Wednesday, October 28, 2009

எமன் Vs மேன்

சின்னவயதில் நான் படித்த மாயாஜாலக்கதைகளின் எச்சம் இன்னும் என் அடி மனதில் இருந்ததா? விட்டலாச்சார்யாவின் படங்கள் தான் ஆழமான முத்திரையை போட்டுவிட்டனவா தெரியாது. பூமியில் கால் பாவாத சமாச்சாரங்கள் என்றால் இப்போதும் ஒருவித கிளு கிளுப்பு இருக்கிறது.

நான் ஜோதிடத்தின் மர்மங்களை ப்ளாஸ்ட் செய்யவும், ஆன்மீகத்திலான குழப்பங்களை ,குளறுபடிகளை மீறி தெளிவை பெறவும், மூன்றே மாதங்களில் கணிணியை இயக்க கற்கவும், எனக்கு கு.ப.அறிமுகம் கூட இல்லாத வேலைகளையும் குன்ஸிலேயே செய்து முடிக்கவும் (சில நேரம் அவற்றில் எக்கு தப்பாய் மாட்டி முழித்ததும் கூட உண்டு) சில அமானுஷ சக்திகள் உதவியதாகவே நம்பும் ஆசாமி நான்.

இந்நிலையில் பல வருடங்கள் கழித்து சந்தித்த பால்ய நண்பன் ஒருவன் பாபா படம் கணக்காய் ஒரு மந்திரத்தை கொடுத்து இதை ஒரு லட்சம் முறை ஜபித்தால் ஆத்மா உடலிலிருந்து பிரியும். நீ நினைத்த இடத்துக்கு போகலாம் என்று கூறியதையும், நான் ஜெபிக்க ஆரம்பித்ததையும் ஆச்சரியத்துக்குரிய விஷயமாக கருததேவையில்லை என்றே கருதுகிறேன்.

மந்திரம் ஜெபிக்க ஆரம்பித்த 10 ஆவது நாளான நேற்று நள்ளிரவு மேற்படி மந்திரத்தை ஜெபித்துக்கொண்டிருந்த போது உண்மையிலேயே
கலவரம் வெடித்தே விட்டது. திடீர் என்று வலது மார்பில் ஊசி குத்துவது போன்ற வலி துவங்கியது. "என்னங்கடா இது ஹார்ட் லெஃப்ட் சைட்லதான இருக்கும். 1987 ல யிருந்து 22 வருசமா போட்ட தம் இப்படி வேலை செய்யுதா? ஒரு வேளை ரமண மகரிஷி சொன்னமாதிரி வலப்பக்கம் இருக்கிற ஆன்மீக இதயத்துலதான் கலாட்டா நடக்குதா? ஒரு வேளை வாயு கோளாறா இருக்குமோ? இல்லையே இன்னைக்கு ராத்திரி 8.30க்கெல்லாம் சாப்பிட்டுட்டு ஜிண்டாக் கூட போட்டாச்சே" இத்தனை யோசனைகள் ஒரே நொடியில் சீறிக்கிளம்பினாலும் ஒரு ட்ராக்கில் மந்திரம் ஓடிக்கொண்டே இருந்தது.

ஊசிக்குத்தலும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. "தாளி என்னதான் நடக்குது பார்ப்போம்" என்று மந்திர ஜபத்தை உக்கிரமாக்கினேன். கடந்த காலத்தில் என்னென்ன மந்திரங்கள் ஜெபித்தேன் அவை எப்படியெல்லாம் பலன் கொடுத்தன என்பதை ஒரு முறை ஒட்டிப்பார்த்தபடி மந்திரத்தை ஓட்டிக்கொண்டே இருந்தேன்.

வாயு கோளாறு இருப்பவர்கள் உடலில் வாய் நகர்வதை உணர முடிவது போல் ஊசிக்குத்து நகர்வதை உணர முடிந்தது. மெல்ல கழுத்து ,தொண்டை என்று நகர்ந்த ஊசிக்குத்து நடு நெற்றியில் சென்று முட்ட ஆரம்பித்தது. டாக்டர் ஊசியில் மருந்தை ஏற்றிக்கொண்டு லேசாக பீச்சிப்பார்ப்பாரே அதை போல் நடு நெற்றி ஸ்தானத்து ஊசி எதையோ பீச்சியது.

அவ்வளவுதான்.ஆறுமணி நேரம் ஒன் பாத்ரூம் அடக்கி வச்சிருந்து விடும்போது உடம்பு சிலிர்க்குமே அதுமாதிரி சிலிர்த்துப்போச்சு. பீக் ஹவர்ல சிட்டி பஸ் நெரிசல்லருந்து விடுபட்டு நம்ம ஏரியா பஸ் ஸ்டாப்ல உதிர்வோமே அப்படி ஒரு ஃபீலிங். நான் சவாசனத்தில் படுத்திருந்த என்னை பார்க்க முடிந்தது. குளிர். தாங்க முடியாத குளிர் . இதெல்லாம் கனவானு ஒரு சம்சயம். குளிருக்கு இதமா ஒரு தம் போடலாம்னு பார்த்தா கை துழாவுதே தவிர காத்துதான் கிடக்குது.

