கே: சமீபத்துல ஒரு தெலுங்கு சினிமா காமெடி ட்ராக்ல "சினிமா கஷ்டாலு" என்று ஒரு வார்த்தையை கேட்டேன். அதுக்கென்ன அர்த்தம் ?
ப: தெலுங்கு தெரியாதவர்கள் தெலுங்கு பேச முயற்சி செய்யும்போது எல்லாவார்த்தைக்க்ம்" லு" சேர்த்துக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் லு என்பது தமிழில் "கள்" போல் பன்மையைக்காட்டுவதாகும். உ.ம்: சினிமா /ஒருமை , சினிமாலு /பன்மை . சினிமா கஷ்டாலு என்ற வார்த்தை பிரயோகம் எப்படி வந்ததென்றால்.. பழைய (ஏன் புது சினிமால கூட) ஹீரோவோட குடும்பமே ஊனமுற்றோர் விடுதி மாதிரி ,சென்ட்ரல் ஹாஸ்பிடல் மாதிரி இருக்கும். சில பேருடைய வாழ்க்கை உண்மையிலேயே அப்படி அமைஞ்சு அப்படியே தொடர்வதும் உண்டு.
இதற்கு என் வாழ்வையே உதாரணமாக்கிவிடலாம்.
கே:அ.. சும்மா விடாதிங்க சார் ! ஒரு சீஃப் மினிஸ்டரையே போட்டு இப்படி காய்ச்சியிருக்கிங்க .. கன்ஸ்யூமர் ஃபோரத்துல கேஸ் போட்டு பேதிக்கு குடுத்திருக்கிங்க
ப: அதுவும் உண்டு. இல்லேங்கலை." இரவு வரும் பகலும் வரும்" என்பது போல் என் வாழ்வில் வெற்றி, தோல்விகள், புகழ்,அவமானம் இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக உடனடியாக மாறி மாறி தோன்றும் விசித்திரமான வாழ்க்கை என் வாழ்க்கை.
கே: ஆமாம் இது குறித்து கூட நீங்கள் ஏதோ ஜோதிட ரீதியில் வியாக்யாணம் பண்ணியிருந்திங்க. கடக லக்னம் அது இதுனு
ப: என் வாழ்வில் முதல் சறுக்கல் அதாவது வெளியுலகத்துக்கு கூட தெரிந்து போன சறுக்கல் பிகாம் ஃபைனல் இயரில் பரீட்சை எழுதமுடியாது போனதுதான்.
கே: அதுக்கு இப்போ வருத்தப்படறிங்களா ?
ப: நோ நெவர். என் அண்ணன் எம்.இடி செய்யும்போது ப்ரோஜக்ட் ஒர்க் எல்லாம் பிகாம் ஃபெயில் கிராக்கியான நான் தான் செய்து கொடுத்தேன். இந்த அகடமிக் ஸ்டாண்டர்ட்ஸ் மேல எனக்கு நம்பிக்கையே கிடையாது. அதுக்காக அது சுத்த விரயம்னும் சொல்லமாட்டேன். ஆனால் அகடமிக் ரீடிங்கோட நிறுத்திர்ரவன் நிச்சயம் வீணா போயிருவான். அதுலயும் மெடிக்கல், கம்ப்யூட்டர்ஸ் எல்லாம் தினசரி மாறிக்கிட்டே இருக்கு. டாக்டரெல்லாம் பார்த்தா ரெப் சொல்ற மெடிசனை ப்ரிஸ்க்ரைப் பண்ணிக்கிட்டு இருப்பாங்க.
கே: அதுதான் முதல் முறையா நீங்க ஃபெயில் ஆன சம்பவமா ?
ப: நோ நோ ! அதற்கு முன்பே இண்டரில்( முதல்வருடம் ) ஃபெயில் ஆகியிருந்தாலும் அதை மறு மாதமே மீண்டும் எழுதி அதே சப்ஜெக்டில் 72 மார்க் வாங்கி பேலன்ஸ் செய்துவிட்டேன். பிகாமில் போட்ட குண்டுதான் பத்திரிக்கை காரியாலயத்துக்கு அனுப்பின படைப்பு மாதிரி நிரந்தரமாய் நின்று போனது.
