Showing posts with label agriculture. Show all posts
Showing posts with label agriculture. Show all posts

Saturday, February 27, 2010

நிர்வாணம் தெய்வீகமானது

கவர்னர் திவாரியோட லீலைகளை பத்தின அதிரடி வீடியோ க்ளிப்ஸ் ஒளிபரப்பு செய்து புகை வர வைத்த ஏ.பி.என்.ஆந்திர ஜோதியில் இந்த பதிவின் தலைப்பில் ஒரு விரிவான ஸ்டோரி ஒளிபரப்பானது. கடைசில பஞ்ச் என்னடான்னா " நீங்க நிர்வாணமா திரியாட்டியும் பரவாயில்லே.. நிர்வாணத்தை பார்த்து அருவறுப்படையாதிங்கங்கறது" தான் . அடங்கொப்புரானே.. திவாரி தாத்தா பண்ணது கூட அதை தானே.. அதை வெளிச்சம் போடற மோரல் ரைட் உனக்கேது.

சரி அது எக்கேடோ கெட்டு ஒழியட்டும். அவனவன் விரைக்கிறது தெரியக்கூடாதுன்னுதான் ட்ரஸ்ஸே போடறான்னும் ஒரு தகவல். ம‌த்திய படெஜ்ட் போட்டுட்டாய்ங்க. வழக்கம் போல விவசாயத்துக்கு கையில் கொடுத்துட்டாங்க (கப்பறைங்கண்ணா) அந்த விவசாயமே இல்லேன்னா புவ்வா இல்லே. பலான சமாச்சாரமெல்லாம் ஒடுங்கிபோயிரும்னா இதையும் படிச்சு வைங்கன்னா


"சத்யமேவஜெயதே"ன்னு ஸ்லோகன் வச்சிக்கிட்டு நம்ம அரசாங்கங்கள் அடிக்கிற

கூத்தை சொல்ல ஆரம்பிச்சா கலியுகம் முடிஞ்சு பிரளயமே வந்துரும். (அத்தனை

காலம் பிடிக்கும்னு சொல்ல வந்தேங்கண்ணா. நம்ம சனம் தோல் தடிச்சி போயி

கிடக்கு . ஆயிரம் நிஜங்கள் வெடிச்சாலும் பெண்கள் அழுகாச்சி

சீரியல்களையும்,ஆண்கள் சில்லறை பொறுக்கறதையும் விட்டு வெளிய வரவே

மாட்டாங்க, புரட்சி என்ன இழவு மாற்றம் கூட வராது ).

பொருளாதார சிறப்பு மண்டலங்கள் பேரால பொன் விளையற பூமியை பறிச்சிக்கிட்டு,

சிவப்பு நாடாத்தனத்தால அதை வருச கணக்கில வெத்தா விடறது, நிலத்தை

இழந்தவனுக்கு நஷ்ட ஈடு தராம பெப்பே காட்டறது. அந்த நிலம் ஒதுக்கப்பட்ட

கார்ப்போரேட் கம்பெனிகள் நோகாம ரியல் எஸ்டேட் வியாபாரம் பண்றது, நிலத்தை

இழந்த விவசாயி கூலியாகி, அல்லாடறது, தற்கொலை பண்ணிக்கிட்டு குடும்பத்தை

நட்டாத்துல விடறது அந்த குடும்பத்து இளைஞர்கள் வழிப்பறி

கொள்ளைக்காரர்களா மார்ரது, பெண்கள் விலைமாதர்களா மார்ரது இதெல்லாம் நம்ம

கண் முன்னாடி நடக்கிற நிஜங்கள்.

ஆந்திரத்துல சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமங்கள்ள ட்ரான்ஸ்மார்மர்களை

அடிச்சு தூள் பண்ணி அதிலிருக்கிற செம்பு கம்பிகளை ஒரு கூட்டம்

திருடிக்கிட்டிருந்தது. லேட்டா முழிச்சிக்கிட்ட போலீஸ் தந்தி பாஷைல வலை

வீசி தேடி பிடிச்சப்ப அவங்கல்லாம் பீகார்,உ.பி மானிலங்களில் விவசாய

குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள், லோக்கல் குவாரிகளில்,ஃபேக்டரிகளில்

வேலை பார்க்க வந்தவர்கள். குவாரி,ஃபேக்டரி ஓனர்களின் உழைப்பு

சுரண்டலால், கொத்தடிமைத்தனத்தில் வெறுப்பாகி கொள்ளைக்காரர்களானவர்கள்னு

என்று தெரிய வந்தது.

பாருங்க ஆட்சியாளர்கள் விவசாயம் லாபகரமா இல்லே. விளை நிலங்கள்ள பெரிய

பெரிய தொழிற்சாலைகளை கட்டி தொழில் மயமாக்கினா பொருளாதாரம் முன்னேறும்னு

நினைக்கிறாங்க. ஆனா நடக்கிறது என்ன?

எங்க முன்னாள் முதல்வர் சந்திரபாபு ரொம்பவே அறிவாளி. இப்போ விவசாயம்

பண்றவங்க ஓஞ்சு (ஒழிந்து) போட்டும். அவிக பசங்களாவது அதுல இறங்க கூடாது,

கம்ப்யூட்டர் கத்துக்கிடனும்னிட்டார். நம்ம ஆற்காடு வீராசாமி அந்தளவுக்கு

அறிவாளி இல்லேன்னாலும் ( பவர் சப்ளை ஒழுங்காயிருந்தாதானே அறிவாளி

ஆகமுடியும்) விவசாயிகள் விவசாயத்தோடவே வேற ஏதாச்சும் தொழிலும் பண்ணனும்னு

இலவச யோசனை தந்திருக்கார்.

பாவம் .. அந்த காலத்துல காந்தி தாத்தா விவரம் போதாம கிராமங்கள் உற்பத்தி

கேந்திரமா இருக்கனும். நகரங்கள் விற்பனை மையங்களா இருக்கனும்னு

சொல்லிட்டு போய் சேந்துட்டாரு.

இப்ப பாருங்க எல்லாமே தலை கீழா மாறிருச்சு. கிராமத்துல பசு வச்சிருக்கிற

குடும்பம் தங்கள் வீட்டு ஆளுங்க, குழந்தை குட்டி எல்லாம் குடிச்சபிறகு

அக்கம்பக்கத்து குடும்பங்களுக்கு கொடுப்பாங்க. இப்போ காசு மேல காசு வந்து

கொட்டனும்னு ஊசி மேல ஊசி போட்டு ஒட்டக்கறந்து டைரிக்கு ஊத்தறாங்க. அதே

பால் ப்ளாஸ்டிக் கவர்ல கிராமத்துக்கு வந்து சேருது. அதை காசு குடுத்து

வாங்கியாறது. அட ஒரு கல்யாணம்னு வச்சிக்கயேன் அதுக்கு தேவையான பொருட்கள்ள

எத்தினி கிராமத்துல கிடைக்குது எத்தினி டவுன்ல கிடைக்குது கூட்டி கழிச்சு

ஒரு கணக்கு போடுங்களேன்.

உப்பு மேல வரி போட்டதுக்காக தாத்தா பிரிட்டீஷ் காரனை காச்சு காச்சுனு

காச்சினாரு. இன்னைக்கு டாட்டா சால்ட் வாங்கினா லோக்கல் டாக்ஸஸ்

எக்ஸ்ட்ரா. லோக்கல் ட்ரிங்க்ஸ் காணாம போயிருச்சு. குக்குராமத்துல கூட

குண்டி கழுவ தண்ணி கிடைக்காத இடத்துல கூட பெப்சி,கொக்கோ கோலா.

தையல் காரங்க கதைய பாருங்க. எல்லாம் மெகனைஸ் ஆயிருச்சு. நீங்க தைய கூலியா

கொடுக்கிற காசுல முக்காவாசி மின்சாரத்துக்கும், ரா மெட்டீரியலுக்கும்,

மின் உபகரண தேய்மானத்துக்குமே சரியா போகுது. இதுல ஷகரான ஏரியால கடை

போடனும், பள பளானு இன்ட்டிரியர், ஜகஜ்ஜோதியா ஒளியலங்காரம்

எல்லாத்துக்கும் போக அவன் என்னத்த திங்கறது. இதுல ரெடி மேட்

கார்மென்ட்ஸோட போட்டி வேற. எந்த தொழிலை எடுத்தாலும் இந்த இழவுதான்.

உதவாத தீப்பெட்டிய எடுத்துக்கங்க.அதை கூட டாட்டா கம்பெனி தயாரிக்குது,

ஒரு காலத்துல ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை ஆயிரம் பேருக்காவது

நேரிடையாவும், மறைமுகமாவும் வேலை கொடுத்துக்கிட்டிருந்தது. இப்போ.

உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற ஒரே துறை விவசாயம்தான். ஒரு 54 இஞ்ச்

கலர் டிவியை புதைச்சி வச்சா ஒரே ஒரு எஃப்.எம். ரேடியோ கூட முளைக்காது.

டிவி தான் நாறிப்போயிரும்.

கால் நடை வளர்ப்பு, கோழி, வாத்து வளர்ப்பு கூட கன்வெர்ஷன் தான். பயிர்

பச்சைய பாலாவும், மாமிசமாவும் மாத்தி தருது (கன்வெர்ஷன்). ஆனால் விவசாயம்

ஜஸ்ட் இட் ப்ரொட்யூஸஸ்.

