Sunday, September 19, 2010

மருமக மாமியாருக்கு சக்களத்தி தான் : 2

அண்ணே வணக்கம்ணே,

மனைவி அமைவதெல்லாம்ங்கற தொடர்பதிவை ஆரம்பிச்சு அதுல ஒரு துணை தொடரை மருமக மாமியாருக்கு சக்களத்தி தான்ங்கற தலைப்புல எழுதிக்கிட்டிருக்கேன். நான் நேத்து தாய் - மகனுக்கிடையிலான உறவை பத்தி எழுதின மேட்டருக்கு சனம் மனோகரா சினிமா கணக்கா பொங்கி எழுந்து டங்கு வாரு அறுத்துரப்போவுதுனு நினைச்சேன். ( யதார்த்த வாதிபஹுஜன விரோதி- உள்ளதை சொன்னா நொள்ளக்கண்ணிக்கு நோப்பாளம் )



ஞாயிற்று கிழமை காரணமா இல்லே இந்த ஆளுக்கு சுய புத்தியும் கிடையாது சொந்த புத்தியும் கிடையாது அனுபவிக்கட்டும்னு ஒரு எண்ணமா புரியலை. ஹிட்ஸ் மட்டும் 12 மணி நேரத்துக்கு இரட்டிப்பாகியிருக்கு. சந்தோசம். மசூதி மந்திர் மேட்டரை எத்தனை பேர் படிச்சாய்ங்கனு தெரியலை.



முக்கியமா நான் போடற பதிவுகளை உடனுக்குடன் படிக்கிறவுக குறைச்சல். பழைய பதிவுகளையெல்லாம் ஒரு பாட்டம் படிச்சுட்டுத்தான் லேட்டஸ்டுக்கு வராய்ங்க.ஒரு வேளை ரிவிஷன் பண்றாய்ங்களோ? (அப்ப நம்ம எழுத்து வைன் மாதிரினு சொல்லலாமா? அதுக்குத்தான் பழசாக பழசாக மவுசு கூடும்)



இந்த துணைத்தொடர் எழுதறதுல என் உத்தேசம் என்னன்னா மொதல்ல ஃபேக்ட்ஸ் தெரியனும்.அப்பத்தான் தீர்வு சுலபம். ஃபேக்ட்ஸ் கசப்பா இருக்கு, அசிங்கமா இருக்கு,வக்கிரமா இருக்குன்னு கண்ணை மூடிக்கிட்டு பிரச்சினையை தொட்டா அடுத்தவன் பெண்டாட்டிய தொட்டுட்ட மாதிரி அது இன்னம் சிக்கலாயிரும்.



மேக்கியவல்லி தன்னோட "தி ப்ரின்ஸ்" ல அரசனுக்கு அட்வைஸ் பண்றச்ச "மக்களோட மனைவி, நிலம் ரெண்டை மட்டும் தொடாதேங்கறார்" இப்ப பார்த்தா சிறப்பு பொருளாதார மண்டலம்னு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தறாய்ங்க. சனம் ஏதோ சம்பிரதாயத்துக்கு போராடுது.அதுவும் அதிக நஷ்ட ஈடு கேட்டுத்தான். ஏன்?



ஏதோ ஆதிவாசிகள் மட்டும் நக்சல்ஸோட சேர்ந்து டஃப் ஃபைட் கொடுக்கிறாய்ங்க. அவிக தற்கால நாகரீகத்துக்கு (?) பழக்கப்படாம இயற்கையோட நெருங்கின வாழ்க்கை வாழறதால ஆதி மனித காலத்து மூர்கம் அ இயற்கையின் சிம்பலான நிலத்தின் மீதான பற்று தொடர்ராப்ல இருக்கு.



மேக்கியவல்லியோட லிஸ்ட்ல அடுத்து வர்ரது பெண்டாட்டி. மனிதன் நாகரீகமடைய அடைய அவனுடைய இயல்பு நிலை பாதிக்கப்படுது. ஆண்மை குறைஞ்சு போகுது. இயற்கையிலேயே அவனுக்குள்ள இருக்கிற மூர்கம் குறைஞ்சு போகுது. இது எந்த நிலைக்கு போயிருச்சுன்னா பெண்டாட்டி மேட்டர்ல கூட காம்ப்ரமைஸ் ஆகிற ஸ்டேஜுக்கு வந்துட்டாய்ங்க.



ஒரு பிக்காலி ஃபைல்ஸை தன் மனைவி மூலமாத்தான் அதிகாரிகளுக்கு கொடுத்தனுப்பும்.என்னய்யா இதுன்னா" உடு சாமீ.. நம்மால ஆகாத வேலை பெண்டாட்டியால ஆகுதுன்னா ஆகட்டுமே"ங்குது அந்த பன்னாடை.



