கவிதை07 வலைப்பூவுக்கு வருகை தந்துள்ள மாண்பு மிகு எழுத்தாள/வாசக அன்பரே !
தமிழ் 10 வலைதளம் அளிக்கும் ரேங்க் பட்டியலில் நமது கவிதை07 தன் பெயருக்கு ஏற்ற படி 7 ஆம் இடத்தை பிடித்திருப்பதை கவனித்தீர்களா ?
இது சாட்சாத் உங்களின் சாதனை ! இந்த வலைப்பூ தங்களின் சொந்த பூ !
இதை முகரலாம் ! நுகரலாம் ! கிழிக்கலாம் ! ஏன் தங்கள் கருத்துக்களை மட்டுமல்ல / எழுத்துக்களை கூட இதில் பிரசுரிக்கலாம் !
எவ்வித எடிட்டிங்குமின்றி அப்படியே பதிவேற்றப்படும் .
முதலில் கடந்த பதிவிலான செக்ஸ் ஜோக் பற்றிய விளக்கம். இதில் தவமிருக்கும் சாமியாரை மூடிய மண்மேட்டின் மேல் ஒன் பாத்ரூம் போன ராஜாவுக்கு கிடைத்த சாபம் "இன்னைலருந்து உனக்கு ரெண்டு" பாவம் அவருக்கு ஒரே மனைவி. அதே வேலையை வலியசென்று செய்த மந்திரிக்கு கிடைத்த சாபம் "அறுந்து விழனும்னு"
வாழ்க்கைக்கான விளக்கமே இந்த ஜோக்குல அடங்கியிருக்கு. தன்னால வரக்கூடிய பிரச்சினை எதுவுமே ஓரளவு சால்வ் பண்ணக்கூடியதா இருக்கும். உ.ம் ராஜா. இவர் நினைச்சுருந்தா பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அடிஷ்னலா முளைச்சு இருந்ததை நீக்கியிருக்கலாம். அ இன்னொரு கல்யாணம் பண்ணியிருக்கலாம்.
மந்திரி விஷயத்துல பாருங்க அந்தாளு வேணம்னே போய் வில்லங்கம் செய்தான். என்ன நடந்தது ? அறுந்து விழுந்துருச்சு. இதை எப்படி சால்வ் பண்றது?
இந்த சம்பவத்துல இன்னொரு நீதி கூட இருக்கு ந்யூட்டன் சொன்ன For every action there is an equal reaction என்ற தியரி வாழ்க்கைல வொர்க் அவுட் ஆவறதில்லை. எம்.ஜி.ஆர் நடிகர் அரசியலுக்கு வந்தார் சக்ஸஸ். என்.டி.ஆர் நடிகர் அரசியலுக்கு வந்தார் சக்ஸஸ். அதுக்கப்புறம் எவனும் ஆவலை. ந்யூட்டன் தியரி ஃபணால் தானே. கர்னாடக போக்குவரத்து கழகத்துல எத்தனையோ கண்டக்டர் இருந்தாங்க ஆனால் ஒரு சிவாஜி ராவ் தானே சூப்பர்ஸ்டார் ஆனாரு. இது விஷயமா நான் எழுதிய கவிதை வரி ஒன்னைப்பாருங்க !
(ஆர்.எஸ்.எஸ் .காரரகள் மன்னிக்கனும் )
இறைவா !
நீ ஒரு விவரமான சவரத்தொழிலாளி.
ஒருவனுக்கு உபயோகித்த ப்ளேடை
அடுத்தவனுக்கு உபயோகிப்பதே இல்லை
இந்த ஜோக் முக்கியமாக இன உறுப்பின் எண்ணிக்கை மீதே பில்ட் அப் ஆகியிருக்கிறது. எண்ணிக்கைய பத்தி அப்புறம் பார்ப்போம்.
முதல்ல இன உறுப்பு மீது மக்களுக்கு ஏனிந்த ஆர்வம் ? எதிர்பாலினரை பார்க்கும்போது மனதின் பார்வை (சரியாக கவனிக்கவும் கண் பார்வை அல்ல ) அவர்களது இன உறுப்பின் மீதே படிய காரணம் என்ன ?
யோக சாஸ்திரம் குறிப்பிடும் மூலாதார சக்கரத்துக்கு சற்று மேலேதான் ஸ்வாதிஷ்டாண சக்கரம் அமைந்துள்ளது. மூலாதார சக்கரம் ஆசனத்துக்கு சற்று மேலும் , ஸ்வாதிஷ்டாணம் இன உறுப்புக்கு சற்று மேலும் அமைந்துள்ளன. குண்டலி சக்தி எனப்படும் சக்தி மூலாதரத்தில் பாம்புவடிவத்தில் தூக்க நிலையில் தன் வாலை தானே கடித்தபடி உள்ளதாய் யோ.சா. கூறுகின்றன.
குண்டலி மூலாதாரத்தில் நித்திராவஸ்தையில் இருக்கும் வரை மனிதன் பூமி மீதான பொருட்களால் கவரப்படுபவனாகவும் , அவற்றிற்கு அடிமையாகவுமே வாழ்கிறான்.