எல்லா தொழிற்சாலையும் ரா மெட்டீரியலை ப்ராடக்டா மாத்துது.(உ.ம் தகடை காரா

மாத்தறது) அவ்ளதான். பொல்யூஷனுக்கு இடமில்லாத ஒரே துறை விவசாயம் . (

நான் சொல்றது பயிரை தாக்குற பூச்சிகளுக்கு அமிர்தமாவும், விவசாயிக்கு

மட்டும் விஷமாவும் வேலை செய்யற பூச்சி மருந்து, செயற்கை உரங்களை டப்பா

டப்பாவா, மூட்டை மூட்டையா கொட்டி நிலத்தை ,நீரை , வயிறை, விஷமாக்கிற

விவசாயமில்லே தலைவா !).

இந்த நிர்வாண நிஜம் எப்பத்தான் இந்த கேடு கெட்ட அரசாங்கங்களுக்கு

உறைக்குமோ தெரியலை. விவசாயத்துக்கு தேவை ஜஸ்ட் பாசன நீர். வாட்டர்.

பானி.நீள்ளு . அத ஒழுங்கா கொடுக்க துப்பில்லே.

ஜஸ்ட் கன்வெர்ஷன் பண்ணிக்கிட்டு, கோடி கோடியா குவிச்சிக்கிட்டு, சில

ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குற ஃபேக்டரிக்கு லட்சகணக்கான காலன்

தண்ணி, சப்சிடில மின்சாரம், இலவச நிலம், வரி தள்ளுபடி எங்க

போயிட்டிருக்கோம்.

நீங்க ஒரு மாட்டுப்பண்ணை வச்சிருக்கிங்கனு வைங்க. ஒரு மாடு லிட்டர்

லிட்டரா பால் கொடுக்குது. ஒரு மாடு வெறுமனே கோமியம் விட்டுக்கிட்டு, சாணி

போட்டுக்கிட்டிருக்கு. நீங்க எந்த மாட்டுக்கு பருத்திக்கொட்டையும்

புண்ணாக்கையும் போடுவிக? பால் தர்ர மாட்டுக்குதானே.

விவசாயத்துறை வெறுமனே போஸ்டர்களை தின்னுட்டு பால் தர்ர மாடு மாதிரி

அல்லாடிக்கிட்டிருக்கு. ஆனால் காத்துல, தண்ணில, நிலத்துல விஷத்தை

கலந்துவிடற தொழில்துறைக்கு மட்டும் சிகப்பு கம்பள வரவேற்பு. அந்த சிகப்பு

கம்பளத்துல அதென்ன ராஜ நடையா போடுது. ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஒரு அரசாங்கமும் மாட்டுப்பண்ணை முதலாளி மாதிரி தான் செயல் படனும். எந்த

துறைல ப்ரொடக்டிவிட்டி அதிகம், எந்த துறை அதிகமான பேருக்கு வேலை வாய்ப்பை

வழங்குது, எந்த துறையால பொல்யூஷன் குறைவுன்னு பார்த்து அந்த துறைமேல

அக்கறை காட்டனும்.

இந்தியாவுல விவசாயம் 70 சதவீதம் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கறதா ஒரு

கணக்கு. அப்போ பட்ஜெட்ல 70 சதவீதம் விவசாயத்துக்கு தானே ஒதுக்கப்படனும்.

அரசாங்கங்கள் தொழில் துறை மேல அதீத அக்கறை காட்ட காரணம் கார்ப்போரேட்

கம்பெனிகள் கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் நிதிதான் போலும்.

டூ வீலர் வாங்க கடன், ஆட்டோ வாங்க கடன், கார் வாங்க கடன். இதையெல்லாம்

வங்கிகள், அதிலும் அரசுத்துறை வங்கிகள், வழங்க காரணம் என்ன ? அந்த ஆட்டோ

மொபைல் கம்பெனிகள் கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் நிதி அல்லன்னு உறுதியா

சொல்ல முடியுமா? வீட்டு வசதி கடன்கள் வழங்கப்பட காரணம் என்ன ? சிமெண்ட்,

ஸ்டீல் கம்பெனிகள் கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் நிதி அல்லன்னு உறுதியா

சொல்ல முடியுமா?

விவசாயிகளுக்கு தரப்படும் அரை குறை கடன் வசதிகளுக்கு கூட இது போன்ற

விலங்கமான காரணங்கள் உண்டுன்னே சொல்லலாம்.(உர கம்பெனி, மோட்டார் கம்பெனி

, ட்ராக்டர் கம்பெனி, பூச்சி மருந்து கம்பெனி தர்ர கட்சி நிதி) ஒரு

அரசாங்கம் உண்மையிலேயே விவசாயத்துறையை முன்னேற்றனும்னு நினைச்சா எவ்வளவோ

செய்யலாம்.

விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிச்சு கூட்டுறவு பண்ணை விவசாயம்

அமலாக உதவலாம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வுங்கறத போல விவசாயிகள் ஒன்னு

சேர்ந்து சின்ன சின்ன செக் டேம், ஏரிகளின் இணைப்பு, ஏரிகளை தூர் வார்ரது

,, பாசன வாய்க்கால்களை வெட்றது சின்ன சின்ன உப நதிகளை இணைக்கறதுனு

செய்துக்கலாம். விவசாய உற்பத்திகளை நல்ல விலை வர்ர வரைக்கும்

பாதுகாக்க கிடங்குகள், கோல்ட் ஸ்டோரேஜ் இத்யாதி கட்டிக்கொள்ள மேற்படி

சங்கங்களுக்கு கடன் தரலாம். க்ராப் இன்ஷியூரன்ஸ் ஏற்பாடு செய்யலாம்.

விவசாய பொருட்களின் மதிப்பை கூட்டும் தொழிற்சாலைகள் அந்த சங்கங்களே

அமைத்து நிர்வகிக்க உதவலாம். (இதை பைலட் ப்ராஜக்டா ஆந்திர முன்னாள்

முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ஆர் அறிவிச்சாரு. விவசாயிகள் ஒப்புக்கிட்டா

செய்யலாம்னு சொன்னாரு. எங்க பிழைக்க விட்டாங்க. )

ஆனால் நம்ம அரசாங்கங்கள் இதையெல்லாம் செய்யாது ஏன்னா விவசாயிக்கிட்டே

இருக்கிறது ஒரு ஓட்டு. மிஞ்சிப்போனா அவனோட குடும்பத்து ஓட்டு. அவனென்ன

தேர்தல் நிதியா தரப்போறான். கார்ப்போரேட் கம்பெனிக குடுக்கிற ஃபண்ட்ஸ்ல

லட்சக்கணக்கான ஓட்டுக்களை விலைக்கு வாங்கிரலாமே..

தொழில் துறை, தகவல் தொழில் நுட்பத்துறை வளர்ச்சியெல்லாம் வெறும் வீக்கம்.

விவசாயி பயிர் செய்து, உற்பத்தி கைக்கு வந்தாதான், அது பணமாகி அவன்

கைக்கு போனாதான் மார்க்கெட்டுக்கே வாழ்வு .இல்லேன்னா சாவுதான்.

டிவி,மொபைல் தயாரிப்பாளர்கள் டீலர்கள் தம் வாடிக்கையாளர்களுக்கு தரும்

ஸ்பெஷல் ஆஃபர்ஸ் எல்லாம் அறுவடைகாலத்திலேயே வெளியாறத கூட்டிக்கழிச்சு

பாருங்க உண்மை தெரியும். எழுபது சதவீதம் மக்கள் விவசாயத்துறைய

சார்ந்து வாழற நாட்ல லட்ச ரூபாய்க்கு கார் வருது. ஏன் லட்ச ரூபாய்க்கு

ட்ராக்டர் தயாரிக்க கூடாது. எப்படியும் நகர மயமாக்கம் காரணமா, கிராமப்புற

வேலை வாய்ப்பு உறுதி திட்டம் , ஒரு ரூபா அரிசி திட்டம் இத்யாதி

காரணங்களால விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கிறது குதிரை கொம்பா போன காலத்துல

விவசாய வேலைகளுக்கு உதவக்கூடிய சிறு,குறு இயந்திரங்களை ஏன் குறைஞ்ச

விலைல தயாரிக்க கூடாது. மைல் கணக்குல வாய்க்கால்ல ஓடி வீணாகற பாசன நீரை

சூரிய வெப்பத்துக்கு ஆவியாகாம, நிலத்துல ஊறிப்போகாம , ஒரு சொட்டு

தண்ணியும் வீணாகிடாம பயிருக்கு கொண்டு சேர்க்க ஏன் நாடு தழுவிய ஒரு

திட்டத்தை கொண்டுவரக்கூடாது.

இந்தியா விவசாயத்துக்கு ஏதுவான சீதோஷ்ண நிலை , புவியியல் அனுகூலங்கள்

நீராதாரங்கள் கொண்ட நாடு. அரபு நாடுகள் வெறுமனே எண்ணெய் வளத்தை வைத்து

உலக மார்க்கெட்டை கட்டுப்படுத்தும்போது, நாம் ஏன் உணவு பொருள் உற்பத்தியை

வைத்து உலக மார்க்கெட்டை கட்டுப்படுத்தக்கூடாது.

ஒரு புடவைய சுத்தி விட்டா மரம் கூட ஏதோ ஒரு கோணத்துல மங்கையா

காட்சியளிக்கும். அதை உருவி பாருங்க..

நிர்வாணம் தெய்வீகமானது. நிஜமானது. போலிகளுக்கு இடமில்லாதது.

ஆட்சியாளர்களே நீங்கள் இந்திய பொருளாதாரத்துக்கு கட்டிவிட்ட ஆடைகள்

இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் காட்டி உங்களையும்

சேர்த்து குழப்புகிறது. நிலைமை கை மீறிப்போனா சனம் சாப்பிட

ரொட்டியில்லேன்னா கேக் சாப்பிடுங்கனு சொல்லக்கூடிய ஆளுங்க தான். ஆனால்

அப்படி சொன்ன ராணி என்ன ஆனாள்? அவள் ராஜ்ஜியம் என்னாச்சுனு ஒரு தடவை

நினைச்சு பாருங்க..

