Monday, October 26, 2009

பத்தினியெல்லாம் பரத்தையாக போறா !

நாம் சோற்றுக்கில்லாது சாகும் காலம் வெகு தொலைவில் இல்லை
இதில் உங்களுக்கு சந்தேகமா ? கீழ் காணும் புள்ளிவிவரங்களை பாருங்கள் . நாம் சோற்றுக்கில்லாது சாகும் காலம் வெகு தொலைவில் இல்லை
1. விவசாய உற்பத்தி குறைவது 1995-96 லேயே துவங்கிவிட்டது.
2. சுமார் 70 சதவீதம் பேர் சுகுரா சொன்னா 68 % பேர் விவசாயத்தை நம்பியிருக்காங்க (மத்த 30 சதம் பேரும் திங்கறதுக்காகவாவது விவசாயத்து மேலதானே ஆதாரப்படனும்? மேலும் 68% விவசாயத்துல லோல்பட்டு பொருளீட்டினா மத்த 32 சதவீதம் அவனை நேரிடையாவோ ,மறைமுகமாகவோ எக்ஸ்ப்ளாயிட் பண்ணித்தானே பிழைக்கிறோம்
3. மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டை பாருங்க:
எழுவது சதவீதம் மக்களை வாழ வைக்கும் விவசாயத்துறையின் நாடித்துடிப்பான நீர்ப்பாசனத்துக்கு 0.35 சதவீதம் . சுமார் 2 % பேரை மட்டும் வாழவைக்கிற தகவல் தொடர்பு துறைக்கு 13 % . உருப்படுவோமா ? என்னதான் லொல்லு பண்ணாலும் லல்லு சூப்பர் தத்துவம் ஒன்னு விட்டாரு. பால் குடுக்கிற மாட்டுக்கு புண்ணாக்கு போட்டேன். புண்ணாக்கு போட்ட மாடெல்லாம் பால் கறந்துச்சு. ஆனால் நாம என்ன பண்றோம் வெறுமனே சாணி போட்டு, கோமயம் பெய்யற மாடுகளுக்கு டன் டன்னா புண்ணாக்கு போடறோம்
4. நாட்டில் உள்ள 80 சதவீதம் விவசாயிகளுக்கு 1 ஹெக்டேருக்கும் குறைவான நிலம்தான் இருக்கு. ( பயிர் செலவை குறைக்கனும்னா மெக்கனைசேசன் பண்ணனும், சொட்டு நீர்பாசனம், செக் டேம் ,லொட்டு லொசுக்குனு ஆயிரம் பண்ணனும் அந்த நொள்ளை ஒரு ஹெக்டேருக்கு இதெல்லாம் பண்ணா கட்டுப்படியாகுமா? இதுக்குதான் நான் 1986 லருந்தே கூவிக்கிட்டு இருக்கேன். கூட்டுறவு பண்ணை விவசாயம் செய்யலாம். நாடு முழுக்க உள்ள விவசாயிகளை திரட்டி கூட்டுறவு சங்கம் வைப்போம். விவசாயி தன் நிலத்தை நீண்ட குத்தகைக்கு தரான் (சங்கத்துக்கு) விருப்பம் இருந்தா அவனும் உழைக்கிறான். (குத்தகை தனி விளைச்சல்ல பங்கும் கிடைக்கும். வேணாம்னா குத்தகை வாங்கி திங்கலாம்) இதை ஒய்.எஸ்.ஆர் ட்ரை பண்ண பார்த்தார். மொத்தமா 3 கிராமம் கூட முன்வரலை (எதிர்கட்சிங்க லொள்ளு காரணமா)
5.இதுல அதிர்ச்சிக்குரிய மற்றொரு விஷயம் என்னன்னா இப்போ உள்ள விவசாயிகள்ள 40 % பேரு விட்டு தொலைச்சுரலாம்னு இருக்கேன்னு சொல்றாங்களாம் .
6. விட்டுட்டா என்னாகும்? 2006 லயே 50 லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்தோம். இந்திரா காந்தி காலத்துல ரஷ்யாலேருந்து கோதுமை இறக்குமதி பண்ணப்போதான் பார்த்தினீயம் இந்தியாவுக்குள்ள வந்துருச்சாம். அதை எரிச்சா கூட விதைகள் பட் பட்டுனு வெடிச்சு தூர விழுந்து அங்கே முளைக்கும்னா பார்த்துக்கோங்க ( இது முக்கியமான களைங்கோ !) இது மட்டுமில்லே 2007 ஜூனுக்கு பற்றாக்குறை நிலை எவ்ளனு பாருங்க !
கோதுமை: 40 லட்சம் டன்
பருப்பு வகை: 10 லட்சம் டன்
எண்ணெய் வித்துக்கள்: 20 லட்சம் டன்
பற்றாக்குறைன்னா நமக்கென்ன போச்சுனு நினைச்சுராதிங்கன்னா ! சரக்குக்கு டிமாண்ட் ஜாஸ்தியாச்சுன்னா மார்கெட்ல ரேட்டு பிச்சுக்கும்.

