Friday, October 2, 2009

நாகார்ஜுன சாகர் அணை பிழைக்குமா ?

ஆந்திரத்தில் மெகமூப் நகர், கிருஷ்ணா,கர்னூல் மாவட்டங்களில் வெள்ளம் வந்து 20 அடி உயரத்துக்கும் மேலாக மழை நீர் ஓடியதாக ,உயிர்,சொத்து நஷ்டங்கள் பெரிய அளவில் நடந்ததாக செய்திகள் படித்திருப்பீர்கள். இது இயற்கையின் சீற்றம். கடந்த 100 வருடங்களில் இது போல் நடந்ததே இல்லை என்று முதல்வரும், அதிகாரிகளும் சால்ஜாப்பு கூறினர். நாகார்ஜுன சாகர் அணை பிழைக்குமா ? ஸ்ரீ சைலம் பிராஜக்டு நிலைக்குமா ? பிரகாஷ் ரிசர்வாயர் உயிர் தரிக்குமா ? என்று கௌன் பனேகா கரோர்பதி பாணியில் கேள்விகள். 1968 (என்று நினைக்கிறேன்) நள்ளிரவில் புயல் வந்து ஆந்திரத்தை புரட்டி போட்டதாம் . தமிழ் கூறு நல்லுலகம் கூட ஃபிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் உபயத்தில் சோக வயலின் பேக் கிரவுண்ட் மியூசிக்கில் அது தொடர்பான "வார் ரீலை" பார்த்திருக்கலாம்.அது 1969 இது 2009 . தகவல் தொடர்பு சாதனங்கள், நீர் மேலாண்மை, அணைகள் இப்படி எத்தனையோ முன்னேற்றங்கள். மூன்று நாட்களுக்கு முன்பே தெரியும் கிருஷ்ணா நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பொழிவதால் வெள்ளம் வரும் என்று. கேவலம் பெண்கள் தெருக் குழாயில் தண்ணீர் வரப்போகிறது என்றதும் இருக்கிற தண்ணீரையெல்லாம் கழிவறையிலும், பாத்ரூமிலும் கொட்டி காலி செய்து வைத்துக்கொள்வார்கள். ஆனால் ஆந்திர அதிகாரிகளோ அணை நிரம்பி வருகிறது கரீஃபுக்கு பயமில்லே கடலை பர்பிக்கு பயமில்லேனு மாஃப் காட்டிக்கிட்டு இருந்தாங்க.அணைக்கு வர்ர நீரை இன்ஃப்ளோ என்கிறார்கள். அணையிலிருந்து வெளியேறும் நீரை அவுட் ஃப்ளோ என்கிறார்கள். இந்த இரண்டும் சமானமாக இருந்தால் பிரச்சினையில்லை. இன்ஃப்ளோ அதிகமாக இருந்து , அவுட் ஃப்ளோ குறைந்தால் அணைக்கு வரும் வெள்ள நீர் பின்னோக்கி உந்தப்பட்டு அந்த பகுதியில் உள்ள கிராமங்கள், ஊர் எல்லாம் ஊறி நாறிப்போகும்.

வெள்ளம் வருகிறது என்று தெரிந்ததுமே அணைகளை தேவையான அளவு காலி செய்து வைத்திருக்கலாம். (ஓவ்வொரு கேட் டாக திறந்து கூட விட்டிருக்கலாம் 3 நாள் சமயம் இருந்தது) ஆனால் இவர்களோ புருஷனை பார்த்ததும் தாலி தொட்டு பார்த்துக்கறாப்ல நாய் நாலு காலையும் தூக்கறாப்ல , வீடு பத்திக்கின பிறகு கிணறு வெட்னாப்ல எல்லா கேட்டையும் ஒரே நேரத்தில் திறந்து விட்டு அப்பவும் இன் ஃப்ளோவும் அவுட் ஃப்ளோவும் சமமாகாததால அணைக்கு ஆபத்துங்கறாங்க. அட டுபாகூருங்களா ! கர்னூல் சிட்டி , விஜயவாடா சிட்டில மூணாவது மாடிலயும் , ஓவர் ஹெட் டேங்க் மேலயும் மக்கள் தவிக்க தாத்தா ரோசய்யா மட்டும் சோனியா மேடத்துக்கு சொல்லிட்டேன் உதவி வருதுனு "புலி விடறார்" வந்த மிலிட்டரி, நேவி போட்ஸ், நீச்சல் புலிகள் எல்லாமே இருட்டி போச்சு என்று கை தூக்கி விட்டார்கள். குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் ,கர்பிணிகள்.. தொ.காட்சியில் இந்த காட்சிகளை பார்ப்பவன் எவனானாலும் சரி ஒன்று சேடிஸ்டாகிவிடுவான். அல்லது தற்கொலை செய்து கொள்வான்.