Tuesday, January 12, 2010

இனி விவசாயம் எல்லாம் ஃபணால்

சக பதிவர்கள், வாசகர்கள் (அப்படி யாரேனும் இருந்தால்) ,ஜோதிட ஆர்வலர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். வெறுமனே இப்படி வாழ்த்திவிட்டால் எப்படி? பொங்கல் என்பது விவசாயிகள் சூரியனுக்கு நன்றி சொல்லும் பண்டிகை, மறு நாள் காளைகளுக்கு, மறு நாள் கன்றுகளுக்கு ( ஓ அது காணும் பொங்கல் இல்லியா ) நன்றி சொல்லும் நாள் அல்லவா?

ஆனால் நாடு போகும் போக்கை பார்த்தால் இனி விவசாயம் எல்லாம் ஃபணால்தான் போலும். நகரமயமாக்கம், தொழில் மயமாக்கம், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இப்படி எத்தனை எத்தனை ஆப்புகள். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா? இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு இருக்கிறதா ? இருக்கிறது. அதான் இந்த பதிவு ..வுடு ஜூட்

உலக நாடுகளை மூனு வகையா பிரிச்சுருக்காங்க. இதுல முக்கியமான இரண்டு வகை
1.முன்னேறிய நாடுகள், 2.முன்னேறாத  நாடுகள்.

மூனாவது வகை ? அதாங்க முன்னேறிவரும் நாடுகள் . இந்த கேட்டகிரில தான் நம்ம இந்தியாவ  வச்சிருக்காய்ங்க. ஒரே ஒரு சமாச்சாரத்த மட்டும் கீழே தரேன்.படிச்சுட்டு இந்தியா முன்னேறி வரும் நாடா முன்னேறவே முடியாத நாடானு நீங்க முடிவு பண்ணுங்க.

நம்ம ரூபா நோட்டை ரிசர்வ் பேங்க் அச்சடிக்குது. எந்த அடிப்படைல அச்சடிக்கிறாங்க தெரியுமா ? இதுக்கு உலக அளவுல மூனு விதமான சிஸ்டம் இருக்கு.
1.கஜானால எவ்ளோ கோல்டு இருக்கோ அதனோட மதிப்புக்கு ஈடான கரன்சிய மட்டும் புழக்கத்துல விடறது
2.கஜானால எவ்ளோ கோல்டு இருக்கோ அதனோட மதிப்புக்கு டபுளா கரன்சிய ப்ரின்ட் பண்றது
3.குறிப்பிட்ட அளவு கோல்டை மட்டும் கஜானால வச்சுக்கிட்டு எவ்ளோக்கு வேணம்னா நோட்டை அச்சடிச்சு ஊர் மேல விட்டுர்ரது

இதுல இந்தியா எந்த முறைய பின்பற்றுது தெரியுமா? மூனாவது முறை. அடங்கொய்யால..

போவட்டும் .எல்லாரும் கரன்சிய டீல் பண்றிங்க இல்லியா. கரன்சி எல்லா இடத்துலயும் செலவாணியாகுது பிரச்சினை இல்லெ. ( அமெரிக்கா மூத்திரம் வைட் பெட்ரோலா எரிஞ்ச காலத்துல ப்ளடி இண்டியன் கரன்சி ? நோ..ஒன்லி டாலர்ஸுனு ஹை க்ளாஸ்ல மாப்பு காட்டினதும் உண்டு) கரன்சிங்கறது மோர் ஆர் லெஸ் ப்ரோ நோட் மாதிரிதான். என்ன ஒரு வித்யாசம்னா ப்ரோ நோட்டை கொடுத்தா பணம் கொடுக்கனும். நாம பணத்தை ரிசர்வ் பேங்க் கவர்னருக்கு கொடுத்தா அதனோட மதிப்புக்கு  கோல்டு கொடுக்கனும்.

குறிப்பிட்ட அளவு கோல்டை மட்டும் கஜானால வச்சுக்கிட்டு எவ்ளோக்கு வேணம்னா நோட்டை அச்சடிச்சு ஊர் மேல விட்டுர்ர ஒரு அரசாங்கம், அதனால நியமிக்கப்பட்ட ரிசர்வ் பேங்க் கவர்னர் கரன்சியோட மதிப்பு ஈடான  தங்கத்தை திருப்பிதர முடியுமா ? இது  சாத்தியமா?

என்னய்யா இது அநியாயம் /அக்கிரமம்னு கேட்டா உடனே  ஜனத்தொகை பெருகிப்போச்சும்பாங்க. வேலை கிடைக்கலன்னா ஜனத்தொகை பெருத்து போச்சும்பாங்க. அரிசி விலை ஏறிப்போச்சுன்னா .ஜனத்தொகை பெருத்து போச்சும்பாங்க உண்மைல ஜனத்தொகை பெருக்கம் ஒரு பிரச்சினையா ?  வேலையின்மை, ஆகார பற்றாக்குறைக்கு இது ஒரு காரணமானு என்னை கேட்டா இல்லேன்னுதான் சொல்வேன்.

ஆனால் வெறுமனே ஜனத்தொகை அதிகரிச்சா பிரச்சினைதான்.கல்வி,தொழில் திறமை மிகுந்த மக்கள் பிறந்து,வளர்ந்து வந்தா அவிக நாட்டுக்கு ஒரு சொத்து மாதிரி.  இந்த நாடே எங்க சொத்துனு கொள்ளையடிக்கிற குடும்பம் பென்னி குட்டி போட்ட மாதிரி பெருகினா  என்ன ஆகும் ? அவனெல்லாம் சொத்துனு செத்து விழனும்.அப்பதான் நாடு உருப்படும்.

 நான் இப்படி சொன்னதுக்கு ஒரு அதிமேதாவி. "ஐயா ! இருக்கப்பட்டவன் பனிரண்டு பெத்தாலும் நஷ்டமில்லே ..அந்த 12 பேரும் பன்னெண்டு ஃபேக்டரி வைப்பான். பலருக்கு வேலை கிடைக்கும்" என்று கூறினார்.

அட டுபாகூருங்களே ! நல்லவன் கெட்ட வேலை செய்தாலும் அது உலகத்துக்கு நாட்டுக்கு நல்லதாவே முடியும். கெட்டவன் நல்ல வேலை செய்தாலும் அது உலகத்துக்கு நாட்டுக்கு கெட்டதாவே முடியும்.

காரல் மார்க்ஸ் ஆதிகாலத்துலயே தொழிலாளி வயித்துலடிச்சாதான் லாபம் வரும்னு  ஸ்தாபிச்சிருக்காரு. மறுபடி ஃபேக்டரி அது இதுனு பீலா விட்டுக்கிட்டு.

இந்த ஃபேக்டரி காரப்பயலுக மென்டாலிட்டி எப்டியிருக்கும்டான்னா .. எங்க ஊர்ல ஒரு சாக்லெட் கம்பெனி. பெருசா போட்டி இல்லாத காலத்துல தீபாவளி கொண்டாடினானுங்க . போட்டி அதிகமாச்சு. சமாளிக்க முடியல. தொழிலாளிங்களை அலேக்கா தூக்கி வெளிய போட்டுட்டாங்க. ( அதாங்க வீ ஆர் எஸ் அது இதுனு எக்கச்சக்கமான வழி இருக்கே.  ஃபேக்டரில கோடிகள் ஈட்டினப்ப ஒன்னும் தொழிலாளிக்கு லாபத்துல பங்கு கொடுக்கலை. உள்ளூர் கொ.கா. எம்.எல்.ஏவை மீடியேட்டரா வச்சிக்கிட்டு அந்த மன்சனையே யூனியனுக்கு  கௌ. தலைவனா போட்டுக்கிட்டு அவனுக்கு வாய்க்கரிசி போட்டுக்கிட்டு அவன் பெத்ததுங்களுக்கு வெளியூர் ஹாஸ்டல் ஃபீஸ்,ஸ்கூல் ஃபீஸ் கட்டிக்கிட்டு கிடந்தானுக.

இப்போவும் அது ஒன்னும் நிக்கலை. தூக்க முடிஞ்ச சாமானெல்லாம் தூக்கியாச்சு. தூக்க முடியாத சாமானை மட்டும் வச்சு கிட்டு பூச்சி காட்டிக்கிட்டு இருக்கானுக
நான் என்ன சொல்லவரேன்னா ..மக்கள் தொகை, மனித வளம் என்பது களிமண் மாதிரி அதை நல்ல ஆட்சில பிள்ளையாராவும்  பிடிக்கலாம். வகை இல்லாத பார்ட்டிங்க ஆண்டால் அதுவே குரங்காவும் முடியலாம்.

இன்னைய தேதிக்கு ஆளுக்கு ஒரு மரம் நட்டே தீரனும்னு முடிவெடுத்து நட்டு தொலைச்சுட்டம்னு வைங்க..  வீட்டுக்கு ஒரு மழை நீர் தேக்க தொட்டி வைக்கிறதே சரினு வச்சு தொலைச்சுட்டம்னு வைங்க . என்னாகும்?

ஆளுக்கொரு கலர் டிவி வச்சுக்கிட்டு பொம்மை பார்த்துக்கிட்டு ,சிகரட்டா ஊதி தள்ளிக்கிட்டு, பிராந்தி விஸ்கி அடிச்சிக்கிட்டு, பெண்டாட்டியோட சண்டை வந்து அவளை அடிச்சே கொன்னுட்டிங்கனு வைங்க என்னாகும்?

