Thursday, October 1, 2009

புதிது புதிதான தவறுகள்

யாவும் நன்மைக்கே !
ஒரு ராஜா. அவருக்கு நாவிதர் ஷேவ் பண்ணும்போது சின்ன டாக்கா விழுந்துருது. உடனே ராஜா கோபப்பட்டு நாவிதரை அரெஸ்ட் பண்ணச்சொல்றார். அப்ப அங்கே இருந்த மந்திரி " மிஸ்டர் கிங் ! விடுங்க பாவம்"னாராம். ராஜாவுக்கு சைலன்ஸர்ல புகை வந்து மந்திரிய தூக்கி உள்ள போடச்சொல்லிட்டார். அதுக்கும் மந்திரி "யாவும் நன்மைக்கே" நு சொல்லிட்டு உள்ளாற உட்கார்ந்துகிட்டார். ராஜா வேட்டைக்கு புறப்பட்டார்.

காட்ல காட்டு வாசி கும்பல்ல மாட்ரார். கூட வந்த படையெல்லாம் பிடிச்சது ஓட்டம். கா.வாசிங்க ராஜாவை பலி கொடுக்க குளிப்பாட்ராங்க. கன்னத்துல டாக்காவ பார்த்துட்டு மூளி போனவனை குல தெய்வம் ஏத்துக்காதுனு விரட்டிர்ராங்க.

ராஜாவுக்கு ஒரே குஜிலி. நேரா சிறைக்கு போய் மந்திரிய ரிலீஸ் பண்றார். எனக்கு டாக்கா விழுந்ததால் எனக்கு நன்மை நடந்தது. உன்னை ஜெயில்ல போட்டதால் உனக்கென்ன நன்மைனு கேட்டார். அதுக்கு மந்திரி " ராஜா ! உன் கூட வேட்டைக்கு வந்தவனெல்லாம் வெத்து வேட்டு விட்டுட்டு ஓடிப்போயிட்டாங்க. நான் ஓடியிருக்க மாட்டேன். உன்னை மூளினு ஒதுக்கின கும்பல் என்னை காலி பண்ணியிருக்கும்னாராம் . This is the story ! Had you enjoyed it.

கையலாகாதவர்களுக்கு ஆறுதலாக உள்ள வாக்கியங்களில் முக்கியமானது"யாவும் நன்மைக்கே ! "என்ப‌தாகும். நடை பெற வேண்டிய அக்கிரமம், அ நியாயமெல்லாம் நடந்து முடிந்த பிறகு "யாவும் நன்மைக்கே !" என்று ம‌ன‌தை ஆற்றிக்கொள்வ‌து தான். (ஜோக் : டீக்கும் ம‌ன‌சுக்கும் என்ன‌ ஒத்துமை. ஆத்திக்க‌ முடியும்)
நான் ஒரு மாதமிருமுறை இதழ் நடத்துவதாக குறிப்பிட்டுள்ளது நினைவிருக்கலாம். எங்கள் ஊர் எம்.எல்.ஏ சி.கே.பாபு. கடந்த தேர்தல்களின் போது எங்கள் மாதமிருமுறை சார்பாக அவரது வா.வ.வெளியிட முடிவு செய்தேன். டி.டி.பி வேலை ஓவர். மாஸ்டர் கூட எடுத்தாயிற்று. மாஸ்டர் ஹீட் பண்ணி மிஷினிலும் ஏற்றி விட்டார்கள். மேட்டர் பேப்பரி அடங்காது வெளியே ஓடுகிறது. என்னடா விஷ‌யம் என்றால் டி.டி.பி ஆப்பரேட்டர் ஏ 4 சைஸ் காகிதத்தில் அச்சாக வேண்டிய 2 பக்கங்களுக்கும் விட வேண்டிய அளவை 2 செ.மீ. என்பதற்கு பதில் 5 செ.மீ ஆக வைத்து விட்டார். பிறகு மீண்டும் அடியை பிடிடா பரதப்பட்டா என்று அதிகப்படியாக இருந்த 2.5. செ.மீ ஐ சிரைத்து மீண்டும் மாஸ்டர் வாங்கி மீண்டும் மாஸ்டர் எடுத்தோம்.