7. இறங்கு முகம்:
ரஜினியோட மூன்றுமுகம் மாதிரி இறங்கு முகம்னு ஒரு படம் எடுத்தா இந்தியாவோட விவசாயத்துறைய ஹீரோவா போட்டுரலாம். 1995ல சராசரி தானிய உற்பத்தி 207 லட்சம் டன் 2007 ஆம் வருசம் பார்த்திங்கண்ணா 186 டன் வித்யாசம் என்ன ? கூட்டி கழிச்சு பாருங்க ! 21 லட்சம் டன் குறைஞ்சு போச்சு. இப்போ 2009 வருசத்துக்கு எத்தனை குறையும்னு கற்பனை பண்ணி பாருங்க தாளி ! சோத்துக்கில்லாம சாகப்போறது நிச்சயம்.

8.மற்ற துறைகளில் முதலீடு செய்தா அதுலருந்து கிடைக்கிற வருமானம் வருசத்துக்கு 4 சதவீதம் உயருது. விவசாயத்துல ? நல்லா உத்து படிங்க 0.28% தான். என்னா மயித்துக்கு விவசாயம் பண்ணுவான் விவசாயி. உழுதவன் கணக்கு பார்த்தா உழக்கு கூட மிஞ்சாதுனு அன்னைகென்னைக்கோ சொல்லிவச்சது இன்னைக்கும் நடக்குதுன்னா இதான் வளர்ச்சியா?
9 வருசத்துக்கு 20 ஆயிரம் விவசாயி தற்கொலை பண்ணிக்கிரான். ( ஆந்திரால ஒய்.எஸ்.ஆர் முதல்வரானதும் பழைய கரெண்ட் பில் பாக்கி மொத்தத்தையும் ரத்து பண்ணாரு. இலவச மின்சாரம் கொடுத்தார்)
10. பஞ்சாப்ல 7 வருசத்துக்கு முன்னாடி( அதாவது 2000 வருசத்துல) ஏக்கருக்கு 25 குவிண்டால் கோதுமை கிடச்சது. இப்போ (2007ல) 16 குவிண்டால் தான் கிடைக்குது. என்ன காரணம்? மாட்டுக்கு இஞ்செக்ஷன் போட்டு பாலை ஒட்டக்கறந்த மாதிரி கண்ட உரத்தை போட்டு பூமியோட சாரத்தை உறிஞ்சு எடுத்தாச்சு. பிரசவம் நடந்தாலே டீல் ஆயிரும். குறுகிய கால சாகுபடி எல்லாம் அபார்ஷன் மாதிரிதானே . நம்மாழ்வார் மாதிரி பார்ட்டிங்க இயற்கை விவசாயம் பண்ண்வோம்
னு தலை தலையா அடிச்சிக்கிறாங்க கேட்டாதானே !
11.இதர சமாச்சாரங்களுக்காக (ரியல் எஸ்டேட், தொழிற்பூங்கா , இத்யாதி) வருசத்துக்கு 7.5 லட்சம் ஹெக்டேர் நிலம் டைவர்ட் ஆகுது. தாளி சாரம் குறைஞ்சுக்கிட்டே வருது , இதுல நிலத்தோட அளவும் குறைஞ்சிட்டே போனா என்னாத்த வெளையறது, என்னாத்த திங்கறது.
12. தேசிய உற்பத்தின்னா என்னானு தெரியுமான்னா ? ஒரு வருசத்துல நாட்ல உற்பத்தியான சரக்குகள்மற்றும் அளீக்கப்பட்ட செர்வீஸசோட வேல்யூதான் தேசீய உற்பத்தி. 1975 ல விவசாயத்துறையோட பங்களிப்பு 35 % இப்போ 19 சதவீதம். லல்லு ரயில்வே மந்திரியாகறதுக்குமுந்தி ரயில்வேயோட லாபம் 2 சதம். ஆனா இப்போ ?
கெவர்மென்டு ரோட்ல பஸ் விடறவன் கோடி கோடியா குவிக்கலாம். ஆனால் சொந்த ட்ராக்ல ஓடற ரயில் சம்பாதிக்க கூடாதானு யோசிச்சாரு லல்லு. உண்மையான ப்ரொடக்டிவிட்டி உள்ள ஒரே துறை விவசாயதுறைதான். மற்றதெல்லாம் கன்வெர்ஷன் தான். ஒரு கடலைக்கொட்டைய புதைச்சு வச்சா 40 கொட்டையாவது கிடைக்கும் . ஒருலட்ச ரூபா நானோ காரை புதைச்சு வச்சா என்ன கிடைக்கும் ? காயலான் கடைக்கு போட்டா பட்டாணி கிடைக்கும் அவ்ளதான்.
