Sunday, September 26, 2010

பலான வீட்டுக்கு போன கதை

அண்ணே வணக்கம்னே,
இந்த ஜில் பதிவோடவே வயசான கட்டைகளுக்காக அனுமனை நினைந்துருகி ஒரு கவிதையும் போட்டிருக்கேன்.உலக உருண்டை கை கொண்டு  வாய்  பொத்தித்தான் நகுமேடா?  முடிஞ்சா படிங்க. முக்கியமா கும்பராசி நேயர்களுக்கு இது நல்ல பரிகாரம்.

Now Jump to  ..பலான வீட்டுக்கு போன கதை
ஒரு காலத்துல எது படியும், எது படியாது, எது பக்கா மாலு, எது லோலு,  எது ரூட்ல இருக்கு, எது பஸ் ஸ்டாண்ட்ல இருக்கு,  எதுல படம் மட்டும் பார்க்கலாம், எதுல ஜோக்ஸ் மட்டும் படிக்க முடியும், எதை லைப்ரரிக்கே போயி படிக்கனும், எதை  நம்ம இடத்துக்கு  கொண்டுவந்து படிக்கலாம்னு பக்கா அப்டேஷனோட இருந்ததுண்டு. ஆனால் இன்னைக்கு அந்த திறமை (?) எல்லாம் போயே போச்.

இதுக்கு பல காரணம்.  தேவை தீர்ந்து போச். டச் விட்டு போச்சு. அரிசி விலை தெரிஞ்சி போச்சு. தீப்பெட்டிய டாட்டா கம்பெனி தயாரிச்சா மயில் மார்க்,குயில் மார்க் தீப்பெட்டி எல்லாம் என்னாவும், அந்த இண்டஸ்ட்ரி இருந்தவனெல்லாம் என்ன ஆவான்? பெப்சி,கோக் வந்ததால அரசன் கூல் ட்ரிங்க்,ஜெய் ஹிந்த் சோடா ஃபேக்டரியெல்லாம் என்ன ஆச்சு? இப்படி யதார்த்தம் தெரிஞ்சு போச்.

முக்கியமா வயசாயிருச்சு. மூளை புதுவிஷயங்களை கடும் தணிக்கைக்கு பிறகுதான் ஏத்துக்குது. அப்பல்லாம் மாலு - லோலுன்னெல்லாம் வித்யாசம் இருந்தது. சனத்தொகை கம்மி. சாதி, சனம், ஃபேமிலி பேக் கிரவுண்டு, ட்ரஸ் அப், பாடி லேங்குவேஜ் ( நகம் கடிக்கிற குட்டி வெட்கப்படும் - விரல் சூப்புற குட்டி வந்துரும் - இதெல்லாம் அந்த காலத்துல நாம உதிர்த்த பொன்மொழி) இதையெல்லாம் வச்சு கணிக்கலாம்.

இப்ப நேத்திக்கு சினிமால போட்ட ட்ரஸ், இன்னைக்கு பஸ் ஸ்டாப்ல தெரியுது. மேலும் என் மகளுக்கு இப்ப 18 தான் ஆகுதா.. நிறைய ரெடிமேட் தான் போடறாளா.. தாளி ஒரே டிசைன் தான் நிறைய  செலாவணி ஆகுது போல. எந்த குட்டியோட ட்ரஸ்ஸை பார்த்தாலும் இதை நம்ம பொண்ணு போட்டாப்ல இருக்கேனு நினைக்க தோணிருது.

அந்த காலத்துல ( 1984 வரை கூட) திவாலா பார்ட்டிங்க, புதையல், கள்ள நோட்டு,சினிமானு விண்ட் ஃபால் கெயின்ஸுக்கு அல்லாடற சனத்தை விரல் விட்டு எண்ணிரலாம். இன்னைக்கு எவன் நார்மலெவன் அப் நார்மல்னே தெரியமாட்டேங்குது.

