என் மீது தடை விதிக்க கோராத பதிவுலக நண்பர்களுக்கும் , தடை விதிக்காத திரட்டிகளுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி. என்னை பொறுத்தவரை செக்ஸ் என்பது மனித வாழ்வின் ஒரு சிறுபாகமே. நவரசங்களில் காமரசமும் ஒன்று. ஆனால் செக்ஸ் மீதான புரிதலின்றி நாம் ( 40 ஐ எட்டிவிட்டவர்கள்) நாசமாய் போவதுடன் இளைய தலைமுறைக்கும் சரியான வழியை காட்டாது விடுகிறோம். நாம் பேச மறுக்கும் போது மஞ்சள் பத்திரிக்கைகளோ அ அவனை/அவளையொத்த அரைகுறைகளோ பேச ஆரம்பிக்கிறார்கள். அப்படி பேச, பேசியது மனதில் பதிய எதிர்கால படுக்கையறை வாழ்வு மட்டுமல்லாது ஒட்டுமொத்த சமூக வாழ்வே பாதிக்கப்பட்டு விடுகிறது. எனவே தான் இந்த தொடர் தொடர்கிறது.
இன்று மேலுமொரு ஜோக் :
இதுவும் ராஜா ஜோக் தான். ராஜா அந்த விஷயத்தில் வீக். ராணிக்கு மந்திரி மேல் ஒரு கண். ராஜா,ராணி,மந்திரி, அனைவரும் சிறு படையுடன் வேட்டைக்கு புறப்படுகிறார்கள். ராஜா,ராணி,மந்திரி மட்டும் வழி தவறி விடுகிறார்கள். ராஜா மந்திரியை மரம் ஏறி படைகள் எங்கேனும் தென்படுகிறதா பார்க்க சொன்னார். மந்திரி மரமேறினார். ஏறியதுமே அலற துவங்கினார். "ராஜா என்ன இது அனியாயம் பட்டப்பகல்ல, வெட்ட வெளியில ,பகிரங்கமா ராணிய இப்படி போட்டு கிழிக்கிறிங்க"
ராஜாதான் அந்த விஷயத்தில் டுபுக்காச்சே . யோவ் மந்திரி என்னய்யா சும்மா அலம்பல் பண்றே. நான் பாட்டுக்கு சிவனேனு கிடக்கேன் என்று சீறினார். மந்திரியோ "பொய் இல்லே ராஜா இங்கருந்து பார்த்தா அப்படித்தான் தெரியுது. வேணும்னா நீங்களும் மரமேறிப்பாருங்க தெரியும்"னார்
ராஜா இதென்னடா விந்தையா இருக்கேனு மரம் ஏறினார். ராணிதான் எவர் ரெடி பேட்டரி மாதிரி இருக்காளே. மந்திரி ராணியை கிழிக்க ஆரம்பிச்சாரு. ராஜா தொண்டை கிழிய கத்தறாரு.
"அடப்பாவி ! நீ சொன்னது நிஜம் தான்யா இந்த மரத்துல ஏதோ விசேஷ சக்தியிருக்கு.. நீ ராணியை கிழிக்கறாப்ல தெரியுது "
இந்த ஜோக்ல பார்த்திங்கனா ராஜா அந்த விஷயத்துல வீக்குனு வருது. அதுக்கென்ன காரணம் ?
போதுமான உடற்பயிற்சி இல்லாம , சும்மா தின்னுக்கிட்டு , கழிஞ்சுகிட்டு கிடந்தா தொந்தி போடும். மண்டைல இருந்து இன உறுப்புக்கு சேதி தர ஒரு ஏற்பாடு இருக்கு. அந்த சேதிய மழுப்பத்தான் அப்பல்லாம் அரணாக்கயிறுனு போடுவாங்க. இப்ப லோ ஹிப் பேண்டும், லோ ஹிப் சேரியும் கட்றதால் சேதி வேகமா சேர்ந்து உ.வ.பட்டு காமத்தை காதலா புரிஞ்சுக்கறாங்க (இதெல்லாம் நான் சொல்றதில்லை ஒரு பிரபல சைக்கிரியாட்ரிஸ்டு சொன்னாரு) சரி ஒழியட்டும் தொந்தி பெருத்ததுனா அந்த சேதி இன உறுப்பை அடைய தாமசமாயிருது. இது கோணம்.
அடுத்தபடியா பார்த்தா அந்த விஷயத்துல அடிக்கடி இறங்கிர்ரது. செமன் டெஸ்ட் எடுக்க போகனும்னா 10 நாள் உடல் உறவை தவிர்த்துட்டு வரச்சொல்வாங்க .ஏன்னா அப்பதான் விந்து அதிக அளவுல இருக்கும் , உயிரணுக்களோட ஒரிஜினலான அசைவு திறன் தெரியும்.
கச்சா முச்சானு கெட்ட காரியம் செய்துட்டு இருந்தா (ஒரே நாளில் பல தடவை) அதுக்குண்டான தகுதி குறைஞ்சுகிட்டே போயிரும். கிணறு மாதிரி தான் இதுவும். அந்தந்த உடம்போட ஆரோக்கியத்துக்கு ஏத்த மாதிரி உடம்பு அடுத்த ஷெட்யூலுக்கு தயாராகும். அது தயாராகும் முன்னாடியே இறங்கினா தலைவலிதான்.
செக்ஸ் பவரை அதிகரிச்சுக்க ஒரேவழி எண்ணிக்கைய குறைக்கறதுதான். மாதர் போகம் மாதமிருமுறை என்பார்கள். ஆனால் இது அவரவர் உடல் நிலையை பொறுத்து மாறும். மனித உடலிலேயே ஒரு கடியாரமிருக்கிறது, (சினிமா கவிஞர்கள் சொல்றமாதிரிமனசுக்குள்ள எல்லாம் மணி அடிக்க முடியாதுங்கோ) ஆனால் உயிர் கடிகாரம் மணியடிக்கும். செக்ஸிலான வெற்றி என்பது உடல், மனம் இரண்டின் ஆரோக்கியத்தையும் பொறுத்துதான் அமைகிறது.
மேலும் இந்த விஷயத்தில் குறைபாடுள்ளவர்கள் (விந்து முந்துதல் அ ஆர்வமின்மை ) சாதாரணமாக சந்தேக புத்தி கொண்டவர்களாக மாறிவிடுவார்கள். அதே சமயம் இந்த ஜோக்கில் ராஜா மாதிரி கண்டதையும் நம்ப ஆரம்பித்து விடுவார்கள்.
சிட்டுக்குருவி லேகியம் முதலாக வயாக்ரா வரை. வாலிப வயோதிக அன்பர்கள் கவனிக்க வேண்டிய சின்ன விஷயம் உடலின் ஆரோக்கிய நிலையை தான். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மேற்படி விஷயத்திலும் ஆரோக்கியம் ஏற்பட்டுவிடும்.