13.இன்னொரு வெட்ககேட்டை பாருங்க இருக்கிற நிலத்துல 60 சதவீதம் வானம் பார்த்த பூமி தானாம் (மத்ததெல்லாம் நமீதாவை பார்க்குதானு கேட்ராதிங்க) சுதந்திரம் வந்து 60 வருசத்துக்கப்பறம் இது நிலைமை
14.ஒட்டுமொத்தமா விவசாயத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை பாருங்க ! முதல் ஐந்தாண்டு திட்டத்துல 23% பத்தாவது ஐந்தாண்டு திட்டத்துல ... மயக்கம் போட்ராதிங்க வெறும் 5 சதவீதம்.

இதெல்லாம் பார்த்துட்டுதான் சொல்றேன். என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் அமல் படுத்தபடலேன்னா சோத்துக்கில்லாம சாகப்போறோம். பத்தினியெல்லாம் பரத்தையாக போறா ! அஞ்சுக்கும் பத்துக்கும் குத்தி கொன்னுக்கிட்டு சாகப்போறோம் .(இப்பவும் அதான் நிலைன்னா சாரி. நிலைமை இதை விட ரொம்ப மோசமாயிரும்)

இந்த நிலை வந்துவிடக்கூடாதென்று 1986 முதல் நதிகள் இணைப்புக்காக தனியொரு பாதையில் என் முயற்சிகளை தொடார்ந்து வருகிறேன். இது குறித்த விவரங்களை எனக்கும் மனசாட்சிக்கும் நடக்கும் உரையாடலாய் ( கொஞ்சம் நகைச்சுவையுடன் தருகின்றேன்)
அதற்கு முன் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

இப்போது இது தொடர்பாக எனக்கும் என் மனசாட்சிக்கும் இடையிலான உரையாடலை பாருங்கள்

மனசாட்சி: ஏம்பா இப்படி ஆரம்பிச்சு நீ ஆதியோடந்தமா எழுத ஆரம்பிச்சா சனம் படிக்குங்கற
நான்: இல்லைதான் அதுக்காக சொல்லாம விட்டுர முடியுமா?
மனசாட்சி:இது எப்படியிருக்குன்னா சுஜாதாவே மேலுப்பா புரிஞ்சவ புரிஞ்சுக்க புரியாதவன் சொரிஞ்சுக்கிட்டு போன்னாரு. நீ சொல்றத பார்த்தா நான் சொல்லிருவன். அதுவும் மொக்கை போட்டு சொல்வேன். படிக்கிறவன் படிங்கறமாதிரி இருக்கு.
நான்:இப்ப என்ன செய்யனுங்கற?
மனசாட்சி: ச்சும்மா தமாசா சொல்ப்பா !
நான்: நாட்டோட எதிர்காலம் உனக்கு தமாசா இருக்கா ?
மனசாட்சி:தா பாரு அடல்ட் ஜோக்கெல்லாம் போட்டவன் நீ ஆப்பரேஷன் இந்தியா பத்தி மொக்கை போடாம சொல்லுன்னா கோச்சுக்கறியே
நான்:இப்ப என்ன கிச்சு கிச்சு காட்டிக்கிட்டே சொல்லனும் அவ்ளதான?
மனசாட்சி:தட்ஸ் ஆல் யுவர் ஆனர்
நான்: இந்த திட்டத்தோட ஆதி மூலம் என்ன தெரியுமா ?
மனசாட்சி:உள் மூலமா வெளி மூலமா கண்ணா ?
நான்:இதெல்லாம் ஓவர்.
மனசாட்சி: நாம என்ன க்ரிக்கெட்டா ஆடறோம்?
நான்:என்னை சொல்ல விடறியா?
மனசாட்சி:எங்கே உன்னை சொல்ல விட்டா வந்தவன் எல்லாம் தலை தெறிக்க ஓடிர்ர மாதிரியிருக்கே
நான்: உன்னோட இதே ரோதனையா போச்சு. வர வர நீ ந்யூஸ் சேனல்ஸ் பார்த்து கெட்டுப்போயிட்டே .எதிர்கட்சி மாதிரி தாலியறுக்கிறே..
மனசாட்சி:இன்னாபா ஃப்ளோ கட் ஆயிருச்சா?
நான்: உனக்குதான் கட் ஆகப்போவுது டங்குவார்
மனசாட்சி: இதானாப்பா இந்தியாவை பணக்கார நாடாக்கறதுல உனக்கிருக்கிற அக்கறை?
நான்: திட்டத்துக்கு இன்ஸ்பிரேஷன் யாரு தெரியுமா? என்.டி.ஆர். சமுதாயமே என் கோவில் ஏழை மக்களே என் தெய்வங்கள்னாரு அவரு ..
மனசாட்சி:இன்ஸ்பிரேஷன் கீட்டம். ஏதோ ஒரு சம்பவம் ட்ரிக்கர் மாதிரி வேலை செய்திருக்குமே?