எந்த மனித உயிரும் முக்தியே நோக்கமாக தான் பூமிக்கு வருகிறது. அனைத்து உயிர்களும் முக்தி அடைந்தே தீரும். சற்று முன் அ பின். குழந்தை ஆரம்பத்தில் தன் ஆசனம் மீதே கவனம் வைக்கிறது. சில குழந்தைகள் மலம் கழித்து விட்டு அதை கையில் எடுத்து பிசைவதை கூட செய்கின்றன. மேலும் சிறுவயதில் மலம் கழிக்க அதிக சமயம் எடுத்துக்கொள்ளும். ஆசனத்தின் மீது கட்டுப்பாடு கொண்டுவர முயலும். இதை சைக்காலஜி ஆனல் பீரியட் என்று குறிப்பிடுகிறது.
பின்பு மெதுவாக தன் கவனத்தை இன உறுப்பின் மேல் திருப்புகிறது. ஆனால் பெற்றவர்கள் இதை கடுமையாக தடுக்கிறார்கள். தண்டிக்கிறார்கள். இது மனித மனவளர்ச்சியில் ஒரு பாகமே. முதலில் ஆசனம் பின்பு இன உறுப்பு. இந்த வளர்ச்சி மனித மனதின் மீது மட்டுமல்ல யோக வாழ்விலும் ஒரு வளர்ச்சியாகும்.
சமூகத்தில் செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருப்பதால் அந்த குழந்தைக்கு முதல் முதலாக காம்ப்ளெக்ஸ் ஏற்படுகிறது. தடை அதன் ஆர்வத்தை அதிகரிக்கிறது. தடை செய்யப்பட்ட செயலை ரகசியமாகவேனும் செய்து பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டு அதன் மனதில் ஒளிவு,மறைவு,ரகசியம்,பொய் எல்லாம் ஏற்படுகிறது.
சில குழந்தைகள் பெற்றோரின் இந்த கட்டுப்பாட்டால் ஆசனத்திலேயே தங்கி ஹோமோ செக்ஸுவல்சாக தயாராகிவிடுகின்றன.
ஆரோக்கியமான மனம் படைத்த எந்த மனிதனும் தன் ஆசனத்தின் மீது கவனம் வைப்பதில்லை. (இதனால் தான் சாதாரண பிரச்சினையான மலச்சிக்கலை கூட கவனிக்காது பைல்ஸ் வரை அதை வளர்த்து விடுகிறார்கள்) ஆனால் ஆரோக்கியமனம் இளமையில் அடுத்த படியை நோக்கி தன் பார்வையை திருப்புகிறது. அதனால் தான் எதிர்பாலினரின் இன உறுப்பு நம்மை கவர்கிறது.
மேலும் காந்தத்திலான வட,தென் துருவங்கள் போல் ஆண் ,பெண் இன உறுப்புகள் வேலை செய்கின்றன. ஆம் ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர். காந்தம் என்றதும் நினைவு வருகிறது. மின்சாரம் நீளவாக்கில்/அகல வாக்கில்/உயர வாக்கில் பாயும்போது பெரிதாய் வித்யாசம் ஏற்படுவதில்லை. அதுவே ஒரு வட்ட வடிவில் பாயும்போது வித்யாசமாக வேலை செய்கிறது அதன் சக்தியும் அதிகரிக்கிறது. உ.ம் ஃபேன் மற்றும் இதர மோட்டர்கள். அவற்றிலான வைண்டிங்கை பாருங்கள். மின்சாரம் எந்த வடிவத்தில் பாய்கிறது என்பதை கவனித்து பாருங்கள்
மனித உடலில் கூட சிறு அளவு மின்சாரம் தயாராவதாய் உயிரியல் கூறுகிறது. அந்த சிறு அளவிலான மின்சாரத்தை வட்ட வடிவில் பாயச்செய்யும் முயற்சியே பத்மாசனம். ஆணும் பெண்ணும் கையோடு கை ,காலோடு கால், உதட்டோடு உதடு, உறுப்போடு உறுப்பாக இணையும் போது (செயல்படும்போதல்ல) அ இணைவதாய் கற்பனை செய்யும் போது மின்சாரம் வட்ட வடிவில் பாய்கிறது.
எதிர்பாலினரின் இன உறுப்பு மீதான ஆர்வம் சர்வ நிச்சயமாக ஆரோக்கியமான விருப்பமே. இந்த ஆர்வம், இந்த விருப்பம்தான் மேற்சொன்ன ஜோக்குகளாய் வெளியிடப்படுகிறது, குழாயடிச்சண்டைகளில் பாருங்கள்/கேளுங்கள் கேட்க அருவறுப்பாக இருந்தாலும் இன உறுப்புகள் குறித்த பிரஸ்தாபனை எத்தனை முறை வருகிறதோ.
மேற்படி ஜோக்கில் ஒன்று இரண்டு என்று எண்ணிகை வருவது சிரிப்பை வரவழைத்தாலும் நிஜத்தில் நடப்பதென்ன ?
எண்ணிக்கையை விடுங்கள் (இது மிகைப்படுத்தப்பட்ட உணர்வு). அளவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். எத்தனை பெண்கள் தமது மார்பகம் சிறுத்திருப்பதாயும், அளவுக்கு மீறி பெருத்திருப்பதாயும் குமைகிறார்கள். எத்தனை ஆண்கள் தம் இன உறுப்பு சிறியதாக இருப்பதாய் நொந்துகொள்கிறார்கள். உறுப்பை வளர்க்க லாட்ஜு வைத்தியர்களை அணுகுகிறார்கள்.