கதை,திரைக்கதை,வசனம்,டைரக் ஷன் ,பாடல்கள் சித்தூரான் "
இப்படி சினிமா டைட்டிலில் பெயர் வரவேண்டுமென்று 1984 லிலேயே (வயது 17) கனவு கண்டதுண்டு. அந்த கனவு மெய்ப்படும் நாள் வெகு தொலைவில் உள்ளதாய் ஒரு உணர்வு. இடையில் 1991 முதல் 2007 வரை அதை நனவாக்கிக் கொள்ளும் பொருளாதார வசதி இல்லை. தற்போது ஏதோ வண்டி ஓடுகிறது. இதோ என் முயற்சி துவங்கிவிட்டது
இந்த தலைப்பில் கமல் கூட சமீபத்தில் வகுப்பெடுத்ததாக ஞா. ராமாயணம் படிக்காம பாயிண்டுக்கு வா நைனா என்பது கேட்கிறது. ராமாயணத்தை வச்சே திரைக்ககதைய எப்படி எழுதறதுனு சொல்லிர்ரன்.
ராமாயணம் எல்லாருக்கும் தெரிஞ்ச கதை. இதை படமா எடுக்கனும்னா என்னவழி?
1.எங்கயோ வந்து போற ஒரு கேரக்டரோட வ்யூல சொல்லலாம். உதாரணம் கூனி. இவளை எல்லாரும் வில்லினு சொல்றாங்க. சப்போஸ் இவளே ராமனை ஒன் சைடா லவ் பண்ணா. அதை அவன் கண்டுக்காத அம்புல களிமண் கட்டி வச்சு அடிக்கரான். அதுக்கு பழி வாங்க தசரதன் கிட்டே வரம் கேட்கும் படி கைகேயிக்கு கீர் போடராள் இப்படி கொண்டு போகலாம்.
2.கூனி மந்தாரை நாராயண பக்தை. அவளுக்கு ராமகாதை எப்படி போகும், அதனோட முக்கிய நோக்கம் ராவண வதம்னு தெரியும். ஆனால் ராமரோட வாழ்க்கைய பார்த்தா அது வெறுமனே வெள்ளை சாம்பாரா போய்க்கிட்டிருக்கு. அதை ஒடைச்சு திருப்ப அவப்பெயர் தாங்கி வரம் கேட்க வைக்கிறானு கொண்டு போகலாம்.
3. ஓப்பனிங் ஷாட். சுக்ரீவன்,ஆஞ்சனேயர் & கோ வாலிக்கு பயந்து ஒதுங்கியிருக்காங்க. அப்போ தூரத்துல ராம லட்சுமணர் வராங்கனு வச்சுக்கிட்டா.. கதைல டெம்போ வரும். பழங்கதைய சில க்ளிப்பிங்ஸ்ல முடிச்சுரலாம்.
4.சீதையோட வியூ பாயின்ட்ல எடுத்தா பெண்ணியவாதிகள் எல்லாம் ஆஹா ஓஹோம்பாங்க
5.ராமருக்கும் ஆஞ்சனேயருக்கும் தகராறு வந்த கதை தெரியுமில்லயா ? அந்த கதைல ஆரம்பிச்சா ராமாயணம் மொத்தம் ஃப்ளாஷ் பேக்ல முடிஞ்சுரும்.
6.வாலியோட மகன் அங்கதன். வாலியை கொல்லச்செய்த சித்தப்பா அரசன் இவன் இளவரன் ,தகப்பனை கொன்ற ராமனுக்கு ஏவல் செய்ய வேண்டிய நிலை இவனோட வ்யூ பாயிண்ட் இன்னும் சிறப்பா இருக்கும்
7.விஞ்ஞான கதையா எடுக்கனும்னா டைம் மெஷின் மூலமா ஒரு தொலைக்காட்சி பெண் நிருபர் ராமாயண காலத்துக்கு போயிர்ரானு வச்சுக்கங்க
8. இதுவும் பிடிக்கலையா ராமனும் , சீதையும் மறுபடி பிறக்கறாங்க இப்போ பெண்கள் நிலை ரொம்பவே மாறியிருக்கில்லயா ராமன் படும் பாட்டை ஃபோக்கஸ் பண்ணலாம்
10.விஸ்வா மித்திரர் வசிஷ்டர் என்ற 2 ரிஷிகளின் வ்யூ பாயிண்டில் பெரியாரின் சிஷ்ய கோடிகள் யாராவது படம் எடுக்கலாம்
இந்த ஐடியா எல்லாம் கார்ப்பரேஷன் குழாய்ல வர்ர காத்து மாதிரி உட்கார்ந்து செய்தா இன்னும் தூளா செய்யலாம்
தற்சமயத்துக்கு ஒரு திரைக்கதை அடியேன் எழுதியது
மின்சாரம் இல்லாத மலைகிராமத்துக்கும், அந்த கிராமத்து இளைஞன் ஒருவனுக்கும் பவர் வரும்போது எப்படி கெட்டழிகிறார்கள் என்பது நாட்.
கதை சுருக்கம்:
ஒரு மலை கிராமம். அங்கு ஒரு தலைவர்(பிழைக்க தெரியாத). ஒரு கோவில். ஒரு அம்மன். அம்மன் கழுத்தில் ஒரு வைர மாலை.(அதற்கு லாஜிக்கலான கிளைக்கதை) சப்பாணி மாதிரியான ஒரு நாயகன், வெள்ளந்தியான நாயகி. ஒரு லட்சியவாதி ஆசிரியர்.
பவர் இல்லாத காரணத்தால் படிப்பில் பின் தங்குவதாக கருதி ஆசிரியர் பவர் கேட்டு அலைகிறார். இறுதியில் ஸோலார் பவர் பெற திட்டம். அதற்கு காசு வேண்டும்.
விஜயகாந்த் மாதிரி புதிதாக அரசியலுக்கு வந்த நடிகரை தானம் கேட்டு மானம் போகிறது. ஊர் தலைவர் சப்பாணியை சூப்பர் ஸ்டார் ஆக்குவதாக சபதம். அம்மன் கழுத்து வைரமாலையை அடகு வைத்து லோ பட்ஜெட் படம் தயாரிக்கிறார்கள்.
கிராமம்,சப்பாணி இருவருக்கும் பவர் கிடைக்கிறது.
அதன் விளைவுகள் எதிரிடையாக இருக்கிறது.
கிராமத்து பெரியவர் சோலார் பவர் யூனிட்டை வெடி வைத்து தகர்க்கிறார்..டைட்டில்ஸ்