"நல்லவர்கள் வல்லவர்களாய் இருப்பதில்லை .வல்லவர்கள் நல்லவர்களாய் இருப்பதில்லை. " இது எம்.ஜி.ஆரின் ஆரம்பகால பேச்சு. அவர் எந்த அளவு நல்லவர்,எந்த அளவு வல்லவர் என்பது இந்த பதிவுக்கு அப்பாற்பட்ட விஷயம். 2006 மார்ச் 6 ல் நான் இந்த வலைப்பூவை ஆரம்பித்தேன். ஏதோ கண்ணன் போன்ற சிலரை தவிர யாரும் கண்டு கொள்ளவில்லை. அதிலும் அப்போதிருந்த திரட்டிகள் இரண்டே . ட்விட்டர் , புக் மார்க் வசதிகள் இத்யாதி ஒன்று கிடையாது அ எனக்கு தெரியாது. அது வேறு விஷயம். இப்படியான பல்வேறு காரணங்களால் 2009 மே வரை என் வலைப்பூவுக்கான வருகைகள் 2006 மட்டுமே.
இதற்கிடையில் 2008 டிசம்பரில் தெலுங்கு வலைப்பூ ஆரம்பித்தேன். அங்கு இன்னும் மோசம் ஒரே ஒரு திரட்டி தான். பார்ப்பனர்களுடன் மோதல் ஏற்படும் வரை எவ்ரிதிங் ஓகே. ஸ்மூத் கோயிங் . அவாளுடன் மோதல் ஏற்பட்டது. அதற்குள்ளாகவே 20000 ஐ எட்டியிருந்த வருகை எண்ணிக்கை ஒரே வாரத்தில் 25 ஆயிரத்தை தொட்டது. பிறகு அவர்களாகவே நாக்கை கடித்துக்கொண்டு (இவனை பெரியாளாக்கிட்டமே) கழண்டு கொண்டார்கள். அதென்ன தான் செய்தார்களோ தெரியாது. இன்றுவரை தினசரி வருகை 75 ஐ தாண்டவே இல்லை. அப்போதுதான் ஒய்.எஸ்.ஆரை முதல்வராக்கிவிட்ட திருப்தியில் தமிழ் வலையுலகத்தின் மீது பார்வையை திருப்பினேன்.
நிலைமை மாறியிருந்தது. பத்துக்கு மேற்பட்ட திரட்டிகள். புக் மார்க்குகள், ஷேரிங் இத்யாதி வசதிகள் இருப்பதை கண்டேன்.வழக்கமான எனது அதீத பொறுப்புணர்ச்சியுடன் புதிய இந்தியாவை கட்டி எழுப்புவதே நோக்கமாய் பதிவுகள் போட்டு வந்தேன். தமிழ்10 வலை தளம் அளிக்கும் ரேங்க் பட்டியலில் டாப்டென்னில் நிற்பதை டார்கெட்டாக வைத்து செயல்பட்டேன். என் வழியில் 18 ஆவது ரேங்க்கை தான் எட்ட முடிந்தது.
அதன் பிறகு கடந்த 13 நாட்களாய் செக்ஸ் ஜோக்குகள் + மனோதத்துவம் என்ற தொடர் பதிவை ஆரம்பித்தேன். நேற்று நிஜமாகவே டாப் டென்னை எட்ட முடிந்தது. உலவு டாட் காம் என் பதிவை தடை செய்வதும் நடந்தது.இன்று 31 ஆவது ரேங்குக்கு சரிந்து போனது வேறு விஷயம். கடைசி முயற்சியாக இன்று 3 ஏ ஜோக்குகளை பதிவேற்றியுள்ளேன். பார்ப்போம் தமிழ் கூறு நல்லுலகத்தின் டேஸ்ட் எப்படியோ ? Any how ... நான் கையாலாகாத நல்லவன் அல்லன். வல்லவனும் கூட என்பதை எனக்கு நானே நிரூபித்துக்கொண்டேன்.
போதும் இந்த விளையாட்டு . இனி வழக்கமான எனது பாணிக்கு வருகிறேன். எனக்கு தேவை இந்த ரேங்குகள் அல்ல.
என் தாய்க்கும் எனக்குமிடையில் ஒரு ஒப்பந்தம் உண்டு. இவர்களை நான் பார்த்துக்கொள்வேன். என்னை அவள் பார்த்துக்கொள்வாள் என்பதே அது.
இந்த தகுதியில் எனது கணிணி மற்றும் இணைய அனுபவங்களை வலையுலகத்தின் முன் வைக்கிறேன்.