ஒவ்வொரு மனிதனும் நாட்டுக்கு ஒரு சொத்து மாதிரி. அவனை பிள்ளையாண்டிருந்தப்ப அரசு போட்ட தடுப்பு ஊசிலருந்து சகல சப்சிடி, இத்யாதிய கணக்கு போட்டா ஒவ்வொரு மனிதன் மேலயும் அரசு கு.ப. ஒரு தொகை இன்வென்ஸ்ட் பண்ணுது.

அவன் படக்குனு தற்கொலை பண்ணிக்கிட்டா ? கொலையாயிட்டா? விபத்துல செத்து தொலைஞ்சா? அவனுக்கு எயிட்ஸ் வந்துட்டா ? அரசாங்கம் அவன் மேல செய்த முதலீடெல்லாம் வீண் தானே.

மக்கள் தொகை பெருக்கம் என்பது பிரச்சினையே இல்லை. அது மனித வளம். ஒரு பொருளை தயாரிக்க நாலு ஐட்டம் தேவை. லேண்ட்,லேபர்,கேப்பிட்டல், ஆர்கனைசேஷன். இதுல லேபர்னா என்ன ? மனித வளம் தான்.  ஆனால் இத்தனை கோடி மக்களை வச்சுக்கிட்டு  அரசாங்கம் என்ன பண்ணுது. மார்னிங் ஷோ மேட்னி பாருங்கப்பா .. அதர்வைஸ் கலர் டிவில பூனை நடை போடற குட்டிகளை பார்த்து ஜொள்ளிகிட்டு இருங்கப்பானு விட்டு வச்சிருக்கு,

மோட்ச குண்டம் விஸ்வேஸ்வரய்யா ஆதிகாலத்லயே சொல்லியிருக்கார். இங்கன ஒருத்தன் சம்பாதிக்க பத்து பேர் உட்கார்ந்து திங்கிறான் இது வேலைக்காகாதுனு.
இப்போ நிலைமை என்னன்னு  சொல்லவே தேவையில்லே.

நாட்ல நூத்துக்கு 70 பேர் விவசாயத்துமேல டிப்பெண்ட் ஆகி வாழறதா கணக்கு.இது சீசனல் ஜாப்.  வருசத்துல 365 நாளும் வேலை இருக்காது. வேலை செய்ய வேண்டிய சில மாசத்துலயும் மழை பெய்யாது , இல்லே வெள்ளம் வந்துரும். வேலை இல்லாத மாசங்கள்ள வேலை வெட்டியில்லாம கோழிப்பந்தயம், தாயப்பாசு சாதிகலவரம்.கள்ள உறவு,அரசியல் வெட்டு குத்து கொலை. ரசிகர் மன்றம்.

இதுல பத்து  சதம்  அன் எம்ப்ளாயிடை  தள்ளிட்டா மிச்சமிருக்கிற 20 சதம் மேற்படி 70 சதம் மக்களுக்கு தேவையான பொருட்களை தயாரிக்கிறதும்,விக்கிறதும் இதர சேவைகளை தர்ரதுமா வாழறாங்களாம்.

இதுல உன்னிப்பா கவனிச்சா முதல்ல சொன்ன 70 சதமே 50 சதமளவுக்கு டுபுக்கு பார்ட்டிங்க. பார்ட்டைம் ஜாப் பண்ணிட்டு ஃபுல் டைம் பெனிஃபிட்ஸுக்கு பழக்கப்பட்டவங்க. அடுத்துசொன்ன 10 சதம் டுபுக்குல டுபுக்கு. வெட்டி ஆஃபீசருங்க மூணாவதா சொன்ன 20 சதத்துல கூட விவசாய உற்பத்திய அதிகரிக்கவோ, கு.ப. குறையாம பாதுகாக்கவோ, விவசாய உற்பத்தி பணங்காசா மாறவோ உதவுறவக கம்மிதான். விவசாயி கிட்டேருந்து இவுக லாபம் ஈட்டற லாபம் விவசாயத்துக்கு நஷ்டம் தானே. முதலீடு அதிகமாகுது. லாபம் குறையுது.  இந்த 20 சதத்துல அடுத்த கேட்டகிரி விவசாயி கைக்கு பணம் வந்தபிறகு அதை பறிக்கற கேட்டகிரி. அட உட்டாம்பாரு கிரிகிரி சைதாப்பேட்டை வடகறி !

இதுல கோயில் டொனேஷன்,மசூதி டொனேஷன், சர்ச் டொனேஷன், ஜோசியம்,வாஸ்து, மாந்திரீகம் இதெல்லாம் எந்த கணக்குல சேர்க்கிறது தெரியலை.
( நான் ஒரு ஜோதிட கன்சல்டன்டாக இருந்தாலும் என்னால் ஒரு தனிமனிதனுக்கு தரப்படும் கன்சல்டன்ஸி  நாட்டின் ஜிடிபியை உயர்த்த வல்லதாக இருந்தாலும் அதுமாதிரி ஜோசியத்த சனம் கேட்க மாட்டேங்கிறாங்களே நான் என்ன செய்ய?)

ஆக இந்த மாதிரி காரணங்களால தான் ஜனத்தொகை பெருக்கம் பிரச்சினையாவுது,பிரச்சினைகளுக்கு காரணமாவுது.  ஜஸ்ட் ..ஒரு அஞ்சு  நிமிசம் கண்ண மூடி கற்பனை பண்ணூங்க .. நாட்ல இருக்கிற விவசாயிகள் எல்லாம் ஒரு கூட்டுறவு சங்கமா ஃபார்ம் ஆகுறாங்க. அதிரி புதிரியா உதிரி உதிரியா கிடக்கிற நிலங்களை மேற்படி சங்கத்துக்கு லீசுக்கு தராங்க. கூட்டுறவு பண்ணை விவசாயம் மேற்கொள்றாங்க. அப்போ என்னாகும்? எந்த விவசாயியும் உரத்துக்காகவோ, விதைக்காகவோ, பாடாவதி சர்ட்டிஃபிகேட்டுக்காகவோ எந்த ஆஃபீஸ் முன்னாடியும், எந்த நாய்மகன் முன்னாடியும் போய் நிக்க தேவையில்லை. அட க்ராப் இன்ஷியூரன்ஸுக்கு கேன்வாஸ் பண்ண எல்.ஐ.சி ஜெனரல் மேனேஜர் விவசாயிகள் கூட்டுறவு சங்க வாசல்ல வந்து நிப்பாருங்கண்ணா..

ஒரு நிறுவனத்தோடவோ,வங்கியோடவோ, அரசாங்கத்தோடவோ கம்யூனிக்கேட் பண்றது ரொம்ப சுளுவாயிரும். எவனாச்சும் நக்கல் பண்ணா சுளுக்கெடுத்துரலாம். முக்கியமா விவசாய உற்பத்திக்கு விவசாயி வச்சதுதான் விலைனு ஆயிரும். இது ஒரு பாதி கனவுதான்.விவசாயத்துக்கு பேசிக் நீர்பாசனம். வடக்குல வெள்ளம் தெற்குல குண்டி கழுவ தண்ணி கிடையாது. அதனால என்னதான் கூ.ப.விவசாயம் செய்தாலும், என்னதான் க்ராப் இன்ஷியூரன்ஸ் இருந்தாலும்  ரிஸ்க் ரிஸ்க்தான்.

அடுத்த பேர்பாதி கனவை இப்போ காணுங்க.

 நாட்ல இருக்கிற அன் எம்ப்ளாயிட் எல்லாம் ஒரு க்ளோபல் பப்ளிக் லிமிட்டட் கம்பெனியா ஃபார்ம ஆகிறாங்கனு வைங்க . இந்த கம்பெனியோட சிங்கிள் பாயிண்ட் ப்ரோக்ராம்  இந்திய நதிகளை கால்வாய்கள் மூலமா இணைப்பது. ஆளுக்கு பத்து ரூபா ஷேர் போட்டு கம்பெனி ஆரம்பிக்கிறாங்க. வேலை துவங்குது . ஷேர் விலை எகிறிக்கும். 60 சதம் ஷேரை கம்பெனி கைவசம் வச்சிருந்தாலும் போதும். மேலும் இருக்கவே இருக்குது  உலக வங்கி. இத்தனை நாள் நம்மாளுங்க அதுங்கால்ல விழுந்து கடன் வாங்குவாய்ங்க.இப்ப அவன் நம்மாளுங்க கால்ல விழுந்து கடன் கொடுப்பான்.

இப்போ கற்பனை பண்ணுங்க. பத்து கோடி அன் எம்ப்ளாயிட். இருபது கோடி கைகள். பேனா புடிக்க தெரிஞ்சவன் பேனா புடிக்கான். அது தெரியாதவன் மம்முட்டி புடிக்கான். இப்போ சொல்லுங்க ஜனத்தொகை பெருக்கம் பிரச்சினையா ?

Monday, October 26, 2009

பத்தினியெல்லாம் பரத்தையாக போறா !