மந்திரம் மட்டும் தொடருது. சில நிமிடங்கள் கழிச்சு புரிஞ்ச்சுக்கிட்டேன். மந்திரம் ஒர்க் அவுட் ஆயிருச்சு. பாடிலருந்து வெளிய வந்தாச்சு. இப்ப எங்கே போலாம். அந்த சமயம் பார்த்து முண்டகோபனிஷத் ஞா. வந்தது. எத்தனையோ தமிழ் படங்கள்ள பார்த்த எமனை ஒரு தடவை பேட்டி எடுத்து ப்ளாக்ல வச்சா எப்பயிருக்கும்? நினச்சதுதான் தாமதம் எமலோகம். பாவம் எமதர்மர் ரெஸ்ட்ல இருக்காரு. பக்கத்துல அவுங்க சம்சாரம் ஒரு ஓரமா ஒண்டியிருக்கு.

இதென்னடா லொள்ளுனு வெளிய வந்து குரல் கொடுத்தேன். எமதர்மர் பெரிய கோட்டாவியோட வந்து கதவை திறந்தார்.

"ஏய் யார் நீ இந்த நேரத்துல வந்திருக்கே..உன்னை யாரு கொண்டு வந்தது?"
"சே .. நான் என்ன எலும்பு துண்டா யாரோ கொண்டாந்து போட , நமக்கு பூலோகம், ச்சும்மா உங்களை ஒரு பேட்டி எடுக்கலாம்னு வந்தேன்"
எமன் தலைக்குள்ள ஸ்டாருங்க. " நம்பவே முடியலை எப்படி வந்தேப்பா"
இந்த கதையின் முதல் அத்யாயத்தை சொன்னேன்.

"தபாரு இப்படியெல்லாம் அகாலத்துல ,சாகறதுக்கு முந்தி இங்கே வரக்கூடாது. உன் வீட்ல வேற எலித்தொல்லை ஜாஸ்தி . முக்கியமான எதையாவது கடிச்சு வச்சுரபோவுது. "

"கடிச்சா கடிச்சுட்டு போவுது ஆந்திரால ஆரோக்கிய ஸ்ரீ ப்ளான் இருக்கு தெரியுமா? வேற ஒன்னு வச்சிக்குவன்"

"என்னடா இது தலைவலியா போச்சு..பேட்டில்லாம் முடியாது . மேலிடத்துல பர்மிஷன் வாங்கனும். ஆஃப்தி ரிக்கார்டா வேணும்னா பதில் சொல்றேன்"

"அஸ்கு புஸ்கு இவ்ளோ தூரம் வந்துட்டு ஆஃப் தி ரிக்கார்டு பதில் எல்லாம் வாங்கிகினு போமுடியாது தலை ! வேணம்னா டேக் யுவர் ஓன் டைம் . அதுவரைக்கும் ச்சும்மா டைம்பாஸ் பண்ணிக்கிறேன்"

இவன் என்னடா சேல்ஸ் ரெப் கணக்கா இருக்கானே என்றோ என்னவோ எமன் டெலிப்பத்தியில் மும்மூர்த்திகளுடன் பேசினார். பிறகு "சரிபா ..பெர்மிஷன் க்ரேண்ட்டட் கேள்விய கேளூ" என்றார்.