இணைய அனுபவத்துக்கு முன்பு கணிணி அனுபவத்தையும் சொல்லவேண்டும். ரஜினி உபயத்தில் சிகரட் கற்றுக்கொண்டதை போல சந்திரபாபு உபயத்தில் கணிணி மீது எனக்கு ஆர்வம் பிறந்தது. என் சிகரெட் பழக்கத்துக்கு ரஜினியையோ,சினிமாக்களையோ குற்றம் சுமத்த விரும்ப வில்லை. சிகரட் பழக்கத்தால் நான் எத்தனையோ தேவையில்லாத விஷயங்களை தவிர்த்து வந்துள்ளேன். வறட்டு கவுரவம், நடுத்தர வர்கத்துக்கே உரிய எதிர்காலம் கருதி நிகழ்காலத்தில் பூட்ஸுகளை நக்கும் குணம் , நொறுக்கு தீனி , இப்படி பெரிய பட்டியலை தவிர்த்துள்ளேன். சூட்டு உடம்பு என்பதாலோ அ வேறேதும் கெட்டப்பழக்கம் இல்லாததாலோ சிகரட் பழக்கத்தால் வரும் தொல்லைகள் ஏதும் எனக்கில்லை. இதற்கு என் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை காரணமாக்குவதில் எந்த வித பாசாங்குமில்லை. ஆம் பெரிதாய் இலக்கு,லட்சியம் ஏதுமின்றி சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞனாக இருந்த என்னை ரொட்டீனுக்கு பழக்கப்பட்டு நீர்த்துவிடாதபடிக்கு சிகரட் பழக்கம் ஒரு கவசமாக இருந்து என்னை காத்தது.
அந்த பருவத்துக்கே உரிய காமம்,காதல் உணர்வுகள் இத்யாதி என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்த போது சிகரட் பழக்கம் எனக்கு பெரிய ஆறுதலை தந்தது. நானும் ஒரு ஹீரோதான் என்ற ஃபீலிங்கை கொடுத்தது. அந்த உணர்வுக்கு நான் உயிர் கொடுக்க நினைத்தது நிஜம்.அதற்காக அந்த வயது இளைஞர்களை போலவே சில காலம் சினிமா கனவுகளில் மிதந்ததும் நிஜம். ஆனால் அது சில காலம் தான் . பின்பு ஹீரோவுக்கான இலக்கணத்தை அறிந்து அந்த திசையில் என் முயற்சிகளை துவக்கிவிட்டேன். (Hero is one who lay down his life for his people)
இதற்கு லிங்க் கொடுத்ததென்னவோ தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் என்.டி.ஆர் தான். அவர் அந்த வயதுக்கு என்னை பெரிதும் கவர்ந்தார்.(இந்த வயதில் அந்த கவர்ச்சி தெளிந்து பக்தியாகவே மாறிவிட்டது .) அவர்மீதான் ஈர்ப்பு இன்னபிற சில்லறை கவர்ச்சிகளில் இருந்து என்னை கட்டி காத்தது. இதற்கு காரணம் அவர் ஏற்ற பாத்திரங்கள்.(தன்னம்பிக்கை ,சுயமரியாதை நிறைந்த பாத்திரங்கள்) சைக்காலஜிஸ்டுகள் ஐடில் ஹி என்பார்களே அது போல் உலகின் சக்தி வாய்ந்த மனிதராக அவர் என் மனதில் புகுந்தார்.
திரையில் அவர் ஏற்ற பாத்திரங்கள் எனக்கு ஆதர்சமாகின.அவர் எத்தனையோ விதமான பாத்திரங்கள் ஏற்றிருந்தாலும் அவை அவற்றின் படைப்பாளர்களையும் மீறி அவரது அசலான பிம்பத்தையும் பிரதிபலித்தன. அவர் திரையில் ஏற்ற பாத்திரங்கள் அனைத்துமே பிற்காலத்தில் அவர் மக்கள் மன்றத்தில் முழங்கிய தன்னம்பிக்கை, சுய கௌரவம் இத்யாதியை பறை சாற்றுவனவாக இருந்தன.அவரை பற்றியும், அவரை ஆதர்சமாக ஏற்றுக்கொண்ட காரணத்தால் என் குண நலன் களில் ஏற்பட்ட பாசிட்டிவ் மாற்றங்களையும் சொல்ல வேண்டுமானால் அது ஒரு தனிப்பதிவாகவே ஆகிவிடும்.
எங்கே ஆரம்பிச்சேனு தெரியுதுங்க எங்கயோ போயிட்டேன்னும் புரியுதுங்க என்ன இருந்தாலும் வயசாயிருச்சுல்லயா அதான் இந்த சொதப்பல். வரேன் வரேன் பாயிண்டுக்கு தான் வரேன் . இணையம் அனுபவங்களை சொல்ல முனைந்து அதற்கு முன்னாடி சந்திரபாபுவால தான் கணிணி மேல கவர்ச்சி ஏற்பட்டது சொன்னேன். அது ஏன் ,எப்படினு சொல்லத்தான் போறேன். கூல் !