நாம் சோற்றுக்கில்லாது சாகும் காலம் வெகு தொலைவில் இல்லை
இதில் உங்களுக்கு சந்தேகமா ? கீழ் காணும் புள்ளிவிவரங்களை பாருங்கள் . நாம் சோற்றுக்கில்லாது சாகும் காலம் வெகு தொலைவில் இல்லை
1. விவசாய உற்பத்தி குறைவது 1995-96 லேயே துவங்கிவிட்டது.
2. சுமார் 70 சதவீதம் பேர் சுகுரா சொன்னா 68 % பேர் விவசாயத்தை நம்பியிருக்காங்க (மத்த 30 சதம் பேரும் திங்கறதுக்காகவாவது விவசாயத்து மேலதானே ஆதாரப்படனும்? மேலும் 68% விவசாயத்துல லோல்பட்டு பொருளீட்டினா மத்த 32 சதவீதம் அவனை நேரிடையாவோ ,மறைமுகமாகவோ எக்ஸ்ப்ளாயிட் பண்ணித்தானே பிழைக்கிறோம்
3. மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டை பாருங்க:
எழுவது சதவீதம் மக்களை வாழ வைக்கும் விவசாயத்துறையின் நாடித்துடிப்பான நீர்ப்பாசனத்துக்கு 0.35 சதவீதம் . சுமார் 2 % பேரை மட்டும் வாழவைக்கிற தகவல் தொடர்பு துறைக்கு 13 % . உருப்படுவோமா ? என்னதான் லொல்லு பண்ணாலும் லல்லு சூப்பர் தத்துவம் ஒன்னு விட்டாரு. பால் குடுக்கிற மாட்டுக்கு புண்ணாக்கு போட்டேன். புண்ணாக்கு போட்ட மாடெல்லாம் பால் கறந்துச்சு. ஆனால் நாம என்ன பண்றோம் வெறுமனே சாணி போட்டு, கோமயம் பெய்யற மாடுகளுக்கு டன் டன்னா புண்ணாக்கு போடறோம்
4. நாட்டில் உள்ள 80 சதவீதம் விவசாயிகளுக்கு 1 ஹெக்டேருக்கும் குறைவான நிலம்தான் இருக்கு. ( பயிர் செலவை குறைக்கனும்னா மெக்கனைசேசன் பண்ணனும், சொட்டு நீர்பாசனம், செக் டேம் ,லொட்டு லொசுக்குனு ஆயிரம் பண்ணனும் அந்த நொள்ளை ஒரு ஹெக்டேருக்கு இதெல்லாம் பண்ணா கட்டுப்படியாகுமா? இதுக்குதான் நான் 1986 லருந்தே கூவிக்கிட்டு இருக்கேன். கூட்டுறவு பண்ணை விவசாயம் செய்யலாம். நாடு முழுக்க உள்ள விவசாயிகளை திரட்டி கூட்டுறவு சங்கம் வைப்போம். விவசாயி தன் நிலத்தை நீண்ட குத்தகைக்கு தரான் (சங்கத்துக்கு) விருப்பம் இருந்தா அவனும் உழைக்கிறான். (குத்தகை தனி விளைச்சல்ல பங்கும் கிடைக்கும். வேணாம்னா குத்தகை வாங்கி திங்கலாம்) இதை ஒய்.எஸ்.ஆர் ட்ரை பண்ண பார்த்தார். மொத்தமா 3 கிராமம் கூட முன்வரலை (எதிர்கட்சிங்க லொள்ளு காரணமா)
5.இதுல அதிர்ச்சிக்குரிய மற்றொரு விஷயம் என்னன்னா இப்போ உள்ள விவசாயிகள்ள 40 % பேரு விட்டு தொலைச்சுரலாம்னு இருக்கேன்னு சொல்றாங்களாம் .
6. விட்டுட்டா என்னாகும்? 2006 லயே 50 லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்தோம். இந்திரா காந்தி காலத்துல ரஷ்யாலேருந்து கோதுமை இறக்குமதி பண்ணப்போதான் பார்த்தினீயம் இந்தியாவுக்குள்ள வந்துருச்சாம். அதை எரிச்சா கூட விதைகள் பட் பட்டுனு வெடிச்சு தூர விழுந்து அங்கே முளைக்கும்னா பார்த்துக்கோங்க ( இது முக்கியமான களைங்கோ !) இது மட்டுமில்லே 2007 ஜூனுக்கு பற்றாக்குறை நிலை எவ்ளனு பாருங்க !
கோதுமை: 40 லட்சம் டன்
பருப்பு வகை: 10 லட்சம் டன்
எண்ணெய் வித்துக்கள்: 20 லட்சம் டன்
பற்றாக்குறைன்னா நமக்கென்ன போச்சுனு நினைச்சுராதிங்கன்னா ! சரக்குக்கு டிமாண்ட் ஜாஸ்தியாச்சுன்னா மார்கெட்ல ரேட்டு பிச்சுக்கும்.

7. இறங்கு முகம்:
ரஜினியோட மூன்றுமுகம் மாதிரி இறங்கு முகம்னு ஒரு படம் எடுத்தா இந்தியாவோட விவசாயத்துறைய ஹீரோவா போட்டுரலாம். 1995ல சராசரி தானிய உற்பத்தி 207 லட்சம் டன் 2007 ஆம் வருசம் பார்த்திங்கண்ணா 186 டன் வித்யாசம் என்ன ? கூட்டி கழிச்சு பாருங்க ! 21 லட்சம் டன் குறைஞ்சு போச்சு. இப்போ 2009 வருசத்துக்கு எத்தனை குறையும்னு கற்பனை பண்ணி பாருங்க தாளி ! சோத்துக்கில்லாம சாகப்போறது நிச்சயம்.

8.மற்ற துறைகளில் முதலீடு செய்தா அதுலருந்து கிடைக்கிற வருமானம் வருசத்துக்கு 4 சதவீதம் உயருது. விவசாயத்துல ? நல்லா உத்து படிங்க 0.28% தான். என்னா மயித்துக்கு விவசாயம் பண்ணுவான் விவசாயி. உழுதவன் கணக்கு பார்த்தா உழக்கு கூட மிஞ்சாதுனு அன்னைகென்னைக்கோ சொல்லிவச்சது இன்னைக்கும் நடக்குதுன்னா இதான் வளர்ச்சியா?
9 வருசத்துக்கு 20 ஆயிரம் விவசாயி தற்கொலை பண்ணிக்கிரான். ( ஆந்திரால ஒய்.எஸ்.ஆர் முதல்வரானதும் பழைய கரெண்ட் பில் பாக்கி மொத்தத்தையும் ரத்து பண்ணாரு. இலவச மின்சாரம் கொடுத்தார்)
10. பஞ்சாப்ல 7 வருசத்துக்கு முன்னாடி( அதாவது 2000 வருசத்துல) ஏக்கருக்கு 25 குவிண்டால் கோதுமை கிடச்சது. இப்போ (2007ல) 16 குவிண்டால் தான் கிடைக்குது. என்ன காரணம்? மாட்டுக்கு இஞ்செக்ஷன் போட்டு பாலை ஒட்டக்கறந்த மாதிரி கண்ட உரத்தை போட்டு பூமியோட சாரத்தை உறிஞ்சு எடுத்தாச்சு. பிரசவம் நடந்தாலே டீல் ஆயிரும். குறுகிய கால சாகுபடி எல்லாம் அபார்ஷன் மாதிரிதானே . நம்மாழ்வார் மாதிரி பார்ட்டிங்க இயற்கை விவசாயம் பண்ண்வோம்
னு தலை தலையா அடிச்சிக்கிறாங்க கேட்டாதானே !
11.இதர சமாச்சாரங்களுக்காக (ரியல் எஸ்டேட், தொழிற்பூங்கா , இத்யாதி) வருசத்துக்கு 7.5 லட்சம் ஹெக்டேர் நிலம் டைவர்ட் ஆகுது. தாளி சாரம் குறைஞ்சுக்கிட்டே வருது , இதுல நிலத்தோட அளவும் குறைஞ்சிட்டே போனா என்னாத்த வெளையறது, என்னாத்த திங்கறது.
12. தேசிய உற்பத்தின்னா என்னானு தெரியுமான்னா ? ஒரு வருசத்துல நாட்ல உற்பத்தியான சரக்குகள்மற்றும் அளீக்கப்பட்ட செர்வீஸசோட வேல்யூதான் தேசீய உற்பத்தி. 1975 ல விவசாயத்துறையோட பங்களிப்பு 35 % இப்போ 19 சதவீதம். லல்லு ரயில்வே மந்திரியாகறதுக்குமுந்தி ரயில்வேயோட லாபம் 2 சதம். ஆனா இப்போ ?
கெவர்மென்டு ரோட்ல பஸ் விடறவன் கோடி கோடியா குவிக்கலாம். ஆனால் சொந்த ட்ராக்ல ஓடற ரயில் சம்பாதிக்க கூடாதானு யோசிச்சாரு லல்லு. உண்மையான ப்ரொடக்டிவிட்டி உள்ள ஒரே துறை விவசாயதுறைதான். மற்றதெல்லாம் கன்வெர்ஷன் தான். ஒரு கடலைக்கொட்டைய புதைச்சு வச்சா 40 கொட்டையாவது கிடைக்கும் . ஒருலட்ச ரூபா நானோ காரை புதைச்சு வச்சா என்ன கிடைக்கும் ? காயலான் கடைக்கு போட்டா பட்டாணி கிடைக்கும் அவ்ளதான்.
13.இன்னொரு வெட்ககேட்டை பாருங்க இருக்கிற நிலத்துல 60 சதவீதம் வானம் பார்த்த பூமி தானாம் (மத்ததெல்லாம் நமீதாவை பார்க்குதானு கேட்ராதிங்க) சுதந்திரம் வந்து 60 வருசத்துக்கப்பறம் இது நிலைமை
14.ஒட்டுமொத்தமா விவசாயத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை பாருங்க ! முதல் ஐந்தாண்டு திட்டத்துல 23% பத்தாவது ஐந்தாண்டு திட்டத்துல ... மயக்கம் போட்ராதிங்க வெறும் 5 சதவீதம்.

