Friday, October 23, 2009
சோனியாவின் மறுமணம்
சோனியாவின் மறுமணம்
மகாராஷ்டிரா, அருணாசல பிரதேஷ், ஹரியானா மானிலங்களில் காங். வெற்றியை சோனியாவின் வெற்றியாக வருணிக்கும் நிலை இருக்கிறது. "அது அந்த காலம்" ஆம் அந்த காலத்தில் மனிதர்களில் ஈகோ குறைவு. மக்கள் கூட்டத்துக்கு சிறிதேனும் நன்மை செய்ய எவர் முன் வந்தாலும் மக்கள் அவர்களை அப்படியே உபாசிப்பது வழக்கம். இது காந்தி,நேரு,இந்திரா ஏன் ராஜீவ் காலம் வரை சரியாக இருக்கலாம். சோனியாவுக்கு "அவ்ள சீன் இல்லே கண்ணா" . சமீபத்தில் தேர்தல் நடந்த மானிலங்களில் எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்ததால் தான் காங்.வெற்றி பெற்றிருக்கிறதே தவிர ஒரு இழவுமில்லை. அங்கு வெற்றி பெற்ற எம்.எல்.ஏவுக்கு எத்தனை ஓட்டு, கட்சிக்கு எத்தனை ஓட்டு, அதுல சோனியாவுக்கு எத்தனை ஓட்டு என்ற விஷயமெல்லாம் யாருக்கு தெரியும். இதற்கு தான் நான் 1986 முதலே நேரிடை ஜன நாயகம் அமலாகவேண்டும் என்று கோரி வருகிறேன். கு.ப. விகிதாச்சார பிரதி நிதித்துவமாவது வரவேண்டும்.
ஒரு குடும்பத்தில் பெண்கள் அதிகமாக கஷ்டப்பட அக்குடும்பத்து முன்னோர் (ஆண்கள்) பெண்ணினத்துக்கு செய்த துரோகமே காரணம். இதை ஜோதிட ரீதியாய் வெகு சுலபமாக நிரூபிக்க முடியும். கொய்யாமரத்துக்கு கொய்யாவே காய்க்கும். ஒரு வமிசாவழி கூட மரம் போன்றதே. சமஸ்கிருதத்தில் இதை வம்ச விருட்சம்(மரம்) என்றுதான் சொல்வார்கள். இப்படி பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படியாக வாழ்ந்த ஆண்களை கொண்ட வம்சத்தில் ஆண் வாரிசு இல்லாது போகும். காதல் திருமணங்கள் நடைபெறும். ஆண்களுக்கு அகால துர்மரணங்கள் சம்பவிக்கும். பெண்கள் இளவயதில் விதவையாவார்கள். நேரு குடும்பத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். நேரு அப்படியும் இப்படியுமாக வாழ்ந்தவர். அந்த காலத்தில் லேடி மவுண்ட் பேட்டனுக்கே ரூட் போட்டவர் என்று பேச்சு உண்டு. அவர் செய்த பாவம் அவருக்கு ஆண் வாரிசின்றி போனது. இந்திரா காதல் திருமணம் செய்து கொண்டார். சஞ்சய் ,ராஜீவ் காதல் திருமணம் செய்து கொண்ட் அகால+ துர் மரணமடைந்தனர். மேனகா, சோனியா சிறுவயதிலேயே விதவையானார்கள்.
ஒரு குடும்பத்து முன்னோர் (ஆண்கள்) பெண்ணினத்துக்கு துரோகம் செய்திருந்தால் அந்த குடும்பத்தில் பிறக்கும் ஆண், பெண்கள் , அக்குடும்பத்தில் வாழ்க்கைப்படும் பெண்கள் (மருமகள்கள்) ஜாதகங்களில் எல்லாம் சுக்கிரன் பலவீனப்படுதல், ஏழாமிடம் கெட்டிருத்தலை காணலாம். தற்போது ராகுல் காந்தி கூட காதல் திருமணமே செய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
மாதா,பிதா செய்தது மக்களுக்கு. இதை சுக்கிர சாபம் என்பார்கள். இதற்கு பரிகாரமாகத்தான் ஏழை சோடிகளுக்கு திருமணம் சுமங்கலி பூஜை இத்யாதி
செய்யப்படுகின்றன.
