Tuesday, October 20, 2009

புவனேஸ்வரிக்கு சிறை ஒபாமாவுக்கு நோபல்

முன்னுரை;

எனது ஆன்மீகம் என்ற தலைப்பில் 1986 முதல் துவங்கிய எனது ஆன்மீக வாழ்வையும், மாயா பஜார் என்ற தலைப்பில் ரைஸ்புல்லிங் இத்யாதி கோஷ்டிகளையும்,பார்வை என்ற தலைப்பில் எப்படி சிந்திக்க வேண்டும் என்ற எனது கருத்தையும்,பேட்டி என்ற தலைப்பில் செக்ஸ் ஜோக் + சைக்காலஜி என்ற தலைப்பில் ஒரு பேட்டியையும் தந்துள்ளேன். திகட்ட திகட்ட படியுங்கள்


எனது ஆன்மீகம்
தலைப்பை பார்த்து சிலர் முகம் சுளிக்கலாம். சமீபத்தில் நானெழுதிய செக்ஸ் ஜோக்+சைக்காலஜி அவர்களை சைக்கலாஜிக்கலாக ரொம்பவே பாதித்திருக்கலாம். நான் என்ன செய்ய ? நமக்கு இந்த நுனிப்புல் மேயறது பிடிக்காத சமாச்சாரம். நான் பிறந்த தேதி 7 மாதம் 8 வருசம் 67 . இந்த 786 என்ற எண்கள் முஸ்லீம்களுக்கு புனிதமான எண் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் . இந்த தேதியில் பிறந்ததாலோ என்னமோ விளக்கெண்ணைக்கு பேர் போன சாதியில் பிறந்திருந்தாலும், ஒரு ப்யூராக்ரெட்டின் மகனாக இருந்தாலும், கல்லூரி படிப்பு ,புத்தக அறிவு இத்யாதி ஓரளவு இருந்தாலும் குழப்படி பண்ணாம வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான் நம்ம ஸ்டைல்.(ஏக் மார் தோ துக்கடா)

"காமி கானி வாடு மோக்ஷ காமி காலேடு" அதாவது செக்ஸில் மூழ்கி வெளிவராதவன் மோட்சத்தை விரும்பவே முடியாது. எல்.கே.ஜி. படிச்சாதானே யு.கே.ஜி. போக முடியும். சிற்றின்பத்தை பிடிச்சாதானே அடுத்து பேரின்பத்துக்கு முயற்சி பண்ணமுடியும். ஓகே கமிங்க் டு தி பாயிண்ட். எனது ஆன்மீகம்ன் ஆரம்பிச்சாச்சு. ஆன்மீகத்துல எனது/உனதுனு உண்டானு சிலர் கேட்கலாம். உலகத்துல எத்தனை மனிதர்கள் இருந்தார்களோ, இருக்கிறார்களோ, பிறக்கப்போகிறார்களோ அத்தனை விதமான பக்திகள் இருப்பதாய் நாரத பக்தி சூத்திரம் கூறுகிறது.

சின்ன வயசுல அப்பா பட்டை போட்டு விட்டது ,கிளிப்பிள்ளை கணக்கா சின்ன சின்ன ஸ்லோகம் சொன்னது , மொட்டை போட்டது இத்யாதியெல்லாம் தள்ளிருவம் . அதெல்லாம் எனது ஆன்மீகத்துல சேத்தியில்ல.

1967 பிறந்த எனக்கு1978லயே 5 ஆம் வகுப்பு படிக்கும்போதே பருவம்னு ஒரு பலான புஸ்தவத்தை படிக்கிற வாய்ப்பு கிடைச்சது. அது எந்த அளவுக்கு என்னை பாதிச்சதுன்னா அதுல உபயோகிக்கப்பட்ட வார்த்தை பிரயோகங்கள் இப்போதைக்கும் நினைவிருக்கிறது. (இது போன்ற பலான புத்தகங்களை எழுதுவோர்,அச்சிடுவோர், விற்போரை எல்லாம் எவராச்சும் பேட்டி கண்டு வெளியிட்டா வெரைட்டியா இருக்கும்னு நினைக்கிறேன்.

ஓகே. விஷயத்துக்கு வந்துர்ரன். 1978 லேயே மானசிகமா நான் செக்சுக்கு தயாராகியிருந்தாலும் உடம்பு மட்டும் 1984 லதான் நான் ரெடின்னு சிக்னல் கொடுத்தது. அங்கிருந்து ஒரே ஒரு ரெண்டு வருசம் தான். அதுல எத்தனை வகை இருக்கே அத்தனையும் ஆயிருச்சு. பொம்பளைன்னா அதுக்குதான் என்ற எண்ணம் நிலச்சு போச்சு. ஆனால் இதுக்குத்தானா என்ற சந்தேகமும் வருத்தமும் உள்ளூற இருந்தது.

