நேத்து தெலுங்கு தினசரிகள்ள ஒரு மத்திய அரசு விளம்பரத்தை பார்த்தேன். ( தமிழ் பேப்பர் பார்க்கறதில்லிங்கண்ணா- தினகரன் போஸ்டர்ல தலைப்பு செய்தி என்னடான்னா அக்டோபர் ஒன்னாம் தேதி யந்திரன் ரிலீஸாம் .சொக்கா ஆஆஆஆஅ!)
பாபர் மசூதி மேட்டர்ல செப்டம்பர் 24 ஆம் தேதி அலஹாபாத் ஹை கோர்ட் தீர்ப்பு தரப்போறதாவும் அந்த தீர்ப்பு ஒன்னும் ஃபைனல் இல்லேன்னும் தீர்வுக்கு பலப்பல வழிகள் இருக்கிறதாவும் அதனால உ.வசப்படாம இருக்கனும்னு வேண்டியிருந்தாய்ங்க. இதை கோர்ட்டு கிட்டே விட்டதே மானங்கெட்டத்தனம். கையாலாகாத்தனம்.
ஜன நாயகத்துல மக்கள் தான் அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகள் தான் அரசு நடத்தனுமே தவிர நீதிபதிகள் அல்ல. சரி ஒழிஞ்சு போவட்டும். பிரச்சினையை கோர்ட்டுக்கு விட்டாச்சு. அட்லீஸ்ட் அந்த தீர்ப்பையாவது அமல் படுத்தற பொறுப்பை ஏத்துக்கனுமில்லையா?
பிரச்சினையை எப்படி யார் யார் முத்த விட்டாய்ங்கனு ஏற்கெனவே ஒரு தாட்டி விரிவா சொல்லியிருக்கேன். அதனால ஐம் நாட் டு ரிப்பீட் தி பாஸ்ட். இந்த 20 ஆம் நூற்றாண்டுல இப்படி ஒரு பிரச்சினையை கிரியேட் ஆனதே மானக்கேடு. வளரவிட்டது அதைவிட வெட்க கேடு.
இந்த நாட்ல உள்ள இந்து முஸ்லீம்களை ஓரணியில் திரள வைக்க எனக்கு வேற வழியில்லாததால இந்த வரிகளை சொல்றேன்.
உங்களை வேலை, வெட்டி, பிழைப்பு,பெண்டாட்டி பிள்ளைகளையெல்லாம் விட்டுட்டு இந்த பிரச்சினைய பத்தி பேச வச்சது..... ரோட்டில இறங்கி போராட வச்சது எதுன்னு எப்பயாச்சும் ரோசிச்சிருக்கிங்களா? ராமன் மேலயோ அல்லாஹ் மேலயோ உங்களுக்கிருக்கிற பக்தி கிடையாது.
உண்மையான பக்தி நல்ல புரிதலை தரும். இறைவனை பற்றிய நல்ல புரிதல் இருந்தா மசூதி மந்திர் மாதிரியான ஸ்தூல விஷயங்களை , இந்த விஷயங்கள் மேல நடக்கிற சர்ச்சைகள் விவகாரங்களை பார்த்து சிரிச்சிருப்பிங்க. ஆன்மீகம்ங்கறது முழுக்க முழுக்க அக உலகை சார்ந்த விஷயம்.
உங்களுக்கு ஏன் இந்த புரிதல் ஏற்படலைன்னா உங்க புற வாழ்க்கையில உள்ள பிரச்சினைகள் முக்கியமா வறுமை காரணமா முழுக்க வாழப்படாத லௌகீக வாழ்க்கையே உங்க ஆன்மீக முன்னேற்றத்தை பாதிச்சுருச்சு. அந்த வறுமைக்கு காரணம் இதே ஆட்சியாளர்களோட தவறான ஆட்சிமுறை.
வறுமைல வாடினவுக ஆன்மீகத்துல முன்னேறியதில்லையான்னு நீங்க கேட்கலாம். முன்னேறியிருக்காய்ங்க. இல்லேங்கலை. ஆனால் அது எதிர் நீச்சல். இயல்பா நீங்க லௌகீக வாழ்க்கையிலருந்து ஆன்மீக வாழ்வுக்கு நழுவனும்னா உங்க லௌகீக வாழ்க்கை சரளமா இருந்திருக்கனும்.
வறுமை, லௌகீக வாழ்விலான பிரச்சினைகளை மீறி நீங்க இறைவனோட நெருங்க உங்க குருக்கள் உங்களுக்கு நல்ல வழிகாட்டியா இருந்திருக்கனும். இப்படி ஆட்சியாளர்கள் லௌகீக வாழ்க்கையையும், குருக்கள் ஆன்மீக வாழ்க்கையையும் நாசமாக்கிட்டாய்ங்க. அதனாலதான் அக உலகை சார்ந்த ஆன்மீக வாழ்க்கையையும், புற உலகை சார்ந்த கட்டிடங்களையும் போட்டு குழப்பிக்கிற இழி நிலை இன்னைக்கிருக்கு.
மனிதனுக்கு நிகழ்காலம் பாரமாகும்போதுதான் அவன் ஆன்மீகத்தை நாடறான். இந்த நிலையில ஆன்மீகத்தை நாடும் மனம் அதையும் லௌகீகமாக்கிருது. இந்த கேட்டகிரிதான் அதிகமா இருக்கு. அதனாலதான் கட்டிடங்கள் தீர்க்கமுடியாத பிரச்சினையாகுது.