எனது ஐடியல் ஹி என்.டி.ஆர். அவரை அவரது சொந்த மருமகனான சந்திரபாபு நம்ப வைத்து கழுத்தறுத்தார். கட்சியை,சின்னத்தை,எம்.எல்.ஏக்களை பறித்தார். என்.டி.ஆர் இன்னும் சில மாதங்கள் வாழ்ந்திருந்தால் ஆந்திர அரசியல் மட்டுமல்ல என் வாழ்வும் வேறு திசையில் பயணித்திருக்க கூடும்.ஆனால் சந்திரபாபுவின் நம்பிக்கை துரோகம் என்.டி.ஆர் உயிருக்கு எமனானது.
என்.டி.ஆர் வாழ்ந்திருந்த போது என்னை பாதித்ததைவிட மறைந்தபின்பு என்னை பெரிதும் பாதித்தார். அவரது அரசியல் செயல்பாடுகளின் அடிப்படை "சமுதாயமே என் கோவில் ஏழைமக்களே என் தெய்வங்கள்." என்பதாகும்.
இந்த வரிகளின் இன்ஸ்பிரேஷனில் தான் நான் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தையே தீட்டினேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். (திட்டத்தின் விவரங்களுக்கு கீழ் காணும் சுட்டியை க்ளிக்கவும்) என் ஆதர்சபுருஷரான என்.டி.ஆரை தனது நரித்தனத்தால் வென்ற சந்திரபாபுவின் வெற்றி (?), வளர்ச்சி (வீக்கம்) மேன்மேலும் என்னை சைக்கலாஜிக்கலாக பாதித்தது. என்.டி.ஆர் கொள்கைகள் அனைத்தும் தோற்றுப்போனதாக பாவித்து பரிதவித்தேன்.
நான் சாதாரண ரசிகன் . தொண்டன். ஆனால் என்.டி.ஆர் என் பால் காட்டிய அன்பும் ஆதரவும் நானே எடுத்து கூறினாலும் நம்ப முடியாத வகையில் அமைந்திருந்தன.
அவற்றை மற்றொரு பதிவில் விவரிக்கிறேன்.
சந்திரபாபுவை தருமத்தின் வாழ்வை கவ்விய சூதாகவே பாதித்தேன். தொடர்ந்து மோதினேன். இந்த யுத்தத்தின் போது என்னுள் ஒருவித கேள்வி எழுந்தது. அவர்க்கு இருப்பது என்ன என்னில் இல்லாதது என்ன? அப்போது அவருக்கு ஹைடெக் முதல்வர் என்றே பெயர். தகவல் தொழில் நுட்பத்திற்கு அவர் அளித்த முக்கியத்துவம் அப்படி ஒரு பெயரை அவருக்கு வாங்கித்தந்தது. (இந்தியாவில் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள் 70 சதவீதம் , கணிணிகளை உபயோகிப்பவர்கள் இரண்டே சதவீதம் தான். இருந்தாலும் பத்திரிக்கைகளும், விஷுவல் மீடியாவும் அவரை தலைக்கு மேல் வைத்து கூத்தாடின. நானும் கணிணி என்றால் என்ன ? தகவல் தொழில் நுட்பம் என்றால் என்ன என்று பார்த்து விட முடிவு செய்தேன்.
அப்போது நான் ஒரு ப்ரெட் ஹண்டர். இத்தனைக்கும் 1997 நவம்பரில் லட்சாதிபதியாக இருந்த நான் இரண்டு வட்டிக்கு ஃபைனான்ஸ் பண்ணியதில் 1998 பிப்ரவரிக்கே ப்ரெட் ஹண்டராகிவிட்டிருந்த காலம் அது. இருந்தாலும் விவகாரம்னு வந்த பிறகு இதையெல்லாம் பார்த்தா ஆகுமா ? தட்டுத்தடுமாறி சித்தூர் கொங்காரெட்டிபல்லி, ஆஃபீசர்ஸ் லேனிலிருந்த வெப் வோர்ல்ட் எனும் நெட் கேஃபுக்கு சென்று அதன் நிர்வாகியிடம் கவர்ன்மெண்டு வெப்சைட்டை திறந்து சந்திரபாபுவின் மெயில் முகவரியை பிக்கப் செய்து அவருக்கு ஒரு மெயில் தட்டிவிடச்சொன்னேன்.