ஒரு ஆம்பளை மிஸ்கைட் ஆகி  ஃபண்ட் மிஸ் அப்ரோப்ரியேஷன் பண்ணிட்டான்னா
அது ஒரு அரை டஜன் ஆம்பளைங்களை பாதிச்சுருது. ஆம்பளைகளுக்கு வர்ர பாதிப்பு ஒரு பக்கம்னா அந்தந்த குடும்பத்து பொம்பளைங்க நாறிப்போயிர்ராய்ங்க. ஒன்னு கேப்டன் தலைமறைவாயிர்ரது,போலீஸ் அட்ராசிட்டி, ரவுடிங்க இம்சை, கடன் காரவுக தொல்லை, சாயம் போன புடவை, கழுத்துல ஜஸ்ட் மஞ்ச கயிறு கண்ணுல மட்டும் உசுரு. கலெக்டர் காம்பவுண்ட்ல மனு நீதி நாள்னன்னு பார்க்கலாம். பலர் இப்படியே வாழ்ந்து முடிஞ்சுர்ராய்ங்க.

சில பார்ட்டிங்களோட சம்சாரம்ஸ், குழந்தேள்  ரூட் மாறிர்ராய்ங்க.  இந்த உலகத்துல மனித குலத்துக்கு எதிரா எந்த ஒரு மாற்றம் வந்தாலும் முதல் பலிகடா பொம்பளைதான். அது என்ன இழவானாலும் சரி இழவெடுக்கிறது இவிக டர்னாயிருது.

க்ளோபலைசேஷன், லிபரைலைசேஷன், ப்ரைவட்டைசேஷன், சிறப்பு பொருளாதார மண்டலம் இப்படி எந்த இழவானாலும் பொம்பளைதான் இழவெடுக்கிறா.

மேலே சொன்ன  விணட் ஃபால் கெய்ன்  பன்னாடைங்களுக்கு  பொஞ்சாதி   வசம்மா மாட்டியிருந்தாலோ, மாமனார் ,மச்சான் சவுண்ட் பார்ட்டிகளா இருந்தாலோ வாலை சுருட்டிக்கிட்டு  ஃபோன் பில்,எலக்ட் ரிக் பில் கட்டிக்கிட்டு பசங்களை கான்வென்ட்ல விட்டு, கூட்டி வந்து காலத்தை கழிச்சுருதுங்க. இதுலயும் 6 மாசத்துக்கொருதரம் "ஒரு யமவுண்டா" கேட்டு லொள்ளு பண்ற பார்ட்டிங்க இருக்குது.

ஆத்திரம், அவசரம், நடக்காத குறை,விதியில்லாத குறைன்னா பரவாயில்லை ஜஸ்ட் தங்களோட பதவியை காப்பாத்திக்க, தங்களோட தகுதியின்மைகளையெல்லாம் ஓவர் கம் பண்ண பெண்டாட்டிய உபயோகிக்கிற பிக்காலிங்க் எல்லா க்ளாஸ்லயும் ( ஹை, மிடில்,லோ) இருக்காய்ங்க.

மொத்தத்துல ரஜினி பேரை சொன்னா அதிருதோ இல்லியெ பொம்பள பேரைச்சொன்னா அதிருது.

பச்சைப்புடவையா காமாட்சி, கருப்பு புடவையா காளி, காவி புடவையா நாராயணி இப்படி ஆயிருச்சு. இல்லைனா சாமுத்ரிகம் பார்த்துட்டு அய்யோ பாவம் விதவையாயிர போவுது, அய்யோ பாவம் தீவிபத்து நடக்கப்போவுது மாதிரி எண்ணங்கள் தான் வருதே தவிர மத்த கற்பனைகளெல்லாம் காலாவதியாயிருச்சு.

ஏதோ ஹிட்ஸை கூட்ட ப்ளாகை தூக்கி நிறுத்த கண்ட கருமாந்திரத்தையெல்லாம் கஷ்டப்பட்டு ரீ கலெக்ட் பண்ணி எழுதிக்கிட்டிருக்கேன். சரிங்கண்ணா பலான வீட்டுக்கு போன கதைக்கு வந்துருவம்.

நான் சொல்றது 1984 - 1985 இருக்கலாம். அப்போ  சந்திரன்னு ( பெயர் மாற்றப்பட்டுள்ளது)  ஒரு ஃப்ரெண்ட். ஜிம் போவான்,லவ் பண்ணுவான், கேங் வார்ல எல்லாம் என்ட்ரி கொடுப்பான். கால் எல்லாம் குச்சி, பாடி ,ஹேண்ட்ஸ் மட்டும் சிக்ஸ் பேக். தில்லான பார்ட்டி.