கே: அதென்ன நீங்க முணூக்குன்னா பத்திரிக்கைகளை வம்புக்கிழுக்கிறிங்க ?
ப: அதெல்லாம் பெரிய சோக கதைங்க . வயிற்றெரிச்சலை கிளப்பாதிங்க சிலரை ரேஸு, போதைப்பழக்கம் இத்யாதி ஒழிச்சுக்கட்டிருமே அது மாதிரி பத்திரிக்கைல என் எழுத்து பிரசுரமாகனுங்கற எண்ணம் என்னை ஒழிச்சு கட்டிருச்சு. 1987 நவம்பர்லருந்து 1990மார்ச்சுக்குள்ள 5 சிறுகதை பப்ளிஷ் ஆயிருச்சு. அந்த ரேஞ்சுக்கு பப்ளிஷ் ஆகியிருந்தா கூட இப்போதைக்கு 19X5 கதை பிரசுரமாகி ஒன்னு ரெண்டு தொகுப்பு கூட வந்திருக்கணும். குறைஞ்ச பட்சம் ரெண்டு மாச நாவல் , ஒரு தொடர்கதை எழுதியிருக்கணும். ஏன் நடக்கலைன்னா அது தமிழ் அச்சு ஊடகத்துல இருக்கிறா பிராமணீய ஆதிக்கத்தாலதான்.
கே: பிகாம்ல தோத்திங்க அதுக்கு காரணம் ஏதாவது சொல்லப்போறிங்களா?
ப: அது 1987 . இந்த தோல்விக்கு காரணங்கள் இல்லாதில்லை. உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் ஆதரவாலும், இண்டரில் தமிழ் பேராசிரியை ஆதரவாலும் என் ஆதிக்கத்தை சில வகைகளில் (பேச்சு,கட்டுரை போட்டிகளில் பரிசு, வகுப்பு தலைவன், தமிழ் சங்க செயலன் ,கல்லூரி ஆண்டுமலரில் கவிதை ) நிலை நாட்டிக்கொள்ள முடிந்த எனக்கு கல்லூரி வாழ்க்கையில் இந்த பப்புகள் வேகாதது ஜீரணமாகவிலை. எப்படியேனும் என்னை நான் ப்ரூவ் செய்ய பி காம் செகண்ட் இயரில் ஸ்டூடண்ட் யூனியன் செக்ரட்ரியாக போட்டியிட முயன்றேன். நிற்க முடியாமல் போனது. ஃபைனல் இயரில் ஃபைன் ஆர்ட்ஸ் செக்ரட் ரியாக போட்டியிட்டும் 468 ஓட்டுக்கள் வாங்கி 3 வோட்டு வித்யாசத்தில் தோற்றேன். எல்லா எழுத்தாளர்கள் வாழ்விலும் சுய இன்பம் கணக்காய் தலைகாட்டும் சொந்த பத்திரிக்கை தாகம் ஒரு புறம். (புதுசு, நவதா என்ற இரண்டு பத்திரிக்கைகள் நடத்தினேன்) இன்னும் பருவ குளறுபடிகள் இப்படி எத்தனையோ !
கே: உயர் நிலைப்பள்ளிக்கும், கல்லூரிக்கும் என்ன வித்யாசம் ஏன் இப்படி டெப்ரஸ் ஆகி தேர்தல் வரை போனிங்க..?
ப:உயர் நிலைப்பள்ளிலயெல்லாம் ஆசிரியர்கள் கமாண்டிங் பொஸிஷன்ல இருந்தாங்க. ஆசிரியர்கள் எந்த மாணவனை மெச்சினா அவன் தான் ஹீரோ. கல்லூரில அப்படியில்லை. சிகரட் பிடிக்கிறவன், தண்ணி போடறவன் , பெண்களை துரத்தறவன் , அடி தடி பண்றவன், டவுன் பஸ் கண்ணாடிய உடைக்கிறவன்லாம் ஹீரோ ஆயிட்டான்.
கே: அதை ஜீரணிக்க முடியாம தேர்தல்ல போட்டியிட்டேங்கறிங்க.