"மேட்டர் இருக்கா"
" இல்லிங்க"
"மேட்டர் டைப் பண்ணுங்க அனுப்பிரலாம்"
டைப் என்றதும் சற்றே தைரியம் வந்தது. கேபினுக்குள் போனேன். இத்தனைக்கும் எனக்கே எனக்காய் ஒரு கணிணியின் கீபோர்ட் கைக்கு வந்தது அதுதான் முதல் முறை. அதற்கு சில வருடங்களுக்கு முன் மாவட்ட கருவூல அலுவலகம் கணிணி மயமாக்கப்பட்டது. அதற்காக எனது நண்பர்கள் சிலர் ஸ்பெஷன் ட்ரெயினிங்க் பெற்று வந்திருக்க சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவுக்காக ஒரு ஸ்க்ரீன் ப்ளே எழுதி (ஆங்கிலத்தில் தட்டச்சி ) அனுப்பிய அனுபவம் தவிர இன்னபிற அனுபவம் ஏதுமில்லை. கேபினுக்குள் நுழைகையில் ஏறக்குறைய அம்மா கோண்டுக்களின் முதலிரவு அறை என்ட்ரி மாதிரி ஃபீலிங். டைப்பிங்கில் ஓரளவு பயிற்சி இருந்ததால் எப்படியோ ஒப்பேற்றிவிட்டேன்.
இதுல இடைச்செருகலா ஒரு நிகழ்கால சம்பவம்
நம்பினால் நம்புங்கள் !
உங்களில் யாரேனும் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் நிபுணர்கள் கூட இருக்கலாம். இந்த பதிவை படித்து கடவுளுக்கு கம்ப்யூட்டர் ஹார்ட் வேர் ,சாஃப்ட்வேர் தெரியுமா என்பது குறித்து ,உங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.
சில மாதங்களுக்கு முன் வாங்கிய இரண்டாம் ககை பி2 கம்ப்யூட்டர் ஷெட் ஆயிருச்சு. அது என்ன பிரச்சினைனா நீரோ சாஃப்ட்வேரை இன்ஸ்டால் பண்ணினோம் (பண்ண முயற்சி பண்ணோம்னு திருத்திக்கங்க) இதா ஆய்போச்சுங்கற கட்டத்துல க்ளைமேக்ஸுல சிஸ்டம் தானா பவர் ஆஃப் ஆயிருச்சு. .பாவம் இந்த கைங்கர்யத்துக்கு வந்த சந்தீப் (என் மகளோட வுட் பிங்கணா) சின்ன வயசு பையனாச்சா கஜினி மாதிரி விடாம முயற்சி பண்ணினான். கம்ப்யூட்டர் டப்பா உண்மையிலயே டப்பா ஆயிருச்சு.
ஜேம்ஸுனு ஒரு யங்க் ஃப்ரெண்ட் ரெண்டு மூணு தடவை ரெடி பண்ணி கொடுத்தாரு. மறுபடி அவரை பல முறை டிஸ்டர்ப் பண்ணியும் வேலையாகலை . இன்னொரு பார்ட்டி கிட்டே சர்வீஸுக்கு கொடுத்தேன்.அவர் இன்னும் என்னென்னவோ பண்ணனும் இப்பத்துக்கு ரூ 850 பில் ஆயிருக்குன்னாரு. நான் "அண்ணே..டப்பால எழுத்து தெரியறாப்ல பண்ணிருங்க ஆயிரமா கொடுத்துர்ரன்" என்றேன் அவரும் சரின்னாரு. அவர் சொன்ன என்னென்னமோ பண்றதுக்கு வரதா சொல்லி டப்பாவ வீட்ல கொண்டு வைங்கன்னாரு.
ஒரு நாள் அன்னைக்கு நவமினு நினைக்கிறேன். விடியல் அட சட் விடியலுக்கு பூர்வம் விழிப்பு கண்டது. கம்ப்யூட்டரோட எல்லா ஸ்பேர்சையும் போட்டு கனெக்ட் பண்ணி ஃப்ளக்கை செருகினேன். ஒரு ம.........ம் நடக்கலை. விட்டாச்சு. மறுபடி நாலு நாள் கழிச்சு ஒரு நாள் தாளி அன்னைக்கு ஸ்விட்ச் போட்டமா இல்லையானு சந்தேகம் வந்தது. போட்டேன். கம்ப்யூட்டருக்குள்ள விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
ஒரே மூச்சா நாலு ஐட்டம் ரெடி பண்ணேன். சி.டி.ல ரைட் பண்றேன் பண்றேன் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். மூணு பலான ஜோக்கை அடிச்சு முடிச்சுட்டு ட்ரை பண்றேன். ஏவி.எம்.படத்துல முதல் ஷாட் மாதிரி வெற்றி வெற்றி
(தொடரும்