எப்படியோ காமியாகிட்ட நான் மோட்ச காமி ஆகனுமே . அதுக்கும் உயிர்வாழ்தல் ஒரு ஏற்பாடை செய்துருச்சி. ஒரு பாடாவதி படம் 1986 ஜனவரி 1 ஆம் தேதி ஃபர்ஸ்ட் மார்னிங்க் ஷோ. அதுல ஒரே ஒரு சீன். சுஜாதா கதைகள் வர மாதிரிஎனக்குள்ள ஏதோ மளுக்குனு முறிஞ்சுருச்சு.


அடிமேல அடியா இன்னொரு சம்பவம். ஒரு தே. கிட்டே ரெகுலரா போறது வழக்கம். அவள் புருஷனே ப்ரோக்கர். கிராமங்கறதால யாராச்சும் அக்கம்பக்கத்து ஆளுங்க வெள்ளந்தியா உள்ள நுழைஞ்சுட்டா என்ன பண்றதுன்னு வாசப்படிக்கு குறுக்க காலை வச்சு அவளோட புருஷன் காவலா இருக்க நாங்க உள்ளாற காதல். அது என்னாச்சுன்னா ஒரு சமயம் புருசன் காரன் சித்தூர் வந்தான் .ஹை ரோட் ஜங்க்ஷன்ல போலீஸ் ரவுண்டானால உட்கார்ந்துக்கிட்டிருந்தான். பாதிராத்திரி. எவனோ டூரிஸ்ட் பஸ்காரன் நுழைஞ்சுட்டான். இவன் காலை தொங்க போட்டு உட்கார்ந்திருக்கான். ரெண்டு காலும் காலி.

மறு நாள் விஷயம் தெரிஞ்சதும் மனசுல கிலி. தாளீ..வெளிய, வாசப்படில, குறுக்கால கால வச்சிருந்தவனுக்கே இந்த கதின்னா உள்ளாற .....வச்ச நமக்கு என்னாகுமோனு பீதி கிளம்பிருச்சு.

அவிழ்த்து விட்ட மாடு மாதிரி திரிஞ்ச பார்ட்டி படக்குனு மாறிர்ரதெலாம் தமிழ் சினிமாலதான் சாத்தியம். ப்ராக்டிக்கலா அது இம்பாசிபிள். ஆஞ்சனேயர் பிரம்மச்சாரினு எல்லாருக்கும் தெரியும். ராம நாமம் ஜெபிக்கப்படற இடத்துல ஆஞ்சனேயர் இருப்பாருனும் சொல்லப்பட்டிருக்கு. காமம் என்ற அரக்கனோட (அன்னைக்கிருந்த மன நிலைல அரக்கன் தான்) மோத ஆஞ்சனேயர், ராம நாமம் எல்லாம் தேவைப்பட்டுது.

அப்போ எனக்கு 19 வயசு. அந்த வயசுக்கு /என்னதான் 2 வருஷம் ஒட்ட கறக்கப்பட்டத வத்த மாடா இருந்தாலும் காமம் ரொம்பவே பயப்படுத்த ஆரம்பிச்சது. ஒரு மாசம் தாடி வளர்த்துக்கிட்டு, கோத்ரெஜ் பீரோல ஆஞ்சனேயர் பொம்மைய வச்சு, காலை மாலை ஊதுவத்தி வச்சு , மதியத்துல வீட்டுல பரணைல கிடந்த பித்தளை சாமான் களை எல்லாம் துலக்கி எப்படியோ காலத்தை ஓட்டியாச்சு.

அதுக்கப்பறம் ஒரு நாள் வெறுப்பாகி தாளி ஷேவ் பண்ணிக்கிட்டு பழைய ஸ்டைலுக்கு போயிர வேண்டியதுதான்னு மொட்டை மாடில , புகைப்போக்கி மேல கண்ணாடி ,ஷேவிங்க் சோப், ரேசர் எல்லாம் வச்சுட்டு தண்ணி கொண்டு வர கீழே போனேன். தண்ணீயோட வரேன். சீன் என்னடான்னா .. ஒரு குரங்கு கூட்டமே வந்துட்டுது. அதுல சீனியர் குரங்கு ஒன்னு கண்ணாடிய எடுத்து கைல வச்சிக்கிட்டு எனக்காக வெயிட்டிங்.

அதட்டினா எஸ்கேப் ஆயிரப்பார்க்குது. கொம்பெடுத்தா உர்ருங்குது. கடைசில எனக்கு ஞானோதயமாகி "தலைவா ! ஷேவிங்கெல்லாம் கேன்சல் " என்று சொன்ன பிறகு கண்ணாடிய என் கைலயே கொடுத்துட்டு போயிருச்சு. இது என் வாழ்க்கைல நடந்த முதல் அற்புதம்.

