Wednesday, October 7, 2009

ரயில் ஜோக்+அனலைஸ்

கடந்த பதிவிலான ரயில் ஜோக்கை ஞா. படுத்திக்கங்க சார் !
ரயில் /மூவிங்ல இருக்கு/ தொப்பை ஆசாமி ஏறி பெரு மூச்சு/உள்ளாற எல்லாம் கர்பிணிகள்/ உன் பானை என்ன விலை/ என் பானை என்ன விலை/ தொப்பைக்காரரை ஒரு குறும்புகாரி கேட்கிறாள். உன் பானை என்ன விலை ? அதுக்கு அவர் பதில்: 10 ரூ க்கு அதிகமா
என்ன ஸ்பெஷல் ?
உங்களுதெல்லாம் ஓட்டை விழுந்த பானை. என்னுது ஓட்டை போட்டு பைப் வச்ச பானை

இப்ப அனலைஸ்:
உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒரு ஒரு செல் அங்க ஜீவி (அமீபா) அதுதான் செல் காப்பியிங் எர்ரார் காரணமா புது புது உயிரா பரிணாமமடைந்தது. ஓருயிர் ஓருடலா இருந்தப்போ காலம்/தூரம்/பாதுகாப்பின்மை/கம்யூனிகேஷன் ட்ரபிள்/பயம்/கவலை ஏதும் கிடையாது.

இரண்டாவதா இன்னொரு உயிர் இருந்தாதான் மேற்படி பிரச்சினைகள். ஓருயிரா இருந்தப்ப அனுபவிச்ச நிம்மதி பற்றிய செய்தி பதிவு செல் காப்பியிங் மூலமா கடைசி உயிர் வரை வந்திருக்கு . இதனால் அனைத்து உயிர்களும்மீண்டும் இணைய துடிக்கின்றன. இந்த இணைப்புக்கு தத்தமது உடல்கள் தான் தடை என்று பிரமிக்கின்றன. உடலை உதிர்த்து தள்ள துடிக்கின்றன. இதனால் தான் மனிதர்களின் எல்லா செயல்களுக்கும் தூண்டுதலாக இரண்டே உணர்வுகள் உள்ளன. ஒன்று கொலை எண்ணம். அடுத்தது தற்கொலை எண்ணம்.
(மேலும் விவரங்களுக்கு இதே வலைப்பூவில் பணம் என்று தமிழில் தட்டச்சி தேடவும்.)

ஒரே உடலில் இரண்டு உயிர் என்ற உன்னத நிலை ஒரு கர்பிணிக்கு தான் கிடைக்கிறது. (சினிமா கவிஞ‌ர்கள் காதலர்கள் ஒருவரை ஒருவர் நெஞ்சில் சுமப்பது பற்றி பீலா விடுவது இதில் சேராது ) எனவே தான் கர்பிணியின் முகத்தில் அப்படி ஒரு லட்சுமிகரமான களை ஏற்படுகிறது. இத்தனைக்கும் நம் நாட்டில் கர்பிணிகளுக்கு சத்துணவு , பேறுகால மருத்துவ சோதனை, உதவி எல்லாம் பெரிய அளவில் கிடையாது. "ஆம்பிளை" டாக்டர் கிட்டே பிரசவம் பார்க்க சங்கோஜப்பட்டு வீட்டுக்குள் பிரசவம் நடத்தி சாகும் தாய்மார்கள் அனேகம். இதை தவிர்க்க மறைந்த ஆந்திர முதல்வர் ஜனனி சுரக்ஷா என்று ஒரு திட்டம் கொண்டு வந்தார்.அதன் படி அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்துக்கொள்ளும் தாய்மார்களுக்கு கிராமப்புற மகளிர் என்றால் 3 ஆயிரம் ரூ, நகர்புற மகளிர் என்றால் 2 ஆயிரம் ரூ உதவித்தொகை வழங்கப்படும். மேலும் 104 ஆம்புலென்ஸ் சேவையும் விரிவாக கிடைக்கிறது. இப்படி எத்தனையோ மனிதம் நிறை திட்டங்களை அமலாக்கியதால் தான் அவர் மரணத்தை தாங்காது 600க்கு மேற்பட்ட மக்கள் தம் இன்னுயிரை துறந்தனர்)

ஈதிப்படியிருக்க கர்பிணிகள் (அதிலும் தலை பிரசவத்தை எதிர் நோக்கியுள்ளவர்கள் நிலை இன்னும் தீவிரம்) தாங்கள் எத்தனை மாசம் என்பதை கோட் வோர்டில் பேச வேண்டிய அவசியமே இல்லை. நேரடியாகவே பேசலாம். மேலும் அப்படி கர்பமாக இருக்கும் பெண் ஒருத்தி தொப்பைக்காரரை உங்க பானை என்ன விலை என்று வம்புக்கிழுப்பது இம்பாசிபிள். அதற்கு அவர் அடிக்கும் கமெண்ட் வடிகட்டிய மேல் ஷேவனிசம். இன உறுப்பின் வேலைகள் ஒன்றே. அவற்றின் வடிவங்கள் வேறாக இருக்கலாம். இதற்கு தான் கிண்டலாக /சில சமயம் சீரியசாக கூறுவது வழக்கம்.

"உயிரில்லாத டூ வீலரை ஓட்ட கூட ட்ரெயினிங் , டெஸ்டிங் ,லைசென்ஸ் எல்லாம் தேவைப்படுது , உயிருள்ள ஒரு பெண்ணுடன் வாழ ஒரு இழவும் கிடையாது என்னங்கடா உங்க சமுதாயம்" என்று கலாய்ப்பேன்.

ஒரு உதவாத மொபைல் போன் வாங்கினால் அதற்கு கூட மேன்யுவல் லொட்டு லொசுக்கு எல்லாம் உண்டு. ஆனால் ஒரு ஆண் பெண்ணை மணக்கும் போது அவனுக்கு அவளது உடல்,மனம் பற்றி ஒரு இழவும் தெரியாது.

இது ஒருபுறம் என்றால் பெண்களுக்கே தம் உடல் பற்றி முழுவதுமாக தெரியுமா என்றும் ஒரு சம்சயம் உண்டு.


சமீப காலத்தில் சிசேரியன் கள் அதிகரிக்க காரணம் கூட இது தானோ என்னமோ ? இன்று பாடம் படிக்கும் பெண் பிள்ளைகள் (தனியார் பள்ளி என்றால் கேட்க வே வேண்டாம்) பள்ளி நிர்வாகம் கொடுக்கும் மன அழுத்தம் காரணமாய் மென்ஸ்ட்ருவேஷன் சைக்கிளே டிஸ்டர்ப் ஆகி அவதிபடுகிறார்கள் / இவர்கள் பெரியவர்களாகி பெற்று எடுத்து வளர்த்து .. ஹூம் நினைச்சாலே கண்ணை கட்டுதுங்கணா !