Saturday, October 17, 2009

சந்திப்பு - A Novel

சந்திப்பு - A Novel by Chittoor.s.Murugeshan

ஆந்திர முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ஆரின் ஹெலிகாப்டர் சித்தூர் வனப்பகுதியில் எமர்ஜென்சி லேண்டிங் ஆகி அவரை நான் சந்தித்திருந்தால் , செப்டம்பர் 2 க்கு பதிலாய் அக்டோபர் 2 ஆம் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஏரியல் சர்வேயின் போது ஏர் க்ராஷில் ஒய்.எஸ். இறக்க வேண்டும் என்ற விதி இருந்திருந்தால்,ஒரு ஜோதிடனாக என்னால் இந்த எதிர்கால சம்பவத்தை முன் கூட்டியே கணிக்க முடிந்து சித்தூரில் ஒய்.எஸ்ஸுக்கு சொல்லியிருந்தால் என்னவாகியிருக்கும் என்று கற்பனை கழுதையை (ஏன் குதிரைனு தான் சொல்லனுமா என்ன.. ) தட்டி விட்டதில் இந்த நாவல் (?) உருவானது.


தன் தகப்பன் ஏதோ ஒரு பலவீன க்ஷணத்தில் பெண்டாட்டிக்கு கொடுத்துவிட்ட வாக்கை நிறைவேற்ற ராமன் காட்டுக்கு போனான் ராவணனை சந்தித்தான். நான் ஏன் காட்டுக்கு போக வேண்டும். அந்த மலை மீது ஏற வேண்டும். அந்த நேரம் பார்த்து ஏன் அந்த ஹெலிகாப்டர் அதிலும் ஒரு முதல்வர் பயணம் செய்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டர் அந்த மலை மீது லேண்ட் ஆக வேண்டும் நான் அவரை ஏன் சந்திக்க வேண்டும். என்னங்கடா இது விஜயகாந்த் சினிமா மாதிரி இருக்குனு சலிச்சுக்காதிங்க சில சமயம் வாழ்க்கைல தமிழ் சினிமாவை விட அபத்தமா சம்பவங்கள் நடக்குது. அந்த மலை மீது ஹெலிகாப்டர்கள் பறப்பதென்னவோ சகஜம் தான். ஆனால் அந்த ஓசை முதல் காதல் மாதிரி லேசா வந்து சீக்கிரமே மறைஞ்சுரும். இதென்னவோ நீலப்படத்துல உடலுறவு காட்சி மாதிரி நாராசமா இருக்கே என்று திரும்பி பார்த்தேன்.

பார்த்தால் உரிமைக்குரல் எம்.ஜி.ஆர் மாதிரி கீப்பாஸ் கட்டின ஆந்திர முதல்வர் ஹெலிகாப்டர்லருந்து இறங்கறார். அவரை தொடர்ந்து ஒரு அதிகாரி , சில நொடிகள் கழித்து பைலட்டுகள். நான் வைத்திருந்த ஸ்வீட்டி என்ற நாமதேயம் கொண்ட வெள்ளைச்சடை நாய் ஆட்டுக்குட்டி மாதிரி தோன்றியதோ என்னவோ முதல்வர் என்னை நோக்கி கைகாட்டி ஏதோ சொல்கிறார். பைலட்களில் ஒருவர் விரைந்து வந்து ஏம்பா இங்கிருந்து உங்க எம்.எல்.ஏ வீட்டுக்கு எப்படி போகனும் என்று கேட்டார்.

நான் தடுக்கி விழுந்தா எம்.எல்.ஏ வீடுதான் அதுக்கு வழி வேறயா என்றேன் அசால்ட்டாய். பைலட் முதல்ல ரோட்டை பிடிக்கனும்பா அப்புறம் எஸ்.பிக்கு போன் போட்டா கான்வாய் வந்துரும் என்றார். நான் சரிவாங்க என்று முன்னேறினேன். முதல்வரை நெருங்கியதும் ஒரு வணக்கம் போட்டு " வெரி குட் சார் . என்.டி.ஆரையே மறந்துருவனோனு பயப்படற அளவுக்கு நல்ல ஆட்சிய தந்துக்கிட்டிருக்கிங்க வாழ்த்துக்கள் " என்றேன். முதல்வர் என் கையிலிருந்த ஷார்ட் ஹேண்ட் நோட் புக்கை பார்த்துட்டு "உன்னை பார்த்தா ரிப்போர்ட்டர் மாதிரியிருக்கு நீ எம்.எல்.ஏ வீட்டாண்ட தானே இருக்கனும் இங்கே என்ன பண்றே "என்றார்.