"ஆன் வாட் க்ரவுண்ட்ஸ் பர்மிஷன் க்ரேண்ட்டட். உன் ப்ளாக் சரியான லொடக்கானி ப்ளாகுனு மிஸ்டர் சிவா சொன்னார். ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் கூட பார்க்கறதில்லயாமே..அதுல வேற உன் ப்ளாக் 12 ஆவது ரேங்குல இருந்து ஜீரோ ரேங்குக்கு விழுந்துருச்சாமே"
"அட பாவிகளே.. பேட்டி குடுக்குறவன் நிறைய பேர் படிக்கனும்னு ஆசைப்படுவான். இதென்ன உட்டாலக்கடியா இருக்குது"
"இதெல்லாம் தேவரகசியம்பா நீ பத்தாங்கிளாஸ் கொஸ்டியன் பேப்பர் மாதிரி அவுட் பண்ணிட்டா கமிஷன் போட்ருவாங்கப்பா..தலைவலி"
"சார் !தமிழ் தெலுங்கு சினிமாலல்லாம் பார்த்தப்ப ஆள் நல்லா ஸ்டவுட்டா இருந்திங்க இப்ப என்ன வெயிட்லாஸ் ட் ரீட்மெண்ட்லைருக்கிங்களா.. அதெல்லாம் வேணா சார் ரிஸ்கு "
"அட போப்பா .. நீ வேற சும்மா லொள்ளு பண்ணிக்கிட்டு என்னை பார்த்தவன் எவன்? ஏதோ அவனவனுக்கு தோணின மாதிரி காட்டி உட்டுட்டான்"
"அ..ச்சும்மா வுடாத தலை எங்க வாத்தியாரு நான் செத்து பிழைச்சவண்டா நு பாட்டெல்லாம் பாடியிருக்காரு"
"என்ன நீ பாதிராத்திரி பேட்டினு வந்து ஒதகாத விஷயம்லாம் கேட்டுக்கிட்டிருக்கே"
"சரி சார் . சீரியஸ் "
"அப்போ சி.எம்.சிக்கு போயா"
"பார்த்தியா என்னை சீரியஸ்னுட்டு இப்ப நீங்களே ஜோக் கட் பண்றிங்க"
"ஆமா அது பர்த்டே கேக்கு கட் பண்றேன்/ எல்லாம் சகவாச தோஷம் தான். பன்னியீட சேர்ந்த கன்னும் கதை"
"ஏன் பூவோட சேர்ந்த நாரும் கதையா இருக்க கூடாதா"
"எப்பா நீ கேட்க வேண்டியத கேட்டுட்டு போ.."
"சரி போன ஜென்மத்துல என் கிட்ட பத்து ரூபா கை மாத்து வாங்கிகினிங்களே அதை குடுங்க"
"அய்யயோ என்ன விட் ருப்பா"
"அந்த பயம் இருக்கட்டும். அந்த நாள்ள நசிகேதனை சத்தாச்ச மாதிரியெல்லாம் வெண்டைக்கா பதில் தரக்கூடாது. பாயிண்ட் டு பாயிண்ட் பதில் வரனும் சரியா"
"சரிப்பா"
" இந்த படைப்பு எப்படி ஆரம்பமாச்சு"
"இதுக்கு ஆரம்பமும் கிடையாது. முடிவும் கிடையாது. படார்னு ஒரு வெடி. அந்த அதிர்வுல ஒரு பக்கம் விரிவடைஞ்சுட்டே போகுது. மறுபக்கம் சுருங்கிகிட்டே போகுது"
"இத மாதிரி பீலா விடறதாலதான் பெரியார் வாங்கு வாங்குனு வாங்கினாரு"

"யாரோ வைவாங்கனு உண்மைய மாத்தி சொல்லமுடியுமா என்ன? பெரியார் காலத்துல ஐயருங்க கடவுளை வச்சு மனுஷங்களை பிரிச்சாங்கப்பா ..பிரிச்சவங்களை படிக்க விடாம ,முன்னேற வுடாம தடுத்தாங்கப்பா. அவன் உயிரும் என் மயிரும் ஒன்னுன்னு பேசினாங்க. இதுக்கெல்லாம் மூலம் கடவுள்ன்ற கான்செப்டு தானே அதுவே பெரிய பொய் போடா பொங்கினு பெரியார் ஒரே அடியா அடிச்சார். கடவுளைபத்தி தெரியாதவன் , கடவுளோட தொடர்பில்லாதவன், அப்படி
நெத்தியடி அடிக்க முடியுமா என்ன ? ஈஸ்வரோ மனுஷ்ய ரூப்பேணா. மானவ சேவா மாதவ சேவா இதெல்லாம் தெரியாதா என்ன? "

"சரி ஓஞ்ச்சு போவட்டும். இந்த படைப்பு கான்ஸ்டன்டா இருக்குன்றிங்க"

"ஆமாம் பா"

"சரி இதுல பிறப்பும் இறப்பும் எப்படி நடக்குது/"

"கூச்சமா கீதுப்பா "
"யோவ் பெருசு இந்த லொள்ளுதானே வேணாங்கறது . நான் கேட்ட விதம்தப்போ என்னவோ மனுஷன் ஏன் பிறக்கறான்?"

"முக்தியடைய"

"முக்தின்னா என்ன தலை"

"மனுஷன் இந்த படைப்புல பிரிக்க முடியாத ஒரு பாகம். ஆனால் இவன் தான்
இந்த படைப்புல இருந்து வேறுபட்டவன்னு நினைக்கிறான். இந்த படைப்புக்கு தன்னை மையப்புள்ளியா நினைக்கிறான். தன்னை மையமா கொண்டு இந்த படைப்பை டிஃபைன் பண்ணரான். இது அவனை போராட்டத்துக்கு தள்ளுது. அந்த போராட்டத்துல வெற்றி கண்டா துள்ரான், தோற்றா துவண்டு போரான்"

"அடிச்சக்கைன்னானாம் ! அப்போ எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுனு வாழ்ந்தா அதுதான் முக்தியா.."

