Saturday, October 31, 2009

தமிழுக்கு தடை விதிப்போம் : 2


தமிழுக்கு தடை விதிப்போம் : 2

1.தஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபா என்று ஒரு அமைப்புள்ளது. இவர்கள் நாடெங்கிலும் மையங்கள் அமைத்து ( அவுட் சோர்ஸிங் மாதிரி) ஹிந்தி கற்பிக்கிறார்கள். சான்றிதழ்கள் வழங்குகிறார்கள். ( நான் கூட ப்ரவேஷிகா வரை தேறியுள்ளேன்) . இதே போன்று தமிழுக்காக தமிழக அரசு ஒரு அமைப்பை ஏற்படுத்தலாம். (இந்தியாவில் மட்டுமல்ல வெளி நாடுகளிலும்)

பயன்:
தமிழ் பரவும். இதர மொழியினர் பயில்வர். அப்போது அவர்கள் மொழிக்கும் , தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடுகள், சிம்ப்ளிசிட்டி, டிஃபிக்கல்டி தெரிய வரும்.

அவர்கள் எழுத/பேச முன் வரும்போது தமிழ் புதுவடிவமெடுக்கும்.

அந்த மொழியில் உள்ள கலைச்செல்வங்கள் தமிழுக்கும், தமிழில் உள்ளவை அந்தந்த மொழிகளுக்கும் செல்லும்

இந்த அமைப்பு ஒரு 6 மாதங்கள் செயல்பட்ட பிறகு இந்தியாவின் அனைத்து மானிலங்களிலும் அங்குள்ள தமிழ் மக்கள் அந்த மானிலத்தின் அரசியல்,இலக்கியம்,கலாச்சாரங்களை அறிந்து இரண்டற கலக்க முன்வரும் வகையில் மாதமிருமுறை பத்திரிக்கையும் நடத்தலாம். இதற்கு விஷயதானமும் மாணவர்களே கூட செய்ய வகை செய்யலாம்.
மேலும் தமிழகத்தில் "வாலும் தமிளர்கள் " தமிழ் கற்க வகை செய்யும் வகையில் சிறப்பு டிப்ளமோ படிப்புகளையும் வழங்கலாம்

மேற்சொன்ன அமைப்பில் தற்கால பத்திரிக்காசிரியர்கள்/ சீனியர் ஜர்னலிஸ்டுகள் மட்டும் இடம் பெற வேண்டும். தயவு செய்து ஆசிரியர்களை தவிர்க்கவும்
சில எச்சரிக்கைகள்:

குழம்பி (காபியாம்) ,அடி ரொட்டி (பரோட்டா) போன்ற விஷ பரீட்சைகளை தடை செய்யவும்

தூய தமிழ் என்று தம்பட்டம் அடித்தவாறு பேச்சுத்தமிழிலிருந்து விலகிவிடக்கூடாது.
அதே நேரம் பேச்சு தமிழ் எழுதுகிறேன் என்று ஆபாசத்துக்கோ ,கொச்சைக்கோ இறங்கி விடக்கூடாது (இதை ஆதித்தனார் கூட சொல்லியிருக்காருண்ணே)

நடை முறையில் இல்லாத ஐயன்மீர், அய்யகோ போன்ற பிரயோகங்களுக்கு தடை

ரஜினி,( வருமுடியுமானு கேட்டேல்ல தோ பார் வன்டேன்) விஜய காந்த் (தமில் நாட்ல வால்றவன்) போன்றவர்கள் டப்பிங் பேச தடை
கலைஞர் கவிதை ,கடிதம் எழுத தடை (அய்யய்யோ அந்த நடைய பார்த்தா எவனாச்சும் புதுசா தமிழ் படிக்க வருவானா)

அவசியமற்ற இடங்களில் எதுகை மோனை புகுத்த தடை

ஒரு வாக்கியத்தை பாரா அளவுக்கு எழுத தடை . ஆறு வார்த்தைக்கு மேல் ஒரு வாக்கியத்தில் இருக்க கூடாது.

தமிழில் சமையல், ஜோதிடம் (முக்கியமாய் ராசிபலன்), வாஸ்து, புராணம், வெளியிட தடை. (கு.ப. 5 வருடங்களுக்கு)

தன்னிலையிலான படைப்புகளில் தவிர வட்டார வழக்கு உபயோகிக்க தடை. படர்க்கையில் எழுதுகையில் மட்டும் கொட்டேஷனில் உபயோகிக்க அனுமதி.

எளிய தமிழில் செக்ஸ் எஜுகேஷன். அப்போதான் விகடன் மாதிரி "எழுச்சி" க்கு எழுதற வழக்கம் போகும்.

சிறுவர் இலக்கியம் செழிக்க வேண்டும். ஆனை,ஆட்டுக்குட்டி எல்லாம் ஓரங்கட்டி விட்டு பெரியவர்கள் சிறுவர்களுக்கு எழுதுவதை குறைத்து சிறுவர்கள் சிறுவர்களுக்கு எழுதும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும்

இதையெல்லாம் பட்டியலிட காரணம் தமிழன்னை பிச்சையெடுப்பாள் என்றுமல்ல. அவளை காப்பாற்றியே ஆகவேண்டும் என்றுமல்ல.

அவள் நித்ய கல்யாணி. ஆயிரமாயிரம் அன்னியர் படையெடுப்புகள், துபாஷிகளாக அவதரித்த பார்ப்பனர்களின் துரோகம் அனைத்தையும் மீறி பூத்து குலுங்கிக்கொண்டுதான் இருக்கிறாள்.

தாய் மொழியில் படித்து தாய் மொழியில் சிந்தித்து, தாய் மொழியில் எழுதமுடிந்தால் தான் கட்டக்கடைசி தமிழனின் மேதைமையும் இந்திய மறு கட்டமைப்புக்கு பயன்படும். தமிழன் உருப்படுவான். தமிழ் பேசும் விபச்சாரிகள் குறைவர்.