"நான் முதல்ல ஒரு ஜோதிடன். அப்புறமா தான் ரிப்போர்ட்டர். நான் வெறும் ரிப்போர்ட்டரா இருந்திருந்தா டி.பி.ஆர் .ஓ கொடுத்த ஷெட்யூல் படி எம்.எல்.ஏ வீட்டுல டிஃபனுக்கு வருவிங்கனு அங்கேதான் இருந்திருப்பேன். ஆனால் ஒரு ஜோதிடனாவும் இருக்கிறதால இங்கே வெயிட் பண்ணேன். "

என் ஒவ்வொரு வார்த்தையும் முதல்வரை வியப்புக்குள்ளாக்குவது அவரது முக பாவங்களிலிருந்தே புரிந்தது. அவர் சட்டென்று லேசாகி "சும்மா பீலா விடாதப்பா ஜோதிடத்துல இவ்ள டீட்டெயில்டா , நேரோவா ப்ரிடிக்ட் பண்ண முடியாது. கடந்த தேர்தல்ல எங்க கட்சி ஜெயிக்கும்னு ஒரேஒரு ஜோதிடன் கூட சொல்லலே. எல்லா குடுமிகளும் சந்திரபாபுதான் முதல்வர்னு பதவியெற்புக்கு முகூர்த்தம் கூட நிர்ணயிச்சுட்டான். ஒரே ஒரு ஆசாமி அவன் பேரு கூட சித்தூ முருகேசனோ என்னவோ அவன் தான்யா தன்னோட ப்ளாக்ல மறுபடி ஒய்.எஸ்.ஆர்தான் முதல்வர். என்ன ஒரு 20 அ 30 சீட் குறையும் சிரஞ்சீவிக்கு 20 அ 30 சீட்டுக்கு மேல கிடைக்காதுனு எழுதியிருந்தான். " என்றார்.

"சி.எம் சார் ! நான் தான் முருகேசன்னு சொன்னா நம்புவிங்களா ?"

முதல்வரின் முகம் திடீர் என்று வேலை நீக்கத்தில் தப்பித்த ஐ.டி.ஆசாமி மாதிரி வெளிச்சம் போட்டது. " நீ நீ " என்று திணறினார்.
" ஆமா சார் நான் தான் சித்தூர் முருகேசன்.. நான் தான் ஸ்வாமி7867" என்றேன் நான்.

முதல்வர் "மிஸ்டர் ஸ்வாமி ! தேர்தல் முடிவை கூட கணிச்சுரலாம். நம்பறேன். ஆனா இந்த எமர்ஜென்சி லேண்டிங்கை எப்படி ? " என்று தயங்கினார்.

"எல்லாமே கணக்குதானு சொல்ல மாட்டேன். விடியல்ல ஒரு கனவு.. ஹெலிகாப்ட இங்கே இறங்கறாப்ல மேலும் அடுத்த மாசம் இதே தேதில ஒரு ஏர் கிராஷ்ல நீங்க செத்துப்போறாப்ல .. இன்னைக்கு எமர்ஜென்சி லேண்டிங்க் நடந்தா அடுத்த மாசம் அதுவும் நடக்கும்தானே ..இது நடந்தா உங்க காதுல இந்த சமாச்சாரத்தை போடலாம்னுதான் இங்கே வெயிட் பண்ணேன்"

"யோவ் முருகேசன் ! அறிவாளிங்கல்லாம் கொஞ்சம் பைத்தியமாவும் இருப்பாங்கனு காட்டிட்டே பார்த்தயா .. "

"சார் நான் தியானம் பண்றவன். தியானத்த்க்கு பழகிப்போயிட்டா தூக்கமே தியானமாயிருது. இதை கனவுனு சொல்றதை விட விஷன் நு கூட சொல்லலாம்"

"என்னய்யா இது குண்டை தூக்கி போடறே .. நான் சாக கூடாதுய்யா நிறைய வேலை இருக்கு.. 6 வருசத்துக்கு முன்னே நீ இந்த கனவை சொல்லியிருந்தா ஒழியுது போனு விட்டிருப்பேன்.மக்கள் என்னை நம்பி ஓட்டு போட்டிருக்காங்கயா அவங்களுக்கு எதையெல்லாமோ செய்யனும்னு தவிச்சேன்யா. செய்யவும் முயற்சி பண்ணேன். ஆனால் திட்டங்களோட பலன் மக்களுக்கு சரியா போய் சேரலைனு புரிஞ்சுகிட்டு கவர்ன்மெண்டோட டெலிவரி சிஸ்டத்தை ரெவ்யூ பண்ணத்தான் ரச்ச பண்டானு ஒரு ப்ரோக்ராம் வச்சுக்கிட்டு புறப்பட்டு வந்தேன் நான் ஏன்யா சாகனும் ? "

" இதையெல்லாம் எப்படி சார் இன்ஸ்டண்டா சொல்ல முடியும் ..நான் ஃபுல் டைம் அஸ்ட்ராலஜரும் கிடையாது, 100 சதம் ஞானியும் கிடையாது. ரொம்பவே முக்கினா கொஞ்சமா விசயம் வெளிய வரும் "

சில நொடிகள் கண்களை மூடி ஆக்னா சக்கரத்தில் கவனம் வைத்து சிந்தித்த முதல்வர் பைலட்டுகளையும் அதிகாரிகளையும் அழைத்தார் "யோவ் செல் ஃபோன்ஸ் எல்லாத்தயும் ஆஃப் பண்ணுய்யா ..ப்ரோக்ராம் எலலாம் கேன்சல்". என்றார்.

(தொடரும்)