Friday, October 23, 2009

பதிவர்காள் ! வள் ..வள்


பதிவர்களே !
நான் குழந்தை மாதிரி ( தூக்கி மடியில வச்சுக்கிட்டா சூ சூ போயிருவியா என்று கேட்காதீர்கள்) என் மனதில் பட்டதை சொல்லி விடுவேன். ஏதோ மலையை பார்த்து நாய் குலைக்குது என்று புறம் தள்ளாதீர்கள். இது நன்றியுள்ள நாய். படைப்பின் பால் ! சமுதாயத்தின் பால் ! ஆரோக்கியா பால் (சீ சீ இதை டெலிட் பண்ணிரனும்)

1.அவரவர் உலகத்தில் அவரவர் இருந்துகொண்டு ஒரே விஷயத்தை பற்றி பதிவு போடுவதை தவிர்க்கவும். ஜன்னல்லருந்து பார்த்தாலும் நிலா அழகுதான். ஆனால் வெளிய வந்து பாருங்கப்பு. இன்னும் தூளா இருக்கும் !

2.எந்த நாட்டில் வசித்தாலும், எந்த மானிலத்தில் வசித்தாலும் தமிழன் தமிழக அரசியல், தமிழக சினிமா பற்றியே யோசிக்கிறான். இதை தவிர்த்து அவரவர் வாழும் நாடு/ மானிலம் பற்றியும் அங்குள்ள தமிழர் நிலை மட்டுமல்லாது பொதுவான அரசியல்/சினிமா/இலக்கியம் பற்றி எழுதலாமே

3.விரதங்கள் பற்றி தவிர்த்தால் நல்லது. இது ஆன்மீகத்தில் எல்.கே.ஜி. மாதிரி. மேலும் விரதங்கள் 99 சதவீதம் உடலளவில் தான் சுத்திகரிக்கின்றன. மனிதம் ஒன்றே ஆன்மாவை சுத்திகரிக்கும்
4.சமையல் பற்றிய பதிவுகளையும் தவிர்க்கலாம். ஏன் என்பதை அறிய வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு என்ற என் பதிவை தேடி படிக்கவும்

5.கு.ப. லீடிங் பதிவர்களாவது ஒன்றினைந்து அச்சு வடிவத்துக்கு முயற்சி செய்யலாமே ! வலையுலகத்துக்கு வெளியே கோடிக்கணக்கான வாசகர்கள் இருப்பதை மறந்து விடக்கூடாதில்லையா ?

6.அரசியல் மாத்சர்யங்களை விட்டு விலகி பதிவுகள்போட்டால் இன்னும் பச்சக்குனு உண்மைகளை சொல்லலாமே

7. பிரச்சினைகளில் தலையாயது உயிர் பிரச்சினை . தற்கொலைகளை ,கொலைகளை , சாலை விபத்துக்களை , மது அடிமைகளாகி உயிருள்ள பிணங்களாய் வாழ்வதை எப்படி தவிர்ப்பது என்று ரோசிக்கலாமே

8. நோய்களுக்கான சிகிச்சைகளை விவரிப்பதை விட நோய் காரணங்களையும், தவிர்க்கும் முறைகளையும் விவரிக்கும் பதிவுகள் போட்டால் வரவேற்பேன்

9. ஈழத்தமிழர்கள் குறித்து அதிகம் பேர் எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் பிரச்சினைக்கு தீர்வு சோனியா மேடம் பொங்கியெழுவதே. கலைஞர் எழவே முடியாத நிலைல இருக்காரு அவர விட்ருவம். சோனியா மேடத்தை டார்கெட் பண்ணுங்க. வலையுலகத்து பதிவுகள் மீது இன்டெலிஜென்ஸ் சர்வே எல்லாம் நடக்குதாம்

10.பிராமண எதிர்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஆனால் வெறுமனே திட்டி தீர்ப்பதால் பயனில்லை. பிராமணீயத்தால் பாவம் பிராமணர்களுக்கு கூட லாபமில்லை. கன்வின்ஸ் பண்ண பார்க்கலாமே !
11 11.மனித உரிமைகள் நசுக்கப்படுகின்றன. லாக்கப் சாவுகள், என்கவுண்டர்கள், போலீஸ் அடி உதை இப்படி எத்தனையோ இவை குறித்து ஆதாரங்களுடன் எழுதலாமே.

12.இஸ்லாம் தொடர்பான பதிவுகள் கூட நிறையவே காணக்கிடைக்கின்றன. கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் முகமது நபி விஷயத்தில் முட்டி மோதுவதை காண்கிறேன். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. லோகோ பின்ன ருசி இது போன்ற வெட்டி வாதங்களை தவிர்த்து பைபிள், குரானில் , புராணங்களில் புதைந்து கிடக்கும் மனிதம் சொட்டும் அம்சங்களை பட்டியலிடலாமே !

13.அடுத்தபடியாக நாம் தவிர்க்க வேண்டியது சினிமா விமர்சனங்கள் ஏதேனும் விஷயமிருக்கு படத்தை விமர்சித்தாலும் பலன் உண்டு. உப்பு ஊறுகாய்க்கு உதவாத கமர்ஷியல் சினிமாக்கள் பற்றி கூட நீண்ட விவாதங்களே நடை பெறுகின்றன. இதைவிட பேர்லல் மூவீஸ் எனப்படும் உலக சினிமாக்கள் பற்றிய பதிவுகள் இடலாம். ( எதிர்காலத்தில் எந்த டைரக்டர் எந்த படத்திலிருந்து சுட்டார் என்பதாவது தெரியவரும்)

14.ஏதாவது விஷயம் பதிவுல வந்தா என்ன சமாச்சாரம்னு மட்டும் பாருங்க சொன்னது யாருனு பார்க்காதிங்க. ( ஹி ஹி..பலான ஜோக்ஸ் எழுதற முருகேசனா எங்களுக்கு அறிவுரை சொல்றதுனு ரேங்க கூடாதில்லையா அதுக்காக)
15. எரிச்சலூட்டும் மற்றொரு விஷயம் பெரிய விஷயங்களை எழுதுபவர்கள் கூட அருவறுப்பான எழுத்துப்பிழைகளுடன் எழுதுகிறார்கள். தவிர்க்க பாருங்கண்ணா !

16.உண்மை என்பது அந்த முனையிலும் இல்லை . இந்த முனையிலும் இல்லை. மத்தியில் இருக்கிறது. எனவே உ.வ.படுவதை தவிர்த்தால் நல்லது ( நான் கூட அப்படித்தான் எங்கள் சி.எம் இற‌ந்த சோகத்தில் என்னத்த தருமம் என்னத்த நியாயம் என்று எழுதி வாங்கிக்கட்டிக்கொண்டேன்)

17. தேவன் மாயம் பி.டி.கத்திரிக்காய் பற்றி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்க பதிவு. நான் போட நினைத்த பதிவு. ப்ராக்டிக்கல் டிஃபிகல்டீஸ் காரணமாய் தள்ளிப்போனது. தேவன் மாயம் ! கீப் இட் அப் !