இதில் இன்னொரு கூத்து என்ன வென்றால் வெள்ளம் மூழ்கடிக்க விருக்கும் பள்ளப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிலைமையின் தீவிரமே புரியவில்லை. " அட போங்கயா .. நாங்க பார்க்காத வெள்ளமா மூணு நாள் மலை மேல இருந்தா வீடு வந்து சேர்ந்துரப்போறோம் " என்கிறார்கள். அவர்கள் அந்த காலத்து (அதாவது 6 வ. ஒரு முறை வரும் வெள்ளமாகவே நினைக்கிறார்கள்) மேலும் அவர்களில் பலருக்கு பட்டா கிடையாது. இன்று காலி செய்து போனால் எவனாவது அரசியல்வாதி இடத்தை புடிச்சுக்கிடா.. அரசாங்கமே இங்கே இடம் கிடையாதுனு சொல்லிட்டா ரிஹெபிலேஷன் கேம்ப் பற்றியும் , அங்கு அதிகாரிகள் செய்யக்கூடிய ஏற்பாடுகள் (?) பற்றியும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது . அங்கே போய் நாறிப்போறதை விட இங்கேயே ஊறி கிடக்கோம்" என்கிறார்கள் .

என்னங்கடா கொடுமை இது டைனோசர் மாதிரி கொழுத்து , சாந்தி காலத்துல ஆன அட்டூழியமெல்லாம் பண்ற அதிகாரிகள் கு.ப.இந்த மாதிரி விபத்து காலத்திலாவது மனசாட்சியுடன் வேலை செய்தால் சாந்தி காலத்து அட்டூழியங்களை மன்னிக்கலாம். டி.ஜி.பி. எங்கே போனாரோ தெரியாது , அரை டஜன் மந்திரிகள் தவிர மத்தவங்க எங்கே.. கலெக்டர், எஸ்.பி.எல்லாம் செல் ஸ்விட்ச் ஆஃப்.

அன்று எங்கள் என்.டி.ஆர் சென்னை வந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் வழங்குவேன் என்றபோது "அறிவு ஜீவிகள்" சிரித்தனர். ஆனால் கிருஷ்ணா நீர் வந்து சேர்ந்ததா இல்லையா ? மேற்படி அதிகாரிகளின் அலட்சியம், அலட்டல், டெண்டர் ,ஊழல் எல்லாத்தையும் மீறி வந்து சேர்ந்தது.

எவனோ காட்டன் துரை நதிகள் இணைப்புக்கு திட்டம் போட்டு போராடினான். சோற்றுக்கில்லாத பாரதி கவி படித்தான். இன்றோ இந்திய இளவரசர் சு.சூழல் பிரச்சினை வரும் என்று கரடி விடுகிறார். அதையும் தமிழின தலைவர் முதலாக தமில் பேசும் தலைவர்கள் வரை கேட்டுக்கொண்டு சும்மாதான் இருக்கிறார்கள். இது போன்ற வெள்ளங்களையும் , மூன்று மாதங்களுக்கு முன்பு கூட வயிற்றை கலக்கிய வறட்சியையும் ஒழிக்க நதிகளின் இணைப்பு ஒன்றே வழி. அதையும் டெண்டர் இத்யாதிகளை போட்டு குழப்பாது நாட்டின் 10 கோடி நிருத்யோகர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்தி சி.ரா.பொறுப்பில் நிறைவேற்ற வேண்டும்