அவசரமாக தேவை - ரூ. 1 கோடி சன்மானம்
1.கருப்பு பூனை . ஒரே ஒரு நிபந்தனை அதன் முகம் , கண்ணாடியில் (முகம் பார்க்கும் ) தெரிய கூடாது (பிரதிபலிக்க கூடாது)
2.கோபுர கலசம் தேவை. நிபந்தனை மேற்படி கோவில் 100 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும்
3. ரைஸ் புல்லிங் தேவை. ஒரே ஒரு நிபந்தனை அது காந்தம் இரும்பு துகளை கவர்வது போல் அரிசியை கவர வேண்டும்.
4.அஞ்சனம் தேவை.(அஞ்சால் அலுப்பு மருந்தல்ல). பல கோடி மதிப்புள்ள புதையலை எடுக்க வேண்டியுள்ளது
5.பவுடராக மாற்ற அவசரமாக குவார்ட்டர் பாட்டில் நிறைய பாம்பு விஷம் தேவை
இன்னும் பெரிய பட்டியலே இருக்கிறது .(இந்திரா காந்தி படம் போட்ட ஒரு ரூ.நாணயம் எட்ஸெட்ரா தாளி அவசரத்துக்கு ஞா வரமாட்டேன் என்கிறது.)

பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை வாந்தி பண்ணும் உத்தேசமில்லை. என்னச்சுற்றி நடந்த சம்பவங்களையே இங்கு விவரிக்கப்போகிறேன்.

உபகதை:

ஒரு செட்டியார் ஃபேமிலி. சாதியை குறிப்பிட காரணம் நான் சொல்லப்போகும் பார்ட்டி குலத்தை கெடுக்க வந்த கோடரி காம்பு என்பதை வலியுறுத்தவே.

உபரி விவரம்: (கதையே குறியாய் மேய்பவர்கள் இந்த பத்தியை தாண்டி ஓடலாம்)

எனக்கு செட்டியார்களுடன் தொடர்பு ஏற்பட்டதே கடந்த சில வருடங்களாய் தான். அதற்கு முன் "அய்யய்யோ கலீஜு பார்ட்டிங்கப்பா" என்று விலகி ஓடுவதே என் வழக்கம். என்னதான் ஓரிரண்டு அருவறுக்க தக்க குணங்கள் இருந்தாலும் (செரிக்காமலே உண்பது. குடும்பம் வியாபாரம் இரண்டையும் ஒரே காம்பசுக்குள் வைத்து ஏதோ ஒன்று உருப்படாமல் போவது./ வீட்டுக்கு வேண்டிய வாஸ்து வேறு, வியாபாரத்துக்க் வேண்டிய வாஸ்து வேறு ) எமர்ஜென்சியில், மனிதாபிமான அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் கூட கணக்கு போடுவது/சம்பாதிப்பதே வாழ்க்கையை அனுபவிக்க என்ற சின்ன உண்மை தெரியாது 24 மணி நேரம் பக்கத்திலிருப்பவன் என்ன நினைப்பான் என்ற எண்ணம் கூட இல்லாது பணம் ,பணம் என்று பறப்பது, இப்படி சகலத்தையும் தியாக செய்து சம்பாதித்ததை பின்பு வலுத்தவன் எவன் வாயிலாவது போட்டு விட வேண்டியது. இப்படி நிறையவே சொல்ல வேண்டும். சொன்னால் நகரத்தார் சங்கம் எதிலிருந்தாவது நோட்டீஸ் வந்தாலும் வரலாம். இதை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு திருந்தினால் சரி.

பாகாலாவில் நான் பங்க் வைத்துக்கொண்டிருந்த போது ஒரு செட்டியார் எனக்கு கீதோபதேசம் கணக்காய் சில விஷயம் சொன்னார். அவை வருமாறு: சரக்கை கடனுக்கு வாங்காதே ! வாங்கினாலும் கடனுக்கு விற்காதே. வாடகை,கரெண்ட் பில், உன் கூலி, முதல் மேல வட்டி கட்டுப்படியாகுதா பார். லாபம் நிதானமா வரட்டும். பணம் அவசரமா கடன் வாங்காதே. சரக்கை வாங்கு. சரக்கிருந்தா அசல் விலைக்கே பணமாக்கிக்க"

ப .சிதம்பரம் எல்லாம் இந்த சூத்திரங்களை பின்பற்றியிருந்தால் இந்தியா எங்கயோ போயிருக்கும்.

உபகதை:
எங்கே விட்டோம் ? ஒரு செட்டியார் ஃபேமிலி. மூனு பசங்க . எவனுக்கும் தலைல மயிர் கிடையாது . ஒருத்தனுக்கு மூளையே கிடையாது. அப்பனுக்கு தலைல மயிரில்லயே தவிர மூளை அதிகமாகவே இருந்தது. உள்ளாடை ஹோல்சேல் வியாபாரம். பெரிய பையன் அப்பன் மாதிரி. அவனுக்கு அடுத்தவன் தான் இந்த உபகதைல ஹீரோ . இவனுக்கு சின்னவன் ஒருத்தன் உண்டு. அவன் செயல்பட்டாதானே வெற்றி தோல்வினு கர்ம சன்னியாசம் செய்தவன்.