இதெல்லாம் பார்த்துட்டுதான் சொல்றேன். என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் அமல் படுத்தபடலேன்னா சோத்துக்கில்லாம சாகப்போறோம். பத்தினியெல்லாம் பரத்தையாக போறா ! அஞ்சுக்கும் பத்துக்கும் குத்தி கொன்னுக்கிட்டு சாகப்போறோம் .(இப்பவும் அதான் நிலைன்னா சாரி. நிலைமை இதை விட ரொம்ப மோசமாயிரும்)

இந்த நிலை வந்துவிடக்கூடாதென்று 1986 முதல் நதிகள் இணைப்புக்காக தனியொரு பாதையில் என் முயற்சிகளை தொடார்ந்து வருகிறேன். இது குறித்த விவரங்களை எனக்கும் மனசாட்சிக்கும் நடக்கும் உரையாடலாய் ( கொஞ்சம் நகைச்சுவையுடன் தருகின்றேன்)
அதற்கு முன் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

இப்போது இது தொடர்பாக எனக்கும் என் மனசாட்சிக்கும் இடையிலான உரையாடலை பாருங்கள்

மனசாட்சி: ஏம்பா இப்படி ஆரம்பிச்சு நீ ஆதியோடந்தமா எழுத ஆரம்பிச்சா சனம் படிக்குங்கற
நான்: இல்லைதான் அதுக்காக சொல்லாம விட்டுர முடியுமா?
மனசாட்சி:இது எப்படியிருக்குன்னா சுஜாதாவே மேலுப்பா புரிஞ்சவ புரிஞ்சுக்க புரியாதவன் சொரிஞ்சுக்கிட்டு போன்னாரு. நீ சொல்றத பார்த்தா நான் சொல்லிருவன். அதுவும் மொக்கை போட்டு சொல்வேன். படிக்கிறவன் படிங்கறமாதிரி இருக்கு.
நான்:இப்ப என்ன செய்யனுங்கற?
மனசாட்சி: ச்சும்மா தமாசா சொல்ப்பா !
நான்: நாட்டோட எதிர்காலம் உனக்கு தமாசா இருக்கா ?
மனசாட்சி:தா பாரு அடல்ட் ஜோக்கெல்லாம் போட்டவன் நீ ஆப்பரேஷன் இந்தியா பத்தி மொக்கை போடாம சொல்லுன்னா கோச்சுக்கறியே
நான்:இப்ப என்ன கிச்சு கிச்சு காட்டிக்கிட்டே சொல்லனும் அவ்ளதான?
மனசாட்சி:தட்ஸ் ஆல் யுவர் ஆனர்
நான்: இந்த திட்டத்தோட ஆதி மூலம் என்ன தெரியுமா ?
மனசாட்சி:உள் மூலமா வெளி மூலமா கண்ணா ?
நான்:இதெல்லாம் ஓவர்.
மனசாட்சி: நாம என்ன க்ரிக்கெட்டா ஆடறோம்?
நான்:என்னை சொல்ல விடறியா?
மனசாட்சி:எங்கே உன்னை சொல்ல விட்டா வந்தவன் எல்லாம் தலை தெறிக்க ஓடிர்ர மாதிரியிருக்கே
நான்: உன்னோட இதே ரோதனையா போச்சு. வர வர நீ ந்யூஸ் சேனல்ஸ் பார்த்து கெட்டுப்போயிட்டே .எதிர்கட்சி மாதிரி தாலியறுக்கிறே..
மனசாட்சி:இன்னாபா ஃப்ளோ கட் ஆயிருச்சா?
நான்: உனக்குதான் கட் ஆகப்போவுது டங்குவார்
மனசாட்சி: இதானாப்பா இந்தியாவை பணக்கார நாடாக்கறதுல உனக்கிருக்கிற அக்கறை?
நான்: திட்டத்துக்கு இன்ஸ்பிரேஷன் யாரு தெரியுமா? என்.டி.ஆர். சமுதாயமே என் கோவில் ஏழை மக்களே என் தெய்வங்கள்னாரு அவரு ..
மனசாட்சி:இன்ஸ்பிரேஷன் கீட்டம். ஏதோ ஒரு சம்பவம் ட்ரிக்கர் மாதிரி வேலை செய்திருக்குமே?
நான்:ஆமாம்பா. நான் டிகிரி செகண்ட் இயர் படிக்கிறேன்.அப்ப ஒல்லியா ஒரு பையனும், கில்லியா ஒரு பெண்ணும் ஓடி வந்துட்டாங்க, பிரம்பு நாற்காலி பண்றவங்க. கல்யாணம் பண்ணிக்க போறாங்க. நம்ம சென்டர் இருந்த தெருவுல குடியிருந்தாங்க. அப்போ ஒரு டெயிலர் கடைலதான் டெண்ட். செட்டுல ஒரு நாய் என்ன சொல்லுச்சு தெரியுமா ? "பட்டா ! இந்த ஒல்லிபீச்சான ரெண்டு காட்டு காட்டி (அடித்து) அவளை முடிச்சுரனும் மாமா" இத்தனைக்கும் அவன் நல்ல குடும்பத்து பையன் தான். இன்டலிஜெண்ட் தான்.
மனசாட்சி:அட காஞ்சானுங்களே ! அம்பதுக்கு நூறுக்கும் வரத்தான் நூறு டிக்கட் காத்திருக்கே.. இதெல்லாம் காண்டுதானே !
நான்: இல்லையா பின்னே அப்பத்தான் முடிவு பண்ணேன். தாளி இவனுகளை சும்மா விட்டா பிழைக்க விடமாட்டானுக . பேய்க்கு வேலை கொடுத்த மாதிரி கொடுத்துரனும்னு
மனசாட்சி:என்னா வேலைப்பா?
நான்:அந்த நிமிஷம் எனக்கே தெரியாது. அப்பறப்பறம்.. இந்தியாவுக்கும், விவசாயத்துக்கும் உள்ள பொருத்தம் இத்யாதியெலாம் உறைச்ச பிறகு, வடக்குல வெள்ளம், தெற்கில வறட்சி வந்து விவசாயத்தோட முதுகெலும்பை நொறுக்கற சங்கதியெல்லாம் கூட்டி கழிச்சு தான் வேலையற்ற யுவதி,யுவர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்தி நதிகளை இணைத்தல் என்ற . கான்செப்ட் உருவாச்சு
மனசாட்சி: நீ சொல்றதெல்லாம் வெறும் யோசனை மாதிரியிருக்கே தவிர திட்டங்கற மாதிரி தெரியலியே.
நான்: கண்ணா ! நான் சுருக்கமா சொன்னேன். இதுக்கான தியரிட்டிகல் சப்போர்ட்ட விவரிச்சா மொக்கை போடறேன்னிருவ. நம்ம சைட்லயே சீரியஸா இன்னொரு பதிவு போட்டிருக்கேன். தேடிப்பிடிச்சு படி..
மனசாட்சி:அது சரி அது சரி. மேலே போ!
நான்:வேணாம்பா ஒய்.எஸ்.ஆர் அப்படி மேலே போய்தான் ஒரேதாட்டியா போய் சேர்ந்துட்டாரு.
மனசாட்சி: சரி முந்துக்கு போ ! (முன்னாலே போ)
நான்:இப்படித்தான் சந்திரபாபு 9 வருசமா முந்துக்கு போவாலி ! முந்துக்கு போவாலி !ன்னு ஜல்லியடிச்சிக்கிட்டிருந்தாரு. இன்னைக்கு நாறிட்டாரு

மனசாட்சி:என்ன நீ நான் ஏதோ உன்னை கலாய்க்கலாம்னு பார்த்தா நீ என்னை கலாய்க்கிறே !
நான்:நைனா என் வயசு 42 அதை திருப்பி போடு 24 ! தப்பாட்டம் ஆட இறங்கிட்டேனு வை .. நாஸ்திதான்
மனசாட்சி: அட வேணாம்பா ஆள விடு
நான்: விசயத்துக்கு வரேன்
மனசாட்சி: வா.. வா..
நான்:வேலை கொடுக்கனும். அதுக்கு சிறப்பு ராணுவம். இந்தியாவோட உயிர் நாடி ,70% பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிற துறை ,உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற துறை, பொல்யூஷனுக்கிடமில்லாத ஒரே துறை விவசாயத்துறை அதுக்கிருக்கிற பெரும் பிரச்சினை பாசன் நீர் பற்றாக்குறை. அதுக்காக அந்த சிறப்பு ராணுவத்துக்கு கொடுக்கிற வேலை நதிகளை இணைத்தல்
மனசாட்சி: ஏன்பா தெரியாம கேட்கிறேன். ஒய்.எஸ். ஏதோ கோவணம் சைஸுக்கு கால்வாய் வெட்டி கிருஷ்ணாவையும், கோதாவரியையும் இணைக்கிறேன்னாரு. அதுக்கே நிலத்தை கையகப்படுத்தறதுல ஆயிரம் வில்லங்கம். இதுல எல்லா நதிகளையும் இணைக்கனும்னா?