அந்த பண்பட்ட (?) ஸ்டேஜுக்கு இன்னம் வராம மெத்த நாகரீகமடையாத பார்ட்டிகளோ, அல்லது இத்தனை நூற்றாண்டுகளாகியும் ரத்தத்துல குறையாத மூர்கத்தை வச்சிருக்கிறவுகளோ மட்டும் தான் நிலத்தகராறு, கள்ளக்காதல் மேட்டர்ல ஆயுதம் தாங்கி தந்தில செய்தியாயிர்ராய்ங்க.



அதுக்குனு மத்தவுகல்லாம் கம்ப்ளீட்டா காம்ப்ரமைஸ் ஆயிட்டாய்ங்கனுல்ல அங்கனயும் கொலை செய்ய முயற்சி நடக்குது ஆனால் ஆயுதம் வேற, களம் வேற, யுத்தமுறைகள் வேற.



இதை வேறும் ஒரு ஆணோட பார்வையில மட்டுமில்லை, பெண்ணோட பார்வையிலயும் பாருங்க. ஒரு தாய். அவளோட மீனியேச்சர் கணவன் மகன். உடலுறவு ஒன்னை தவிர உடலுறவுக்கு முந்தி பிந்தி நடக்கிறதெல்லாம் நாசூக்கா, யதேச்சையா, தவணையில நடக்குது. என்னைக்கோ ஒரு நா "அது"வும் நடக்கும்ங்கற எதிர்பார்ப்பும் இருக்கலாம். ( ஒருவன் மனது ஒன்பதடா ..அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா) அதை மருமக வந்து இனி இல்லவே இல்லைன்னு ஆக்கிர்ரா. இதை எப்படி அந்த தாய் மனசு ஏத்துக்கும்?



பொருளாதார காரணங்களை காட்டறாய்ங்க. இதுவும் ஒரு காரணமா இருக்கலாம். ஆனால் இதுவே காரணம் கிடையாது. ஒரு பெண்ணுக்கு பெண் மேல எந்த வித ஈர்ப்பும் இருக்க வாய்ப்பே கிடையாது. மருமகளை பிடிக்காத எந்த மாமியாரும் ஆரம்ப நிலையிலயே மகனை கூப்டு " த பாருப்பா உன் பிச்சை எனக்கு தேவையில்லை நான் பிச்சையெடுத்தாச்சும் பிழைச்சுக்குவன் . நான் போறேன்"னுட்டு கிளம்பறதில்லை. அதே மாதிரி மருமகளை கூப்டு "த பாரும்மா எதுக்கு சும்மா லொள்ளு ..உன் புருசனாய் கூட்டிக்கிட்டு தனியா போயிரு"ன்னு சொல்றதில்லை. அப்படி போயிட்டா மகனை கண்ணால கூட பார்க்க முடியாதே



செக்ஷுவல் ஃபேக்டர்ஸ் கலக்காத எந்த பிரச்சினையையும் கொஞ்சம் மெனக்கெட்டா பைசல் பண்ணிரலாம். ஆனால் செக்ஷுவல் ஃபேக்டர்ஸ் கலந்திருக்கிற பிரச்சினையை பைசல் பண்ணவே முடியாது. (அந்த செக்ஷுவல் ஃபேக்டர்ஸை ஸ்மெல் பண்ணா தவிர)

மத்தபடி காசு பணம் காரணமா வர்ர எந்த பிரச்சினையும் இந்த ரேஞ்சுக்கு போகாது போகாது போகாது.



இந்த ஃபேக்டரை எடுத்து சொன்னது எதுக்குன்னா இதான் அசலான பிரச்சினை. இதுதான் அடிமனசுல கொழுந்து விட்டு எரியற கட்டை. எரியறத பிடுங்கினா கொதிக்கிறது ஆட்டோமேட்டிக்கா அடங்கிரும்.



மாமியாராகட்டும், மருமகளாகட்டும் இந்த பாயிண்டை புரிஞ்சிக்கிட்டா " தூத்தேரிக்க இந்த பிரச்சினைக்கு இப்படி ஒரு இழவெடுத்த காரணம் இருக்கா.. அய்யய்யோ நான் இந்த மேட்டர்ல எந்த அளவுக்கு பிடிவாதமா இருக்கேனோ அந்த அளவுக்கு இந்த பிரச்சினைக்கு சித்தூர் காரரு சொன்ன காரணம் தான் காரணம்னு இந்த உலகம் நம்ப ஆரம்பிச்சுருமோங்கற பதைப்புலயே தங்கள் பிடிவாதத்தை குறைச்சுக்குவாய்ங்க. அட்லீஸ்ட் மறைச்சுக்குவாய்ங்க.



ஒரு தாய் தன் மகனை மீனியேச்சர் கணவனா பாவிக்கிற நிலைக்கு வர காரணம் அவளோட மண வாழ்வு , கணவனுடனான உறவு ( உடலுறவு இல்லிங்கோ) அவள் எதிர்பார்ப்புகளுக்கிணங்க அமையலைங்கறதுதான்.