தத்துவம்:
அப்பா அம்மா பீ புண்ணாக்கை தின்னு, தின்னு தின்னாத பசங்களுக்கு சொத்து சேர்க்கிறாங்க ஆனால் அதனால வர்ர கர்மம் என்ன பண்ணுது தெரியுமா ? அந்த வீட்ல எவன் ஜாதகம் வீக்கோ அவனை மிதிச்சு தோச்சுருது. உ.ம்.கலைஞர் வீட்ல மு.க.முத்து.

ஹீரோவை பார்ப்போம்:
ரஜினியும் நடிகர்தான். குமரி முத்துவும் நடிகர்தான். அப்படியாக லட்சங்கள் ஈட்டும் பத்திரிக்கையுலகில் போனியாகாத பார்ட்டி ஒருத்தனை பிடிச்சு, அவனோட போனியாகாத பத்திரிக்கைக்கு மாடியறைல ஆஃபீசுக்கு ரூம் வாடகைக்கு கொடுத்து அவன் வீட்டை அடகு பிடிச்சு மானாவாரியா கடன் கொடுத்து அவனோட போனியாகாத பத்திரிக்கைக்கு நம்ம ஹீரோவை எடிட்டராக்க பார்த்தாங்கய்யா ! எடிட்டராக்க பார்த்தாங்கய்யா ! யார் பண்ண புண்ணீயமோ கடன் வாங்கிக்கிட்ட பார்ட்டி கழண்டுகிட்டான். பத்திரிக்கையுலகம் பிழைச்சது. நம்ம ஹீரோ ஜேப்பியார் கல்லூரில பி.எஸ்.சி கம்ப்யூட்டர்ஸ் படிச்சாராம். இவருக்கு இமெயில் ஐடி நான் க்ரியேட் பண்ண வேண்டியிருந்ததுன்னா பார்த்துக்கங்க. இவனுக்கு ஒரு மனோவியாதி. உடம்பெல்லாம் வலி ...வலினு பார்க்கிறவனையெல்லாம் வலிக்க வலிக்க புலம்புவான்.

ஆயி,அப்பன் சேர்த்ததை அழிக்க அந்த வீட்லயே ஒருத்தனை பிறக்க வைக்கிறதுதானே கடவுளோட ஸ்டைல். அப்பன் காரன் பனியன் கம்பெனிகாரவுகளுக்கு பில் கட்டாம ஏமாத்தின பணத்தை எல்லாம் நம்ம ஹீரோ ஒழிக்கனும்னு இருக்கே. சும்மா விடுவாரா ! சித்தூர் காந்தி சர்க்கிள் என்பது நகரத்துக்கு இதயம் மாதிரி. அந்த இடத்துல லாட்ஜு கம் ரெஸ்டாரண்ட் துவக்குனாங்க. படுத்துக்க்ச்சு. ரெஸ்டாரண்டை தூக்கிட்டு அங்கே துணிக்கடை போட்டாங்க. நம்ம ஹீரோ தான் "ஒன் சி" (ஒன் க்ரோர்னு அர்த்தம்) மேல குறி வச்சுட்டாரே பத்து இருபது வர்ர வியாபாரத்து மேல என்னாத்த அக்கறை இருக்கப்போவுது.

சரி உபகதைய பட்டுனு முடிக்கிறேன். ஆரம்பத்துல அரிசிய மட்டும் புல் பண்ண வேண்டிய ரைஸ் புல்லிங் இவரை புல் பண்ண (இழுக்க) வசமாவே ஏமாந்தார். இன்னைக்கு ஃப்ராட் பண்றவன்ல பாதி பேர் கதை கூட இதான். எவனோ அவனை ஃப்ராட் பண்ணியிருப்பான். இவன் வேற வழியில்லாம ஃப்ராட் பண்ண ஆரம்பிச்சுர்ரான்.

இவன் எவனை ஆட்டை போட்டானோ என்னவோ ஒரு நாள் பிரகாசம் ஹை ரோட்ல வச்சு கார்ல கடத்திக்கிட்டு போயிட்டாங்க. அத்தோட இவர் ஆட்டம் க்ளோசுனு நினைச்சாங்க எல்லாரும். திருப்பூர் காரவுகளை ஏமாத்தி சேர்த்த சொத்தை காட்டி எப்படியோ பெண் எடுத்து நம்ம ஹீரோவுக்கு கல்யாணம் கட்டி வச்சுட்டாங்க, லாட்ஜு நோ ! துணிக்கடை நோ ! ன்னிட்டு இவரை கரூர் வைஸ்யா பாங்க் இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்டாக்கினாங்க. பிறகு என்னாச்சோ என்னமோ மறுபடி லாட்ஜு நிர்வாகத்துல இருக்காரு. துணிக்கடைய மட்டும் காலி பண்ணிட்டு செல் ஃபோன் சர்வீஸ் சென்டருக்கு வாடகை விட்டுட்டாங்க.