"இல்லடா கண்ணா தான் செத்தா கூட எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுனு இருக்கனும் அதுதான் முக்தி நிலை "

"மரணம்னா என்ன ?"

"இந்த உடம்புலருந்து நீ பிரியறே"

"உடம்புக்கும் உயிருக்கும் என்ன தொடர்பு ?"
"உன் உடம்பு கம்ப்யூட்டர் மாதிரின்னா உன் ஆத்மா ஹார்ட் டிஸ்க் மாதிரி."

"யப்பா லேட்டஸ்ட் உதாரணமெலாம் தரீங்க"

" மூணு மாசத்துக்கு முன்னாடி தாம்பா எமலோகம் கணிணி மயமாச்சு"

" அட்றா சக்க அட்றா சக்க அட்றா சக்க !"

"அது ஏன் மனுஷன் முக்தியடைஞ்சு தான் தீரனுமா?"

"சபாஷ்ரா கண்ணா .. இத்தினி யுகத்துல இப்படி ஒரு கேள்விய கேட்டதே இல்ல எனக்கு ஸ்ட் ரைக் ஆனதை சொல்றேன். இதுவும் மறுபடி மறுபடி நடக்கிற கதைதான். கடவுள்னு ஒரு பார்ட்டி இருக்காரே..அவரு சும்மா இல்லாம இந்த படைப்போட ஆரம்பத்துல ஆகாயத்துல இருந்து ஒரு மின்னல் வடிவமெடுத்து கடலுக்குள்ள பாய்ஞ்சாரு."

"என்ன சார் திடீர்னு அம்புலிமாமா ரேஞ்சுக்கு போயிட்டிங்க"

"சரி முதல்வரிய விட்டுரு அடுத்த வரிய பாரு முதல்ல ஒரு செல் அங்கஜீவி ஒன்னு உருவாச்சு. அது கொழுத்து ரெண்டா பிரிஞ்சது. ரெண்டு நாலாச்சு. ஒரு செல் இன்னொரு செல்லை பிரதியெடுக்கிறப்ப எர்ரார் வந்து புது ஜீவராசி ஏற்பட்டுச்சு. இப்படியே குரங்கு வரை வந்துது. குரங்குல இருந்து மனுஷன் வந்தான். "

"இதையெல்லாம் டார்வின் சொல்லியிருக்காரே"
"சொல்லட்டுமே.. நானும் ஒரு தரம் சொல்றேன்"
"சன் டீவில இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையானு பழைய படத்தை போட்டு அறுக்கிறாப்ல"

"இல்லே கண்ணா இது ரீ மேக்னு வச்சுக்கயேன்"

"ஒழியட்டும் சொல்லுங்க"

"இத்தினி புது ஜீவ ராசி வந்தாலும் தான் ஒரே உயிரா/ஒரே உடம்புலருந்த ஞா. மட்டும் செல் காப்பி காரணமா அப்படியே தொடர்ந்து வந்தது. தான் ஒரே உயிரா/ஒரே உடம்புல இருந்தப்ப "போட்டி கிடையாது, அபத்திரம் கிடையாது, கம்யூனிகேஷன் ப்ராப்ளம் கிடையாது, காலம் கிடையாது, தூரம் கிடையாது.. இதனால வர்ர டென்ஷன் கிடையாது வாழ் நாள் முழுக்க நிம்மதி நிம்மதி நிம்மதி இது தவிர வேறில்லைங்கற நினைவும் , மறுபடி அந்த நிலைய அடையனுங்கிற துடிப்பும் ஒவ்வொரு ஜீவ ராசிலயும் இருக்கு"

"எப்படி சொல்றிங்க"

"மனுஷன் ஏன் கொலை பண்றான் , ஏன் தற்கொலை பண்றான் , ஏன் தண்ணி போடறான் , குடலை எரிக்கிற மிளாகா பஜ்ஜி சாப்பிடறான் . ஏன் உன் ப்ளாகை கூட படிக்கிறான். சாகனுங்கற வெறி. எதுக்கிந்த வெறி . தன் உடலை உதிர்க்கனும். ஒரே உயிரா ஒரே உடலா மாறனுங்கற வெறி"

"தபார்ரா இது ஏதோ புதுசா இருக்கு "

"என்னை பேச விடு இல்லேன்னா ஃப்ளோ கட்டாயிரும். ஒரு தமாசு என்னா தெரியுமா மனுஷன் மட்டுமில்லே இந்த ஒட்டு மொத்த இயற்கையே ஓருடல் ஓருயிரா தான் இருக்கு. நம்ம எல்லாரையும் , இந்த படைப்பையும் உள்ளடக்கின kaalapurushan it self GOD