எங்கே நிம்மதி?
ஒவ்வொருத்தரும் நிகழ் காலத்து நிம்மதியை பலி கொடுத்து, எதிர்காலத்துல என்னைக்கோ ஒரு நாள் , ஒரு நேரம் வரும் அன்னைக்கு தான் நமக்கு நிம்மதின்னு அங்காடி நாயாய் ( சாரி நாய்களா) அலைஞ்சுக்கிட்டிருக்கோம். நிம்மதின்னா என்ன ? நம்ம நிம்மதிக்கு எதெல்லாம் காரணம்னு நாம சப்ஜாடா தெரிஞ்சிக்கிடனும்னா அதையெல்லாம் இழக்கனும்.
ஆமாங்கன்னா ஒரு வஸ்துவோ,ஒரு மனுஷனோ இருக்கிறவரை அதோட/அவனோட மதிப்பு நமக்கு உறைக்கிறதே இல்லை. என்னடா இவரு இவ்ளோ நெகட்டிவா பேசறாரேனு( எழுதறாரேனு) நினைச்சுராதிங்க. எனக்கு ஸ்பார்க் ஆறதை சென்ஸார் இல்லாம எழுதறதுதான் என் ஸ்டைல்.
அண்ணே! இன்னைக்கிருக்கிற அரசியல்,சமூக, பொருளாதார சூழலை பார்க்கும்போது டு டே ஈஸ் பெட்டர் தேன் டுமாரோ. விடியுமோ விடியாதோ தெரியாத நாளைய விட இன்னய தினமே பெட்டர். நிம்மதியா இருக்கனும்னு நினைக்கிறவனுக்கு இதான் பெட்டர் சாய்ஸ்.
ஆமாண்ணே போக போக நிலைம மோசமாத்தான் போகுமே தவிர பெட்டர் ஆகுங்கற நம்பிக்கையே எனக்கு இல்லை. இன்னைய தினத்தை விட நாளைக்கு நான் கொஞ்சம் ஓல்டர் ஆகியிருப்பேன் தானே.
அதுலயும் 30 வயசை கடந்துட்ட பார்ட்டியெல்லாம் இந்த பாயிண்டை நல்லாவே கேட்ச் பண்ணனும். மனுஷ உடம்புல அவன் ரத்தத்துல லட்சக்கணக்கான செல்கள் தினசரி செத்துப்போவுதாம். புதுசா பிறக்குதாம். வயசாக வயசாக சாகிறது சாஸ்தி , பிறக்கிறது குறைவுன்னு ஆகிப் போயிருங்கண்ணா.
நான் பிறந்தது என்னவோ 1967 தான். யூத்தா வெத்தா திரிஞ்சதுன்னா 1987 -1991 பீரியடை சொல்லலாம். என் படைப்பு திறனோட உச்ச கட்டம் அதான்.( தண்டத்தீனி + லைஃபோட ப்ராக்டிக்காலிட்டி தெரியாது.) ஒரே ராத்திரில ஒரு நாட் ஸ்பார்க் ஆகி குறு நாவலா எழுதியும் உட்டேன்னா பாருங்க. இத்தனைக்கும் அன்னைக்கு படிக்க ஆளில்லை. இன்னைக்கு 500த்து சில்லறை தர்ம பிரபுக்கள் படிக்க இருக்கிங்க. ஆனாலும் எழுத முடியலை. அதான் லைஃப்.
நான் என்ன சொல்றேன்னா தாளி நாளைக்கு விடியுதோ இல்லையோ ? விடிஞ்சா என்ன பண்றது அதுக்கொரு ஸ்கெட்ச். விடியாட்டா என்ன பண்றது அதுக்கு ஒரு ஸ்கெட்ச். ரெண்டு ஸ்கெட்ச் ரெடிபண்ணிக்கனும் வாத்யாரே.
தாளி இன்னையோட என் கதை முடியப்போவுதுன்னு வைங்க. இன்னைக்கு என்னால ஒதகாத வேலை செய்யமுடியுமா? காரணமில்லாம அடுத்தவன் வயித்தெறிச்சலை கொட்டிக்கமுடியுமா? முடியாது.
அதுக்குன்னு ஓம்கார் ஸ்வாமிகளை, அய்யர் தி க்ரேட்டை எல்லாம் விட்டு வைக்க முடியுமா? கிழிச்சுத்தான் ஆகனும். இன்னையோட என் கதை முடியப்போவுதுன்னா என் கிழிப்பே வேற மாதிரி இருக்கும்.
நாம உசுரோட இருக்கிறப்ப என்னெல்லாம் நடக்கக்கூடாதுன்னு பாடுபட்டிருப்போமோ அதெல்லாம் நடந்துரும். அதான் லைஃப்.
இந்திரா காந்தி இன்னா நினைச்சாய்ங்க. ராஜீவ் பைலட். சஞ்சய் தான் பாலிடிக்ஸுனு கணக்கு போட்டாய்ங்க. மேட்டர் என்னாச்சு?
எம்.சி.யாரு ஜெயலலிதாவோட யாரும் காண்டாக்டே வச்சுக்ககூடாதுன்னாரு . மேட்டர் என்னாச்சு?
இப்ப த. நாட்ல தாத்தா ஸ்டாலின் தான் சி.எம் முங்கறார். நாளைக்கு என்னாகுமோ?
நான் என்ன சொல்லவரேன்னா நாளைக்கு இன்னா நடக்கும்னு ஒரு ம..ரு கியாரண்டியும் கிடையாது.தாளி இன்னைக்கே கொஞ்சம் நிம்மதியா இருந்தா என்ன?