கடத்திட்டு போய் என்னதான் செய்தாங்கடா என்று கேட்க நானும் 2 வருசமா ட்ரை பண்றேன். ஒன்னும் பேரலை!

அடுத்த பதிவுல பார்ப்போம் என்ன ஓகேவா !


பார்வைகள் பலவிதம்

"பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்" ஆம் பறவைகள் மட்டுமல்ல பார்வைகளும் பலவிதம். ஒவ்வொரு விதமான பார்வை பற்றியும் தனிதனி பதிவுகளே போடலாம் .(பயந்துராதிங்க ! அதெல்லாம் ஆகறதா போறதா ச்சும்மா ஒரு தமாசுக்குதேன் )

உதாரணத்துக்கு சில பார்வைகளை பார்ப்போம்:
நேரிய பார்வை, கீழ் பார்வை, கிட்டப்பார்வை, தூர பார்வை, அச்சப்பார்வை, துச்சப்பார்வை, ஏளன பார்வை, கோபப்பார்வை, காதல் பார்வை, அரசியல் பார்வை, சமூகபார்வை, பாசப்பார்வை, துரோக பார்வை ,மோகப்பார்வை,இத்தனை பார்வைகளிலும் எனக்கு பிடித்தவை இரண்டே பார்வைகள் தான் பறவை பார்வை ,கழுகுப்பார்வை

எதையும் பார்க்கும் போது பறவைப்பார்வையாக (மேக்ரோ) பார்த்தால் ஓவராலா பிரச்சினை என்னனு புரியும். இதை விசாலமான பார்வைனு கூடச்சொல்லலாம். ஆனால் கண்டதும் தெரிஞ்சா கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆயிருவம்ல. அதனால அந்த பார்வை பறவை பார்வையா மட்டுமிருந்தா போதாது.கழுகுப்பார்வையாவும் இருக்கனும். அப்பத்தான் நமக்கு தேவையானதை ஒரு கணத்துல லபக் பண்ணமுடியும்.

பீடிகை போதும் இப்போ உலகத்தை ஒரு கழுகு பார்வை பார்போமா ?
முதல்ல அமெரிக்கா:
ஒபாமாவுக்கும், ஒசாமாவுக்கும் ஒரே எழுத்து தான் வித்யாசம் . ஆனால் பாருங்க ஒபாமாவுக்கு நோபல் பரிசு குடுத்திருக்காங்க. புவனேஸ்வரிக்கு நளாயினி பட்டம் கொடுத்தாப்ல இல்லை. பாவம் அந்த பொண்ணு தனக்குண்டானதை மார்க்கெட் பண்ணியிருக்கு தட்ஸ் ஆல். ஆனால் ஒபாமா அப்படியே தனக்கு இல்லாத ஒன்னை ப்ரொஜெக்ட் பண்ணி, ஃபோக்கஸ் பண்ணி நோபல் பரிசே வாங்கிட்டாரு. புவனேஸ்வரிக்கு சிறை. ஒபாமாவுக்கு நோபல். என்னடா இது க்ளோபல் தர்மத்துக்கு பிடிச்ச சனி.

அமெரிக்காவுக்கு எதிரா பேசினா உடனே இவனெல்லாம் கம்யூனிஸ்டுன்னிருவாங்க. நான் கம்யூனிஸ்டுமில்லே ஒரு ....ரும் இல்லே. நான் ஹ்யூமேனிஸ்ட். ஆமாம் எந்த இசமா இருந்தாலும் ஹ்யூமனா இல்லைனா எதிர்ப்பேன். சரி விசயத்துக்கு வரேன். இந்தியாவுல பி.டி.கத்திரிக்காய் விதைகளுக்கு அடுத்த வருசத்துலருந்து அனுமதி தரப்போறாங்க.பிடி விதைகளுக்கு தாயகம் அமெரிக்கா. இதனோட ஸ்பெஷாலிட்டி என்ன? இதனால வரக்கூடிய ஆபத்து என்ன?