மக்களை வழி நடத்தறவன் தான் உண்மையான தலைவன். மக்களுக்கு நல்லதுன்னு தான் முடிவு பண்ண விஷயத்தை மக்கள் எதிர்ப்பை மீறி அமலாக்கிறவன் தான் உன்னதமான தலைவன். ஏன்னா மக்கள் ஜஸ்ட் நிகழ்காலத்தை பத்தி மட்டும் ரோசிப்பாய்ங்க. ஆனால் தலைவன் எதிர்காலத்தையும் சேர்த்து ரோசிக்கனும்.
எங்க ஊர்ல ஏறக்குறைய பாபர் மசூதி ரேஞ்சுல ஒரு மேட்டர் நடந்தது. மசூதி காம்ப்ளெக்ஸ்ல ஒரு கடை. அதை அந்த கடை ஓனர் ரீ மாடல் பண்ணி கட்டறச்ச மினாரை விட ஒரு அடி உசரமாயிருச்சு. உடனே முஸ்லீம்ங்க எல்லாம் பதறியடிச்சு மசூதி கமிட்டிக்கிட்டே ஓடினாய்ங்க. கமிட்டிக்காரவுக உட்கார்ந்து பழைய தஸ்தாவேஜெல்லாம் எடுத்து பார்த்தப்ப ரீமாடல் பண்ண கடையே மசூதிக்கு சொந்தம். அதனோட ஓனருக்கு அந்த கடை மேல உரிமையே கிடையாதுன்னு தெரிய வந்தது.
ஒடனே எங்க எம்.எல்.ஏ கிட்டே ஓடினாய்ங்க.அவரு அவங்கட்டற வரை என்னய்யாபண்ணிட்டிருந்திங்கனு எரிஞ்சு விழுந்து எக்ஸ் பார்ட்டிய கூப்டு பேசினார்.அவனை கன்வின்ஸ் பண்ணாரு.இன்னைக்கு அதே பில்டிங்ல அதே ஓனர் கடை வச்சிருக்காரு டெனன்டா. அவரோட காலத்துக்கப்பாறமும் அவரோட நேர் வாரிசுங்க யார் வேணம்னா அந்த கடையை நடத்திக்கலாம். ஆனா சப் லீஸ், உள் வாடகைலலம் கூடாதுன்னு தீர்மானமாச்சு.
ஓட் பாங்க் அரசியல் னு பார்த்தா இந்த மேட்டர்ல எவனும் தலையை விடமாட்டான். அப்படியே விட்டாலும் மெஜாரிட்டிக்கு அனுகூலமா இறங்குவான். ஆனால் எங்க எம்.எல்.ஏ தன்னோட லீடர்ஷிப் மேல இருக்கிற நம்பிக்கையோட இறங்கினாரு தீர்த்துவச்சாரு.
இந்த மாதிரி ஒரு கேரக்டர் அங்கன இருந்திருந்தா இந்த பிரச்சினை எப்பயோ சால்வாகியிருக்கும்.
துரதிர்ஷ்டவசமா இன்னைக்கு மக்களை வழி நடத்தற நிலைல எந்த தலைவனும் இல்லே. மக்கள் விருப்பத்தை முன்னெடுத்து தலைவனாயிரனும்னு துடிக்கிற அலக்கைகள் தான்
நாட்ல இருக்கு.
உடனடி தீர்வு:
என்னை பொருத்தவரை ராம் ஜென்மபூமி - பாப்ரி மஸ்ஜித் பிரச்சினை ஒரு பிரச்சினையே கிடையாது. ஆனால் உலகம் வெட்டி மடியறதால ஒரு தீர்வை முன் வைக்கிறேன்.
அல்லாவோ ,ராமனோ தன் மக்கள் நிற்க நிழலில்லாம, குந்த குடிசையில்லாம இருக்கிறச்ச தனக்கு மசூதி வேணம்னோ, கோவில் வேணம்னோ நினைப்பாய்ங்கனு நான் நினைக்கலை.
இந்தியாவுல வீடில்லாத இந்துவே கிடையாது, வீடில்லாத முஸ்லீமே கிடையாதுங்கற நிலை வர்ர வரை இந்த மசூதி, மந்திர் மேட்டரை எடுக்க கூடாது. நாட்டில் உள்ள இந்து, முஸ்லீம் அமைப்புகள் வீடில்லாத இந்து, முஸ்லீம்களை ஐடென்டிஃபை பண்ணி அவிகளுக்கு வீடுகட்ட தேவையான தொகையில 30 சதவீதத்தை அரசு கணக்குல டெப்பாசிட் பண்ணனும். அரசு தன் உதவாக்கரை,வெத்து வேட்டு செலவுகளூக்கெல்லாம் வெட்டு விதிச்சு மீதி 70 சதவீதம் நிதியை செலவழிச்சு வீடு கட்டித்தரனும்.
இந்திய நாட்டுல வீடில்லாத இந்துவே இல்லேங்கற நிலை மொதல்ல ஏற்பட்டா பிரச்சினைக்குரிய இடத்துல கோவில் கட்டிக்கிரட்டும். அல்லது வீடில்லாத முஸ்லீமே இல்லேங்கற நிலை ஏற்பட்டா மசூதி கட்டிக்கிரட்டும்.