டாக்டர் ஒய்.எஸ்.ஆர் விஷயத்தில் எடுத்துக்கொண்டால் அவரது தந்தை ஃபேக்ஷனிஸ்ட் என்று பெயர் எடுத்திருக்கலாம், அசைண்ட் பூமிகளை (அரசு எஸ்.சி.எஸ்.டி.க்கு ஒதுக்கிய நிலங்களை )பறித்திருக்கலாம். (அவற்றை கூட ஒய்.எஸ்.ஆர் தாம் முதல்வராக இருந்த போது அரசுக்கு ஒப்படைத்துவிட்டார். ) ஆனால் பெண்கள் விஷயத்தில் ஒய்.எஸ்.ஆரின் தந்தையாகட்டும், ஒய்.எஸ்.ஆராகட்டும் எவ்வித புகாருக்கும் கூட ஆளானதில்லை. இன்னும் சொல்லப்போனால் தமது ஆதரவாளர் இந்திரா ரெட்டி மறைவுக்கு பிறகு ஒய்.எஸ். ஆர் அவரது மனைவியான சபீதா இந்திரா ரெட்டியை " சேவிள்ள செல்லெம்மா" ( சேவிள்ளாவில் உள்ள தங்கை என்று பொருள்) என்று பாசம் காட்டினார். எந்த புது திட்டமானாலும் சபீதாவின் சேவிள்ளாவில் தான் அறிவிப்பது வழக்கம். தமது இரண்டாவது இன்னிங்ஸில் சபீதாவுவை உள்துறை மந்திரியாக்கி அழகு பார்த்தார். அதனால் தான் 60 வயது வரை நிறைவான வாழ்வை வாழ்ந்தார் ஒய்.எஸ்.ஆர். ( 2009 ஜூலை எட்டாம் தேதி சஷ்டியப்த பூர்த்தி/ செப்டம்பர் 2 ஆம் தேதிதான் ஏர் கிராஷ்)
சோனியாவின் கல் நெஞ்சம்:
ஆனால் பாவ மூட்டையை சுமக்கு நேரு வமிசத்தில் வாழ்க்கைப்பட்ட சோனியாவோ செய்த பூர்வ ஜென்ம கருமங்களை தொலைக்கும் எண்ணம் சிறிதும் இன்றி மேலும் மேலும் பாவங்களை மூட்டை கட்டிவருகிறார்.
ஆந்திராவில் காங். நிலை :
மறைந்த ஆந்திர முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ஆர் தமது 33 ஆவது வயதில் காங்கிரஸ் மானிலக்கட்சி தலைவரான நாள் முதலாக கட்சிக்காக நாயாய் உழைத்தார். என்.டி.ஆர் வருகைக்கு முன் ஏதோ நகராட்சி பள்ளிக்கணக்காகவேனும் இருந்த மானில காங்.கட்சி இந்திரா தொடர்ந்து மானில முதவர்களை அதிரடியாய் மாற்றியதில் நாறிப்போனது. என்.டி.ஆர். முன்னெடுத்த சுயமரியாதை உணர்வு மக்கள் மனதில் ஊறிப்போனது. என்.டி.ஆர் மறைவுக்கு பின்னும் சந்திரபாபு 9 வருடங்கள் தூள் கிளப்பினார். அப்போதெல்லாம் வேலை செய்யாத சோனியா ஃபேக்டர் இப்போ மேற்படி 3 மானிலங்களில் மட்டும் வேலை செய்தது என்று சொன்னால் நம்ப நாங்கள் என்ன கேணையர்களா ?