சாதாரணமா விவசாயிகள் அறுவடை முடிஞ்சதும் தானியத்தை இரண்டா பிரிச்சு வச்சுக்குவாங்க. ஒரு பகுதி விற்க அ சாப்பிட இன்னொரு பகுதி அடுத்த முறை விதைக்க . விதைய விலை கொடுத்து வாங்கற வழக்கமே ஒருகாலத்துல கிடையாது. அதுக்கப்புறம் சில உள் நாட்டு கம்பெனிகள் இந்த வியாபாரத்துல இறங்கின பிறகுதான் விதைய விலை கொடுத்து வாங்கற வழக்கம் வந்தது

பேட்டி
கே; என்ன முருகேசன் ! விகடன் க்ரூப் பத்திரிக்கைகளையெல்லாம் வாங்கு வாங்குனு வாங்கினிங்க கடைசில பார்த்தா நீங்களும் அவங்க பாதைக்கே திரும்பிட்டாப்ல இருக்கு ? இதென்ன இது செக்ஸ் ஜோக் + சைக்காலஜி ?
ப: விகடன் க்ரூப் பத்திரிக்கை அச்சடிக்கிறாங்க. காகிதத்துக்காக காடுகள் அழிக்கப்படுது. அரசாங்கம் மக்கள் கட்ற வரிப்பணத்துல இருந்து பல சலுகைகள் தருது. அவங்களோட ரிப்போர்டர்ஸுக்கு ஃப்ரீ பாஸ், தபால் கட்டணத்துல சலுகை, சலுகை விலைல ந்யூஸ் ப்ரிண்ட் தராங்க.அதை மக்கள் நெத்தி வேர்வை நிலத்துல விழ சம்பாதிச்ச பணத்தை கொடுத்து வாங்கிபடிக்கிறாங்க. விளம்பர தாரர்கள் அள்ளிக்கொடுக்கிறாங்க. அவங்க வளர்ந்துட்டாங்க அதனால அவங்க கொஞ்சம் ரிஸ்க் எடுத்துக்கிட்டு நல்ல விஷயங்களை தரலாம். மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் அவங்க கடன் பட்டிருக்காங்க.
ஆனால் கவிதை07 அச்சிடப்படறதில்லை.காகிதத்துக்காக காடுகள் அழிக்கப்படறதில்லை.
இதுக்கு ரிப்போர்ட்டர்ஸே கிடையாது. ஃப்ரீபாஸ் பிரச்சினையே கிடையாது. ஃப்ரீ பாஸ், தபால் கட்டணத்துல சலுகை, சலுகை விலைல ந்யூஸ் ப்ரிண்ட் இந்த லொள்ளெல்லாம் கிடையாது. கவிதை 07 இலவசமாவே கிடைக்குது. (இன்டர் நெட் கேஃப் கட்டணம் இருக்கேன்னா கவிதை 07க்காக செலவு பண்ற நேரம் 5 அ10 நிமிடம் தான். ) அவங்க செக்ஸை மட்டும் எழுதறாங்க,I am educating the people that too youth with a stuff on psychology behind adult jokes


கே: அதில்லிங்க ஆரம்பத்துல நீங்க ஜோதிடம்,ஆன்மீகம், அரசியல், நிர்வாக சீர்திருத்தம் , அதென்னவோ ஆப்பரேஷன் இந்தியா 2000னு ஒரு ப்ராஜெக்ட் பத்தியெல்லாம் எழுதிக்கிட்டு இருந்திங்க.

ப: ஆமாம். எழுதினேன். அதை எழுதினா இதை எழுதக்கூடாதுனு ஏதாச்சும் ரூல் இருக்கா? இன்னும் சொல்லப்போனா இந்தியாவை பணக்கார நாடாக்க நான் போட்ட திட்டத்துல தலையாய அம்சம் நாட்டின் 10 என் எம்ப்ளாயிடை யூத்தை கொண்டு சிறப்பு ராணுவம் அமைச்சு நதிகளை இணைக்கிறதுதான். செக்ஸ் பற்றிய புரிதலே இல்லாம மோகத்தால் எரிக்கப்பட்ட சாம்பல் கூடுகளா மாறிக்கிட்டு இருக்கு யூத். அவங்களை எஜுகேட் பண்றதை என் கடமையா கருதரேன். அவனுக்க் தேவை முலைக்காம்பு அது கிடைக்கலேனு அவன் சிகரட் பிடிக்கிறான், தண்ணி போடறான் . சைக்காலஜி இதை நிப்பிள் காம்ப்ளெக்ஸுனு சொல்லுது.

கே: அப்போ பால்ய திருமணங்கள் மறுபடி வரனுங்கறிங்களா ..

ப: முதல்ல விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கனும். இப்போ ஆண் விபச்சாரமும் பெருகியிருக்கு. இது காலத்தின் கட்டாயம். க்ளோபலைசேஷனால போட்டி பெருகியிருக்கு அவனவன் தலைய பிச்சுக்காரான். பெண்டாட்டி தான் .இல்லேங்கல. பெண்டாட்டிக்கு தேவைனு, அவள் பெண்டாட்டினு நீங்களே பிரசவம் பார்த்துர்ரிங்களா ? இல்லையே. பிரசவம் பார்க்க தெரிஞ்ச டாக்டர்கிட்டே கூட்டிபோல. அத மாதிரிதான் செக்ஸும். உன்னால முடியாத நிலைல அவளுக்கு அது கிடைக்க ஏற்பாடு பண்ணனும்.