நான்:சரியான கேள்வி. இதுக்குதான் கூட்டுறவுப்பண்ணை விவசாயம். விவசாயிகள் எல்லாரும் தங்கள் கிராமத்துல ஒரு கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்து தங்களோட நிலத்தை மேற்படி சங்கத்துக்கு லீசுக்கு கொடுத்துருவாங்க. அதுல கால்வாய் வெட்ராங்களோ ,கோல்ட் ஸ்டோரேஜு கட்டறாங்களோ, பல்ப் இண்டஸ்ட்ரி வைக்கிறாங்களோ அதுக்கும் வருசா வருசம் வர்ர லீசு தொகைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. டாணு வந்துரும். சங்கத்துல இருக்கிற விவசாயிகள் எல்லாரும் டீமா பயிர் வேலை பார்ப்பாங்க.
மனசாட்சி:இன்னொரு சந்தேகம் !
நான்:கேட்டுத்தொலை
மனசாட்சி: நானே ஒரு 50 ஏக்கர் வச்சிருக்கேனு வை . அதை சங்கத்துக்கு லீசுக்கு கொடுத்துட்டேன். ஆனால் நான் எப்படி மம்முட்டி பிடிச்சு வேலை செய்வேன்?
நான்:செய்யாதே..வருசா வருசம் லீசு வாங்கி சாப்பிடு
மனசாட்சி:ஒரு வேளை கூட்டுறவு பண்ணை விவசாயம் ஊத்திக்கிட்டா?
நான்:அபிஷ்டு ! அபிஷ்டு! இதுக்கு முன்னாடி ஒரு பதிவு போட்டிருக்கேன் படிச்சு பாரு. 80 சதம் விவசாயிக்கிட்டே ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலம்தான் இருக்கு. விவசாயம் சக்ஸஸ் ஃபுல் ஆகணும்னா பயிர் செலவை குறைக்கனும். அதுக்கு மெக்கனைசேஷன், தொழில் நுட்பம், வாட்டர் மேனேஜ்மென்ட், நில பரிசோதனை, தரமான விதைகள், இயற்கை விவசாயம், க்ராப் இன்ஷியூரன்ஸ் லொட்டு லொசுக்குனு ஆயிரம் இருக்கு. ஒட்டு மொத்தமா இன்வெஸ்ட் பண்ணா செலவை குறைக்கலாம். அதை ரஜினி மாதிரி சிங்கிளா வந்து சாதிக்க முடியாதில்லை. அதுக்குதான் கூட்டுறவு பண்ணை விவசாயம்
மனசாட்சி:தனியா மாட்டிக்கிட்டு சாகறதுக்கு பதில் சங்கமா மாட்டி சாவுங்கற.
நான்:முண்டம் ! தண்டம் ! நீ தனியாளா இருந்தா எல்லாத்துக்கும் நீ அலையனும். சங்கமா இருந்தா எல்லா நாயும் உங்களை தேடிவரும். உன் நிலத்தோட விஸ்தீரணம் குறைவா இருந்தா பாங்கிகாரன் கடன் குடுக்க ரோசிப்பான். அரசாங்கமும் உன்னை தேடி பிடிச்சு உதவ மெனக்கெடனும் சிகப்பு நாடாத்தனத்துல விதை வர்ரதுக்குள்ள விதைக்கிறா சீசனே போயிரும். நீ சங்கமா இருந்தா அதுலயும் ஒரு மண்டல அளவுல ஒருங்கிணைப்பு இருந்தா ஆஃபீஸர்ல இருந்து, பாங்கி,இன்ஷியூரன்ஸ் எல்லாமே உங்க ஆஃபீசண்டை வந்து தவம் கிடப்பான்
மனசாட்சி:அதுசரிப்பா.. தனியா செய்தாலும், கூட்டா செய்தாலும் வந்த விளைச்சலை சரியான விலைக்கு விக்கனுமே
நான்:அதுக்கும் அதே விதிதான். விளைச்சல் எல்லாத்தயும் ஒரே நாள்ள, அவசரமா,தனி தனியா விக்க நினைக்கறதால விலையும் குறைச்சல், அலைச்சலும் கூட. விவசாயிகள் சங்க நிர்வாகம்னா முண்டாசு கட்டின பெருசுங்க ( எலக்டட் டைரக்டர்ஸ்) மட்டும் இருக்காது. அதுக்கு தேவையான எல்லா நிபுணர்களையும் அரசு கொடுத்து உதவும். தேசிய அளவுல அடுத்த வருசம் என்னென்ன தானியம் தேவை? எவ்ள தேவை, அதிகப்படியா வந்ததை எத்தனை நாள் ஸ்டாக் பண்ணனும் ?அதுக்கு எவ்ள பெரிய கிடங்கு தேவை, கோல்டு ஸ்டோரேஜ் தேவையா? இல்லே கன்ஸூமர் ப்ராடக்டா மாத்தி விக்கனுமா? அதுக்கு என்ன ஃபேக்டரி தேவை? இப்படி சகலமும் இன்டர் நெட் மூலமா விரல் நுனில இருக்கும்பா.
மனசாட்சி: சரி கண்ணு.. நீ சொல்றதெல்லாம் ஒர்க் அவுட் ஆகி லாபம் வந்ததுன்னே வை ..அதை எப்படி பிரிச்சுக்கறதாம்.
நான்:லேண்ட் ,லேபர்,கேப்பிடல் ,ஆர்கனைசேஷன் கெட்ஸ் ரெண்ட்,லேபர்,இன்டரஸ்ட், அண்ட் பிராஃபிட்.
மனசாட்சி:என்னமோ இங்கிலீஷ்லபீலா விட்டுட்ட
நான்:இதை தமிழ்லசொல்லனும்னா ஒரு பத்தி எழுதனும்பா
மனசாட்சி: சரி அண்ணாச்சி ! விவசாயி கூட்டா பயிர் பண்றான், விளச்சலை ஸ்டாக் வச்சு மார்க்கெட் பண்றானே வை. கருப்புபண முதலைங்க சும்மா இருக்குமாம். மார்க்கெட் கண்ட்ரோலே அதுங்க கிட்டதானே இருக்கு?
நான்: அதுக்கும் வச்சிருக்கேன் ஆப்பு. மத்திய அரசு 3 மாசம் நோட்டீஸோட இப்ப இருக்கிற கரன்ஸி செல்லாது,பழச வச்சிருக்கிறவனெல்லாம் அதுக்கு கணக்கு காட்டி புது கரன்ஸிய வாங்கிக்கனு அனவுன்ஸ் பண்ணிரும். கணக்கில்லாத பணமெல்லாம் மார்க்கெட்லருந்து வெளியேறிடும்.
மனசாட்சி: அக்காங்க் அஸ்கு புஸ்கு. இன் கம்டேக்ஸ் காரன் பிடிச்சுட்டா வருமானத்துக்கு அதிகப்படியா பிடிச்ச சொத்தெல்லாம் என் அம்மா,மனைவி,மகள்கள் தொழில் செய்து சம்பாதிச்சதுனு தப்பிச்சுக்கறான். கணக்கு காட்டறது என்ன பெரிய பிரம்ம வித்தையா அதுக்குதானப்பா அய்ய மாரெல்லாம் ஆடிட்டிங் படிச்சுட்டு காத்திருக்காங்க
நான்:தோ பார் ! இப்ப இருக்கிற நிலைய வச்சே கணக்கு போட்டு பேசறே. சிறப்பு ராணுவத்துக்கப்பால வேலையில்லாத பசங்களே இருக்கமாட்டாங்கப்பா . ஒரு ஆடிட்டர்கிட்டே 60 பேர் அசிஸ்டண்டா இருப்பான். அத்தினி பேரு இருக்கிறதைரியத்லதான் ஆடிட்டர் கச்சா முச்சானு க்ளையண்ட்சை ஏத்துக்கிட்டு பொய் கணக்கு காட்டறான். அந்த 60 பேரும் சிறப்பு ராணுவத்துக்கு போயிட்டா ?
மனசாட்சி: அதிகாரிங்க எல்லாம் கருப்பு பணத்துக்கு அது வெள்ளைதானு பொய் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறாங்கனு வை. அப்ப இன்னா செய்வீங்க அப்ப இன்னா செய்வீங்க
நான்: என் திட்டத்தை சக்ஸஸ் ஃபுல்லா அமல் படுத்தறதுக்காக எகானமி பேக்கேஜுனு ஒரு சப் ப்ராஜக்டு இருக்கு நைனா. அதுல முதல் அம்சமே அரசு துறை அதிகாரிங்க எலலாரையும் ஃபிசிக்கலா, சைக்காலஜிக்கலா டெஸ்ட் பண்ணுவம். இண்டியா டுடேங்கற தலைப்புல பரீட்சை வைப்போம். அதுல தேறினாதான் உத்யோகம் நைனா. இல்லேன்னா லாஸ் ஆஃப் பேல லீவ் கொடுத்து 3 மாசம் கழிச்சு ரீ எக்சாமினேஷன் வைப்போம் அதுலயும் டமாலாயிட்டா கோல்டன் ஷேக் ஹேண்டுதான்.
மனசாட்சி: அதுசரி கருப்பு பணம் வச்சிருக்கிறவன் தெருவுல போறவன் கிட்டே தன் பணத்தை கொடுத்து அவனோட வருமானமா காட்டி மாத்திக்கிட்டு வரச்சொல்றான்
நான்: அது வேலை வெட்டியில்லாத சனம் இருக்கிறப்ப நடக்கும். நாம தான் வேலையில்லாதவனே இல்லேனு ஆக்கிர்ரமே. சப்போஸ் அப்படியே மாத்த வச்சாலும் மாத்தறவன் சும்மா மாத்தமாட்டானில்லயா கு.ப.30 சதவீதமாவது கமிஷன் கேட்பானே. அந்த 30 சதம் கருப்பு பணமாவது மார்க்கெட்லருந்து ஒழியுதில்லயா?
மனசாட்சி:எப்படியோப்பா நல்லாவே கவர் பண்றே