நான்:ஆமாம்பா. நான் டிகிரி செகண்ட் இயர் படிக்கிறேன்.அப்ப ஒல்லியா ஒரு பையனும், கில்லியா ஒரு பெண்ணும் ஓடி வந்துட்டாங்க, பிரம்பு நாற்காலி பண்றவங்க. கல்யாணம் பண்ணிக்க போறாங்க. நம்ம சென்டர் இருந்த தெருவுல குடியிருந்தாங்க. அப்போ ஒரு டெயிலர் கடைலதான் டெண்ட். செட்டுல ஒரு நாய் என்ன சொல்லுச்சு தெரியுமா ? "பட்டா ! இந்த ஒல்லிபீச்சான ரெண்டு காட்டு காட்டி (அடித்து) அவளை முடிச்சுரனும் மாமா" இத்தனைக்கும் அவன் நல்ல குடும்பத்து பையன் தான். இன்டலிஜெண்ட் தான்.
மனசாட்சி:அட காஞ்சானுங்களே ! அம்பதுக்கு நூறுக்கும் வரத்தான் நூறு டிக்கட் காத்திருக்கே.. இதெல்லாம் காண்டுதானே !
நான்: இல்லையா பின்னே அப்பத்தான் முடிவு பண்ணேன். தாளி இவனுகளை சும்மா விட்டா பிழைக்க விடமாட்டானுக . பேய்க்கு வேலை கொடுத்த மாதிரி கொடுத்துரனும்னு
மனசாட்சி:என்னா வேலைப்பா?
நான்:அந்த நிமிஷம் எனக்கே தெரியாது. அப்பறப்பறம்.. இந்தியாவுக்கும், விவசாயத்துக்கும் உள்ள பொருத்தம் இத்யாதியெலாம் உறைச்ச பிறகு, வடக்குல வெள்ளம், தெற்கில வறட்சி வந்து விவசாயத்தோட முதுகெலும்பை நொறுக்கற சங்கதியெல்லாம் கூட்டி கழிச்சு தான் வேலையற்ற யுவதி,யுவர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்தி நதிகளை இணைத்தல் என்ற . கான்செப்ட் உருவாச்சு
மனசாட்சி: நீ சொல்றதெல்லாம் வெறும் யோசனை மாதிரியிருக்கே தவிர திட்டங்கற மாதிரி தெரியலியே.
நான்: கண்ணா ! நான் சுருக்கமா சொன்னேன். இதுக்கான தியரிட்டிகல் சப்போர்ட்ட விவரிச்சா மொக்கை போடறேன்னிருவ. நம்ம சைட்லயே சீரியஸா இன்னொரு பதிவு போட்டிருக்கேன். தேடிப்பிடிச்சு படி..
மனசாட்சி:அது சரி அது சரி. மேலே போ!
நான்:வேணாம்பா ஒய்.எஸ்.ஆர் அப்படி மேலே போய்தான் ஒரேதாட்டியா போய் சேர்ந்துட்டாரு.
மனசாட்சி: சரி முந்துக்கு போ ! (முன்னாலே போ)
நான்:இப்படித்தான் சந்திரபாபு 9 வருசமா முந்துக்கு போவாலி ! முந்துக்கு போவாலி !ன்னு ஜல்லியடிச்சிக்கிட்டிருந்தாரு. இன்னைக்கு நாறிட்டாரு

மனசாட்சி:என்ன நீ நான் ஏதோ உன்னை கலாய்க்கலாம்னு பார்த்தா நீ என்னை கலாய்க்கிறே !
நான்:நைனா என் வயசு 42 அதை திருப்பி போடு 24 ! தப்பாட்டம் ஆட இறங்கிட்டேனு வை .. நாஸ்திதான்
மனசாட்சி: அட வேணாம்பா ஆள விடு
நான்: விசயத்துக்கு வரேன்
மனசாட்சி: வா.. வா..
நான்:வேலை கொடுக்கனும். அதுக்கு சிறப்பு ராணுவம். இந்தியாவோட உயிர் நாடி ,70% பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிற துறை ,உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற துறை, பொல்யூஷனுக்கிடமில்லாத ஒரே துறை விவசாயத்துறை அதுக்கிருக்கிற பெரும் பிரச்சினை பாசன் நீர் பற்றாக்குறை. அதுக்காக அந்த சிறப்பு ராணுவத்துக்கு கொடுக்கிற வேலை நதிகளை இணைத்தல்
மனசாட்சி: ஏன்பா தெரியாம கேட்கிறேன். ஒய்.எஸ். ஏதோ கோவணம் சைஸுக்கு கால்வாய் வெட்டி கிருஷ்ணாவையும், கோதாவரியையும் இணைக்கிறேன்னாரு. அதுக்கே நிலத்தை கையகப்படுத்தறதுல ஆயிரம் வில்லங்கம். இதுல எல்லா நதிகளையும் இணைக்கனும்னா?

நான்:சரியான கேள்வி. இதுக்குதான் கூட்டுறவுப்பண்ணை விவசாயம். விவசாயிகள் எல்லாரும் தங்கள் கிராமத்துல ஒரு கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்து தங்களோட நிலத்தை மேற்படி சங்கத்துக்கு லீசுக்கு கொடுத்துருவாங்க. அதுல கால்வாய் வெட்ராங்களோ ,கோல்ட் ஸ்டோரேஜு கட்டறாங்களோ, பல்ப் இண்டஸ்ட்ரி வைக்கிறாங்களோ அதுக்கும் வருசா வருசம் வர்ர லீசு தொகைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. டாணு வந்துரும். சங்கத்துல இருக்கிற விவசாயிகள் எல்லாரும் டீமா பயிர் வேலை பார்ப்பாங்க.