கே: இது அதிர்ச்சி மதிப்புக்காக கூறப்பட்டதா உண்மையிலேயே சொல்றிங்களா?

ப: சார் ! முதல்ல பெற்றோருக்கு செக்ஸ் கல்வி கொடுக்கனும். ஆர்காசம்னா என்னனு கத்து கொடுக்கனும். ஒவ்வொரு குடும்ப தலைவியும் செக்ஸ்ல உச்சமடைந்தால்தான் குடும்ப அமைப்பே பாதுகாக்கப்படும். அந்த குடும்பத்துல இருக்கிற இளைஞனோ, இளைஞியோதான் சரியான பாதைல நடை போட முடியும். இந்த முயற்சிக்கு பிறகும் நோய் காரணமாவோ, இயலாமை காரணமாவோ ஒர் குடும்ப தலைவிக்கு தேவை எனும்போது ஒரு கால் பாயை வரவைக்கிறாதுல தப்பில்லை. இதை சீரியசாதான் சொல்றேன். அவள் ட்ரைவரோட் ஓடிப்போவா அவளுக்கு பிறந்தது மெக்கானிக்கோட ஓடிப்போகும். கேங்க் ரேப்புக்கு ஆளாவும் . இதெல்லாம் தேவையா ? வயசான அப்பா அம்மாவை பார்த்துக்க முடியல.. முதியோர் விடுதில விடறிங்க.. குழந்தைகளை பார்த்துக்க முடியலை க்ரஷ்ல விடறிங்க. பெண்டாட்டிய திருப்தி படுத்த முடியலை ஒரு கால் பாய் கிட்டே கூட்டிட்டு போய் அரை மணி நேரம் கழிச்சு ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க

கே: பெண்கள் பப்புக்கு போனாலே தூள் பண்றாங்க, பார்க்ல பேசிக்கிட்டிருந்தாலே கல்யாணம் பண்ணி வச்சுர்ராங்க பார்த்து முருகேசன்..

ப:சில பேருக்கு வயிறு பயங்கரமா கெட்டு போயிருக்கும் , மூச்சே பீ நாத்தம் நாறும். ஆனால் வாசனை பாக்கு போட்டு மெல்லுவாங்க.. அந்த நாத்தத்துக்கு நிவாரணம் பேதி மாத்திரை அஜீரணத்தை தவிர்த்தல் தான். வாசனை பாக்கில்லே. உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் கோரிக்கைகள்தான் வன்முறையா வெளிப்படுதுனு சைக்ககாலஜி சொல்லுது.

கே:சரிங்க பெற்றோரை பத்தி சொல்லிட்டிங்க .. யூத்தை என்ன பண்ண சொல்லப்போறிங்க ?

ப: பையன் கிரிக்கெட் விளையாட ஆசைப்பட்டா க்ளவுஸ்,பேட் , பேட்,பால் வாங்கி கொடுக்கிறாப்ல , செக்ஸுக்கு என்ன பண்ணலாம், என்ன பண்ணக்கூடாதுனு கத்துக்குடுக்கிற புக்ஸ் வாங்கித்தரலாம் , எஜுகேட்டிவ் டிவிடி வாங்கித்தரலாம். முடி வளர்ந்துட்டா சலூனுக்கு கூட்டிப்போறாப்ல வயசு பையன் எரிச்சல்ல இருந்தா செக்ஸ் ஒர்க்கர் கிட்டே கூட்டிப்போகனும்.

கே: அய்யய்யோ .. விட்டுருப்பா எல்லாம் வில்லங்கமாவே பேசிக்கிட்டு இப்போ என்ன சொல்றே செக்ஸ் ஜோக் ப்ளஸ் சைக்காலஜி தொடர் எழுதினது சரிதாங்கறியா ?

ப: விடிய விடிய ப்ளூ ஃபிலிம் பார்த்துட்டு ஏன் இந்த படத்துல எல்லாரும் அம்மணமா வராங்க ப்ரொட்யூசர் காஸ்ட்யூம் கூட வாங்கித்தராத கஞ்சனா இருப்பான் போலனு சொல்றாப்ல இருக்கு. தொடர் எழுதினது சரிதான் சரிதான் சரிதான்

கே: அசத்தப்போவது யார் ரெகுலரா பார்க்கிறிங்களா என்ன ?

ப:மனதெல்லாம் செக்ஸ் எண்ணங்களை அடக்கி வச்சுக்கிட்டு இருக்கிறவங்களுக்கு க்ராஸ்பிங்க் பவர் குறைஞ்சு போயிருமாம். அதான் மூணு தடவை சொன்னேன்.