அப்பல்லாம் ஏரிக்கரையில பலான தொழில் ஓஹோ. அந்த காலத்துல டவுன்ல ரெண்டு மூணு  கோஷ்டி.  இருந்தது. ஆனா 3 கோஷ்டியுமே இந்த தொழிலை நேரிடையாவோ மறைமுகமாவோ பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க. இதுல ஒரு பாடி பில்டரும் அடக்கம்.  எங்கனயாச்சும் கோஷ்டிங்க மோதிக்கிட்டா ஒடனே எதிர்கோஷ்டியோட பலான தொழில் நடக்கிற இடத்து மேலதான் அட்டாக் நடக்கும். ஒரு சமயம் சாம்பலே ஆக்கிட்டானுவன்னா பார்த்துக்கங்க.

தலைப்புல பலான வீடுன்னு சொல்ட்டனே தவிர பலான குடிசைதான். பன்னி தொட்டி மாதிரி இருக்கும். கதவெல்லாம் கிடையாது. கோணி பை தான் ஸ்க்ரீன். அதுக்கு கனி கம்பெனினு பேரு.

ஏதோ கிராமத்து விவசாயி வீடு மாதிரி சாணியெல்லாம் மெழுகி ,செம்மண் வச்சி கோலம்லாம் போட்டிருந்தது. தாழ்வாரம் மாதிரி ஏரியால சினிமால காட்டற மாதிரியே ஒரு பேரிளம்பெண், வெ.பாக்கு போட்டு சிவந்த வாயோட ,பெரிய பொட்டோட  உட்கார்ந்து பல் குத்திக்கிட்டிருந்தாள். சந்திரன் உரிமையா அவளை அத்தைன்னு சம்போதிச்சுண்டிருந்தான்.

அவள் குரல் கொடுத்ததும் ஒரு அரை டஜன் போல குட்டிங்க வந்து நின்னதுங்க. நாம தான் ரசனை திலகமாச்சே. இருக்கிறதுலயே சிகப்பா, கட்டையா இருந்த குட்டிய செலக்ட் பண்ணேன்.

சந்திரன் காதை கடிச்சான் " தத் புத்தி கித்தி கீதா உனக்கு. இங்கன வந்த நாயெல்லாம் இதைத்தான் நக்கியிருக்கும். பல்ப் மாட்டிக்கிச்சுன்னு வை மவனே ஒன்னுக்கு போனா பூவாளி மாதிரி தான் வரும்னான்"

அப்பாறம் இருக்கிறதுலேயே தேசலான குட்டிய அவனே எனக்குனு செலக்ட் பண்ணினான். உள்ளாற போய் உறை மாட்ட முயற்சி பண்றேன். ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.  அதான் சந்திரன்  சொன்ன பூவாளி மேட்டர், அவன் செலக்ட் பண்ண  தேசல் குட்டி காரணமா   எல்லாம் ஒடுங்கி போயிருச்சே.

பேசாம படம் பார்த்து, துணுக்குகள் வரை மேஞ்சிட்டு எந்திரிச்சு வந்தாச்சு. இதுல டிப்பு  வேற எம்மாத்தம்ங்கறிங்களா? ரூபா அஞ்சு.

இன்னைக்கு சம்சாரிக உள்ள தெருவுல எல்லாம், லட்சாதிபதிங்க இருக்கிற காலனில எல்லாம் இந்த தொழில் அமோகமா நடக்குதுங்கோ . மேற்படி தொழில்காரிக செல்ஃப் ஹெல்ப் ஃக்ரூப் ஃபார்ம் பண்ணி பத்தினிகளை எல்லாம் கூட மோட்டிவேட் பண்ணிக்கிட்டிருக்கிறதா கேள்வி.  இதுல பார்ட் டைம், சீசனல், சம்மர் ஹாலிடேஸ் ஸ்பெஷலுன்னு ஏகத்துக்கும் வெரைட்டி இருக்காம்.

எல்லாம் கேள்வி ஞானம்தேன் .