மனசாட்சி:இன்னொரு சந்தேகம் !
நான்:கேட்டுத்தொலை
மனசாட்சி: நானே ஒரு 50 ஏக்கர் வச்சிருக்கேனு வை . அதை சங்கத்துக்கு லீசுக்கு கொடுத்துட்டேன். ஆனால் நான் எப்படி மம்முட்டி பிடிச்சு வேலை செய்வேன்?
நான்:செய்யாதே..வருசா வருசம் லீசு வாங்கி சாப்பிடு
மனசாட்சி:ஒரு வேளை கூட்டுறவு பண்ணை விவசாயம் ஊத்திக்கிட்டா?
நான்:அபிஷ்டு ! அபிஷ்டு! இதுக்கு முன்னாடி ஒரு பதிவு போட்டிருக்கேன் படிச்சு பாரு. 80 சதம் விவசாயிக்கிட்டே ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலம்தான் இருக்கு. விவசாயம் சக்ஸஸ் ஃபுல் ஆகணும்னா பயிர் செலவை குறைக்கனும். அதுக்கு மெக்கனைசேஷன், தொழில் நுட்பம், வாட்டர் மேனேஜ்மென்ட், நில பரிசோதனை, தரமான விதைகள், இயற்கை விவசாயம், க்ராப் இன்ஷியூரன்ஸ் லொட்டு லொசுக்குனு ஆயிரம் இருக்கு. ஒட்டு மொத்தமா இன்வெஸ்ட் பண்ணா செலவை குறைக்கலாம். அதை ரஜினி மாதிரி சிங்கிளா வந்து சாதிக்க முடியாதில்லை. அதுக்குதான் கூட்டுறவு பண்ணை விவசாயம்
மனசாட்சி:தனியா மாட்டிக்கிட்டு சாகறதுக்கு பதில் சங்கமா மாட்டி சாவுங்கற.
நான்:முண்டம் ! தண்டம் ! நீ தனியாளா இருந்தா எல்லாத்துக்கும் நீ அலையனும். சங்கமா இருந்தா எல்லா நாயும் உங்களை தேடிவரும். உன் நிலத்தோட விஸ்தீரணம் குறைவா இருந்தா பாங்கிகாரன் கடன் குடுக்க ரோசிப்பான். அரசாங்கமும் உன்னை தேடி பிடிச்சு உதவ மெனக்கெடனும் சிகப்பு நாடாத்தனத்துல விதை வர்ரதுக்குள்ள விதைக்கிறா சீசனே போயிரும். நீ சங்கமா இருந்தா அதுலயும் ஒரு மண்டல அளவுல ஒருங்கிணைப்பு இருந்தா ஆஃபீஸர்ல இருந்து, பாங்கி,இன்ஷியூரன்ஸ் எல்லாமே உங்க ஆஃபீசண்டை வந்து தவம் கிடப்பான்
மனசாட்சி:அதுசரிப்பா.. தனியா செய்தாலும், கூட்டா செய்தாலும் வந்த விளைச்சலை சரியான விலைக்கு விக்கனுமே
நான்:அதுக்கும் அதே விதிதான். விளைச்சல் எல்லாத்தயும் ஒரே நாள்ள, அவசரமா,தனி தனியா விக்க நினைக்கறதால விலையும் குறைச்சல், அலைச்சலும் கூட. விவசாயிகள் சங்க நிர்வாகம்னா முண்டாசு கட்டின பெருசுங்க ( எலக்டட் டைரக்டர்ஸ்) மட்டும் இருக்காது. அதுக்கு தேவையான எல்லா நிபுணர்களையும் அரசு கொடுத்து உதவும். தேசிய அளவுல அடுத்த வருசம் என்னென்ன தானியம் தேவை? எவ்ள தேவை, அதிகப்படியா வந்ததை எத்தனை நாள் ஸ்டாக் பண்ணனும் ?அதுக்கு எவ்ள பெரிய கிடங்கு தேவை, கோல்டு ஸ்டோரேஜ் தேவையா? இல்லே கன்ஸூமர் ப்ராடக்டா மாத்தி விக்கனுமா? அதுக்கு என்ன ஃபேக்டரி தேவை? இப்படி சகலமும் இன்டர் நெட் மூலமா விரல் நுனில இருக்கும்பா.
மனசாட்சி: சரி கண்ணு.. நீ சொல்றதெல்லாம் ஒர்க் அவுட் ஆகி லாபம் வந்ததுன்னே வை ..அதை எப்படி பிரிச்சுக்கறதாம்.
நான்:லேண்ட் ,லேபர்,கேப்பிடல் ,ஆர்கனைசேஷன் கெட்ஸ் ரெண்ட்,லேபர்,இன்டரஸ்ட், அண்ட் பிராஃபிட்.