ப: நிச்சயமா. இப்போ தமிழ் 10 வெப்சைட்ல பாருங்க.. கடந்த 5 மாசத்துல நான் எங்கயோ இருந்தேன் ஒரு தடவை டாப் 10 க்கு வந்தாச்சுன்னா மேலே ஏற முடியாட்டியும் கிடைச்ச இடத்தையாவது தக்க வச்சுகனும் இல்லியா . அப்படித்தான் ஏற்கெனவே எனக்கிருந்த இடத்தை தக்க வச்சுக்கத்தான் முயற்சி பண்ணேன்
கே: உங்க பதிவுகள்ள படிச்சத வச்சு கேட்கிறேன். நீங்க 1986லயே அனுமான் பக்தராகி 3 மாசம் செக்ஸுக்கு எதிரா போராடி ஜெயிச்சதா சொல்லியிருக்கிங்க. ராம நாமம் ஜெபிக்க ஆரம்பிச்சுட்டதா சொல்லியிருக்கிங்க. அதே சமயத்துல தேர்தல்லபோட்டி, காதல் இதெல்லாம் பொருந்தலயே.
ப:மந்திர சித்தினு கேள்விப்பட்டிருக்கிங்களா?
கே: ஓ நடிகை மந்திராவோட சித்திய பத்தி சொல்றிங்களா?
ப:கிழிஞ்சுது போங்க ! மந்த்ரா சித்தி இல்லிங்க மந்திர சித்தி. மந்திர சித்தி அடையறதுனா சாதாரணமா என்ன நினைப்பிங்க அந்த மந்திரம் பலிதமாகும் ஸ்டேஜுக்கு வந்தாச்சுனு நினைப்பிங்க . ஆனால் மந்திர சித்தியடைதல்னா ..அட்சர லட்சம்/ அதாவது க்ஷ மந்திரத்தை ஒருலட்சம் தடவை ஜெபிச்சு அதை சொல்லக்கூடிய தகுதிய அடைஞ்சிருலக்கிங்கனு அர்த்தம்.
கே: அப்போ ஒரு லட்சம் முடியலை அதனால அது பலன் தரலைங்கறிங்களா?
ப: இன்ஷியூரன்ஸ் பாண்ட் மெச்யூர் ஆகலே ஓகே. ஆனால் முதல் ப்ரிமியம் கட்டினதுமே நடக்க கூடாதது நடந்துட்டா க்ளெயிம் பண்ற தகுதி வந்துருதில்லை. அதே மாதிரி தான் இதுவும்.
கே: அப்ப தேர்தல், காதல் இதெல்லாம் ! ஏன் சார் எல்லாத்துக்கும் நீங்களே விதிகளை ஏற்படுத்திக்கறிங்க. ஆஞ்சனேயரை கும்பிட்டா லவ் பண்ணக்கூடாது. தியானம் பண்ணா தேர்தல்ல நிக்க கூடாது. ராமனையும், சீதையையும் சேர்த்து வச்ச ஆஞ்சனேயர் காதலர்களை சேர்த்து வைக்க மாட்டாரா என்ன ? உண்மையில காமத்தை ஜெயிக்க ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தான் உதவ முடியும். காதல் வரும்போது காமம் கரைஞ்சு போயிருது. அப்படியே உடலுறவு ஏற்பட்டாலும் அது ஆழமா அமையுது 1 வருட பிரம்மச்சர்யத்துக்கு உண்டான மனோபலத்தை கொடுக்குது. தியானம் பண்றவன் தேர்தல்ல நிக்க கூடாதா? இன்னும் சொல்லப்போனா தியானம் பண்றவன் மட்டும் தேர்தல்ல நிக்கனும். அப்பத்தான் காலேஜ் உருப்படும். நாடு உருப்படும்
கே: சரி ஏதோ சினிமா கஷ்டாலுக்கு உங்க வாழ்க்கைய உதாரணம்காட்டி பேசினிங்க. விஷயத்துக்கு வாங்க
ப: 1987 பத்தி சொன்னேன். அதுக்கப்புறம் அங்கிருந்து 2007 வரை நாயடிதான். இடையிடையே செய்த சாதனைகள் கூட அவற்றை தொடர்ந்து வந்த வேதனைகளின் அழுத்தத்தில் காணாமல் /கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டன.