ஆந்திராவில் 2004 தேர்தல்களில் காங். வென்றதையாவது கூட்டணி பலத்தால் வென்றதென்று கூறிவிடலாம். ஆனால் 2004 தேர்தல்களுடன் ஒப்பிடும்போது 2009 தேர்தல்களில் தெலிங்கானா ராஷ்டிர சமிதி கூட்டணியில் இல்லை. இதற்கு காரணம் தெலிங்கானா அம்சத்தை காங்.மேலிடம் ஊறப்போட்டதுதான். அணு ஒப்பந்தம் விவகாரம் காரணாமாய் ,கம்யூனிஸ்ட்கள் விலகினர். ஒய்.எஸ்.ஆர் சக்கிலியருக்கு
வாக்களித்த உள் ஒதுக்கீட்டு முறையை மத்திய அரசு கண்டு கொள்ளாததால்
சக்கிலியர் அமைப்பு விலகியது. மானில கட்சியில் இருந்த கிழவாடிகள் சோனியா
நேரு குடும்ப ஜெபத்தில் காட்டிய ஆர்வத்தில் 1 சதவீதத்தை கூட தேர்தல் பிரச்சாரத்தில் காட்டவில்லை.
1% வித்யாசம்:
2009 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெறுமனே 1% வாக்கு வித்யாசத்தில் தான் கரையேறியது. ஆந்திர ப்ரிண்ட் மீடியா , சில விஷுவல் மீடியாக்கள் மானில அரசை டார்கெட் செய்து கிழி கிழி என்று கிழித்தபோது , நேரடி அரசியலுக்கு வராத குறையாய் தமது பத்திரிக்கைகளை துண்டு பிரசுரம் ரேஞ்சுக்கு மாற்றி துஷ் பிரச்சாரம் செய்த போது கட்சிக்கு துணை நின்றது ஒய்.எஸ்.ஆரின் மகன் ஜகன் மோகன் ரெட்டிதான்.
சாட்சி -நாளிதழ்,டிவி:
ஆம் சாட்சி நாளிதழ் மற்றும் சாட்சி டி.வி. துவங்கி சந்திரபாபுவின் கடந்த காலத்தை கிழி கிழி என்று கிழித்ததால் தான் காங்கிரஸ் கரையேறியது. தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு மக்கள் தாமாய் திரண்டு வந்த காலமெல்லாம் போயே போச். சோனியா ஒரு மாவட்டத்துக்கு பிரச்சார நிமித்தம் வருகிறார் என்றால் பக்கத்து மாவட்டங்கள் நான்கிலாவது எல்லா வேலைகளையும் விட்டு விட்டு இவர் கூட்டத்துக்கு ஆட்களை ஓட்டி வரவேண்டும். சரி இதெல்லாம் ஒழியட்டும். எப்படியோ கட்சி வென்றது. ஒய்.எஸ்.ஆர் முதல்வரானார். அகாலமாய் மரணமடைந்தார். தற்காலிக முதல்வராக ரோசய்யாவை போட்டார்கள்.
இந்த ரோசய்யா தம் தொகுதியில் இன்றுள்ள நிலையில் மேயராகவோ, நகராட்சி சேர்மனாகவோ கூட ஜெயிக்க முடியாது. இவர் நிர்வாகத்தில்புலி என்று கூறுகிறார்கள்.