மனசாட்சி:என்னமோ இங்கிலீஷ்லபீலா விட்டுட்ட
நான்:இதை தமிழ்லசொல்லனும்னா ஒரு பத்தி எழுதனும்பா
மனசாட்சி: சரி அண்ணாச்சி ! விவசாயி கூட்டா பயிர் பண்றான், விளச்சலை ஸ்டாக் வச்சு மார்க்கெட் பண்றானே வை. கருப்புபண முதலைங்க சும்மா இருக்குமாம். மார்க்கெட் கண்ட்ரோலே அதுங்க கிட்டதானே இருக்கு?
நான்: அதுக்கும் வச்சிருக்கேன் ஆப்பு. மத்திய அரசு 3 மாசம் நோட்டீஸோட இப்ப இருக்கிற கரன்ஸி செல்லாது,பழச வச்சிருக்கிறவனெல்லாம் அதுக்கு கணக்கு காட்டி புது கரன்ஸிய வாங்கிக்கனு அனவுன்ஸ் பண்ணிரும். கணக்கில்லாத பணமெல்லாம் மார்க்கெட்லருந்து வெளியேறிடும்.
மனசாட்சி: அக்காங்க் அஸ்கு புஸ்கு. இன் கம்டேக்ஸ் காரன் பிடிச்சுட்டா வருமானத்துக்கு அதிகப்படியா பிடிச்ச சொத்தெல்லாம் என் அம்மா,மனைவி,மகள்கள் தொழில் செய்து சம்பாதிச்சதுனு தப்பிச்சுக்கறான். கணக்கு காட்டறது என்ன பெரிய பிரம்ம வித்தையா அதுக்குதானப்பா அய்ய மாரெல்லாம் ஆடிட்டிங் படிச்சுட்டு காத்திருக்காங்க
நான்:தோ பார் ! இப்ப இருக்கிற நிலைய வச்சே கணக்கு போட்டு பேசறே. சிறப்பு ராணுவத்துக்கப்பால வேலையில்லாத பசங்களே இருக்கமாட்டாங்கப்பா . ஒரு ஆடிட்டர்கிட்டே 60 பேர் அசிஸ்டண்டா இருப்பான். அத்தினி பேரு இருக்கிறதைரியத்லதான் ஆடிட்டர் கச்சா முச்சானு க்ளையண்ட்சை ஏத்துக்கிட்டு பொய் கணக்கு காட்டறான். அந்த 60 பேரும் சிறப்பு ராணுவத்துக்கு போயிட்டா ?
மனசாட்சி: அதிகாரிங்க எல்லாம் கருப்பு பணத்துக்கு அது வெள்ளைதானு பொய் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறாங்கனு வை. அப்ப இன்னா செய்வீங்க அப்ப இன்னா செய்வீங்க
நான்: என் திட்டத்தை சக்ஸஸ் ஃபுல்லா அமல் படுத்தறதுக்காக எகானமி பேக்கேஜுனு ஒரு சப் ப்ராஜக்டு இருக்கு நைனா. அதுல முதல் அம்சமே அரசு துறை அதிகாரிங்க எலலாரையும் ஃபிசிக்கலா, சைக்காலஜிக்கலா டெஸ்ட் பண்ணுவம். இண்டியா டுடேங்கற தலைப்புல பரீட்சை வைப்போம். அதுல தேறினாதான் உத்யோகம் நைனா. இல்லேன்னா லாஸ் ஆஃப் பேல லீவ் கொடுத்து 3 மாசம் கழிச்சு ரீ எக்சாமினேஷன் வைப்போம் அதுலயும் டமாலாயிட்டா கோல்டன் ஷேக் ஹேண்டுதான்.
மனசாட்சி: அதுசரி கருப்பு பணம் வச்சிருக்கிறவன் தெருவுல போறவன் கிட்டே தன் பணத்தை கொடுத்து அவனோட வருமானமா காட்டி மாத்திக்கிட்டு வரச்சொல்றான்
நான்: அது வேலை வெட்டியில்லாத சனம் இருக்கிறப்ப நடக்கும். நாம தான் வேலையில்லாதவனே இல்லேனு ஆக்கிர்ரமே. சப்போஸ் அப்படியே மாத்த வச்சாலும் மாத்தறவன் சும்மா மாத்தமாட்டானில்லயா கு.ப.30 சதவீதமாவது கமிஷன் கேட்பானே. அந்த 30 சதம் கருப்பு பணமாவது மார்க்கெட்லருந்து ஒழியுதில்லயா?
மனசாட்சி:எப்படியோப்பா நல்லாவே கவர் பண்றே
நான்: நீ என்ன ஃபிகரா கவர் பண்ண
மனசாட்சி: இதுவரை நீ சொன்னதெல்லாம் சரினே வச்சுக்குவம்.நீ சொல்ற திட்டத்தை அமல் படுத்த வேண்டியது யாரு?