கல்லூரியிலிருந்து நேரடியாக மாவட்ட கருவூல அலுவலகத்தில் செக்ஷன் ரைட்டன் உத்தியோகம். முதியோருக்கும், விதவையருக்கும், நிலமற்ற விவசாய கூலிகளுக்கு அரசு வழங்கும் ஓய்வு தொகைக்கு எம்.ஓ எழுதும் வேலை.ஏதோ என் தந்தை லஞ்சம் வாங்காத மாவட்ட கருவூல அதிகாரியாய் ஓய்வு பெற்றவர் என்பதால் கிடைத்த சலுகை இது. ஒரு எம்.ஓ எழுதினால் ஐம்பது பைசா. மூன்று மாதங்களுக்கொரு தரம் கணக்கிடப்பட்டு தரப்படும். முதல் க்வார்ட்டரில் ரூ.1,500 போல கைக்கு வந்தது. மேலும் ஷராஃப் போஸ்டுக்கு நோட்டிஃபிகேஷன் விரைவில் வரும் என்றும் அப்ப பார்த்துக்கலாம் என்றும் என் அப்பா சொல்லியிருந்தார். லஞ்சம் வாங்காத ஆசாமியிடம் எப்படி லஞ்சம் கேட்பதென்றோ என்னமோ தலைக்கு ரூ.25 ஆயிரம் வாங்கிக்கொண்டு வேலை செய்து கொடுத்துவிட்டார்கள்.இதெல்லாம் அப்புறமாதான் தெரிஞ்சுக்கிட்டேன். முதல் சம்பளம்கைக்கு வந்த உடனே உடனே லூனா வாங்கனும்னு எண்ணம்.(அதுவும் செகண்ட் ஹேண்ட்தான். (இப்பல்லாம் அந்தரங்கத்துல முடி வரதுக்குள்ளாற பசங்க கேட்கிறது லட்ச ரூபா பைக்குதான்) வீட்டுல அடம் . வீட்டை விட்டு வெளியேறி.என் அப்பன் மாவட்ட கருவூல அதிகாரியிடம் பேசி, அவர் " நீ என்ன வேணம்னா செய்ப்பா வீட்டுலயே இருந்து செய்" என்று அறிவுரை கூற சில காலம் மாடியறையில் நானே சமைத்து சாப்பிட்டதும் உண்டு.
கே: அப்போ கவிதை 07 ல சமையல் குறிப்புகள் கூட எதிர்பார்க்கலாம்.
ப: இல்லிங்க . நான் எனக்காக சமைச்சப்பவும், நண்பர்களுக்காக சமைச்சப்பவும் சமையல்ங்கறதே வீண்வேலை என்ற அபிப்ராயம் தான் ஏற்படும். காலஞ்சென்ற மு.வ ப்ரப்போஸ் செய்த சமூக சமையற்கூடங்கள் எனக்க் ரொம்ப பிடிச்ச கான்செப்ட்
கே: பிகாம் தவறிட்டிங்க சரி. மறு படி முயற்சி செய்யலியா ?
ப: அடுத்த முறை பி.காம் தேர்வுகள் எழுதிப்பார்த்தும் பயனின்றி போனது. அதற்கு முன் ஒரு புயல். ஒரு காதல். திருமணம். பிரிவு. அதற்கு முன் எத்தனையோ "ரோமானிய ராணிகளை ,இளவரசிகளை டெக்கமெரான் தனமாய் சந்தித்திருந்தும் , அதை எல்லாம் அங்கீகரித்துவிட்ட குடும்பமும் , சமுதாயமும் , என் காதல் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை. அவளும் அந்த பிரிவை சாதாரணமாகவே எடுத்துக்கொண்டாள். திரை மறைவு பேரங்கள் ஏதேனும் நடந்ததா என்று இன்றுவரை விசாரித்துக்கொண்டேதானிருக்கிறேன். நீ டேக் இட் ஈஸினா நானும் டேக் இட் ஈஸிதான் என்று இருந்து விட்டேன். (1989) இந்த நிலையில் தேர்வு.. அதை எழுதி தேறி ஆவறதா போறதா....ஹ்ம். பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்.
(பேட்டி மீண்டுமொரு பதிவில் தொடரும்)