ஒரு முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மாயமாய் மறைந்துவிட்டது. இந்த மனிதர் என்ன செய்தார் தெரியுமா ? காலை 9.45 முதல் மதியம் 3.30 வரை புல் பிடுங்கிக்கொண்டிருந்து விட்டு 3.45 க்கு அறிவிக்கிறார். வனப்பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் காட்டுக்கு போய் தேடனுமாம். ஹெலிகாப்டர்கள் வர தாமதமாகுமாம். இருட்டிட்டா தேட முடியாதாம். ஏதோ ஒய்.எஸ்.அமல் செய்த நல திட்டங்களால் கிடைத்த புண்ணியம் ஒரு கதறல், ஒரு கூக்குரல் ஏதுமின்றி ஒரு கணத்தில் உயிரிழந்துவிட்டார் ஒய்.எஸ். ஒருவேளை அந்த பாவுரால குட்ட மலை மீது குற்றுயிராய் இருந்திருந்தால் என்ன கதி. ஒரு முதல்வரையே காப்பாற்ற முடியாத கிழவாடியை முதல்வராக்கி அழகு பார்த்தார் சோனியா.
செப்டம்பர் 2 ஆம் தேதி அரசு இயந்திரத்தின் டெலிவரி சிஸ்டத்தை அதன் செயல் திறனை சுயமாய் பரிசோதிக்க ரச்சபண்டா என்ற நிகழ்ச்சியை அறிவித்தார்
அதில கலந்துகொள்ள சென்ற போதுதான் ஏர் கிராஷில் ஒய்.எஸ். இறந்தார்.
அவர் உட்கார்ந்த அதே நாற்காலியை பிடித்து தொங்க விரும்பும் ஆசாமி இதுவரை மேற்படி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது குறித்தோ , அதில் கலந்து கொள்வது குறித்தோ நாளிதுவரை ஒரு சொல்லில்லை.( பல்லில்லை).
ஒய்.எஸ்.ஆருக்கு பிறகு ஜகனை முதல்வராக்க வேண்டும் என்று 128 எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்டு கடிதம் கொடுத்தும் காங்கிரஸ் ஏதோ பெரிய ஜன நாயக அமைப்பு போலும் வாரிசுஅரசியலின் வாசனையே அலர்ஜி போலும் ஆன பில்டப் எல்லாம் கொடுத்தார் சோனியா. நேற்று அதாவது ஏறக்குறைய 50 நாட்கள்க்கு பிறகு ஜகனுக்கு அழைப்பு விடுத்த சோனியா எல்லாம் நான் பார்த்துக்கறேன் என்றாராம். ஜகனும் மேலிடக்கட்டளையை ஏற்று செயல்படுவேன் என்று கூறியிருக்கிறார்.
பெண்களின் மொழி போல் அரசியல் மொழிக்கு அர்த்தங்கள் வேறு . இன்றோ நாளையோ ஜகன் சீறியெழப்போவது நிச்சயம். தில்லி நவாபுகளுக்கு தக்க ஜவாபு (பதிலடி) கொடுக்கப்போவது நிச்சயம்.
பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். தனக்கு உரிமையுள்ளதை அடுத்தவன் அனுபவித்தால் எப்படியிருக்கும் என்பது சோனியாவுக்கு தெரியும். நரசிம்மராவும், அன்றைய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவரும் இதை காட்டினார்கள். அன்று நரசிம்மராவ்/ இன்று ரோசய்யா ! அங்கே சோனியா ! இங்கே ஜகன் ! இதுதான் வித்யாசம்.
பெண் என்பவள் அன்பு மயமானவள். ஆனால் அதை அந்த அன்பை புடம் போடுவது குடும்பம் என்ற அமைப்பு. அகாலமாய் கணவனை இழந்த சோனியாவுக்கு தெரியாதா ஒய்.எஸ்.ஆரை இழந்த திருமதி விஜயலட்சுமி ராஜ சேகரரெட்டியின் மன நிலை?. அகாலமாய் ராஜீவை இழந்த ராகுலுக்கு தெரியாதா ஜகனின் நிலை ?
பாவம் சோனியாவின் இழப்பு பழையதாகிவிட்டது போலும். மேடம் இழப்பின் கொடுமை லேட்டஸ்டா தெரியன்ம்னா சோனியாவின் மறுமணம் + மற்றொரு மனித வெடிகுண்டு சம்பவம்தான் தீர்வோ என்னவோ ?