துறந்த முனிவனைப்போலத்தானே காமத்தை கையாளமுடிகிறது. தனக்குப்பிடிக்கும் என்பதை விடவும் அடுத்தவர் என்னை என்ன நினைப்பாரோ என்றுதானே உங்கள் காமத்தை கசக்கி பிழிகிறீர்கள் அல்லது காமம் உங்களை கசக்கி பிழிகிறதுதானே!

காமத்தை உன்னதமாக, உள்ளது உள்ளபடி இருக்கவேண்டும், உணரவேண்டும் என்றால் புதிதாக பிறக்கவேண்டும். சாத்தியமில்லை... ஆகவே புதிதாக அணுகவேண்டும். உன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார். நீண்ட பெரு மூச்சை உருவாக்கு.மனதிலிருக்கிற குப்பையை துடைத்து எறி. காமத்தைப்பற்றிய பழைய எண்ணங்களை உதறி விடு.  வேறெந்த யோசனையும் இல்லாதிரு.

இப்பொழுது கவனி... சற்றுமுன் வரை எது பற்றி நினைக்க, பார்க்க, படிக்க நினைத்திருந்தாய்? உன்னை ஒரு கணமும் விட்டகலா இருந்தது என்ன? உனக்குள்ளாக மனதிலும், மூளையிலும், உடலிலும் ஆக்கிரமித்திருந்தது என்ன?

நீ இப்பொழுது புன்னகைக்கிறாய்... ஆமாம்... காமம்தான்...

இப்பொழுது முடிவு செய்...  காமம் உன்னை கையாள வேண்டுமா? அல்லது நீ காமத்தை கையாள வேண்டுமா?

காமத்தில் நீயாக மூழ்கினால் முத்தெடுக்கலாம்... காமம் உன்னை மூழ்கடித்தால் கரையேற முடியாது காணாமற்போவாய்...

கவனத்தில் கொள்க... இப்போதைய காலகட்டத்தில் நம்முடைய இரண்டும், ஏழும், எட்டும் பணத்திற்காக எதையும் செய்யும் வியபார பாவிகளால்தான் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கிரகங்களால் அல்ல.

அத்தகையவர்களை (கயவர்களை?!) ஆறாம் இடத்திற்கு தள்ளிவிட்டீர்களென்றால் பொருத்தமாக இருக்கும்.

இப்பொழுது சுகுமார்ஜி என்ன சொல்ல வருகிறான் என்பதை யூகிக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் என் கைகளோடு இணைந்து இருக்கிறீர்கள்... வாருங்கள்... ஒரு நீண்ட பயணத்தை துவக்கலாம்...