நான்:மத்திய அரசு
மனசாட்சி: அதாவது எம்.பி.கள்
நான்:யெஸ் .ஆமாம்
மனசாட்சி:டீக் ஹைனு ஹிந்தில கூட சொல்லு மும்மொழி திட்டத்தை அமல் படுத்தினாப்ல ஆயிரும்,
நான்: நீ என்ன கேள்வி கேட்கப்போறேனு எனக்கு புரிஞ்சு போச்சு. கோடி கோடியா செலவு பண்ணி எம்.பி.ஆனவன்/ ஆயிரமாயிரம் கோடி செலவழிச்சு பதவிக்கு வந்த மந்திரி அவனை மந்திரி ஆக்கினவங்க அவங்களுக்கே ஆப்பு வச்சுக்குவாங்களானு தானே கேட்கிறேன்
மனசாட்சி:கிரிக்கெட்டு.
நான்:இப்படி ஒரு வில்லங்கமிருக்கிறதாலதான் நம்ம ஆப்பரேஷ்ன் இந்தியால முதல் அம்சமே நேரிடை ஜன நாயகம்னு வச்சிருக்கோம்.பிரதமரை மக்கள் நேரிடையா தேர்ந்தெடுப்பாங்க . அதனால் அவருக்கு ஃபுல் பவர்ஸ் இருக்கும். முக்கியமா பார்லிமென்ட்ல வீட்டோ பவர் இருக்கும். கருப்பு பண முதலைகள் எம்.பிக்களைவிலைக்கு வாங்கி திட்ட அமலுக்கு ப்ரேக் போட முயற்சி பண்ணாலும் பருப்பு வேகாது.
மனசாட்சி: நெரிடையா எலக்ட் ஆகிற பிரதமர் மட்டும் எப்படி நியாயமான ஆளா இருக்க முடியும்?
நான்:இப்போ பாராளுமன்ற தேர்தல்கள்ள ஆந்திரால காங்கிரஸ் சக்ஸெஸ் ஆச்சு. எப்படி? டாக்டர் ஒய்.எஸ்.ஆரோட எம்.ஜி.ஆர் வேலைகளால வெற்றி கிடைச்சுது. ஆனால் மத்திய அரசை வழி நடத்தறது யாரு சோனியா. மக்கள் சோனியாவுக்காகவோ , நேரு குடும்பத்துக்காகவோ ஓட்டு போடனும்னா 1994 போட்டிருக்கலாம், 1999 ல கூட போட்டிருக்கலாம் இல்லியா?
மனசாட்சி: நீ என்ன சொல்ல வர்ரே ஸ்ட்ரெயிட்டா சொல்ல்லுப்பா சுத்தி வளைக்காத.
நான்:செக்ஸுல கூட இப்படிதான் அன்பான பேச்சு, முத்தம்,ஃபோர் ப்ளே எதுவுமில்லாம ஸ்ட்ரெயிட்டா விஷயத்துக்கு போயிர்ரதாலதான் பெண்ணுக்கு சரியா லூப்ரிக்கேட் ஆகாம, ஆணுக்கு ப்ரி மெச்யூர்ட் எஜாகுலேஷனாகி, பெண்ணுக்கு ஆர்காசம் கிடைக்காம நாஸ்தி ஆகிப்போவுது
மனசாட்சி:அய்யயோ இன்னாபா இது மாத்ரு பூதம் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டே. தாய் குலமெல்லாம் படிக்கிறாங்கப்பா.
நான்:ஏன் பாக்யராஜ் படத்துல முருங்கைகாய் சமாச்சாரம் வந்தா ரசிக்கலை? தப்பித்தவறி இந்த பதிவை க்ளிக் பண்ணிட்ட இளைஞர்கள் விலகிராம படிக்க
இதுவும் தேவைப்படுதுப்பா
மனசாட்சி: என்ன இழவோ விஷயத்துக்கு வா
நான்: நான் என்ன சொல்றேன்னா நாட்ல இருக்கிற பி.சி.,எஸ்.சி,எஸ்.டி,மைனாரிட்டி எல்லாம் சேர்த்து 72% இருக்காங்க. மும்முனை போட்டி ஏற்பட்டு இதுல பாதி பேர் ஒத்துமையா ஓட்டு போட்டா கூட இவிங்க சப்போர்ட் பண்ற ஆளு, இவிங்களோட வெல் விஷர் பிரதமராயிருவாரு. எம்.பிங்க தயவும் தேவையில்லை. அது தேவையில்லைங்கறதால டாட்டா,பிர்லா தயவும் தேவையில்லே, பதவிக்கும் கண்டம் வராது. ஒழுங்கா மக்களுக்கு செய்ய வேண்டியத செய்தா படுத்துக்கிட்டே ஜெயிக்கலாம்
மனசாட்சி:இதான் ஆப்பரேஷன் இந்தியாவா
நான்:யெஸ்ஸு..