ஒரு பெண்ணோட பேசிக்கல் இன்ஸ்டிங்ட் தாயா மாறனுங்கறதுதான். இல்லாட்டி செக்ஸுவல் ஆர்காசம் சாத்தியமே இல்லாத கணவனோட தொடர்ந்து வாழறது சாத்தியமே இல்லை. தாயா மாறனுங்கறது மனித மனங்கள்ள மறைஞ்சிருக்கிற பாஸிசமா கூட இருக்கலாம். அது வேற விஷயம். அவளோட கணவனே அவளுக்கு குழந்தையா மாறிட்டா இந்த பிரச்சினையே வராது.



ஆணா ஆண்மனம் எப்பவும் பெண்ணை சந்தேக கண் கொண்டே பார்க்குது ( இவனால தான் ஆர்காசத்தை கொடுக்க முடியலியே) அதனால அவளை எப்பயும் தன் கட்டுப்பாட்லயே வச்சுக்க துடிக்குது. "போஜேஷு மாதா"ன்னு ஸ்லோகம் சொன்னாலும் மனைவி ஒரு தாயா மாற, தாயா வாழ ஆயிரம் சிச்சுவேஷன்ஸ் இருக்கு. கணவனே அவளுக்கு மகனா மாறிட்டா அவள் ஏன் மகனை மீனியேச்சர் கணவனா பாவிக்கப்போறா. மருமகளை சக்களத்தியா எண்ணி சண்டையிழுக்க போறா?



தன் வருங்கால மனைவியை தேடும் ஒரு இளைஞன் தன் தாயைத்தான் தேடறான் . வருங்கால கணவனை தேடும் ஒரு இளைஞி தன் தந்தையை தான் தேடறானு சைக்காலஜி சொல்லுது.



இதை கொஞ்சம் டீப்பா பார்த்தா இந்த தியரி மன முதிர்ச்சியடையாத யூத்துக்கு மட்டும் பொருந்தறாப்ல இருக்கு. மெச்சூர்ட் மைண்டட் இளைஞன் மகளை தேடவும் கூட வாய்ப்பிருக்கு.



ஆனா மனிதனோட மூட் 4 நிமிஷத்துக்கு ஒரு தரம் மாறுது. ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் கம்ப்ளீட்டா மாறுது. அவன் நினைச்சா சில சமயம் தந்தையாவும், சில சமயம் மகனாவும் பிஹேவ் பண்ணமுடியும். (தந்தையா மாறினா பொஞ்சாதி பொறுப்பில்லாதவளா மாறி அப்பனை சதாய்ச்ச ரேஞ்ஜுல உங்களை சதாய்ச்சுர சான்ஸு இருக்கு பாஸ்! அட் தி சேம் டைம் நீங்க மகனா மாறிட்டா அவிகளை உங்க அம்மாவை சதாச்ச மாதிரி சதாச்சுரலாம். மகன்,மகளா மாறிர்ர கணவன் அ மனைவி நித்ய யவ்வனமா இருப்பாய்ங்க. தீர்காயுசு. தாயா மாறிர்ர பொஞ்சாதி நித்ய யவ்வனமா இல்லேன்னாலும் ஆத்ம திருப்தி காரணமா ஆயுசாச்சும் கூட்டிக்கலாம். தந்தையா மாறிர்ர கணவன் தான் சீக்கிரம் கிழவாடி ஆகி அல்பாயுசுல போயிருவான். புருசன் புருசனாவே ,பொஞ்சாதி பொஞ்சாதியாவே வாழ்ந்துட்டா லைஃப் நியூஸ் ரீல் மாதிரியாயிரும்.



இந்த ஃபார்முலாவை அந்த தாயோட கணவன் ஃபாலோ பண்ணியிருந்தான்னா இந்த ப்ராப்ளம் வந்தே இருக்காது. வந்துருச்சு. இப்ப என்ன செய்யறது? அந்த தாயோட மேரீட் லைஃப் எப்படியிருந்தது, செக்ஷுவல் லைஃப் எப்படியிருந்தது, அதை அவிக எப்படி எடுத்துக்கிட்டாய்ங்க மாதிரி டீட்டெயில்ஸ் எல்லாம் தேவை. அப்பத்தான் இந்த மாமியார் - மருமக பிரச்சினையோட ஆணி வேரை அசைச்சு பிடுங்கி எறிய முடியும்.



அது மட்டுமில்லிங்கண்ணா மருமகளா வந்த பெண்ணோட தாயார் விஷயத்துலயும்

அவிகளோட மேரீட் லைஃப் எப்படியிருந்தது, செக்ஷுவல் லைஃப் எப்படியிருந்தது, அதை அவிக எப்படி எடுத்துக்கிட்டாய்ங்க மாதிரி டீட்டெயில்ஸ் எல்லாம் தேவை. இதையெல்லாம் எப்படி கலெக்ட் பண்றது, எப்படி டீ கோட் பண்றது. இந்த மா - ம பிரச்சினையை எப்படி சவப்பெட்டில இட்டு ஆணி அறையறதுன்னு அடுத்த பதிவுல பார்ப்போம்.