நான்: நீ என்ன ஃபிகரா கவர் பண்ண
மனசாட்சி: இதுவரை நீ சொன்னதெல்லாம் சரினே வச்சுக்குவம்.நீ சொல்ற திட்டத்தை அமல் படுத்த வேண்டியது யாரு?
நான்:மத்திய அரசு
மனசாட்சி: அதாவது எம்.பி.கள்
நான்:யெஸ் .ஆமாம்
மனசாட்சி:டீக் ஹைனு ஹிந்தில கூட சொல்லு மும்மொழி திட்டத்தை அமல் படுத்தினாப்ல ஆயிரும்,
நான்: நீ என்ன கேள்வி கேட்கப்போறேனு எனக்கு புரிஞ்சு போச்சு. கோடி கோடியா செலவு பண்ணி எம்.பி.ஆனவன்/ ஆயிரமாயிரம் கோடி செலவழிச்சு பதவிக்கு வந்த மந்திரி அவனை மந்திரி ஆக்கினவங்க அவங்களுக்கே ஆப்பு வச்சுக்குவாங்களானு தானே கேட்கிறேன்
மனசாட்சி:கிரிக்கெட்டு.
நான்:இப்படி ஒரு வில்லங்கமிருக்கிறதாலதான் நம்ம ஆப்பரேஷ்ன் இந்தியால முதல் அம்சமே நேரிடை ஜன நாயகம்னு வச்சிருக்கோம்.பிரதமரை மக்கள் நேரிடையா தேர்ந்தெடுப்பாங்க . அதனால் அவருக்கு ஃபுல் பவர்ஸ் இருக்கும். முக்கியமா பார்லிமென்ட்ல வீட்டோ பவர் இருக்கும். கருப்பு பண முதலைகள் எம்.பிக்களைவிலைக்கு வாங்கி திட்ட அமலுக்கு ப்ரேக் போட முயற்சி பண்ணாலும் பருப்பு வேகாது.
மனசாட்சி: நெரிடையா எலக்ட் ஆகிற பிரதமர் மட்டும் எப்படி நியாயமான ஆளா இருக்க முடியும்?
நான்:இப்போ பாராளுமன்ற தேர்தல்கள்ள ஆந்திரால காங்கிரஸ் சக்ஸெஸ் ஆச்சு. எப்படி? டாக்டர் ஒய்.எஸ்.ஆரோட எம்.ஜி.ஆர் வேலைகளால வெற்றி கிடைச்சுது. ஆனால் மத்திய அரசை வழி நடத்தறது யாரு சோனியா. மக்கள் சோனியாவுக்காகவோ , நேரு குடும்பத்துக்காகவோ ஓட்டு போடனும்னா 1994 போட்டிருக்கலாம், 1999 ல கூட போட்டிருக்கலாம் இல்லியா?
மனசாட்சி: நீ என்ன சொல்ல வர்ரே ஸ்ட்ரெயிட்டா சொல்ல்லுப்பா சுத்தி வளைக்காத.
நான்:செக்ஸுல கூட இப்படிதான் அன்பான பேச்சு, முத்தம்,ஃபோர் ப்ளே எதுவுமில்லாம ஸ்ட்ரெயிட்டா விஷயத்துக்கு போயிர்ரதாலதான் பெண்ணுக்கு சரியா லூப்ரிக்கேட் ஆகாம, ஆணுக்கு ப்ரி மெச்யூர்ட் எஜாகுலேஷனாகி, பெண்ணுக்கு ஆர்காசம் கிடைக்காம நாஸ்தி ஆகிப்போவுது
மனசாட்சி:அய்யயோ இன்னாபா இது மாத்ரு பூதம் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டே. தாய் குலமெல்லாம் படிக்கிறாங்கப்பா.
நான்:ஏன் பாக்யராஜ் படத்துல முருங்கைகாய் சமாச்சாரம் வந்தா ரசிக்கலை? தப்பித்தவறி இந்த பதிவை க்ளிக் பண்ணிட்ட இளைஞர்கள் விலகிராம படிக்க
இதுவும் தேவைப்படுதுப்பா
மனசாட்சி: என்ன இழவோ விஷயத்துக்கு வா
நான்: நான் என்ன சொல்றேன்னா நாட்ல இருக்கிற பி.சி.,எஸ்.சி,எஸ்.டி,மைனாரிட்டி எல்லாம் சேர்த்து 72% இருக்காங்க. மும்முனை போட்டி ஏற்பட்டு இதுல பாதி பேர் ஒத்துமையா ஓட்டு போட்டா கூட இவிங்க சப்போர்ட் பண்ற ஆளு, இவிங்களோட வெல் விஷர் பிரதமராயிருவாரு. எம்.பிங்க தயவும் தேவையில்லை. அது தேவையில்லைங்கறதால டாட்டா,பிர்லா தயவும் தேவையில்லே, பதவிக்கும் கண்டம் வராது. ஒழுங்கா மக்களுக்கு செய்ய வேண்டியத செய்தா படுத்துக்கிட்டே ஜெயிக்கலாம்
மனசாட்சி:இதான் ஆப்பரேஷன் இந்தியாவா
நான்:யெஸ்ஸு..
மனசாட்சி:திட்டம் சரிப்பா . இதனோட அமலுக்காக என்ன கிழிச்சிருக்கே
நான்: அதெல்லாம் ஏற்கெனவே விரிவா இந்த வலைப்பூல சொல்லியாச்சுப்பா
தலைவன்னு எவனெவன் இருந்தானோ ,இன்னைக்கு இருக்கானோ எல்லாத்துக்கும் ஹோல்சேலா, ரீடெயிலா அனுப்பியாச்சுப்பா. லோக் சபா ஸ்பீக்கருக்கு 200 பிரதி அனுப்பினேன். தமிழ் நாடு,ஆந்திர ஹை கோர்ட் நீதிபதிகளுக்கு அனுப்பினேன், சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு அனுப்பினேன், எல்லா எம்.பிக்களுக்கும் மெயில் அனுப்பினேன். ( நோ சச் யூசர்னு ரிட்டர்ன் வந்துருச்சு எல்லாமே)
மனசாட்சி:மொத்ததுல டெஸ்பாச் க்ளர்க் மாதிரி வேலை செய்திருக்கே.
நான்: சந்திரபாபுவுக்கு 97 ல ருந்து 02 ஏப்ரல் 22 வரை அனுப்பினேன். பதில் இல்லேனு பத்து ரூபா எம்.ஓ அனுப்பினேன். அது டெலிவரி ஆச்சு. கன்ஸ்யூமர் ஃபோரத்துல கேஸ போட்டேன். எனக்கு நானே ஆப்பு வச்சுக்கிட்டேன். கண்டமேனிக்கு என்னை லந்து பண்ணாங்க. இன்ஃபர்மேஷன் ஆக்ட் பிரகாரம் ஃபைட் பண்ணேன். ஹ்யூமன் ரைட்ஸ் கமிஷனை அப்ரோச் பண்ணேன். யூ.என்.ஓக்கு கம்யூனிக்கேட் பண்ணேன்.
பத்து நாள் உண்ணாவிரதமிருந்தேன். தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கு ஸ்டேட்மென்ட் கொடுத்துக்கிட்டிருந்தேன். ப்ரெஸ் மீட் வச்சிருக்கேன். ஒய்.எஸ்.சி.எம்.ஆன புதுசுல ஹைதராபாதுக்கு பாதயாத்திரை புறப்படறதா சொல்லி அலம்பல் பண்ணேன். ஒரு மயிரும் நடக்கலை
மனசாட்சி:இப்போ என்ன பண்றே?
நான்: செக்ஸ் ஜோக் எழுதிக்கிட்டிருக்கேன்
மனசாட்சி: ப்தூ.. இதுவும் ஒரு பிழைப்பா
நான்: சோடா புட்டிகண்ணாடிங்க அம்பதோ அறுபதோ படிச்சா போதுமுனு நினைக்கல கண்ணா சின்ன பசங்களை கூட நம்ம சைட் பக்கம் ஒதுங்க செய்ய தான் இன் டேக்டீஸ். இப்போ வார் ஸ்டார்ட்.
மனசாட்சி:என்னா வாரோ செருப்பு வாரா?
நான்:டங்குவார் அறுந்துரும்.
மனசாட்சி:அப்டின்னா என்னப்பா
நான்:எனக்கும் தெரியாதே
மனசாட்சி:ஆமா நீ தான் நவீன வாத்ஸாயனன் மாதிரி பில்ட் அப் தர ஆசாமியாச்சே இந்த திட்டம் அமலானா தீரக்கூடிய செக்ஸ் பிரச்சினைகள் என்னனு சொல்ல முடியுமா?
நான்:யூத்துக்கு காலாகாலத்துல வேலை கிடைக்காமதான் கல்யாணம் தள்ளிபோகுது. வேலை வெட்டி இல்லாத காரணத்தால சுய இன்பத்துக்கு பழக்கப்பட்டுர்ராங்க. இல்லேன்னா காமத்துக்கு காதல் வண்ணம் பூசி ஆசிட் அடிக்கிறாங்க கள்ள உறவு,ஈவ் டீசிங் பண்றாங்க, ரேப் பண்றாங்க. உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் ஆசைகள் வன்முறையா வெடிக்குது. சூடோ நக்ஸல்ஸ், ஃபேக்ஷனிசம், உதவாக்கரை அரசியல், சினிமாகாரனுக்கு தோரணம் கட்டறதுனு வீணாப்போறாங்க காலாகாலத்துல வேலை கொடுத்துர்ரமில்லே. ஒழுங்கு மரியாதையா கல்யாணம் பண்ணிக்கிட்டு செக்ஸை சட்டப்படி அனுபவிப்பாங்க எந்த வித காம்ப்ளெக்ஸுமில்லாம சக்ஸஸ்ஃபுல் செக்ஸ் லைஃபை லீட் பண்ணுவாங்க குழந்தையின்மை இத்யாதி பிரச்சினை வராது. தங்களுக்கு பிறக்கிற குழந்தைகளையும் நல்லா வளர்ப்பாங்க புதிய இந்தியா உருவாகும்.

மனசாட்சி:பழைய இந்தியாவை என்ன பண்றதாம். ஓல்ட் ஈஸ் கோல்ட் ம்யூசியத்துல வைக்கலாம்.