மனசாட்சி:திட்டம் சரிப்பா . இதனோட அமலுக்காக என்ன கிழிச்சிருக்கே
நான்: அதெல்லாம் ஏற்கெனவே விரிவா இந்த வலைப்பூல சொல்லியாச்சுப்பா
தலைவன்னு எவனெவன் இருந்தானோ ,இன்னைக்கு இருக்கானோ எல்லாத்துக்கும் ஹோல்சேலா, ரீடெயிலா அனுப்பியாச்சுப்பா. லோக் சபா ஸ்பீக்கருக்கு 200 பிரதி அனுப்பினேன். தமிழ் நாடு,ஆந்திர ஹை கோர்ட் நீதிபதிகளுக்கு அனுப்பினேன், சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு அனுப்பினேன், எல்லா எம்.பிக்களுக்கும் மெயில் அனுப்பினேன். ( நோ சச் யூசர்னு ரிட்டர்ன் வந்துருச்சு எல்லாமே)
மனசாட்சி:மொத்ததுல டெஸ்பாச் க்ளர்க் மாதிரி வேலை செய்திருக்கே.
நான்: சந்திரபாபுவுக்கு 97 ல ருந்து 02 ஏப்ரல் 22 வரை அனுப்பினேன். பதில் இல்லேனு பத்து ரூபா எம்.ஓ அனுப்பினேன். அது டெலிவரி ஆச்சு. கன்ஸ்யூமர் ஃபோரத்துல கேஸ போட்டேன். எனக்கு நானே ஆப்பு வச்சுக்கிட்டேன். கண்டமேனிக்கு என்னை லந்து பண்ணாங்க. இன்ஃபர்மேஷன் ஆக்ட் பிரகாரம் ஃபைட் பண்ணேன். ஹ்யூமன் ரைட்ஸ் கமிஷனை அப்ரோச் பண்ணேன். யூ.என்.ஓக்கு கம்யூனிக்கேட் பண்ணேன்.
பத்து நாள் உண்ணாவிரதமிருந்தேன். தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கு ஸ்டேட்மென்ட் கொடுத்துக்கிட்டிருந்தேன். ப்ரெஸ் மீட் வச்சிருக்கேன். ஒய்.எஸ்.சி.எம்.ஆன புதுசுல ஹைதராபாதுக்கு பாதயாத்திரை புறப்படறதா சொல்லி அலம்பல் பண்ணேன். ஒரு மயிரும் நடக்கலை
மனசாட்சி:இப்போ என்ன பண்றே?
நான்: செக்ஸ் ஜோக் எழுதிக்கிட்டிருக்கேன்
மனசாட்சி: ப்தூ.. இதுவும் ஒரு பிழைப்பா
நான்: சோடா புட்டிகண்ணாடிங்க அம்பதோ அறுபதோ படிச்சா போதுமுனு நினைக்கல கண்ணா சின்ன பசங்களை கூட நம்ம சைட் பக்கம் ஒதுங்க செய்ய தான் இன் டேக்டீஸ். இப்போ வார் ஸ்டார்ட்.
மனசாட்சி:என்னா வாரோ செருப்பு வாரா?
நான்:டங்குவார் அறுந்துரும்.
மனசாட்சி:அப்டின்னா என்னப்பா
நான்:எனக்கும் தெரியாதே
மனசாட்சி:ஆமா நீ தான் நவீன வாத்ஸாயனன் மாதிரி பில்ட் அப் தர ஆசாமியாச்சே இந்த திட்டம் அமலானா தீரக்கூடிய செக்ஸ் பிரச்சினைகள் என்னனு சொல்ல முடியுமா?
நான்:யூத்துக்கு காலாகாலத்துல வேலை கிடைக்காமதான் கல்யாணம் தள்ளிபோகுது. வேலை வெட்டி இல்லாத காரணத்தால சுய இன்பத்துக்கு பழக்கப்பட்டுர்ராங்க. இல்லேன்னா காமத்துக்கு காதல் வண்ணம் பூசி ஆசிட் அடிக்கிறாங்க கள்ள உறவு,ஈவ் டீசிங் பண்றாங்க, ரேப் பண்றாங்க. உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் ஆசைகள் வன்முறையா வெடிக்குது. சூடோ நக்ஸல்ஸ், ஃபேக்ஷனிசம், உதவாக்கரை அரசியல், சினிமாகாரனுக்கு தோரணம் கட்டறதுனு வீணாப்போறாங்க காலாகாலத்துல வேலை கொடுத்துர்ரமில்லே. ஒழுங்கு மரியாதையா கல்யாணம் பண்ணிக்கிட்டு செக்ஸை சட்டப்படி அனுபவிப்பாங்க எந்த வித காம்ப்ளெக்ஸுமில்லாம சக்ஸஸ்ஃபுல் செக்ஸ் லைஃபை லீட் பண்ணுவாங்க குழந்தையின்மை இத்யாதி பிரச்சினை வராது. தங்களுக்கு பிறக்கிற குழந்தைகளையும் நல்லா வளர்ப்பாங்க புதிய இந்தியா உருவாகும்.

மனசாட்சி:பழைய இந்தியாவை என்ன பண்றதாம். ஓல்ட் ஈஸ் கோல்ட் ம்யூசியத்துல வைக்கலாம்.