வாழ்க்கைங்கறது ஓட்டப்பந்தயம். உலக மக்கள் எல்லாம் சக போட்டியாளர்கள்னு வைங்க. அல்லாரும்தான் ஓடறோம். ஓடி இன்னாத்த புடுங்க போறோம்? அரசு ஊழியர்களோட பென்சன் பணத்தையெல்லாம் ஷேர் மார்கெட்ல வேட்டு விடப்போறாய்ங்களாமே?
தின்னும், தின்னாமயும் வாங்கி போட்ட ஃப்ளாட்டை எல்லாம் கட்சிக்காரவுக ஸ்வாஹா பண்ணிர்ராய்ங்களாமே.
சாலை விபத்து, மாரடைப்பு இப்படி எத்தனை இழவு இருக்கு. அல்லாரும் போயி டார்கெட்டை ரீச் பண்ணவா போறோம். இல்லே நடுவுல கழண்டுக்கறவன் எத்தனைப்பேரோ? ஏன் நானே கூட கழண்டுக்கலாம்.
எங்க குடும்பத்துல மட்டும் கணக்கெடுத்தா அப்பா,அம்மா,பாட்டி, அண்ணனுக ரெண்டு பேரு எல்லாரும் காலி. நானும் ஒரு நாள் காலி. நீங்களும் ஒரு நாள் காலி. சினிமான்னா எல்லாருக்கும் ஒரு கவர்ச்சியிருக்கு.ஏன் தெரியுமா அதுக்கு ஒரு டெட்லைன் வச்சான். முடிஞ்சு போயிரும்.
நம்ம லைஃபுக்கும் டெட்லைன் இருக்கு தலை. என்ன கொஞ்சம் ட்ராகிங் (இழுவை) சாஸ்தி) .அம்புட்டுதேங்.
மொத்தமா ஏன் பார்க்கிறே. ப்ரிட்டீஷ் காரன் மாதிரி டிவைட் அண்ட் ரூல். இளமை, மத்திய வயசு, முதுமைன்னு பிரிச்சுக்க. அப்பா,அம்மாவுக்கு, பெண்டாட்டிக்கு,பிள்ளைகளுக்கு, உனக்குன்னு வாழ்க்கையை பிரிச்சுக்க. இதுக்கப்புறம் அது,அதுக்கப்புறம் அது பிசினஸ் எல்லாம் கிடையாது.
ஸ்கூல் டைம் டேபிள்ள பீரியட்ஸ் பிரிக்கிற மாதிரி பிரிச்சுரு. ஏசு சொன்னாரே அரசனுக்கு தருவதை அரசனுக்கு தாருங்கள், தேவனுக்கு தருவதை தேவனுக்கு தாருங்கள் . அப்பாறம் எங்கே நிம்மதின்னு பாடவே நேரமிருக்காது ஆமா.
ஆமா ஊருக்கு உபதேசம் கொடுக்கிறது ஈஸிண்ணே.. நீங்க நிம்மதியா இருக்கிங்களானு என்னை கேப்பிக. முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன் பாஸ். என் எழுத்தெல்லாம் இடைக்கால முடிவுகள் தான்.
கிரகங்கள் வக்கிரமானா பழைய சம்பவங்க நடக்கும் .ரிப்பீட்டாகும்னு எழுதியிருந்தேன். தாளி.. 1993 ல வந்த வீசிங் பிரச்சினை இப்ப மாட்டிக்கிச்சு. மேட்டர் என்னடான்னா வசதி காரணமா சிகரட்ஸோட நெம்பர் சாஸ்தியாயிருச்சு. வேளைக்கு சோறு கிடைக்குது. ( 1997லருந்து நோ ப்ரேக் ஃபாஸ்ட்) ராத்திரில டிஃபன் தான் . இருந்தாலும் ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ் கிடையாது.
இந்த இழவுல தலைக்கு ஹென்னா போட்டேன். தலைக்கு குளிச்சன். பாதி ராத்திரி பசி வயித்தை கிள்ள கருப்பு திராட்சை சாப்டேன். ரீ ஓப்பன் ஆன அஜந்தா ஹோட்டல்ல பைத்தியம் பருப்பு சாம்பார்ல ஊற வச்ச 3 இட்லி பல்பு மாட்டிக்கிச்சு.
உங்கள்ள எத்தனை பேருக்கு வீசிங் பிரச்சினை இருக்கு? உங்களை சேர்ந்தவுகள்ள எத்தனை பேருக்கு வீசிங் பிரச்சினை இருக்கு? டேட்டா ப்ளீஸ். வீசிங் பத்தி படம் வரைஞ்சு பாகங்கள் குறிக்கிற அளவுக்கு எக்ஸ்பீரியன்ஸ் எனக்குண்டு. மருந்து மாயமில்லாமயே துரத்தி விட்டுட்டேன் பாஸ். இந்த குரு கிரக வக்கிரத்தால் ரீ என்ட்ரி கொடுத்துருச்சு.
நிம்மதின்னா என்னனு அனுபவபூர்வமா தெரிஞ்சிக்கிடனும்னா தாளி வீசிங் வரனும். அதுலருந்து ரிலீவ் ஆகனும்.அப்பத்தான் தெரியும் நாம எந்தளவுக்கு நிம்மதியா இருந்தோம்னு.
இனி எங்கே நிம்மதின்னு கேள்வியே கேட்காதிங்க பாஸ். நிம்மதி இங்கன இப்ப இருக்கு. உடனே பொறுக்கு. நிம்மதிக்கு வேட்டு வைக்கிறதெல்லாம் நறுக்கு.