கே: தம்பி ..அப்போ நீங்க என்ன மதன காமராஜனோ ?

ப: மதனம்னா என்ன தெரியுமா ?

கே: மன்மதன்ல பாதி

ப: உங்க மூஞ்சி... மதனம்னா கடைதல்னு அர்த்தம்..

கே: சீ.. சீ... என்ன இது அசிங்கமா பேசிக்கிட்டு.

ப: யோவ் அதையே ஏன்யா நினைக்கிறிங்க.. கடைதல்னா தயிரை கடைய கூடாதா..வெண்ணை எடுக்க

கே: சாமி நான் அம்பேல் நீங்க விஷயத்துக்கு வாங்க

ப: நேரிடையா விஷயத்துக்கு போக கூடாதுங்கணா ஃபோர் ப்ளே முக்கியம். அப்பதான் நல்லா லூப்ரிக்கேட் ஆகும் சுமுகமா இருக்கும்.

கே: அய்யய்யோ நான் அம்பேலுப்பா..கடைசியா ஒன்னு கேட்கிறேன். இந்த தொடரை எழுதகாரணம் ?

ப: செக்ஸ் குறித்த புரிதல், விழிப்புணர்ச்சி, சூட்சுமங்களை விவரிச்சு யூத்தை எஜுக்கேட் பண்றது

கே: மிஸ்டர் முருகேசன் ! கொலை செய்யறவன் கூட காரணம் சொல்றான்

ப: அண்ணே ஒருவகைல இது கொலை இல்லை தற்கொலை. கேரக்டர் அசாசினேஷன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா அதை நானே செய்துகிட்டு இருக்கேன்

கே: இதென்ன திடீர்னு இப்படி டெப்ரஸ் ஆகறிங்க?

ப: கடவுளையே குற்றவாளி கூண்டுல ஏத்தி கேள்வி கேட்குற நிலைல இருந்த நான் இப்படி பதில் சொல்ல வேண்டி வந்துருச்சேனு நினைச்சா வருத்தமா தான் இருக்கு

கே: அப்ப ஏன் அந்த தொடரை எழுதினிங்க ?

ப: அதை தொடரா எழுதனும்னு நினைச்சு ஆரம்பிக்கலிங்க அதுக்கு கிடைச்ச வரவேற்பு தொடராக்கிருச்சு.

கே: இதுக்காக வருத்தப்படறிங்களா !

ப: என்னோட பார்வைல நான் தாழ்ந்திருக்கலாம். அதுக்காக வருத்தப்படறேன் ஆனால் உலகத்தோட பார்வைல இது வெற்றிதான். 2006 மார்ச் ல ஆரம்பிச்ச ப்ளாகுக்கு 2009 மே வரைக்கும் கூட கிடைத்த வருகைகள் 2006 தான். ஆனால் அங்கிருந்து 2009 செப்டம்பர் வரைக்கும் நான் என் சொந்த ஸ்டைல்ல தமிழ்10 வலைதளம் வழங்கும் ரேங்க் பட்டியலில் 18 ஆவது இடத்தை பிடித்தேன். அங்கே ஸ்ட்ரக் ஆயிட்டேன். ஆனால் மறுமொழிகள் மட்டும் அமோகமா கிடைக்கும் நிலை இருந்தது. 2009 அக்டோபரில் இந்த செக்ஸ் ஜோக் +சைக்காலஜி தொடர் துவக்கிய பிறகுதான் 10 ஆவது இடத்தை பிடிக்க முடிஞ்சது. ஆனால் மறுமொழிகள் சுத்தமா நின்னு போச்சு.நான் என்ன நினைக்கிறேன்னா பழைய விருந்தினர்களை இழந்திருந்தாலும் புதிய வாசகர்களை என் வலைப்பூ அதிக அளவில் ஈர்த்திருக்கிறது.

கே: இதுக்கு பெருமைப்படறிங்களா !
ப: நிச்சயமா. இதுல வருத்தப்பட என்ன இருக்கு. பொழியறது அமுத மழையாவே இருந்தாலும் நனைய எவனுமில்லாட்டி மழைக்கே கில்ட்டி வந்துரும். கடலில் பெய்த மழைனு கேள்விப்பட்டிருக்கிங்களா.. இப்போ நிறைய இளைஞர்களோட ஆண்மை கழிவறையில் பெய்த பனிமழையா ஆகிப்போச்சு.

கே:அதுக்கு நீங்க சொல்ற தீர்வு ?

ப: எத்தனை தடவை சொல்றதுய்யா வெண்ணை ! செக்ஸ் கல்வி ,ஆண்,பெண் பாலியல் தொழிலாளர்களுக்கு வொர்க்கிங்க் பெர்மிட்.

கே: அய்யய்யோ என்னை விடுப்பா நான் ஓடி போயிர்ரேன்..