வாழ்க்கையில் தவறு செய்யலாம். ஆனால் புதிது புதிதான தவறுகள் செய்யவேண்டுமே தவிர அதே தவறுகளை செய்யக்கூடாதல்லவா ? அப்படி செய்தால் கடந்த கால தவறிலிருந்து பாடம் கற்க வில்லை என்று தானே பொருள். இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இந்த முறை சனிப்பெயர்ச்சி பலன் புத்தகத்துக்கும் அதே நிலை ஏற்பட்டு விட்டது.

சின்ன வித்யாசம் என்ன வென்றால் கடந்த முறை தட்டச்சு செய்தது ஆப்பரேட்டர் அவருக்கு பக்கத்துக்கு 25 ரூ. கணக்கில் 32 இன்ட்டு 25ரூ காசு கொடுத்தோம். இந்த முறை தட்டச்சு அடியேன் கைங்கரியம். என்னதான் இன்டர் நெட் காரங்களுக்கு காசு கொடுத்திருந்தா கூட பக்கத்துக்கு 5 ரூ ஆகியிருக்கும் அவ்ளதான்.

இதில் மேலும் ஒரு ஆறுத‌ல் என்ன‌வென்றால் ஒரு ப‌க்க‌ம் காலியாக‌ இருக்க‌ அதில் அடியேன் விள‌ம்ப‌ர‌த்தையே போட்டுவிட‌ உத்தேசித்து ப‌க்க‌மும் போட்டாகிவிட்ட‌து. திடீர் என்று அதே ப‌க்க‌ம் வேண்டும் என்று ஒரு பார்ட்டி அட‌ம் பிடிக்க‌ விட்டுக்கொடுத்து என் விள‌ம்ப‌ர‌த்தை தூக்கிவிட்டிருந்தேன். அத‌னால் போன‌ காசு வ‌ந்து விட்ட‌மாதிரிதான். இல்லை விள‌ம்ப‌ர‌த்தில் வ‌ந்த‌ லாப‌ம் மாஸ்ட‌ர் ப்ளஸ் மாஸ்ட‌ர் ப்ரிண்டில் போன‌ மாதிரி.

அட‌ என்ன‌ எழ‌வோ போங்க‌ .. என்ன‌தான் குன்ஸ் வ‌ச்சுக்கிட்டு மேனேஜ் ப‌ண்ணாலும் க‌ண‌க்கு ம‌ட்டும் க‌விழ்த்துருது ஏனு தெரிய‌லை ( மூளைல‌ வ‌ல‌து இட‌துனு இருக்காம்.மூளையின் இடது பாகம் க‌ம்யூனிச‌ம்,(அடங்கொப்புரானெ ! அதனால தான் கம்யூ. களை இடது சாரிங்கறாங்களா ?) இல‌க்கிய‌ம்,இர‌க்க‌ம் இத்யாதிக்கு கேந்திரமாம்.

வலது பாகம்தான் கணக்கு, சுய நலம், இரசாயணம் இதுக்கெல்லாம் கேந்திரமாம். அது வீக்கா இருந்தா இது ஸ்ட்ராங்கா இருக்குமாம். இது வீக்கா இருந்தா அது ஸ்ட்ராங்கா இருக்குமாம். அதனாலதான்பா "வல்லவர்கள் நல்லவர்களாய் இருப்பதில்லை, நல்லவர்கள் வல்லவர்களாய் இருப்பதில்லை" என்ற விதி ஏற்பட்டிருக்கு.

இதோ அந்த‌ கால‌ காளிதாச‌ன் போல் ஒரு க‌விதை :

அம்மா நீயே காத்திடனும்
இன்றேல் நானுயிர் நீத்திடனும்
நல் வாழ்வைத்தானே தரவில்லை
நல்ல சாவையேனும் தந்திடடி
விருப்ப‌ம் போலே வாழ்ந்திருந்தேன்
பாவ‌ப்ப‌டுகுழி விழுந்திருந்தேன்
அன்றெல்லாம் நான் ராசாதான்
இன்றோ உதிர்ந்த‌ ரோசாதான்
கோடிக‌ள் கொள்ளை ய‌டித்தேதான்
கோவில் க‌ட்டும் பாவிய‌ரும்
ப‌விசாய் இங்கு வாழ்ந்திருக்க‌
பால‌க‌ன் நானே ந‌ர‌கினிலும்
கொடிய‌ வாழ்வை வாழ்ந்திருக்க‌ அடுக்குமோடி
இங்குன‌க்கே..
உட‌ன் காப்பு த‌ருவாய் இங்கென‌க்கே !